Saturday, May 9, 2009

தமிழனுக்கு ஏதுடா நாட்டுப்பற்று?!

தமிழனத் தலைவர் என்று அழைக்கப்பட்ட, பார்ப்பனர்களால் அன்றும், இன்றும், என்றும் வெறுக்கப்பட்ட தமிழர் திரு கருணாநிதியை இன்று "பார்ப்பன நண்பர்", "தமிழின துரோகி" என்று "மானமுள்ள தமிழ்ப்பற்றாளர்கள்" நம்புவதுடன் இவரை வெறுக்கிறார்கள். வழக்கம்போல இவரை பார்ப்பனர்கள் எப்போவும் போலவே வெறுக்கிறார்கள்.

சரி கருணாநிதி இன துரோகி என்றால் இவருக்கு நாட்டுப்பற்று ஏதாவது உண்டா? நாட்டுக்காக இனத்தை தூக்கி எறிந்த தேசபக்தரா இவர்? நாட்டுப்பற்று உண்டு என்று சொன்னால் யாராவது நம்புவார்களா?

யார் நம்புவது? தமிழரல்லாதவர்கள் சிரிப்பார்கள்! தமிழரல்லாதவருக்கு, கருணாநிதி ஒரு தமிழ் ஃபெனாடிக்! தமிழனத்தலைவன்!

ஆனால் தமிழனுக்கு? கருணாநிதி ஒரு இன துரோகி! மொழி துரோகி! என்ன ஒரு பரிதாபம்!

சரி திரு. கருணாநிதியை விட்டுவிடுவோம். இப்போ தமிழனால் தமிழனை காப்பாற்ற முடியவில்லை என்றால், தமிழர்கள் என்ன செய்வார்கள்? இது என்ன இன்னைக்கு நேத்தா நடக்குது? அப்படி ஒரு நிலைமையில் என்ன செய்வார்கள் தமிழ் பற்றாளர்கள்?

தமிழ்பற்றுடன் இருக்கும் இன்னொரு திராவிடனை தமிழின தலைவனாக்கி வெற்றியடைவார்களா?

காமெடி பண்ணாதீங்க! அதெல்லாம் அவர்களால் என்றுமே முடியாது! ஏன் முடியாது? அதுமட்டும் முடியவே முடியாது!

ஏன்? ஏன்? ஏன்?

எனக்குத்தெரியாது! வை கோவை கேளுங்க! இல்லை சீமானை கேளுங்க! இல்லைனா ராமதாசை கேளுங்க!

அப்போ என்னதான் செய்வார்கள்?

திராவிடரான தமிழர்கள், பார்ப்பன தெய்வங்களை வணங்குவார்கள்! தெய்வம் அருள் புரியாமல் இருக்குமா?

இப்போ பார்ப்பன தெய்வமான ஜெயலலிதாவை ராமதாசு, வை கோ போன்ற திராவிட பூசாரிகள் வழிபட்டு, தெய்வம் அருளை பெற்று விட்டார்கள்!

ஆக, இன்று தமிழனுக்காக குரல் கொடுப்பது பார்ப்பன வகுப்பை சேர்ந்த தெய்வம் அன்னை ஜெயலலிதா!

ஆமாம், கைபர் போலன் என்று பிதற்றும் ஒரு சில அரைவேக்காடுகளும் தெய்வம் ஜெயலலிதாவின் கைபர் போலன் பூர்விகத்தை மறந்த மரமண்டைகள்தாம்.

பார்ப்பன தெய்வம் ஜெயலலிதாதான் தமிழன் கண்ணீரை துடைக்கப்போகிறது. எப்படி? இன்னொரு இந்திய அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பி! பயப்படாதீர்கள்! இந்தமுறை இது நல்ல இந்திய அமைதிப்படை! இது சிங்களர்களைத்தான் தாக்கும்! தமிழர்களை அல்ல! என்று தெய்வத்தை வழிபடும் தமிழர்கள் நம்புகிறார்கள்! பார்ப்பன தெய்வத்தை நம்பாமல் இருக்கலாமா?

