Monday, December 10, 2012

திருட்டு வி சி டியை அதிகமாக்க வழிவகுக்குகிறார் உலகநாயகன்- அபிராமி ராமநாதன்!

இன்றுவரை கமலஹாசன் தன் முடிவில், விடாப்பிடியாகத் திடமாக நிற்கிறார். டி டி எச் சில் அவர் விஸ்வரூபத்தை ஒரே ஒரு காட்சி மட்டும் வெளியிட முடிவு செய்துவிட்டதாக செய்திகள் சொல்லுகின்றன. ரூ 1000 கொடுத்து விஸ்வரூபத்தை வீட்டிலேயே பார்க்கலாம் என்கிறார்கள். இந்த முயற்சியால், திருட்டு வி சி டியை குறைக்க உதவுகிறார் உலகநாயகன் என்று சொல்லிக்கொண்டு அலைகிறார்கள் பலர்.

அதாவது திருட்டு வி சி டியை ஒழிக்கவே, கமல் இதுபோல் ஒரு முயற்சி எடுக்கிறார்னு எல்லாரும் கமலை ஆஹா ஓஹோனு புகழ்ந்து தள்ளிட்டாங்க. அப்படி ஒளிபரப்பும் படத்தை யாரும் டிஜிட்டலாக ரெக்கார்ட் செய்ய முடியாது என்கிறார்கள். ஆனால் சினிமாகொட்டகை ஓனர்கள் தலைவரான அபிராமி ராமநாதன், இந்த முயற்சியால் திருட்டு வி சி டி நிச்சயம் அதிகமாகும் என்கிறார்!!!

அபிராமி ராமநாதன்



உலக நாயகன்

Viswaroopam in theatre or at home?

However, Abirami Ramanathan, President of the Tamil Nadu Theatre Owners Federation, asks why he should even try something which has not been experimented by Hollywood. “As theatre owners, we may not suffer any major losses because of this one film. But, if others too choose to follow this model, the entire exhibition business may have to suffer a huge setback,” he told Business Line.
Though Kamal Haasan says the move would be a blow to the piracy market, which is wrecking the industry, Ramanathan says this would only pave the way for more piracy. “If someone films the entire movie with an hand-held HD camera when the film is being played on an HD TV, the result will be pretty good; then how can that prevent piracy?” he asks.

அபிராமி ராமநாதன் என்ன சொல்றாருனா, டி டி எச் ல ஒளிபரப்புவதை ஒருவர் எச் டி கேமராமூலம் மொத்தப்படத்தையும் நல்ல காப்பி எடுக்க முடியும். அப்படி எடுத்து திருட்டு வி சி டி ஆக்கி விற்றால் அதை எப்படி தடை செய்யமுடியும்? இதுபோல் கேமெரா மூலம் காப்பி செய்வதை யாரும் தடை செய்ய முடியாது என்கிறார்.

இப்போ, "திருட்டு வி சி டி அதிகமானால் எங்க கமலுக்குத்தான் நஷ்டம், நீங்கள்லாம்  அதுக்கு ஏண்டா ஒப்பாரி வைக்கிறீங்க?" னு கமல் ரசிகாமணிகள் கேக்கலாம். அந்தக் கேள்வியை  ஒருபுறம் வைத்துவிட்டு, திருட்டு வி சி டி தயாரிப்பு  டி டி எச் ஷோவால்  அதிகமாக்குமா இல்லை குறைக்குமா? என்பதைப்பத்தி கொஞ்சம் யோசிங்கப்பா!

7 comments:

ராஜ நடராஜன் said...

வருண்!முன்ணணியில் இருக்கும் நடிகர்களின் திரைப்படம் திரையரங்குக்கு வரும் போது திரையரங்க உரிமையாளர்கள் முதல் ஒரு வாரத்துக்குள் லாபம் பார்த்து விடவேண்டுமென்ற நோக்கில் கட்டண விலையை உயர்த்தியும்,கள்ள மார்க்கெட்டில் விட்டும் காசு பார்த்து விடுகிறார்கள்.

இப்ப கமல் என்ன சொல்கிறாரென்றால் எந்த திரையரங்கில் விஸ்வரூபம் திரையிடப்படுகிறதோ அந்த தினத்துக்கான வாடகையை கொடுத்து விடுகிறேன் எனவும் லாபமோ நஷ்டமோ தன்னைச் சார்ந்தது என்கிறார்.எனவே இதில் சவாலை சமாளிக்கும் நிலையில் கமல் மட்டுமே இருக்கிறார்.திரையரங்க உரிமையாளர்களுக்கு நஷ்டமில்லை.ஆனால் லாபம் பார்க்க முடியாதே என்பதால் பிரச்சினையை கிளப்புகிறார்கள்.

