Tuesday, October 7, 2014

புத்தர், ஏசு, காந்தி அப்புறம் நான்!

சிறுவயதில் நான் ஒரு ஹைப்பர் ஆக்டிவ் ச்சைல்ட்! ஒரு முறை பளிங்கு (கோலி) அல்லது பம்பரம் அல்லது கிட்டியோ வெளையாடும்போது என்ன தப்பு செய்தேன்னு தெரியவில்லை.ஒரு பெரியவர் வாயிலே விழுந்தேன்.
இணையத்தில் திருடிய "கோலி" படம்


கண் மண் தெரியாமல் ஓடும்போது தெரியாமல் அவர் மேலே மோதிட்டனோ, அல்லது நான் வெளையாடும் விளையாட்டுப் பொருள் (பந்து அல்லது பம்பரம்) அவர் மேலே பட்டுருச்சோ தெரியலை. ஆனா ஒண்ணும் பெருசா அவருக்கு அடி கிடி எல்லாம்  படவில்லை. ஆனால் பெரியவருக்கு கோபம் வந்து என்னை "உனக்கு எல்லாம் படிப்பே வராது! மாடு மேய்க்கத்தான் போவ!"னு  என்னமோ அடாவடியா திட்டினார். "அந்த முனிவர்" என்ன படிச்சிருந்தார்னு தெரியலை. ஆனால் இதுமாரி நல்லாத் திட்ட கத்துண்டு இருந்தார்! ஒரு பள்ளியில் படிக்கும் அப்பாவிச் சிறுவன் தெரியாமல் செய்த தவறு என்பதைக்கூட சகிச்சுக்க முடியாமல்  இதுபோல் தரித்திரமாக சாபம் விடுறாரே இவரெல்லாம் என்ன பெரிய மனுஷன்? னு எனக்கு அப்பவே தோனுச்சு. (அப்போவே நான் ஞானியாக்கும்)!

 அந்த முனிவர் விட்ட அநியாயமான சாபம் என்னவோ பலிக்கவில்லை! ஆமா நாந்தான்  படிச்சு ஒரேயடியா கிழிச்சுட்டேன் இல்லையா? :)

வாழ்க்கைப் பாதையில் நாம் நடந்து வரும்போது ஒவ்வொரு சமயம் யாராவது யாரு மேலே உள்ள கோபத்திலேயோ தன் தகுதியை தானே உயர்த்திக் கொண்டு "முனிவர் போல்" சாபம் எல்லாம் விடுவார்கள். விட்டுட்டுப் போகட்டும். தயவு செய்து அதையெல்லாம் சீரியஸா எடுத்துக்கிட்டு "முனிவர் சொல்லிட்டாரே, அதுபடி நடந்துடுமே.." னு அழுததழுது வீணாப்போயிடாதீங்கனு சொல்ல வர்றேன். சரியா? :)

************************

அதென்னனு தெரியலை, "வாலிபால்" வெளையாடும்போது. அப்படினா? அதாங்க volleyball. :)  நெறைய நேரம் என்னுடைய "டீம் மேட்" களுக்கே எதிரா செயல்பட வேண்டியது வருது. வெளையாடுறது சும்மா பொழுது போக்குக்கு, கொஞ்சம் "காலரிகள்" எரிக்கலாமே என்பதற்காக அல்லது முக்கியமாக எக்ஸர்சைஸ்க்கு (உடற்பயிற்சி)தான். வேற  ஒண்ணும் பெருசா சாதிக்க இல்லை! மேலும் எங்க டீம்ல யாரும் பெரிய "passer"ரோ "setter"ரோ,"hitter"ரோ "blocker"ரோ கெடையாது.

இப்படியெல்லாம் digging பண்ணி நாங்க ஆடமாட்டோம்.. நாங்க ஆடுவதெல்லாம் சும்மா!

எப்படி ஜம்ப் பண்ணி ப்ளாக் (block) பண்ணுறான் பார்த்தீங்களா? இதுதான் உண்மையான வாலிபால்!