மொத்தத்தில் தமிழனுக்கு இனப்பற்று கிடையாது! அதனால் அவர்கள் வழிபடும் பார்ப்பன தெய்வங்கள்தான் தமிழன் கண்ணீரை துடைக்க வேண்டும் என்று மறத்தமிழர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.

சரி, தமிழ்நாட்டுத் தமிழனுக்கு நாட்டுப்பற்றாவது உண்டா?

நீங்க வேற! நாட்டுப்பற்றுனா கிலோ எத்தனை ரூபாய்னு கேட்பவன் தமிழ்நாட்டுத்தமிழன்! அவனுக்கு என்னைக்குமே நாட்டுப்பற்று கிடையாது! நாட்டுப்பற்றின்மையை பெருமையாக நினைப்பவன் தமிழன்.

அப்போ தமிழனுக்கு என்னதான் இருக்கு? என்னதான் தெரியும்?

* பெரிய வாய்! வாய்கிழிய நெறையவே உளறத்தெரியும்!

* வாய்விட்டு அழுது பார்ப்பனதெய்வங்களை வணங்கத்தெரியும்!

* தமிழனுக்கு எதிரா சதி செய்ய பார்ப்பன தெய்வ வழிபாடு தெரியும்!

வேறென்ன வேணும்?

21 comments:

பழமைபேசி said...

சலிப்பா இருக்கு!

வெற்றி said...

என்னமோப் போங்க. நம்மாளுங்கள நெனச்சா மண்டதான் காயுது.

Darren said...

good post

Tech Shankar said...

தன் மகனை நனைய விடாமல் தடுத்து தான் நனையும் தாய் - அன்னையர் தின வாழ்த்துகள் - 2009

☀நான் ஆதவன்☀ said...

அங்கேயுமா கத்திரி வெயிலு???

ரிலாக்ஸ் ப்ளீஸ் வருண்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

MOTHER'S DAY Vs மாட்டுப் பொங்கல்

ரங்குடு said...

தமிழ்நாட்டுத் தமிழனாலே தமிழ் நாட்டுத் தமிழனையே காப்பாற்ற முடியவில்லை. மற்ற நாட்டுத் தமிழர்களை எப்படிக் காப்பாற்ற முடியும்?

தமிழனுக்கு நாட்டுப் பற்று உண்டா? - சத்தியமாக இல்லை. இந்தியா விடுதலை பெற்ற சமயத்திலேயே, வெள்ளையர் ஆட்சி நீடிக்க வேண்டும் என்று முழங்கியவர்கள் தானே தமிழர்கள்?

வருண் said...

பழமைபேசி, விஜயராஜா, தரன், தமிழ் நெஞ்சம், நான் ஆதவன், சுரேஷ், மற்றும் ரங்குடு!

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி :-)

உங்கள் அன்னையர்களுக்கு என் அன்னையர்தின வாழ்த்துக்கள்!

அது சரி(18185106603874041862) said...

//
ரங்குடு said...
தமிழ்நாட்டுத் தமிழனாலே தமிழ் நாட்டுத் தமிழனையே காப்பாற்ற முடியவில்லை. மற்ற நாட்டுத் தமிழர்களை எப்படிக் காப்பாற்ற முடியும்?

தமிழனுக்கு நாட்டுப் பற்று உண்டா? - சத்தியமாக இல்லை. இந்தியா விடுதலை பெற்ற சமயத்திலேயே, வெள்ளையர் ஆட்சி நீடிக்க வேண்டும் என்று முழங்கியவர்கள் தானே தமிழர்கள்?
//

ஐயா ரங்குடு,

கொஞ்சம் வரலாற்றை படித்து பாருங்கள்...வெள்ளையர் ஆட்சி என்பது எப்படி இந்தியாவிற்கு அன்னியமானதோ, அப்படியே இந்தியா எனும் கான்செப்டும் தமிழ்நாட்டுக்கு அன்னியமானதே...இந்தியா உருவாக்கப்பட்டதே வெள்ளையர் ஆட்சியால் தான்...

