Thursday, June 4, 2009

ரஜினி என்கிற நடிகனை பார்க்கனுமா? (1)

இன்றைய வலையுலக மக்களில் பலர் ரஜினி என்கிற நடிகனை உணராதவர்கள்! ரஜினிகாந்த் என்கிற நடிகன் அபார நடிப்புத்திறன் கொண்ட பிறவி நடிகன் என்பதை உணரனும்னா நீங்க புவனா ஒரு கேள்விக்குறி படம் கட்டாயம் பார்க்கனும்! முள்ளும் மலரும் பார்க்கனும்! அவர்கள் பார்க்கனும்! நீங்க திறமைமிக்க நடிகன் ரஜினிகாந்தை அங்கேதான் பார்க்கலாம்.

அந்தப்படங்கள் வந்த நேரம் புகழ் என்கிற போதையில் மயங்கி மிகவும் உயர்ந்து நிற்கும் இன்றைய சூழலில் அல்ல! அன்று ரஜினிக்கு புகழ் கிடையாது, ஸ்டார் வால்யூ கிடையாது, வசதி கிடையாது, எதிர்காலம் தெரியாது. ஒரே மோட்டிவேஷன் முன்னேறனும்! நடிப்பால் முன்னேறனும்! என்று ஒரே வைராக்கியத்தில் நடித்த ரஜினிகாந்தை பார்க்கலாம்! எங்கே? புவனா ஒரு கேள்விக்குறியில் அந்த நடிகனை பார்க்கலாம்!

என்னைபொறுத்தவரை இது காலத்தால் அழியாத மிகவும் எதார்த்தமான காவியம். ஆண் என்பவன் ஒரு சில தெய்வீக குணாதிசீகங்களுடன் இருந்தாலும் அவன் காம மற்றும் காதலுணர்வு க்கு எளிதில் உள்ளாகிவிடுவான் என்பது உண்மை. பலஹீனம் நிறைய உள்ளவன் ஆண்.

ஆண் பெண் இருவரும் சரி சமம் சமானம்தான் என்றாலும் ஆண் வேறு பெண் வேறு! அவர்கள் உணர்வுகள் வேறு! ஒவ்வொரு பிரச்சினையையும் ஆணும் பெண்ணும் அனுகும் விதம் வேறு வேறு.

பொதுவாக பல ஆண்கள் ஒரு சில உயர்ந்த குணங்களுடன், உண்மை தத்துவங்களுடனும், மிகப்பரந்த மனதுடன் உள்ள உயர்ந்த ஜீவனாக இருந்தாலும், வாழ்ந்தாலும், அந்த குணங்களுடன் சேர்த்து அதே ஆண்மகனுக்கு மிகப்பெரிய பலஹீனங்களும் இருப்பதுண்டு. காதலில் பலஹீனம்! காமத்தில் பலஹீனும்! புகழ் என்னும் போதையில் பலஹீனம். பொதுவாக காமம், காதல் என்ற உணர்ச்சிகள் வரும்போது ஆண்கள் பெண்களைவிட மிகவும் கீழே போய்விடுவார்கள். உணர்ச்சி வசப்படக்கூடிவர்கள் ஆண்கள். காமம் என்கிற மிருக இச்சை இவர்களை எளிதாக ஆட்கொண்டுவிடும். ஒரு சிட்டி பஸ்ஸில் போகிற பெண்ணூக்கு, "எந்த ஆம்பளைதான் இந்த உலகத்தில் யோக்கியன்?" என்கிற தீவீர சந்தேகம் வருமளவுக்கு அநாகரீகமாக நடந்துகொள்வார்கள். தெய்வீக குணம் கொண்ட தத்துவங்கள் பேசும் அதே ஆண்மகந்தான் தன் பலஹீனத்தால் மிருக இச்சைக்கு உள்ளாவதும்.