எல்லாரும் எப்படியாவது மூனு தட்டு தட்டி அடுத்த பக்கம் அனுப்பிறதே பெரிய சாதனையா நெனைக்கிறவங்க. ஆனால் ஒன்னு, எப்படியாவது, எப்படியாவது ஜெயிச்சே ஆகனும்னுதான் ஆடுவாங்க விளையாட்டு வீரர்கள் அனைவரும்  பாவம். நெறைய நேரத்தில் எதிர் பக்கம் உள்ளவங்க அடிக்கும் பந்து எங்க பக்கத்தில் "லைன்" ல விழுந்தாலும் (அது இன் தான்) அடிச்சு அது வெளியே போனதாக (அவ்ட்) கேவலமாகப் பொய் சொல்லுவாங்க! சொன்னா நம்பமாட்டீங்க, ரொம்ப பெரிய பெரிய மனிதர்கள் இவங்க எல்லாம்! இவர்கள் படித்த படிப்பு, இன்றைய ஸ்டேட்டஸ் எல்லாம் கேட்டால் பயந்துடுவீங்க. ஆனால்  ஏன் இப்படி சிறுபிள்ளைத்தனம் செய்கிறார்கள்?? காரணம்? அவர்களுக்கு  எப்படியாவது செயிக்கனும் இல்லையா? ஆனால் "நியாயஸ்தன்" நான்  ஒருத்தன் இருக்கேன் இல்ல? அதையும் அவங்க கவனிக்கணும்தானே? அப்படி "இன்" பாலை அவ்ட்னு சொல்லும்போது நான் "அதெல்லாம் இல்லை "இன்"தான் அது னு சொல்லி விடுவேன். ஆக, இந்த சூழலில்  என் டீம் மெம்பர்களிடம் கெட்ட பேர் வாங்கி என் எதிராளிகளிடம் நல்ல பேர் வாங்கவேண்டி வரும். ஒவ்வொரு சமயம் எங்க டீம் மெம்பர்கள் எல்லாரும் ஒரு மாதிரியாப் பார்ப்பாங்க! இவனுக்கு வெளையாடவும் தெரியவில்லை, இப்படியும் நியாயம் பேசி உபத்திரவம் பண்ணுறான் தரித்திரம் இவன்னு! னு சொல்ற மாதிரி இருக்கும். ஒருவேளை எல்லாருமா சேர்ந்து நம்மள அனுப்பிட்டா? என்ன செய்வதுங்கிற பயம் மட்டும் எனக்கு வருவதில்லை! ஆமா அதான்  இருக்கவே இருக்கு டென்னிஸ்! அதுவும் ஒரு செக்ஸி பார்ட்னெர் கெடச்சு இருக்கார்! :-))) ஆனால் என்ன டென்னிஸ் அவுட்டோர் வெளையாட்டு என்பதால் ஒரு 4-5 மாதம்தான் வெளையாடமுடியும்! :(. என்ன பார்க்குறீங்க? வாலிபால் இண்டோர் வெளையாட்டுதாங்க, அமெரிக்காவில் எல்லாம்! உங்க ஊரில் எப்படினு தெரியலை எனக்கு! :)

*********************

சரி, தலைப்புக்கு வரவா,..அதென்ன புத்தர், ஏசு, காந்தினு சொல்லிட்டு , அவர்களோட   உன்னையும் சேர்த்துக்கிட்டேன்னு கேக்கிற/பாக்கிற மாதிரி தெரியுது?

கொஞ்சம் பொறுங்கப்பா! விளக்குறேன்.

புத்தர் தன் பொண்டாட்டி பிள்ளையெல்லாம் விட்டுப்புட்டு வந்து புத்தமதத்தை ஆரம்பிச்சு, எவ்வளவு மக்களைக் கவர்ந்து, இந்தியா சைனானு புத்த மதத்தை வளர்ந்து..எவ்ளோ பெரிய ஆள் அவரு??

இணையத்தில் திருடிய புத்தர் :)


அப்புறம் ஜீஸஸ்.. அவருக்கு எம்மாம்பெரிய மக்களைக் கவரும் சக்தி இருந்துச்சு? நான் யோக்கியன் யோக்கியன்னு சொல்லிக்கொண்டு அலைகிற இவ்வுலகில், நாம் அனைவருமே பாவிகள்னு எவ்வளவு தெளிவான புரிதல்! அவர் போதனைகளை முழுமனதுடன் ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனை எத்தனை மக்கள்..

அப்புறம் நம்ம காந்தி, அஹிம்ஷா முறையில் போராட்டம்னு ஒரு கண்சப்ட்டை உருவாக்கி உலகளவில் மஹாத்மானு பாராட்டுப்பெற்றவர்..

ஆமா எப்படிங்க இவங்க எல்லாம் இது மாதிரி மத்தவங்கள தான் நினைப்பதை, தன் கருத்தை சரி என்று நம்ப வைக்கிறாங்க? நான் சொல்றதையெல்லாம் ஒரு பயகூட கேக்க மாட்டேன்கிறான். :-( ஆனால் இவங்க சொல்றத கோடிக்கணக்கானவர்கள் நம்பினாங்க, நம்புறாங்க!

ஒருவேளை இதுபோல் ஒருவரை நம்புவது, மதிப்பது  ஒரு மாதிரியான தொத்து வியாதியா? அதாவது ஒரு ஆளு நம்பினால், அதைத்தொடர்ந்து எல்லாருக்கும் அந்த "நம்பிக்கை" தொத்திக்குமா?

ஆனாலும் இவர்களுக்கும் சில பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யுது..,

புத்தர் கருத்தை இந்துக்கள் ஏத்துக்க மாட்டாங்க. நம் ஈழத்தமிழர்களை புத்தனை இழிவு படுத்துவதைப் பார்க்கலாம்.. ஏசு கருத்தை, போதனைகளை இந்துக்களும், முஸ்லிம்களும், யூதர்களும் ஏத்துக்க மாட்டாங்க.
காந்தியை இந்து மத வெறியர்களே நெறையப் பேரு ஏத்துக்கலை, அப்புறம் எப்படி கிருத்தவர்களும், இஸ்லாமியர்களும் ஏத்துக்குவாங்க?
என்னதான் இவங்களுக்கு நெறைய பின்பற்றுவர்கள் இருந்து இருந்தாலும்..இவங்க நெறைய சாதிச்சு இருந்தாலும் நம்ம லெவெலுக்கு (என் லெவலுக்கு) இவங்க எப்படிங்க வரமுடியும்?