தாமிரபரணி said...

//***ரங்குடு said...
தமிழனுக்கு நாட்டுப் பற்று உண்டா? - சத்தியமாக இல்லை. இந்தியா விடுதலை பெற்ற சமயத்திலேயே, வெள்ளையர் ஆட்சி நீடிக்க வேண்டும் என்று முழங்கியவர்கள் தானே தமிழர்கள்?
****//
முதலில் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும் ஒர் நாட்டின் விடுதலை என்பது அந்த நாட்டின் மொழி, கலாசாரம், பண்பாடு,மதம் .... போன்றவற்றில் பிற நாட்டின் ஆதிக்கம் இல்லாமல் இருப்பது, அன்று வெள்ளையன் ஆண்டான் இன்று ஆரியர்களாள வடக்கத்தவர்கள் ஆள்கிறார்கள் என்று நம்மளை நாம் ஆள போகிறோம் எதற்கெடுத்தாலும் தில்லியின் அனுமதி தேவைபடுகிறது, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நடுவன அரசு துறையிலும் இந்தியின் ஆதிக்கம் பலமடங்கு உள்ளது
காவேரி ஆறு, முல்லை பெரியாறு etc, இராமேசுவரத்தில் தமிழ் மினவர்களை இலங்கை இராணுவம் கொல்லும் அவல நிலை,
இலங்கையில் தமிழர்கள் படும் இன்னல்கள் என அனைத்து விசயங்களிளும் தமிழனை இந்தியா நன்றாக எமாற்றி வருகிறது
பின்பு எதற்காக தமிழன் நாட்டுபற்றுடன் இருக்க வேண்டும்
தமிழ்நாட்டில் புலங்கும் ரூபாய் தாளில்கூட ஆங்கிலமும் இந்தியும்தான் சிறப்பாக காணபடுகிறது தமிழ்மொழி எங்கனு தேடவேண்டியது இருக்கு, ரூபாய் தாள்ல தமிழ் இல்லனா இப்ப என்ன, அப்படினு சில பேர் கேட்கலாம் இது ஒரு சாதாரணமாக தெரியலாம் ஆனால் இதுதான் ஒரு மொழியின் சுயமரியாதை என்னும் அளவுகோளை காட்டுகிறது இப்படி தமிழகத்தில் பல துறையில் இந்தியின் ஆதிக்கம் பண்மடங்கு உள்ளது
மொழிபற்றும் நாட்டுபற்றும் வேறு வேறு கிடையாது இரண்டும் ஒன்றுதான், ஒருவன் நம் மொழியை கிண்டலாக,தவறாக பேசினால் யாரும் பெருசாக எடுத்துகொள்வதில்லை ஆனால் நாடின் இறையாண்மைபற்றி பேசிவிட்டால் உடனே அனைவரும் வசைபாடுவார்கள் என்ன கொடும இது
ரூபாய் தாள் முதல் விண்ணில் செலுத்தபடும் விண்கலம் வரை
அனைத்திலும் இந்திதான் இருக்கிறது இப்படியே போய்கிட்டு இருந்தால் தமிழ் செல்லா காசாகிவிடும், நாம் பொருளாதாரத்தில் முன்னேறும் போது நம் மொழியையும் முன்னேற்ற வேண்டும்
இதை நான் சொல்லிதான் தெரியவேண்டும் என்று இல்லை அனைவரும் சிந்திக்க வேண்டும். இந்தி என்னும் அத்துமிறி நுழையும் ஆதிக்கத்தை களை எடுப்போம்

Unknown said...