திருட்டு வீடீயோவிலும்,திரையரங்கிலும் விஸ்வரூபத்தை பார்ப்பது ஒரே மாதிரியான அனுபவமா?

ராவணன் said...

////திருட்டு வீடீயோவிலும்,திரையரங்கிலும் விஸ்வரூபத்தை பார்ப்பது ஒரே மாதிரியான அனுபவமா? ////

அப்படியென்ன பெரிய விசுவரூபம்?

யாராவது பாத்தவங்க பேசுங்கப்பா...

ராவணன் said...

////வருண்!முன்ணணியில் இருக்கும் நடிகர்களின் திரைப்படம் திரையரங்குக்கு வரும் போது திரையரங்க உரிமையாளர்கள் முதல் ஒரு வாரத்துக்குள் லாபம் பார்த்து விடவேண்டுமென்ற நோக்கில் கட்டண விலையை உயர்த்தியும்,கள்ள மார்க்கெட்டில் விட்டும் காசு பார்த்து விடுகிறார்கள்.////


முன்னணி நடிகர்கள் 500 ரூபாய்க்கும் 1000 ரூபாய்க்கும் நடித்தால் திரையரங்கில் 20 காசுக்கு படம் காட்டுவார்கள்.

முதலில் முன்னணி நடிகர்களைத் திருந்துங்கள்...குறிப்பாக கமலகாசனை...

வருண் said...

நடராஜன்: நீங்க எப்படிப் பார்த்தாலும் இந்த முயற்சி தியேட்டர்ல போயி படம் பார்ப்பவர்களை குறைக்கிறது. அதை தியேட்டர் வச்சு பொழைப்பு நடத்துறவர்கள் எதிர்க்கத்தான் செய்வாங்க. சரியா?

தியேட்டர் ஓனர்களையும், டிஸ்ட்ரிப்யூட்டர்களையும் பகைத்துக் கொண்டு தயாரிப்பாளர் பட்ங்களை வெளியிடனும்னா..

இவங்களா ஊர் ஊருக்கு நாலு தியேட்டர் கட்டினாத்தான் முடியும்.

இப்போ என்னவோ, தியேட்டர்காரனும், டிஸ்ட்ரிப்யூட்டரும்தான் மோசம் தயாரிப்பாளர் எல்லாம் யோக்கியன் என்பதுபோல பேச ஆரமிச்சுட்டாங்க.

சிவாஜி, எந்திரன், தசாவதாரம் போன்ற படங்களுக்கு யார் விலையை ஏற்றியது?? தயாரிப்பாளர்கள்தான் யானை வெலை குதிரை விலையாக்கி தியேட்டர் ஓனர்களை கொள்ளையடிக்கத் தூண்டிவிட்டது.

இப்போ கமல் த்யாரிப்பாளரானதும் உலகத்துல உள்ள எல்லாத் தயாரிப்பாளரும் நல்லவங்களாகிட்டாங்க! :)))

Jayadev Das said...

இதை DTH யில் எத்தனை பேர் பார்ப்பார்கள் என்று தெரியவில்லை. மத்த படங்களைப் பொலவெஇதற்கும் கள்ளச் சி.டி வழக்கமான சமயத்தில் வரும், ஆனால் அந்தளவுக்கு இப்த படம் ஓரத்தா இருக்குமான்னு பார்க்கணும். இல்லாட்டி, சக்குபாய் படத்துக்கு ரிலீசுக்கு முன்னாடி சி.டி போட்டு போனியாகாமல் அவனுக்கே நஷ்டம் வந்த கதையாகிவிடும்.

வருண் said...

****முன்னணி நடிகர்கள் 500 ரூபாய்க்கும் 1000 ரூபாய்க்கும் நடித்தால் திரையரங்கில் 20 காசுக்கு படம் காட்டுவார்கள்.****

அதானே? ஏன் கலைத் தொண்டு செய்றவாளுக்கெல்லாம் கோடி கோடியா அழவேண்டியிருக்கு? :(

வருண் said...

Jayadev Das said...

இதை DTH யில் எத்தனை பேர் பார்ப்பார்கள் என்று தெரியவில்லை. மத்த படங்களைப் பொலவெஇதற்கும் கள்ளச் சி.டி வழக்கமான சமயத்தில் வரும், ஆனால் அந்தளவுக்கு இப்த படம் ஓரத்தா இருக்குமான்னு பார்க்கணும். இல்லாட்டி, சக்குபாய் படத்துக்கு ரிலீசுக்கு முன்னாடி சி.டி போட்டு போனியாகாமல் அவனுக்கே நஷ்டம் வந்த கதையாகிவிடும்.

:-)))))