அதான் நெனச்சதை பேசி, உணர்ச்சிகளை வார்த்தைகளாக்கி அள்ளி எறிய இவங்களுக்கு ஒரு இணையதளம் எல்லாம் அன்று இல்லையே? அந்த வசதி எனக்குத்தானே இருக்கு? அப்புறம் நம்ம ப்ளாக் followers மாதிரி அவங்களுக்கு 354 followers ம் கெடையாது பாருங்க! :) இப்போ சொல்லுங்க! யாரு பெரிய ஆளு? :-)))

கூச்சப்படாமல் சொல்லுங்க, அவர்கள் எல்லாம் ஜுஜுபி, நம்ம வருண் தான் பெரியாளுனு! :)))


*************************

கொசுறு:


இணையத்தில் திருடிய ஜோக்



இணையத்தில் திருடிய ஃபெமினிஸ்ட் க்வோட்!






இது உண்மைதான்னு எல்லா ஆம்பளைகளுக்கும் தெரிந்து இருக்கணும். தெரியலைனா, நீங்க ஆம்பளையே இல்லை! :)

என்ன பார்க்குறீங்க?

ஏற்கனவே படிச்சமாதிரி இருக்கா? :)

ஆமா, இதுவும் ஒரு மீள் பதிவுதான். நெறையா படங்களை இணையத்தில் திருடி இப்போ சேர்த்துவிட்டு இருக்கேன். ஒரிஜினல் பதிவு என்னவோ ரொம்ப ஒரிஜினலாவேதான்  இருந்துச்சு! :)

27 comments:

Avargal Unmaigal said...

///சிறுவயதில் நான் ஒரு ஹைப்பர் ஆக்டிவ் ச்சைல்ட்!///

இப்ப நீங்க ஒரு ஹைப்பர் ஆக்டிவ் வாலிபர்....சரியா பாஸ்

Avargal Unmaigal said...

//வாலிபால்" வெளையாடும்போது. அப்படினா? அதாங்க volleyball. :) ///

நல்ல வேளை விளக்கம் கொடுத்தீங்க.....இல்லைன்னா நான் கவிஞர் வாலி பால் விளையாடும் போது என்று புரிந்து அதன் பின் என்ன சொல்றீங்க என்று குழம்பி இருப்பேன்

Avargal Unmaigal said...

கொசுறுல முதல் படம் எங்க வீட்டுல நடந்ததை எப்படியோ நீங்க தெரிஞ்சுகிட்டு அதை இங்கே வெளியிட்டு இருக்கீங்க

2வது படத்துல நாம வாவ் என்று சொல்லுவோம் ஆனா பெண்கள் ச்சீய் என்று சொல்லுவார்கள் அவ்வளவுதான் வித்தியாசம்

3 வது படம் இந்திய ஆண்களுக்கு வேண்டுமென்றால் பொருந்தும் ஆனால் அமெரிக்கர்கள் onece they have --- .they don't want keep her

விசு said...

கோலி, வாலிபால், டென்னிஸ்...ஆடிய ஆட்டமென்ன? நல்ல பதிவு, ரசித்து படித்தேன்.

மகிழ்நிறை said...

போஸ்ட் போட்ட நேரத்தை பார்த்தேன், அந்த ஹைபர் ஆச்டிவ்னஸ் தாக்கம் இன்னும் இருக்கும் போல:)) பதிவு பல களங்களை தொட்டு போய்கிட்டே இருக்கு:)
இதில் உங்களுக்கு தெரிந்த அளவு எல்லா சப்ஜெக்டும் எனக்கு தெரியாது என்பதால், எல்லாத்துக்கும் கருத்துச் சொல்லும் தமிழர் இயல்பை நான் ஏற்க விரும்பவில்லை:)
எனக்கு தோணின ஒரே ஒரு விசயத்த மட்டும் சொல்லுறேன். நீங்க குறிப்பிட்ட எல்லோரும் தங்கள் சொந்த கருத்துக்களும், தங்கள் மேலும் நம்பிக்கை உள்ளவர்கள். சொல்லவந்த கருத்தை அமைதியாகவும், நிதானமாகவும் சொல்லும் கலையில் வல்லவர்கள். என சத்தமாய் சொல்லும் விஷயங்கள் இரைச்சலுக்கு நடுவே கேட்பதே சிரமம் இல்லையா? got it:)))
மற்றபடி வருண் சொன்னது போல் தன் கருத்து சரிதான் என தெளிவாக நிற்பதில் இந்த வரிசையில் தன் சேர்த்து கொள்ளலாம் தான். எல்லோருக்குள்ளும் ஒரு புத்தன் இருக்கிறான் என்பதை உணர்கிறவர்கள் புத்தானாகவே ஆகிறார்களோ இல்லையோ, குறைந்த பட்சம் சொல்லிலும், செயலிலும், மனதிலும் அமைதியை உணர்கிறார்கள்.
ஏன் பாஸ் ??? ஏன் இப்படி தலைப்பு வச்சு என்னை எர்லி மார்னிங் தத்துவம் எல்லாம் பேச வைகிறீர்கள்:))
ஓகே இது உங்களுக்கு மாலை நேரம், எனக்கு பள்ளிக்கு கிளம்ப வேண்டும்.(இன்னும் ஸ்கூல்க்கு போற பக்கிகலாம் தத்துவம் பேசுதேன்னு ஒரு மைன்ட் வாய்ஸ் கேட்குது!! அது நீங்களா??)
அப்புறம் ஒரு சின்ன விஷயம். இப்படிப்பட்ட விளங்காத கணவனோட அந்தப்புள்ள இம்புட்டு நாள் எப்படிதான் குடும்பம் நடத்துச்சோ??(நான் fridge ஜோக்கை சொன்னேன்)

Iniya said...