நல்ல பதிவு.
//ஆனால் தமிழனுக்கு? கருணாநிதி ஒரு இன துரோகி! மொழி துரோகி! என்ன ஒரு பரிதாபம்!//
உண்மையில் நம்ம ஆளுங்க நல்லா விழுந்த பாட்டுக்கு குறி சுட்டு வைப்பாங்க.அப்படித்தான் சீமான் வைகோ ராமாதாசு எல்லோருமே.
கொஞ்சக்காலம் முன்னாடி இவனுக ஜெயலலிதாவுக்கு எதிராக கத்திக்கிட்டு
திரிஞ்சானுக. சீமான் எல்லாம் ஜெயாவைப் பாப்பாத்தி எண்ணு குதியோ குதியெண்ணு குதிச்சாருங்க...
இப்ப பாருங்க பார்ப்பனப் பொண்ணை அவருடைய குரு பெரியாரைவிடவும் பெரியாள் ஆக்கிப்பூட்டாங்க.
அடா தமிழனுக்கு தமிழனையாள ஒரு
வல்லமையுள்ளவனுக்கும் துணிவில்லை.
வசனம் பேசுற வைகோவிற்கு வடிவாகத்
தெரியும். எது நடக்கப் போகுதென. அடா பாவிகளே அப்பாவித்தமிழன் அழிந்து சாகிறாண்டா அவனுகாண்டி நாங்க பேசமாட்டோமிண்ணிட்டு நீங்க கம்மிண்ணு கிடந்தா அவ்ங்களுக்குஎங்கிருந்தாவது ஏதாவது ஒரு விடிவு வரும். களவாணிபபசங்களா உங்க உங்க கட்சிகாவாண்டி ஈழத்தமிழனோட இழவு வீடுதானாடா உங்களுக்கு பிரசார மேடை. அதுசரி வந்தார்// நாட்டுப்பற்று
எல்லாருக்கும் இருக்குதடா எங்கிறார்.
எங்கையா இருக்கு உங்க நாட்டுப்பற்று. ஒரு வாக்கியம் தன்னும் இங்கிலிஸ் கலக்காம எழுதமுடியாத உங்களுக்கே நாட்டுப்பற்று இருக்குதெண்ணா ????தமிழன்

ரங்குடு said...

//காவேரி ஆறு, முல்லை பெரியாறு etc, இராமேசுவரத்தில் தமிழ் மினவர்களை இலங்கை இராணுவம் கொல்லும் அவல நிலை,
இலங்கையில் தமிழர்கள் படும் இன்னல்கள் என அனைத்து விசயங்களிளும் தமிழனை இந்தியா நன்றாக எமாற்றி வருகிறது//

அது சரி. காவேரி - கர்னாடகத்தில் இருந்து வருக்கிறது.முல்லை - கேரளாவில். இவர்கள் எல்லோரும் தங்கள் நாடு/மொழின்னு போய் இருக்கிறதுக்கும் உலை வெச்சாங்கன்னா தமிழக நிலமை என்ன ஆகும்? யோசிச்சுப் பாருங்க.
இன்னும் பாலாற்றிலே அணை கட்ட ஆந்திரம் தயாராகிக் கொண்டிருக்க்கிறது.

ஒரு 40 எம்.பிக் களை வைத்துக் கொண்டு, தமிழகம் மட்டுமே அதிகமாக மத்திய மந்திரிகளைப் பெற்றிருக்கிறது. மற்ற மாநிலங்கள் இதை விடக் குறைவு.

அது சரி(18185106603874041862) said...