அதே சமயத்தில் பெண் பொதுவாக சுயநலமாக வாழ்பவள்தான். பரந்த நோக்கெல்லாம் பொதுவாக பெண்களுக்குக் கிடையாது. அவர்களை கட்டுப்படுத்தி கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததாலோ என்னவோ அவர்கள் அப்படித்தான் தெரிகிறார்கள், இருக்கிறார்கள். தாய் என்பவள்கூட தன் பிள்ளைகள் என்கிற சுயநலத்தால்தான் தியாகிபோல் தோன்றுவாள் என்று விவாதிக்கலாம். பெண்களிடம் ஆண்கள் அளவுக்கு பெரியமனதோ, பரந்த மனமோ பொதுவாகக் கிடையாது! பெண்கள் விளைவுகளை யோசிக்காமல் தவறுகள் செய்வதுண்டு. கவனக்குறைவாக இருப்பதுண்டு. தத்துவங்கள் எல்லாம் பெண்ணுக்கு பொதுவாகப் பிடிக்காது! ஆனால் மன உறுதி என்பது பெண்களுக்கு ஆண்களை விட பல மடங்கு அதிகம். பெண் என்பவள் பொதுவாக மிருக இச்சையான காமம், மற்றும் காதல் உணர்வுகளை உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி வெல்லத்தெரிந்தவள். பெண்களிடம் இதுபோல் பலஹீனம் அதிகம் கிடையாது. உணர்ச்சிவசப்பட்டு எதையும் செய்து அவ்வளவு சீக்கிரம் தன்னை தன் உயர்ந்த தரத்தை கீழே கொண்டு போய்விடமாட்டாள். கூட்டி, கழிச்சுப்பார்த்தால் ஆணும், பெண்ணும் சமம்தான் ஆனால் வேறு வேறு என்பதை மறுக்கவோ மாற்றவோ முடியாது.

இதெல்லாம் இப்போ எதுக்கு? புவனா ஒருகேள்விக்குறி படத்தைப்பார்த்ததால் இதையெல்லாம் யோசிக்கச்சொல்லுது! இப்படியெல்லாம் பேசச்சொல்லுது! சரி இப்போ பட விமர்சனத்தை பார்ப்போம்!

புவனா ஒரு கேள்விக்குறி!

இந்தப்படம் எஸ் பி முத்துராமன் படம்.

எந்த எஸ் பி எம்?

ஆமா, பின்னால் பாயும் புலி, சகலகலாவல்லவன் போன்ற கமர்ஷியல் குப்பைகளை டைரெக்ட் செய்த அதே எஸ் பி எம் தான்! பாலசந்தர், ஒரு திறமைமிக்க டைரக்டர் என்றாலும் அவர் படங்களில் பொதுவாக நாடகபாணி இருக்கும். ஆனால் எஸ் பி எம் மின் இந்தப்படத்தில் அந்த நாடக பாணிகூட இருக்காது. நல்ல திரைக்கதை ஓட்டம். அபாரமான வசனங்கள்!

ரஜினியும் எஸ் பி எம் மும் முதன் முதலில் இணைந்த படம் இதுனுகூட சொல்லலாம். எஸ் பி எம் உடைய முதல்ப்படம்னு கூட இதைச் சொல்லலாம்! முதல் படமா என்னனு உறுதியா எனக்குத் தெரியலை.

சிவகுமார், ரஜினிகாந்த், சுமித்ராவை வைத்து எடுத்த ஒரு காவியம் இது! நடிப்பில் யாரையும் எந்த வகையிலும் குறை சொல்லமுடியாது.

என்ன கதை? ரஜினியும் சிவக்குமாரும் நண்பர்கள்! ரெண்டுபேரும் அனாதைகள்! இவர்கள் வாழ்வது நாகர்கோயிலில். இருவரும் எதிரும் புதிருமான கேரக்டர்களாக இருந்தாலும் நல்ல நண்பர்கள்! வாழ்க்கையை வாழ விரும்பும் விதம் வேற வேற மாதிரி! இருவருக்கும் தொழில் என்னனா சிறிய அளவில் ஜவுளி வியாபாரம். ரெடிமேட் துணிகள் தெருவில்விற்று சம்பாரித்து வாழக்கையை ஓட்டும் வாலிப ஏழைகள்.ஒரு முதலாளியிடம் ஜவுளி எடுத்து சந்தையில், மற்றும் பொது இடங்களில் விற்பது.