ஆமா ஆமா நீங்க பெரிய ஆளு தான் ஒத்துக்கிறோம் ஓத்துக்கிறோம்.

Iniya said...

ஆமா எப்படிங்க இவங்க எல்லாம் இது மாதிரி மத்தவங்கள தான் நினைப்பதை, தன் கருத்தை சரி என்று நம்ப வைக்கிறாங்க? நான் சொல்றதையெல்லாம் ஒரு பயகூட கேக்க மாட்டேன்கிறான். :-( ஆனால் இவங்க சொல்றத கோடிக்கணக்கானவர்கள் நம்பினாங்க, நம்புறாங்க!

இப்ப என்ன நாங்க தான் நம்புறோமில்ல அப்புறம் என்ன புத்தர்,இயேசு, காந்தி வரிசையில் அடுத்தது வருண் தான். சந்தேகம் இல்லாமல். ok தானே.

திண்டுக்கல் தனபாலன் said...

இப்படியா உண்மைய புட்டு புட்டு வைக்கிறது... நீங்க பெரியாளு தான்...!

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

யாரு கருத்தையும் எல்லாரும் ஏத்துக்க மாட்டாங்க வருண்..அதுக்காக நம்ம கருத்துச் சொல்லாம இருக்க முடியுமா? :)
வாலிபாலில் நீங்கள் சொன்ன outline,inlineகு உங்களை மாதிரி ஆளு தேவைதான்..எங்காவது இவங்களுக்கெல்லாம் செக் வைக்கணும்ல..
நீங்க பெரியவரு தான்..

Angel said...

/"முனிவர் சொல்லிட்டாரே, அதுபடி நடந்துடுமே.." னு அழுததழுது வீணாப்போயிடாதீங்கனு சொல்ல வர்றேன். சரியா? :)//
நெசம்மாவா சொல்றீங்க ???? நீங்க சொன்னா சரியாதான் இருக்கும் :)
அந்த பெரியவர் வீட்டில் யார்கிட்ட அடிவாங்கிட்டு வந்தாரோ :) அங்கே கொட்ட முடியாததை தனது இயலாமையை உங்களிடம் காட்டியிருக்கார் :).




அந்த fridge :)நோட் ..ஹா ஹா :) இத்தனை காலம் பொறுமையா இருந்ததுக்கு அந்த மனைவிக்கு அவார்ட் கொடுக்கணும் :) ...husband and dog missing ......reward for dog !!!! இது நினைவுக்கு வருது ..

வருண் said...

****Avargal Unmaigal said...

///சிறுவயதில் நான் ஒரு ஹைப்பர் ஆக்டிவ் ச்சைல்ட்!///

இப்ப நீங்க ஒரு ஹைப்பர் ஆக்டிவ் வாலிபர்....சரியா பாஸ்****

நான் இன்னைக்கு பெருமையடிச்சே ஒப்பேத்துறதுனு ஒரு முடிவுக்கு வந்துட்டேன்...

தல: நீங்க செய்யும் வேலையை காதலிக்க ஆரம்பிச் சுட்டீங்கன்னா..நீங்க எப்போவுமே ஹைப்பர் ஆக்டிவாக இருக்கலாம் செய்யும் தொழிலில்..எனக்கு ஹைப்போவா இருக்கிறதை விட ஹைப்பரா இருப்பதுதான் பிடிக்கும். :)))

வருண் said...

*** Avargal Unmaigal said...

//வாலிபால்" வெளையாடும்போது. அப்படினா? அதாங்க volleyball. :) ///

நல்ல வேளை விளக்கம் கொடுத்தீங்க.....இல்லைன்னா நான் கவிஞர் வாலி பால் விளையாடும் போது என்று புரிந்து அதன் பின் என்ன சொல்றீங்க என்று குழம்பி இருப்பேன்****

தல: தமிழிங்லிஷ்ல சொல்லும்போது கொஞ்சம் கவனமாக சொல்லிடுவோமேனுதான்..

அப்புறம்..இந்தியர்களுக்கெல்லாம் க்ரிக்கட் பைத்தியம் பிடித்து இருப்பதால் மற்ற விளையாட்டெல்லாம் மறந்துபோயிருக்குமேனு கொஞ்சம் திரும்பத் திரும்ப தமிழ்ங்லிஷ்லயும், ஆங்கிலத்திலும் சொல்லியிருக்கேன். அவ்ளோதான்.

நீங்க கூட பேஸ் பால் பத்தி பேசினால் வாயையே திறக்க மாட்டேன்கிறங்க! இருந்தாலும், உங்களுக்கும் க்ரிக்கட் மட்டும்தான் தெரியும்னு நான் ஒருபோதும் நெனச்சது இல்லை- உங்க மேலே சத்தியம் பண்ணிச் சொல்லுறேன். :)))

வருண் said...