//
sulunthee said...
அதுசரி வந்தார்// நாட்டுப்பற்று
எல்லாருக்கும் இருக்குதடா எங்கிறார்.
எங்கையா இருக்கு உங்க நாட்டுப்பற்று. ஒரு வாக்கியம் தன்னும் இங்கிலிஸ் கலக்காம எழுதமுடியாத உங்களுக்கே நாட்டுப்பற்று இருக்குதெண்ணா ????
//

சுலுந்தி,

இது என்னை குறித்து சொல்லியிருந்தால்,

நாட்டுப்பற்று, விளக்கெண்ணை, மற்றும் இதர புண்ணாக்குகள் எல்லாருக்கும் இருக்கு என்று நான் சொல்லவில்லை.....

முதலில் நாட்டுப்பற்று இல்லை என்று எழுதிய ரங்குடுவும், பதிவரும் பதில் சொல்லட்டும், உங்கள் மற்ற கேள்விகளுக்கு நான் பதில் சொல்கிறேன்!

அது சரி(18185106603874041862) said...

//

//காவேரி ஆறு, முல்லை பெரியாறு etc, இராமேசுவரத்தில் தமிழ் மினவர்களை இலங்கை இராணுவம் கொல்லும் அவல நிலை,
இலங்கையில் தமிழர்கள் படும் இன்னல்கள் என அனைத்து விசயங்களிளும் தமிழனை இந்தியா நன்றாக எமாற்றி வருகிறது//

அது சரி. காவேரி - கர்னாடகத்தில் இருந்து வருக்கிறது.முல்லை - கேரளாவில். இவர்கள் எல்லோரும் தங்கள் நாடு/மொழின்னு போய் இருக்கிறதுக்கும் உலை வெச்சாங்கன்னா தமிழக நிலமை என்ன ஆகும்? யோசிச்சுப் பாருங்க.
இன்னும் பாலாற்றிலே அணை கட்ட ஆந்திரம் தயாராகிக் கொண்டிருக்க்கிறது.

ஒரு 40 எம்.பிக் களை வைத்துக் கொண்டு, தமிழகம் மட்டுமே அதிகமாக மத்திய மந்திரிகளைப் பெற்றிருக்கிறது. மற்ற மாநிலங்கள் இதை விடக் குறைவு.
9 May, 2009 8:00 PM
//

காவேரி, முல்லை பெரியாறு பற்றி நான் எழுதவில்லை, ஆனால் நான் எழுதியது போல் நீங்கள் மேற்கோள் காட்டியிருக்கிறீர்கள்....அந்த கருத்தில் எனக்கும் ஒப்புதல் என்பதால் தவறில்லை...

ஆனால், "இருக்கிறதுக்கும் உலை வெச்சாங்கன்ன்னா" என்பதன் மூலம், காவேரி எங்கள் சொத்து என்று கர்நாடகமும், முல்லை பெரியாரில் கேரளாவும் பிரச்சினை செய்வதை ஒப்புக் கொள்கிறீர்கள்......

இப்படி இருக்கையில், இந்திய தேசம் என்பது எங்கு வாழ்கிறது???

பதி said...

//வழக்கம் போல எந்த வித விளக்கமும் இல்லாமல், மேம்போக்கு தனமாக, கவனத்தை ஈர்க்கவென்றே எழுதப்பட்ட பதிவு!

நாட்டுப்பற்று என்றால் என்ன? தமிழனுக்கு நாட்டுப்பற்று இல்லையென்று நீங்கள் சொல்லக் காரணம் என்ன?? Care to explain??

வெள்ளையர் ஆட்சி என்பது எப்படி இந்தியாவிற்கு அன்னியமானதோ, அப்படியே இந்தியா எனும் கான்செப்டும் தமிழ்நாட்டுக்கு அன்னியமானதே...இந்தியா உருவாக்கப்பட்டதே வெள்ளையர் ஆட்சியால் தான்...

காவேரி ஆறு, முல்லை பெரியாறு etc, இராமேசுவரத்தில் தமிழ் மினவர்களை இலங்கை இராணுவம் கொல்லும் அவல நிலை,
இலங்கையில் தமிழர்கள் படும் இன்னல்கள் என அனைத்து விசயங்களிளும் தமிழனை இந்தியா நன்றாக எமாற்றி வருகிறது.//

ரிப்பீட்டேய் !!!!