ரஜினி பெயர் சம்பத்! சம்பத் என்றால் உதவி னு ஒரு அர்த்தம் உண்டா? சம்பத் ஒரு அனாதை, ரொம்ப நல்லவன். நல்லவன்னா? நல்ல மனசு! அப்படினா? அளவுக்கு மீறி ஆசை கிடையாது. யாரையும் ஏமாற்றத்தெரியாது. ஏமாற்றிப்பிழைப்பதில் திருப்தி இல்லை. பொழைக்கத்தெரியாத பிள்ளை என்று சொல்லலாம். பாலிடிக்ஸ் பண்ணத்தெரியாது. கடவுள் நம்பிக்கை உண்டு. அன்பு பாசம், தியாகம் என்று உருகும் வகை. சம்பத்துக்கு ராஜி என்கிற அழகான காதலி. அவள் அருகில் இருக்கும்போது அவளுடனும், அவள் இல்லாத நேரம் அவள் நினைவுகளுடனும், கனவிலும் வாழ்கிறான், சம்பத். அழகான வாழக்கைதான் ஆனால்..!நல்லவனா இருந்தா நல்லா வாழ்ந்து விடலாமா என்ன? அவ்வளவு எளிதானதா மனித வாழ்க்கை?

ரஜினிக்கு ஜோடி மீரா (ஜெயா?). இவர்களுக்கு ஒரு நல்ல டூயட், * விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது என்கிற பாடல்.

ஆனா சம்பத்க்கு ஒரு பெரிய பலஹீனம் உண்டு. அவன் கொஞ்சம் குடிப்பான். புகை பிடிப்பான்! தன் உடலை கெடுப்பதால் மற்றவர்களுக்கு என்ன தீங்கு? என்று நினைப்பானோ எனன்வோ.

சிவகுமார் பெயர் நாகராஜன்! சம்பத்துக்கு நேர் எதிர் குணாதிசீனங்கள் உள்ளவன். நாகராஜும் ஒரு அனாதைதான். ஆனால் அவனுக்கு மன தைரியம் அதிகம், கடுமையாக உழைப்பவன். Very motivated. Very determined. நாகராஜ் knows how to do business. He knows the psychology of customers. He does not mind lying to sell his products. He is very practical and very very shrewd. His conscience is different from Sampath's. Nagaraj does not believe in love. Unlike Sampath he has not fallen in love with any girl. He is very practical than foolish and he is not philosophical like sampath. நாகராஜிடன் கெட்ட பழக்கங்கள் கிடையாது. குடிக்க மாட்டான். புகைபிடிப்பதும் கிடையாது. ஆனால் இளம் பெண்களை மயக்கி அவர்களை வஞ்சித்து உடலுறவு வைத்துக்கொண்டு பிறகு கழட்டிவிட்டுவிடுவான். சம்பத்தை பொறுத்த வரையில் இது காதல் அல்ல! அந்தப்பெண்கள் காமத்துக்காகத்தான் அவனை விரும்புகிறார்கள். இருவருக்கும் கிடைத்தது சுகம். இதில் என்ன தப்பு? அப்படியே அவர்களுக்கு கரு உண்டானால் அவர்களை ஒரு டாக்டரிடம் கூட்டி சென்று “அபார்ஷன்” செய்துவிடுவான். இந்த வீக்னெஸை தவிர்த்தால் நாகராஜ் சம்பத்தைவிட 10 மடங்கு அதிகமாக உழைப்பவன் சம்பாரிப்பவன் by cook or crook he know how to do successful business.