***Avargal Unmaigal said...

2வது படத்துல நாம வாவ் என்று சொல்லுவோம் ஆனா பெண்கள் ச்சீய் என்று சொல்லுவார்கள் அவ்வளவுதான் வித்தியாசம்****

நீங்க எந்தக்காலத்தில் இருக்கீங்க, தல.

நிக்கி மினாஜ்னு ஒரு "அம்மணி" தெரியுமா உங்களுக்கு?

சமீபத்தில் அனக்கோண்டா னு ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கார்..

அவர் செய்ற அட்டூழியத்தை எல்லாம் பார்த்து நீங்கதான் "ச்சீ"னு வெக்கப் படுவீங்க. பெண்மணி அவர் எல்லாம் அப்படி எதுவும் வெட்கம், கிட்கம்னு எதுவும் செய்வதில்லை.

இந்த வீடியோவைப் பார்த்து "ச்சீ"னு சொல்லுங்க..

http://www.youtube.com/watch?v=LDZX4ooRsWs



வருண் said...

***விசுAWESOME said...

கோலி, வாலிபால், டென்னிஸ்...ஆடிய ஆட்டமென்ன? நல்ல பதிவு, ரசித்து படித்தேன்.***

ஒரு நாள் கலிஃபோர்னியா வர்ரேன். நம்ம ரெண்டுபேரும் சிங்கிள்ஸ் டென்னிஸ் ஆடுவோம், விசு அண்ணா! சரிதானே? :)

வருண் said...

**** Mythily kasthuri rengan said...***

வாங்க, மைதிலி! :)

*** போஸ்ட் போட்ட நேரத்தை பார்த்தேன், அந்த ஹைபர் ஆச்டிவ்னஸ் தாக்கம் இன்னும் இருக்கும் போல:))****

என்னதான் தினமும் வயதாகிக்கிட்டே போனாலும், அதே ஜீன்ஸ்தான உடம்பில் இருக்கும், மைதிலி?

***பதிவு பல களங்களை தொட்டு போய்கிட்டே இருக்கு:)***

மீள்பதிவு போட்லாம்னுதான் ஆரம்பிச்சேன்.. அப்புறம் நம்ம மதுரைத் தமிழர் பெண்களை டீஸ் பண்ணுறமாதிரி ஒரு பதிவு போட்டு இருந்தார். அவருக்கு ஒரு பாடம் கற்பிப்போமேனே ஒரு நிமிடம் பெண்ணியவாதியாக மாரி இப்பதிவில் கொசுறு சேர்த்து முடித்துவிட்டேன். அதான் எல்லாம் கலந்துருச்சு. :)


***இதில் உங்களுக்கு தெரிந்த அளவு எல்லா சப்ஜெக்டும் எனக்கு தெரியாது என்பதால், எல்லாத்துக்கும் கருத்துச் சொல்லும் தமிழர் இயல்பை நான் ஏற்க விரும்பவில்லை:)***

அடடா! உங்களை என்னை மாதிரி (உங்களோட நானும் சேர்ந்துக்கிட்டேன் :) ) ஒரு 4 தமிழர்கள் இருந்தால் நம்ம எங்கேயே போயிருப்போம். என்ன பண்ணுறது உங்களை மாதிரி என்னனி மாதிரி இல்லாமல், எல்லாரும் உடன்பிறப்புகளாகவும், ரத்தத்தின் ரத்தங்களாகவும் இருக்காங்களே! :)


****எனக்கு தோணின ஒரே ஒரு விசயத்த மட்டும் சொல்லுறேன். நீங்க குறிப்பிட்ட எல்லோரும் தங்கள் சொந்த கருத்துக்களும், தங்கள் மேலும் நம்பிக்கை உள்ளவர்கள். சொல்லவந்த கருத்தை அமைதியாகவும், நிதானமாகவும் சொல்லும் கலையில் வல்லவர்கள். என சத்தமாய் சொல்லும் விஷயங்கள் இரைச்சலுக்கு நடுவே கேட்பதே சிரமம் இல்லையா? got it:)))***

கத்தினால் கேக்க மாட்டாங்கனு சொல்றீங்க? அமைதியா சொன்னவங்களை சிலுவையில் அறைந்தார்கள், சுட்டுக் கொன்னுட்டாங்க.. இந்தப் படுபாவிகள்களிடம் சத்தமாப் பேசினால்தான் கொஞ்சமாவது பயப்படுவாங்கனுதான்... கொஞ்சம் வால்யூம் அதிகமாயிடுச்சு போல:)))


வருண் said...

***மற்றபடி வருண் சொன்னது போல் தன் கருத்து சரிதான் என தெளிவாக நிற்பதில் இந்த வரிசையில் தன் சேர்த்து கொள்ளலாம் தான். எல்லோருக்குள்ளும் ஒரு புத்தன் இருக்கிறான் என்பதை உணர்கிறவர்கள் புத்தானாகவே ஆகிறார்களோ இல்லையோ, குறைந்த பட்சம் சொல்லிலும், செயலிலும், மனதிலும் அமைதியை உணர்கிறார்கள்.****

புத்தனையும், பொண்டாட்டி பிள்ளையை தவிக்கவிட்டுப் போன பாவினு சொல்லும் உலகம் இது மைதிலி. எல்லாருக்கும் நல்லவனா வாழ்வது கடவுளுக்கே கஷ்டம்தானே?. அதான் அவர் பயந்து கொண்டு மனிதப் பிறவி எடுப்பதில்லை. :)