//பின்பு எதற்காக தமிழன் நாட்டுபற்றுடன் இருக்க வேண்டும்//

இத்துப் போன இந்திய கான்செப்ட்டுக்கு ஜிங் சாங் அடிக்குறதுக்கு பேரு இல்லை நாட்டுப்பற்று.. அந்தக் கருமம் தேவையும் இல்லை...

நாடு, சுதந்திரம், நாட்டுப்பற்று, இந்தியா, இனம் இதைப் பத்தி எழுதுறதுக்கு முன்னாடி அதைப் பற்றி கொஞ்சம் தெளிவு இருப்பது அவசியம்..

To know the meaning of freedom and get rid of the school book garbage's, please spend few minutes

http://www.rediff.com/freedom/27paul.htm

இது சம்பந்தமாக ஒரு பதிவொன்றை சமீபத்தில் இட்டுள்ளேன்
http://pathipakkam.blogspot.com/2009/03/blog-post_28.html

வருண் said...

***sulunthee said... நல்ல பதிவு.
//ஆனால் தமிழனுக்கு? கருணாநிதி ஒரு இன துரோகி! மொழி துரோகி! என்ன ஒரு பரிதாபம்!//
உண்மையில் நம்ம ஆளுங்க நல்லா விழுந்த பாட்டுக்கு குறி சுட்டு வைப்பாங்க.அப்படித்தான் சீமான் வைகோ ராமாதாசு எல்லோருமே.
கொஞ்சக்காலம் முன்னாடி இவனுக ஜெயலலிதாவுக்கு எதிராக கத்திக்கிட்டு
திரிஞ்சானுக. சீமான் எல்லாம் ஜெயாவைப் பாப்பாத்தி எண்ணு குதியோ குதியெண்ணு குதிச்சாருங்க...
இப்ப பாருங்க பார்ப்பனப் பொண்ணை அவருடைய குரு பெரியாரைவிடவும் பெரியாள் ஆக்கிப்பூட்டாங்க.
அடா தமிழனுக்கு தமிழனையாள ஒரு
வல்லமையுள்ளவனுக்கும் துணிவில்லை.***

நன்றி, sulunthee :-)

வருண் said...

