Monday, April 4, 2011

இந்திய ஒருமைப்பாட்டை வளர்க்கும் கிரிக்கட்?!

உண்மைத்தமிழன், வினவு மற்றும் பலர், கிரிக்கட்டை எல்லோரும் வெறுக்கனும்னு நம்புறாங்க. கிரிக்கெட்டை வெறுக்க வேண்டிய அவசியம் இல்லைனு நான் நம்புறேன். நம்ம கேப்டன் (லூசு விஜய்காந்தை சொல்லல) தோனி ஒரு வடஇந்தியன்! அதுவும் ஒரு பிஹாரி! ஆனா இன்னைக்கு இந்தியாவில் வட இந்திய மாநிலத்தவர் மட்டுமல்லாமல் தென்னிந்திர்யர்கள் மற்றும் தமிழர்களும் (சூப்பர் கிங்ஸ் கேப்டன் என்பதாலும்) தோனியை நம்மில் ஒருவராக நெனைக்கிறாங்க (இந்தியன் என்கிற உணர்வுடன்). தோனி பேசும் மொழியோ, தோனியின் சாதியோ, மதமோ இல்லை தோனி ஒரு பிஹாரி என்றோ யாருமே நினைக்கவில்லை! அவர் ஒரு இந்தியன்! நம் இந்திய அணியின் சிற்ந்த கேப்டனாக இருந்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்துத்தரும் தோனி வாழ்க என்றுதான் எல்லாருமே ஒரு மனதாக வாழ்த்துறாங்க!

முன்னால் எல்லாம் கவாஸ்கர், கபில்தேவ் வெங்சர்க்கார்னு ஒருத்தனை ஒருத்தன் மட்டம் தட்டிக்கிட்டு திரிவார்களாம். அவங்களுக்குள்ளே நல்ல டீம் வொர்க் இல்லைனு சொல்றாங்க. அப்புறம் ஐயங்கார் (ஸ்ரீகாந்த்) அடிச்சா ஜெயிப்போம் இல்லைனா அதோகதிதான் என்பார்களாம்! ரவிசாஸ்திரியும், அசாருதினும் எந்த க்ரிட்டிகல் மேட்ச்லயும், தோனி போலவோ, யுவராஜ் சிங் போலவோ அடிச்சு இந்தியாவை காப்பாத்தியது அரிதிலும் அரிது. 1983 ல பெற்ற உலகக்கோப்பை வெற்றியைவிட இன்று இந்தியா பெற்ற வெற்றி மிகப்பெரியதுனு எனக்குத் தோனுது!

சில வருடங்கள் முன்னால் ஐ பி எல் கிரிக்கட் ஆரம்பித்ததால், முன்புபோலில்லாமல் பல மாநிலங்களில் உள்ள இளம் விளையாட்டு வீரர்களுக்கு நெறையா "ஆப்பர்ச்சுனிட்டி" (வாய்ப்புகள்) கெடைக்கிறது என்று சொல்லலாம். அதனால்தான் இன்றைய நிலையில் நம் அணியும் ஆஸ்திரேலிய அணிபோல மிகவும் தரமிக்கதாக உயர்ந்துள்ளது.

இந்த ஒரு சூழ்நிலையில் எல்லோரும் விரும்பும் கிரிக்கட்டை கேவலமாக விமர்சிக்காமல், நாம் இந்தியர்கள் என்று ஒருமனதாக எல்லோரும் நினைக்க, போராட, நாட்டுப்பற்ரை வளர்க்க கிரிக்கட்டை ஒரு கருவியாக பயன்படுத்துவதுதான் புத்திசாலித்தனம்.


3 comments:

Shanmugam Rajamanickam said...

வடை கவ்விகிட்டேன், முதல் மொய்யும் எழுதிபோட்டேன்.

Shanmugam Rajamanickam said...

சரியா சொல்லியிருக்கீங்க.

உண்மைத்தமிழன் ஐயாவை இத படிக்க சொல்லி லிங்க் அனுப்புங்க.
என்ன தான் எனக்கு பிரச்சனை கவலைனு இருந்தாலும் அந்த கிரிக்கெட் போட்டியை பார்க்கும்போது அதையெல்லாம் மறந்து ஒரு ரிலாக்ஸ் கிடைக்குது. கோயிலுக்கு போய்ட்டு வந்தா கிடைக்கிற ஒரு அமைதி கிடைக்குது.
வாழ்க்கையிலும் இந்த மாதிரி போட்டி வரும், அத எதிர்த்து நின்னு ஆடி, சமாளிக்கனும்ங்கறது கிரிக்கெட் சொல்லித்தருது.
அத போய் கேவலமா விமர்சனம் பண்ண எப்படி தான் முடியுதோ.

(நம்ம கலைஞர் 3 கோடி ரூபாய் தூக்கிகொடுத்தது தவறுனுதான் தோனுது. பக்கத்து மாநிலத்துக்கு போய் விளையாட பஸ்ஸ்பேருக்கே காசில்லாம முடங்கி கிடக்கும் எத்தனையோ சிறந்த விளையாட்டு வீரர்கள் இருக்காங்க.
அவங்களுக்கு கொடுத்து உதவியிருக்கலாம்)

பிகு: அந்த 3 கோடிய ஈழத்தமிழர்களுக்கு கொடுத்திருக்கலாம் என ஆர்வகோளாரில் எந்த தமிழனும் பின்னூட்டம் போட வேணாம்..
கலைஞருக்கு வீண் செலவு செய்யத்தான் தெரியும். தமிழர்களுக்கு உதவ தெரியாது.
நேத்து நைட்டு காஞ்கிரசும் நாமும் நண்பர்கள்னு எதுக்கு தான் பீலிங்உட்டாரோ தெரியல.

வருண் said...

வாங்க, சண்முகம்! :)

****உண்மைத்தமிழன் ஐயாவை இத படிக்க சொல்லி லிங்க் அனுப்புங்க.
என்ன தான் எனக்கு பிரச்சனை கவலைனு இருந்தாலும் அந்த கிரிக்கெட் போட்டியை பார்க்கும்போது அதையெல்லாம் மறந்து ஒரு ரிலாக்ஸ் கிடைக்குது. கோயிலுக்கு போய்ட்டு வந்தா கிடைக்கிற ஒரு அமைதி கிடைக்குது.***

:))))