இதெல்லாம் இவனுஎக்கெப்படி தெரியும்னு யோசிக்கிறிங்க. கடவுளையே உருவாக்கிய மனித இனம் நான்! :)))


***ஏன் பாஸ் ??? ஏன் இப்படி தலைப்பு வச்சு என்னை எர்லி மார்னிங் தத்துவம் எல்லாம் பேச வைகிறீர்கள்:))
ஓகே இது உங்களுக்கு மாலை நேரம், எனக்கு பள்ளிக்கு கிளம்ப வேண்டும்.(இன்னும் ஸ்கூல்க்கு போற பக்கிகலாம் தத்துவம் பேசுதேன்னு ஒரு மைன்ட் வாய்ஸ் கேட்குது!! அது நீங்களா??)***

இப்போ எனக்கும் ஒட்டிவிட்டு தத்துவமா கொட்ட வச்சுட்டீங்க! பழிக்குப்பழியா? :))

***அப்புறம் ஒரு சின்ன விஷயம். இப்படிப்பட்ட விளங்காத கணவனோட அந்தப்புள்ள இம்புட்டு நாள் எப்படிதான் குடும்பம் நடத்துச்சோ??(நான் fridge ஜோக்கை சொன்னேன்)***

Men are stupid. Women go crazy because of stupid men. That is true. It does not matter who I am, fact is a fact. I have got to admit some bitter truths at least for few seconds! :)))

மகிழ்நிறை said...

சத்தமா பேசின சேகுவேராவையும் தான் சுட்டுகொன்னாங்க, நேதாஜி என்ன ஆனார்னே தெரியலையே:)

ஆனா நீங்க எழுதின தலைப்பை மறுபடி படிச்சு பாருங்க, படிக்கும் போதே இது அன்பும், அமைதியும் மனதில் விதைக்கும்:)

வழக்கம் போல இதுக்கும் பல்பு தான் கொடுக்கபோறீங்க:(( உங்ககிட்ட பேசி ஜெய்க முடியுமா??

மகிழ்நிறை said...

குடும்பம் நடத்த ஒரு passion வேணும். எப்போ அது மிஸ் ஆகுதோ அப்போ வாழ்க்கை கசக்க ஆரம்பித்துவிடும். இது தத்துவம் இல்லை,சைக்காலஜி:) so ! அந்த passion போன பிறகும் உலகத்திற்காக மனைவியோடு வாழ்ந்து, அவள் வாழ்கையை மேலும் நரகத்திற்கு ஆளாக்காத புத்தர் என்னை பொறுத்தவரை சரியான முடிவு தான் எடுத்திருக்கிறார்னு தோணுது:)

________
I have got to admit some bitter truths at least for few seconds!***
உங்க நேர்மையை இந்த அவை மெச்சுகிறது:)))

saamaaniyan said...

வழக்கம் போலவே தைரியமான, வெளிப்படையான பதிவு !

படித்தபோது சட்னு என் மனசுல பதிஞ்சது...

" ஒருவேளை இதுபோல் ஒருவரை நம்புவது, மதிப்பது ஒரு மாதிரியான தொத்து வியாதியா? அதாவது ஒரு ஆளு நம்பினால், அதைத்தொடர்ந்து எல்லாருக்கும் அந்த "நம்பிக்கை" தொத்திக்குமா? "

நீங்கள் ஜாலியாக கேட்டீர்களா இல்லை சீரியசாகவா என தெரியவில்லை ஆனால் இது உண்மை தோழரே ! சமூகத்தின் ஏதோ ஒரு மனிதனிடம் தோன்றும் மாற்று எண்ணமானது அவன் மூலம் அந்த சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட அளவு மக்களை சென்றடைந்துவிட்டால் பின்னர் அந்த எண்ணம் முழு சமூகத்திடமும் பரவிவிடும் !

இதனை, எனது பதிவு ஒன்றில் எனக்கு புரிந்த அளவில் விளக்கியுள்ளேன் !

http://saamaaniyan.blogspot.fr/2014/05/blog-post.html

அப்புறம்... அஹம் பிரம்மாஸ்மி ! அம்புட்டுத்தேன் !!!


நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr

வருண் said...

***Iniya said...

ஆமா ஆமா நீங்க பெரிய ஆளு தான் ஒத்துக்கிறோம் ஓத்துக்கிறோம்.

************************

ஆமா எப்படிங்க இவங்க எல்லாம் இது மாதிரி மத்தவங்கள தான் நினைப்பதை, தன் கருத்தை சரி என்று நம்ப வைக்கிறாங்க? நான் சொல்றதையெல்லாம் ஒரு பயகூட கேக்க மாட்டேன்கிறான். :-( ஆனால் இவங்க சொல்றத கோடிக்கணக்கானவர்கள் நம்பினாங்க, நம்புறாங்க!

இப்ப என்ன நாங்க தான் நம்புறோமில்ல அப்புறம் என்ன புத்தர்,இயேசு, காந்தி வரிசையில் அடுத்தது வருண் தான். சந்தேகம் இல்லாமல். ok தானே.****

இனியா: நீங்களே அப்படி மனதாற சொல்வதால்.. சரியாத்தான் இருக்கும். :)))))

வருகைக்கு நன்றி, இனியா :)

வருண் said...