***தாமிரபரணி said...
//***ரங்குடு said...
தமிழனுக்கு நாட்டுப் பற்று உண்டா? - சத்தியமாக இல்லை. இந்தியா விடுதலை பெற்ற சமயத்திலேயே, வெள்ளையர் ஆட்சி நீடிக்க வேண்டும் என்று முழங்கியவர்கள் தானே தமிழர்கள்?
****//
முதலில் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும் ஒர் நாட்டின் விடுதலை என்பது அந்த நாட்டின் மொழி, கலாசாரம், பண்பாடு,மதம் .... போன்றவற்றில் பிற நாட்டின் ஆதிக்கம் இல்லாமல் இருப்பது, அன்று வெள்ளையன் ஆண்டான் இன்று ஆரியர்களாள வடக்கத்தவர்கள் ஆள்கிறார்கள் என்று நம்மளை நாம் ஆள போகிறோம் எதற்கெடுத்தாலும் தில்லியின் அனுமதி தேவைபடுகிறது, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நடுவன அரசு துறையிலும் இந்தியின் ஆதிக்கம் பலமடங்கு உள்ளது
காவேரி ஆறு, முல்லை பெரியாறு etc, இராமேசுவரத்தில் தமிழ் மினவர்களை இலங்கை இராணுவம் கொல்லும் அவல நிலை,
இலங்கையில் தமிழர்கள் படும் இன்னல்கள் என அனைத்து விசயங்களிளும் தமிழனை இந்தியா நன்றாக எமாற்றி வருகிறது
பின்பு எதற்காக தமிழன் நாட்டுபற்றுடன் இருக்க வேண்டும்
தமிழ்நாட்டில் புலங்கும் ரூபாய் தாளில்கூட ஆங்கிலமும் இந்தியும்தான் சிறப்பாக காணபடுகிறது தமிழ்மொழி எங்கனு தேடவேண்டியது இருக்கு, ரூபாய் தாள்ல தமிழ் இல்லனா இப்ப என்ன, அப்படினு சில பேர் கேட்கலாம் இது ஒரு சாதாரணமாக தெரியலாம் ஆனால் இதுதான் ஒரு மொழியின் சுயமரியாதை என்னும் அளவுகோளை காட்டுகிறது இப்படி தமிழகத்தில் பல துறையில் இந்தியின் ஆதிக்கம் பண்மடங்கு உள்ளது
மொழிபற்றும் நாட்டுபற்றும் வேறு வேறு கிடையாது இரண்டும் ஒன்றுதான், ஒருவன் நம் மொழியை கிண்டலாக,தவறாக பேசினால் யாரும் பெருசாக எடுத்துகொள்வதில்லை ஆனால் நாடின் இறையாண்மைபற்றி பேசிவிட்டால் உடனே அனைவரும் வசைபாடுவார்கள் என்ன கொடும இது
ரூபாய் தாள் முதல் விண்ணில் செலுத்தபடும் விண்கலம் வரை
அனைத்திலும் இந்திதான் இருக்கிறது இப்படியே போய்கிட்டு இருந்தால் தமிழ் செல்லா காசாகிவிடும், நாம் பொருளாதாரத்தில் முன்னேறும் போது நம் மொழியையும் முன்னேற்ற வேண்டும்
இதை நான் சொல்லிதான் தெரியவேண்டும் என்று இல்லை அனைவரும் சிந்திக்க வேண்டும். இந்தி என்னும் அத்துமிறி நுழையும் ஆதிக்கத்தை களை எடுப்போம்**

தங்கள் கருத்துக்கு நன்றி, தாமிரபரணி :)

வருண் said...

*** அது சரி said...
//
sulunthee said...
அதுசரி வந்தார்// நாட்டுப்பற்று
எல்லாருக்கும் இருக்குதடா எங்கிறார்.
எங்கையா இருக்கு உங்க நாட்டுப்பற்று. ஒரு வாக்கியம் தன்னும் இங்கிலிஸ் கலக்காம எழுதமுடியாத உங்களுக்கே நாட்டுப்பற்று இருக்குதெண்ணா ????
//

சுலுந்தி,

இது என்னை குறித்து சொல்லியிருந்தால்,

நாட்டுப்பற்று, விளக்கெண்ணை, மற்றும் இதர புண்ணாக்குகள் எல்லாருக்கும் இருக்கு என்று நான் சொல்லவில்லை.....

முதலில் நாட்டுப்பற்று இல்லை என்று எழுதிய ரங்குடுவும், பதிவரும் பதில் சொல்லட்டும், உங்கள் மற்ற கேள்விகளுக்கு நான் பதில் சொல்கிறேன்!***

அது சரி!

நீங்க சும்மா வெட்டிப்பேச்சு பேசாம, நாட்டு பற்று தமிழனுக்கு இருக்குனு ஒரு பதிவு போடுங்க!

அல்லது தமிழனுக்கு நாட்டுப்பற்று இருக்குனு ஒரு பின்னூட்டத்தில் தெளிவாக சொல்லவும்- வெங்காயம் வெளக்கெண்ணை என்று உறறுவதை விட்டுவிட்டு!

That is the ONLY way you can disprove what I claimed!

வருண் said...

***9 May, 2009 8:45 PM
பதி said...
//வழக்கம் போல எந்த வித விளக்கமும் இல்லாமல், மேம்போக்கு தனமாக, கவனத்தை ஈர்க்கவென்றே எழுதப்பட்ட பதிவு!