சீக்கிரமே அழகாக நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் சம்பத்தின் வாழ்க்கையில் இடி விழுந்துவிடும்! காதலி எதிர்பாராத வகையில் ஒரு விபத்தில் அவன் கண்முன்னே மரணமடைகிறாள். கவலையில் சம்பத் சாப்பிடாமல் இருப்பான். நண்பன் நாகராஜ்தான் வனை கவனித்துக்கொள்வான். சம்பத் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து சாகப்போவான். நாகராஜ்தான் காப்பாற்றுவான். இனிமேல் தற்கொலை செய்யாதே என்று சத்தியம் வாங்கிக்குவான். சம்பத் மேல் உண்மையிலேயே பிரியமாக, கனிவுடன் இருப்பான் நாகராஜ்.

காதலி மறைவுக்குப்பின் சம்பத் முன்பைவிட அதிகமாக குடித்துக்கொண்டே அவள் நினைவில் வாழுவான்! ஒரு மாதிரி அல்கஹாலிக் போல ஆகிவிடுவான்! நண்பன் நாகராஜ் அவனுக்கு ஆறுதல் சொல்வதுடன் அவனை நல்லா பார்த்துக்குவான். ஆனால் சம்பத்க்கு நாக்ராஜ் தவிர வேறெதுவும் உறவு இருக்காது.

ஒருநாள் இருவரும் சென்னைக்கு ரயிலில் போவார்கள் ஒரு பெரிய வியாபார நோக்கோடு. ஆனால் அத்ற்கு தேவையான பணம் இருக்காது. இருந்தாலும் முயன்று பார்ப்போம் என்று சென்னை போவார்கள். அப்போ அவர்களுடன் அதே பெட்டியில் இன்னொருவர் வருவார். அது ஒய் ஜி மஹேந்திரன். அவர் பெட்டி நிறைய பணம் வைத்திருப்பார். விழுப்புரத்தில் தண்ணி குடிக்க வெளியே இறங்கிப்போன அவர் ஹார்ட் அட்டாக்கில் ப்ளாட்ஃபார்மிலேயே இறந்துவிடுவார். அவருடைய அந்தப்பணப்பெட்டியில் உள்ள பணத்தை நாகராஜ் எடுத்துக்கொள்வான். சம்பத் நண்பனுக்காக ஒத்து ஊதுவான். போலிஸ் விசாரிக்கும்போது நாகராஜ் மற்றும் சம்பத் பொய் சொல்லிவிடுவார்கள்.

அந்தப்பணமும் கருப்புப்பணம் என்பதால் அதன் சொந்தக்காரர்கள் அதைப்பற்றி கவலைப்படமாட்டார்கள். ஆனால், புவனா (சுமித்ரா), அண்ணன்கூட ட்ராவெல் செய்த பிரயாணிகளை கண்டுபிடித்து இதைப்பற்றி விசாரிக்க வருவாள். வரும்போது அங்கே இருந்த இறந்த அண்ணன் கொண்டு சென்ற சூட்கேசை பார்ப்பாள். அதைப்பற்றி விசாரிப்பாள். ஆனால் அதில் பணம் இருக்காது. நாகராஜ் ஏதோ சொல்லி மழுப்பிவிடுவான். ஆனால் புவனா சந்தேகப்படுவது தெரிந்து, அவளுடன் வேணும்னே பழகுவான், நாகராஜ். அவள் நாகராஜை நம்பி அவனை காதலிப்பாள். நாகராஜ் அவளை காதலிப்பதுபோல் நடிப்பான்.

இவர்களுக்கு ஒரு டூயட் வரும். * பூந்தென்றலே நல்ல நேரம் காலம் சேரும் பழகிய பலன் உருவாகும்பாடிவா பாடிவா..