*****திண்டுக்கல் தனபாலன் said...

இப்படியா உண்மைய புட்டு புட்டு வைக்கிறது... நீங்க பெரியாளு தான்...!*****

வாங்க, தனாபாலன்!

புத்தரைப் பத்தி சிலாகிக்க நான் இருக்கேன். என்னைப்பத்தி சிலாகிக்க யாருமில்லையே என்கிற ஒரு குறையை சரி செய்ய முயன்றேன்..
:))))))

வருண் said...

**** தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

யாரு கருத்தையும் எல்லாரும் ஏத்துக்க மாட்டாங்க வருண்..அதுக்காக நம்ம கருத்துச் சொல்லாம இருக்க முடியுமா? :)***

அதானே? சரியாச் சொன்னீங்க, கிரேஸ்! :)))

****வாலிபாலில் நீங்கள் சொன்ன outline,inlineகு உங்களை மாதிரி ஆளு தேவைதான்..எங்காவது இவங்களுக்கெல்லாம் செக் வைக்கணும்ல..****

நியாயமாக ஆடி தோத்தாலும், அநியாயமாக பொய் சொல்லி ஜெயிச்சாலும் ஒரே அளவு காலரிதான் எரிகிறது. இல்லையா கிரேஸ்? தோற்றாலும் ஜெயித்தாலும் வெற்றிதான். இதில் எதுக்கு மனசாட்சியை அடௌ வச்சு பொய் சொல்லி ஜெயிக்கணும்???

***நீங்க பெரியவரு தான்..***

இப்படி சிறுபிள்ளைத்தனமா நடந்து கொள்ளுகிற பெரிய ஆள் னு நான் எடுத்துக்கிறேன். :))

டேக் இட் ஈஸி, கிரேஸ்! :)

வருண் said...

****Angelin said...

/"முனிவர் சொல்லிட்டாரே, அதுபடி நடந்துடுமே.." னு அழுததழுது வீணாப்போயிடாதீங்கனு சொல்ல வர்றேன். சரியா? :)//
நெசம்மாவா சொல்றீங்க ???? நீங்க சொன்னா சரியாதான் இருக்கும் :)
அந்த பெரியவர் வீட்டில் யார்கிட்ட அடிவாங்கிட்டு வந்தாரோ :) அங்கே கொட்ட முடியாததை தனது இயலாமையை உங்களிடம் காட்டியிருக்கார் :).****

வாங்க ஏஞ்சலின்!

சின்னச் சின்ன விசயங்களில்கூட நம்ம மனதை கவனமாகப் பார்த்துக்கணும்ங்க. நான் செய்தது தவறுதான். ஆனால் அந்த வயதில் எனக்கு அப்பெரியவர் பிரச்சினைகள் அல்லது அனுபவம் எனக்குக் கெடையாது. சரியா? ஆனால் அப்பெரியவருக்கு என் மனநிலை தெரியும். நான் சிறுவன் எனக்கு அனுபவம் இல்லைனு தெரியும். அவர்தான் "பெரிய மனுஷனாக" நடந்துகொண்டு என்னை மன்னித்து விட்டு இருக்கணும். இஷ்டத்துக்கு சாபம் விடுவது அவரின் தவறுதாங்க.

***அந்த fridge :)நோட் ..ஹா ஹா :) இத்தனை காலம் பொறுமையா இருந்ததுக்கு அந்த மனைவிக்கு அவார்ட் கொடுக்கணும் :) ...husband and dog missing ......reward for dog !!!! இது நினைவுக்கு வருது ..***

That was joke but those do do happen among couples in real life.

Have you seen Seinfeld episode (The trip)!

Watch this one if you have time!

------
George: Go, go, go, don't worry about it.

Jerry leaves and Corbin Bernsen enters through a stage door. he stands near
George, obviously waiting for someone.

George: Hey. (pointing at him) Corbin Bernsen.

Corbin Bernsen: How ya doing?

George: Big fan! Big fan.

Corbin Bernsen: Yeah.

George: Hey, you grew a beard, huh?

Corbin Bernsen: Yeah, yeah. I'm doing a movie during my hiatus.

George: Hey. You know, do I have a case for you guys to do on L.A. Law.

Corbin Bernsen: Really.

Flash forward to the middle of George's 'pitch'.

George: ...so mind you, at this point I'm only going out with her two or three
weeks. So she goes out of town and she asks me to feed her cat. So at this
time, there's a lot of stuff going on in my life and, uh, it slips my mind for a
few days. Maybe a week. Not a week, five, six days.

Corbin Bernsen: Yeah yeah yeah. So what happened?

George: Well, it's the damnedest thing. The cat dies. So she comes back into
town, she finds the cat lying on the carpet stiff as a board.

Corbin Bernsen: So you killed the cat.

George: That's what she says. I say, listen. It was an old cat. It died of
natural causes. So get this, now she tells me that I gotta buy her a brand new
cat. I say listen, honey. First of all, it was a pretty old cat. I'm not
gonna buy you a brand new cat to replace an old dying cat. And second of all, I
go out to the garbage, I find you a new cat in fifteen seconds. I say, you show
me an autopsy report that says this cat died of starvation, I spring for a new
cat. So she says something to me, like, uh, I dunno, get the hell out of here,
and she breaks up with me. Now don't you think that would be a great case on
L.A. Law?

