Tuesday, December 18, 2012

டிசம்பர் 21 2012ல் உலகம் ஏன் அழியாது?! தெளிவான விளக்கம்!

உலகம் அழியப்போதாம்! மயன் காலண்டர் சொல்லிடுத்தாம்! ஆனால் யாருமே நம்பத் தயாராயில்லை! ஏன்? வாழனும் ஆசை! சாதிக்கவேண்டியது நெறையா இருக்கு! அதுக்குள்ள எப்படி? அதெல்லாம் அழியாது!

Mayan ceremony
The modern Maya who live in Guatemala, Honduras, Belize and Mexico’s Yucatan peninsula aren’t worried about Dec. 21.
ஆனால் உலகம் அழிவதுபோல் ஒரு நல்ல விடயம் எதுவுமே இல்லை! ஒரு நிமிடம் யோசிங்க!  பொதுவாக சாவின்போது நம் உற்றார் உறவினர் நண்பர் யாரும் நம்முடன் வருவதில்லை! சாவின் மிகப்பெரிய வலியே நம்மை இழப்பவர்கள் நாம் இல்லாமல் துன்புறுவதுதான்! எல்லாருமா சேர்ந்து ஒரேயடியா போயிட்டா என்ன பிரச்சினை? எல்லாருமே அனாதைப் பொணமாப் போயிடலாம்! அதைவிட பாக்கியம் மனிதனுக்கு எதுவுமே இல்லை!

அந்தமாரி ஒரு நல்ல விடயம் எல்லாம் நடக்கவே நடக்காது! ஒவ்வொரு மனிதனும் தான் செய்த அநியாயத்திற்கெல்லாம் உயிரோட இருந்து அனுபவிக்க வேண்டியது நெறையா இருக்கு! உலகம் அழியலைனா, இப்படி ஆயிப்போச்சே! னு  கவலைப்படுங்க! அழுங்க! ஒப்பாரி வைங்க!

மற்றவர்களை விடுங்க! இந்த உலகில் எல்லாரும் யோக்கியர்கள்தான் என்னைத் தவிர! எனக்கெல்லாம் அவ்வளவு நல்ல சாவு எல்லாம் கெடைக்காது! :-) இன்னும் "அனுபவிக்க" வேண்டியது நெறையா இருக்கு! அதனால் உலகம் அழியாது! :-)

14 comments:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

மனுஷனுக்கு என்ன கவலைன்னா தப்பித் தவறி யாரும் பொழச்சிடக் கூடாது.. .போனா எல்லோரும் சேர்ந்து போயிடனங்கறதுதன்

'பரிவை' சே.குமார் said...

ஹா... ஹா...

நல்லா சொன்னீங்க...

'பரிவை' சே.குமார் said...

ஹா... ஹா...

நல்லா சொன்னீங்க...

வருண் said...

*** T.N.MURALIDHARAN said...

மனுஷனுக்கு என்ன கவலைன்னா தப்பித் தவறி யாரும் பொழச்சிடக் கூடாது.. .போனா எல்லோரும் சேர்ந்து போயிடனங்கறதுதன் ***

ஒருத்தன் பொழைச்சாலும் உலகம் அழிவதாக ஆவாது.

ஆனால் ஒருத்தன் மட்டும் பொழைச்சாலும் அவன் தற்கொலை பண்ணி செத்துடுவான். சண்டைபோட ஆளில்லாமல்! அதுக்கு நான் உத்திரவாதம் தர்ரேன். :)

ப.கந்தசாமி said...

ஆமாங்க, நாம என்ன கொஞ்சம் பாவமா பண்ணியிருக்கோம், அதனோட பலனை எல்லாம் அனுபவிக்காம சாமி அவ்வளவு சீக்கிரம் நம்மளுக்கெல்லாம் விடுதலை கொடுத்துடுமா?

வருண் said...

***சே. குமார் said...

ஹா... ஹா...

நல்லா சொன்னீங்க...

18 December 2012 7:34 AM***

வாங்க குமார்! :)

வருண் said...

***பழனி.கந்தசாமி said...

ஆமாங்க, நாம என்ன கொஞ்சம் பாவமா பண்ணியிருக்கோம், அதனோட பலனை எல்லாம் அனுபவிக்காம சாமி அவ்வளவு சீக்கிரம் நம்மளுக்கெல்லாம் விடுதலை கொடுத்துடுமா?***

வாங்க சார்! :)

gurusamy said...

SHIVANI HAAA HAAA HAAA GOOD WRITTING

kumaragurunathan said...
This comment has been removed by the author.
kumaragurunathan said...