நாகராஜ் அவளையும் கெடுத்து, வயிற்றில் குழந்தை உண்டாக்கிவிடுவான். ஆனா புவனா பிடிவாதக்காரி. நாகராஜை கல்யாணம் பண்ண சொல்லுவாள். நாகராஜ் அவளை அபார்ஷன் பண்ண சொல்லுவான். அவள் முடியாது என்பாள் அடித்து. இந்த நேரத்தில் நாகராஜ் அந்த திருடிய பணத்தை வைத்து பெரிய ஜவுளிக்கடை ஆரம்பிப்பான். பெரிய பணக்காரன் ஆகிவிடுவான் நாகராஜ். புவனா ஒரு ஏழை என்பதால் அவளை மணப்பதென்பது நாகராஜை பொறுத்தவரையில் சாண்சே இல்லை.

நாகராஜ், திறமை வளர்ச்சியை பார்த்த அவனுடைய பழைய முதலாளி (சுருளிராஜன்) அவனுக்கு தன் பெண்ணை மணம் முடிக்க ஏற்பாடு செய்வான். நாகராஜ் உடனே சரி என்பான். இப்போ புவனாவை எப்படி கழட்டிவிடுவது என்று நாகராஜ் யோசிப்பான். சம்பத்திடம் பேசுவான். அப்போது, அவள் நாகராஜ் முன்னேற்றத்துக்கு தடையா இருந்தால் அவளை கொலை கூட செய்ய தயாராக இருக்கிறான் தன் நான்பன் நாகராஜ், என்று சம்பத் புரிந்துகொள்வான். சம்பத், இவன் எது வேணா செய்வான் என்று பயந்துவிடுவான். இந்த நிலைமையில் சம்பத், ஒரு ப்ளானுடன் புவனா வீட்டிற்கு சென்று அந்த குழந்தைக்கு தாந்தான் அப்பா, புவனாவை கல்யாணம் செய்து கொள்கிறேன் என்பான். புவனா வீட்டில் யாரு புவனா குழந்தைக்கு அப்பா என்று தெரியாமல் இருப்பார்கள். நாகராஜை அவர்களுக்கு சுத்தமாக தெரியாது. அதானல் சம்பத் தான் அப்பா என்று நம்பிவிடுவார்கள். ஆனால் புவனா எதிர்ப்பாள். பிறகு சம்பத் அவளிடம் உள்ள நிலைமையையும் நாகராஜ் கொலைகூட செய்வான் என்றும், தான் "பேருக்கு" "ஊருக்குத்தான்" புருஷன் என்று விளக்கிய பிறகு புவனா வேறுவழியில்லாமல் சரி என்பாள். நாகராஜ் தன் ஆசைப்படி அந்த பணக்கார பெண்ணை (ஜெயா?) கல்யாணம் செய்வான். சம்பத் புவனாவை கல்யாணம் செய்துக்குவான். ஆனால் புவனாவுக்கும் அவனுக்கும் உடலளவில் எதுவும் உறவு இருக்காது.

எல்லாம் நல்லபடியா முடிஞ்சிருச்சா? அதெப்படி முடியும்? அடுத்த பகுதியில் மிகுதி!

4 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

you tube ல வீடியோ இருந்தா சேர்த்துவிடுங்க தல..,

வருண் said...

வாங்க சுரேஷ்!

யு-ட்யூப்ல இருந்தால் சேர்க்க முயற்சி செய்து பார்க்கிறேன் சுரேஷ். :-)

ஆயில்யன் said...

எனக்கு புடிச்ச படம் !


ரொம்ப பிடித்த பாடல் வரிசைகளில் இந்த” விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது” பாடலும்,ராஜா என்பார் மந்திரி என்பார் பாடலும் !

பகிர்தலுக்கு நன்றி :)

வருண் said...

***ஆயில்யன் said...
எனக்கு புடிச்ச படம் !

ரொம்ப பிடித்த பாடல் வரிசைகளில் இந்த” விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது” பாடலும்,ராஜா என்பார் மந்திரி என்பார் பாடலும் !

பகிர்தலுக்கு நன்றி :)

4 June, 2009 11:00 PM***

உங்கள் வருகைக்கும் பகிர்தலுக்கும் நன்றி, ஆயில்யன் :)