Corbin Bernsen just stares at George.


-----------------

வருண் said...

வாங்க மைதிலி! :)))

****வழக்கம் போல இதுக்கும் பல்பு தான்கொடுக்கபோறீங்க:(( உங்ககிட்ட பேசி ஜெய்க முடியுமா?? ***

இந்த முறை ஜெயிச்சது நீங்கதான், மைதிலி! "நடுவர்கள்" எல்லாரும் அப்படித்தான் உணர்கிறார்கள்! :)))

வருண் said...

***I have got to admit some bitter truths at least for few seconds!***
உங்க நேர்மையை இந்த அவை மெச்சுகிறது:)))***

கொஞ்சமாவது "ஆனஸ்ட்டா" இருந்தால்த்தானே உங்களிடமிருந்து இதுபோல் "காம்ப்ளிமெண்ட்" எல்லாம் கெடைக்கும், மைதிலி? :))))

வருண் said...

****" ஒருவேளை இதுபோல் ஒருவரை நம்புவது, மதிப்பது ஒரு மாதிரியான தொத்து வியாதியா? அதாவது ஒரு ஆளு நம்பினால், அதைத்தொடர்ந்து எல்லாருக்கும் அந்த "நம்பிக்கை" தொத்திக்குமா? "

நீங்கள் ஜாலியாக கேட்டீர்களா இல்லை சீரியசாகவா என தெரியவில்லை ஆனால் இது உண்மை தோழரே ! சமூகத்தின் ஏதோ ஒரு மனிதனிடம் தோன்றும் மாற்று எண்ணமானது அவன் மூலம் அந்த சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட அளவு மக்களை சென்றடைந்துவிட்டால் பின்னர் அந்த எண்ணம் முழு சமூகத்திடமும் பரவிவிடும் !

இதனை, எனது பதிவு ஒன்றில் எனக்கு புரிந்த அளவில் விளக்கியுள்ளேன் !

http://saamaaniyan.blogspot.fr/2014/05/blog-post.html

அப்புறம்... அஹம் பிரம்மாஸ்மி ! அம்புட்டுத்தேன் !!!***

வாங்க சாம்! உங்க பதிவைப் பார்த்து விரைவில் என் கருத்தைச் சொல்லுறேன். கொஞ்சம் வேலை அதிகமாக இருக்கிறது அதனால ரெஸ்பாண்ஸ்கெல்லாம் ரெஸ்பாண்ட் பண்ண, "லேட்" ஆயிருச்சு! :)

வருண் said...

உங்க பதிவில்..


http://saamaaniyan.blogspot.fr/2014/05/blog-post.html

என்னுடைய பதிலைக் கொடுத்துள்ளேன். வாசிச்சுப் பாருங்க. அதன் நகல் இங்கே..

///***அரசாங்கமே விக்குது, குடிக்கறேன் என்பதை நான் குடிப்பதால்தான் அரசாங்கம் விற்கிறது என மாற்றி யோசித்து பாருங்கள் ! குடிப்பவர்களில் கணிசமானோர் குடியை நிறுத்திவிட்டால் மதுக்கடையை திறந்த அரசாங்கமே அதனை மூடவும் செய்யும் ! அதிகம் பேர் குடிக்கிறார்கள் என்ற லாபநோக்கில்தானே திறந்தார்கள் ? குடிப்பவனே இல்லையென்றால் கடை எப்படி இருக்கும் ?****

சாம்: இப்போ எல்லாம் பதிவர்களே குடிப்பதை சாதாரணமாக கட்டுரைகளில் எழுதுறாங்க. அதை தப்புனு சொன்னால் உங்களை பார்த்து சிரிப்பார்கள். நான் எல்லாம் சொல்லிப் பார்த்துவிட்டேன்.. குடி! அட் லீஸ்ட் அதை வந்து விளம்பரப்படுத்தாமலாவது இருனு சொல்லிட்டேன். இதிலென்ன தப்பு?னு "கவுண்டர்" வாதம் செய்றாங்க.. நாடு ரொம்ப வேகமாக முன்னேறிவிட்டது சாம். நாடுவிட்டு நாடு போய்விட்டதால், நம் நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை நம்மால் சரியாக உணரமுடியவில்லை. நம் சிந்தனைகள் 20 ஆண்டுகள் "பின் தங்கியே" இர்க்கிறது. நிகழ்காலத்தை (மக்கள் மனநிலையை) நம்மால் சரியாக உணர முடியவில்லை என்றே தோன்றுகிறது.

இதுபோக அடல்ட் கார்னர், நாண்வெஜ்னு சொல்லிக்கிட்டு கேபிள் சங்கர், ஜாக்கி சேகர் போன்றவர்கள், மிகவும் அசிங்கமான போர்ன் சைட்ல வருகிற ஜோக்களை காப்பி பேஸ்ட் பண்ணி பதிவில் சேர்க்கிறார்கள். இதெல்லாம் தப்புனு யாருமே உணாருவதாகத் தெரியவில்லை. இதையெல்லாம் எடுத்துப் பேசினால் நம்ம "வில்லனாகி" விடுவோம், இதுபோல் "ஹீரோக்கள்' நிறைந்த தமிழ் உலகில்..///