Tuesday, April 21, 2009

உளறலா? இல்லை ராஜதந்திரமா இது, கலைஞரே?!

முதல்வர் கலைஞர் கருணாநிதி, பிரபாகரனை மனிதாபிமான அடிப்படையில் "தன் நண்பர்" என்பதுபோல் சொல்லியுள்ளார். இது போல் அவர் சொன்னது, பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. இப்போது அவர் சொன்னதை சரி செய்து திரும்ப வேறுமாதிரி சொல்கிறார் என்கிறார்கள்.

சிலர் நினைக்கிறார்கள் இது (இந்த ஸ்டேட்மெண்ட்), திரு. கருணாநிதியின் உளறல் என்று. அதாவது பிரபாகரனை அவர் நண்பர் என்று தேவை இல்லாமல் சொல்லியுள்ளார் என்று. இது காங்கிரஸ் கட்சிக்காரர்களுக்கு கோபத்தையும் எரிச்சலையும் உண்டுபண்ணலாம்.

ஆனால்...

என்ன ஆனால்?

கவனித்துப்பார்த்தால் இது ஒரு கலைஞரின் ராஜதந்திரமாகக்கூட இருக்கலாம்.

* காங்கிரஸ் இதை எதிர்த்து அரசியல் செய்யும் நிலையில் இன்று இல்லை! அவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

* இது நிச்சயம் ஈழத்தமிழர்களையும் ஈழத்தமிழர் அபிமானிகளையும் மறைமுகமாக திருப்திப்படுத்தித்தான் இருக்கும்- உளறலாக இருந்தால்கூட.

* ஈழத்தமிழர் பிரச்சினனயை வைத்து அரசியல் செய்துகொண்டிருக்கும், வை கோ வோ, ராமதாஸோ, ஜெயலலிதாவோ இதை வைத்து, இதை க்ரிடிசைஸ் செய்து அரசியல் செய்தால், விபரீதமாக முடிய வாய்ப்புள்ளது.

கவனமா இருங்கப்பா! ஒண்ணு கெடக்க ஒண்ணாகிடறப்போது! :-)))

4 comments:

பதி said...

வருண்,

கொலைஞரைப் பற்றி ஏதாவது பதிவு போடனும்னா தினமும் செய்தி படிச்சாப் பத்தாது, செய்தியை மட்டுமே எப்பொழுதும் படிக்கனும்... சரியா?

ஏன்னா, நீங்க போட்டுருக்குறது முந்தா நாள் செய்தி....

அதுக்குப் பிறகு, நேத்து ஒரு அறிக்கை வந்துடுச்சி...

http://thatstamil.oneindia.in/news/2009/04/20/tn-karunanidhi-clarifies-his-statement-on-prabhaka.html

ஆனால், இந்த அறிக்கை நேத்து வெளியிட்டது, இன்னைக்கு வேற எதாவது புது கதையை ஈன தலைவன் கிளப்பி இருந்தால் அதுக்கு நான் பொறுப்பில்லை....

வருண் said...

நன்றி, பதி. இன்னும் தெளிவாக இல்லை அவர் பதில்! எதை மறுக்கிறார் என்று :-)

VIKNESHWARAN ADAKKALAM said...

இன படுகொலையை துடைத்தொழிக்க வக்கில்லாமல் இப்படி அவர் அரசியல் பேசிக் கொண்டிருப்பது அவருக்கே அவர் வினை தேடிக் கொள்ளும் செயல் தான். எது எப்படியாகினும் அவர்கள் இரண்டு பேரைத் தவிற வேறு யாரும் அரசியலுக்கு வர் மாட்டாங்க போல. எவ்வளவு தூற்றினாலும் மக்களுக்கு அவர்கள் இருவர் மட்டுமே தேர்வாக இருப்பது என்னவென்று சொல்ல.. :(

வருண் said...

***VIKNESHWARAN said...
இன படுகொலையை துடைத்தொழிக்க வக்கில்லாமல் இப்படி அவர் அரசியல் பேசிக் கொண்டிருப்பது அவருக்கே அவர் வினை தேடிக் கொள்ளும் செயல் தான். எது எப்படியாகினும் அவர்கள் இரண்டு பேரைத் தவிற வேறு யாரும் அரசியலுக்கு வர் மாட்டாங்க போல. எவ்வளவு தூற்றினாலும் மக்களுக்கு அவர்கள் இருவர் மட்டுமே தேர்வாக இருப்பது என்னவென்று சொல்ல.. :(

24 April, 2009 9:37 AM***

உன்மைதாங்க, நம்ம மக்களுக்கு "மாற்றம்" என்பது, "புதிதாக ஏதாவது முயல்வது" என்பதெல்லாம் தேவையில்லாத விசயம். :-(