நாட்டுப்பற்று என்றால் என்ன? தமிழனுக்கு நாட்டுப்பற்று இல்லையென்று நீங்கள் சொல்லக் காரணம் என்ன?? Care to explain??

வெள்ளையர் ஆட்சி என்பது எப்படி இந்தியாவிற்கு அன்னியமானதோ, அப்படியே இந்தியா எனும் கான்செப்டும் தமிழ்நாட்டுக்கு அன்னியமானதே...இந்தியா உருவாக்கப்பட்டதே வெள்ளையர் ஆட்சியால் தான்...

காவேரி ஆறு, முல்லை பெரியாறு etc, இராமேசுவரத்தில் தமிழ் மினவர்களை இலங்கை இராணுவம் கொல்லும் அவல நிலை,
இலங்கையில் தமிழர்கள் படும் இன்னல்கள் என அனைத்து விசயங்களிளும் தமிழனை இந்தியா நன்றாக எமாற்றி வருகிறது.//

ரிப்பீட்டேய் !!!!

//பின்பு எதற்காக தமிழன் நாட்டுபற்றுடன் இருக்க வேண்டும்//

இத்துப் போன இந்திய கான்செப்ட்டுக்கு ஜிங் சாங் அடிக்குறதுக்கு பேரு இல்லை நாட்டுப்பற்று.. அந்தக் கருமம் தேவையும் இல்லை...

நாடு, சுதந்திரம், நாட்டுப்பற்று, இந்தியா, இனம் இதைப் பத்தி எழுதுறதுக்கு முன்னாடி அதைப் பற்றி கொஞ்சம் தெளிவு இருப்பது அவசியம்..

To know the meaning of freedom and get rid of the school book garbage's, please spend few minutes

http://www.rediff.com/freedom/27paul.htm

இது சம்பந்தமாக ஒரு பதிவொன்றை சமீபத்தில் இட்டுள்ளேன்
http://pathipakkam.blogspot.com/2009/03/blog-post_28.html

10 May, 2009 12:36 AM ***

பதி!

What you are doing here are, justifying

* We dont need to be patriotic!

* And why we are not patriotic!

I dont see how you disagree with my claim! Thanks!

வருண் said...

***உண்மையில் இந்தியா என்று ஒரு தேசம் இல்லை.

Why isn't anybody working for a stronger and more prosperous nation that Gandhi spoke of because there really is no nation.The Indian citizen is not committed to a nation except when they have a stupid cricket match with Pakistan. You also talk about a nation when you have a war with China. Rest of the time, each Indian citizen is tied to himself. That is why I said, the concept of nationhood is fundamentally flawed somewhere.***

Pathi:

Fine, How do you disprove my point or disagree with my claim that Tamils lack patriotism?

You only agree with my claim or not?

You just are giving WHY we are "what we are" today.

பதி said...

//Fine, How do you disprove my point or disagree with my claim that Tamils lack patriotism?//

தமிழர்களுக்கு நாட்டுப்பற்று இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், அது தற்போதைய 'இந்தி'யாவுடன் எந்தவகையிலும் தொடர்பு பட்டதல்ல என்று தான் கூற வருகின்றேன்..

//You only agree with my claim or not?//

இதுக்கும் மேலே சொன்னது பொருந்தும். தமிழர்களுக்கு நாட்டுப்பற்று உள்ளது. ஆனால், தமிழன் என்று உணர்ந்தவனுக்கு நிச்சயம் 'இந்தி'யப் பற்று இருக்க முடியாது. ஆகையால், தமிழர்களின் வாயிலிருந்து வரும் இன்றைய இந்திய எதிர்ப்பு வார்த்தையை வைத்து, அவர்களின் நாட்டுப்பற்றை முடிவு செய்ய வேண்டாம்.

//You just are giving WHY we are "what we are" today.//

அதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்.??? :-)))