மற்றவர்களை விடுங்க! இந்த உலகில் எல்லாரும் யோக்கியர்கள்தான் என்னைத் தவிர! எனக்கெல்லாம் அவ்வளவு நல்ல சாவு எல்லாம் கெடைக்காது! :-) இன்னும் "அனுபவிக்க" வேண்டியது நெறையா இருக்கு!// உங்களோட என்னையும் சேர்த்துக்கோங்க அண்ணா.

Anonymous said...

//ஒவ்வொரு மனிதனும் தான் செய்த அநியாயத்திற்கெல்லாம் உயிரோட இருந்து அனுபவிக்க வேண்டியது நெறையா இருக்கு//

இதெல்லாம் உண்மை இல்லையோ என்று தோன்றுகிறது வருண். அப்படியென்றால் டெல்லியில் கற்பழிக்கப்பட்ட பெண் தான் இந்தியாவில் எல்லோரைவிடவும் அதிக அநியாயம் செய்திருக்க வேண்டும்.

இந்த பெண்ணை விடுங்கள். கொஞ்ச நாள் முன்பு கோயம்புத்தூரில் ஒரு 10 வயது சிறுமி கற்பழிக்கப்பட்டு கொலை செய்யபட்டாள். அந்த சிறுமி இவ்வாறு கொடூர மரணம் அடைவதற்கு என்ன அநியாயம் செய்திருக்க முடியும்?

அதனால், கஷ்டபடுகிறவர்கலெல்லாம் அநியாயம் செய்தவர்கள் என்பதும், நல்லாயிருக்கிரவர்கள் எல்லாம் அநியாயம் செய்யாதவர்கள் என்பதும் இந்த காலத்திற்கு பொருந்தவில்லை என்றே நினைக்கிறேன்.

வருண் said...

*** kumaragurunathan said...

மற்றவர்களை விடுங்க! இந்த உலகில் எல்லாரும் யோக்கியர்கள்தான் என்னைத் தவிர! எனக்கெல்லாம் அவ்வளவு நல்ல சாவு எல்லாம் கெடைக்காது! :-) இன்னும் "அனுபவிக்க" வேண்டியது நெறையா இருக்கு!// உங்களோட என்னையும் சேர்த்துக்கோங்க அண்ணா.***

:-)

வருண் said...

///இதெல்லாம் உண்மை இல்லையோ என்று தோன்றுகிறது வருண். அப்படியென்றால் டெல்லியில் கற்பழிக்கப்பட்ட பெண் தான் இந்தியாவில் எல்லோரைவிடவும் அதிக அநியாயம் செய்திருக்க வேண்டும்.

இந்த பெண்ணை விடுங்கள். கொஞ்ச நாள் முன்பு கோயம்புத்தூரில் ஒரு 10 வயது சிறுமி கற்பழிக்கப்பட்டு கொலை செய்யபட்டாள். அந்த சிறுமி

இவ்வாறு கொடூர மரணம் அடைவதற்கு என்ன அநியாயம் செய்திருக்க முடியும்?///

alien: நான் அப்படி சொல்ல வரவில்லை. இன்னைக்கு ஒரு ஆள் பலியானால், அது அவர் செய்த பாவத்தால்னு நான் சொல்ல வரவில்லை. அந்த பலியான்வர் அப்பாவியாக/அபலையாக இருக்கும்பட்சத்தில் கர்மா, முஞென்மத்தில் செய்த பாவம் அது இதுனு ஒரு சிலர் விளக்க முயல்றாங்க.. ஆனால் அதெல்லாம் வெறும் தியரிதான். அவைகளை எளிதில் உடைத்துவிடலாம்.

//அதனால், கஷ்டபடுகிறவர்கலெல்லாம் அநியாயம் செய்தவர்கள் என்பதும், நல்லாயிருக்கிரவர்கள் எல்லாம் அநியாயம் செய்யாதவர்கள் என்பதும் இந்த காலத்திற்கு பொருந்தவில்லை என்றே நினைக்கிறேன்.///

மற்றவர்கள் வாழ்க்கை பற்றி நமக்குத் தெரியாது. ஆனால் நம் வாழ்க்கை பற்றி நமக்குத் தெரியும். என்னைப்பொறுத்தவரையில் எனக்கு என்னைத் தெரியும். அந்தப் பெண்ணைத் தெரியாது, வன்புணர்வு செய்த அந்த மிருகங்களைத் தெரியாது.. ஏன் உங்களையும் தெரியாது.. நான் என்னைப் பற்றி மட்டும்தான் சொன்னேன்.. :)

Unknown said...

அற்புதம் அருமை.