Friday, June 5, 2009

ரஜினி என்கிற நடிகனை பார்க்கனுமா? (2)

இந்தப்படத்தில் நடிப்பில் ரஜினிதான் #1 என்று விமர்சகர்களும் பொதுமக்களும் பொதுவாக ஏற்றுக்கொள்வார்கள். ரஜினி கேரக்டர் அப்படி அதனாலேதான் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஏன் என்றால், முள்ளும் மலரும், அவர்கள் போன்ற படங்களில் ரஜினி கேரக்டர் மோசமாக இருந்தாலும் அதிலும் ரஜினிதான் ஜொளித்தார்! சிவகுமார் எப்படி இந்த "வில்லன்" மாதிரி ரோலுக்கு சரி என்றார் என்பது இன்னும் எனக்குப் புரியவில்லை!

நெறைய நேரங்களில் ஒரு சில பெரிய நன்மையை கருதி மனிதர்கள் உணர்ச்சிவசப்பட்டு ஒரு சில காரியம் செய்வதுண்டு. ஆனால் அதன் விளைவுகளை நாளடைவில் அவர்களாலேயே சமாளிக்க முடியாது. ஆம், ஆண்கள் பொதுவாக வலுவிழந்த மனிதர்கள்தான். அதேபோல்தான் இந்தப்படத்தில் வரும் சம்பத்தும்.

சம்பத்தின் இன்றைய நிலைமை!

அன்று காதலி இறந்துவிட்டாள். வாழ்க்கையே முடிந்துவிட்டதுனு சாகப்போவான். புவனாவை பேருக்குத்தான் கல்யாணம் செய்துகொண்டு பெரிய தியாகியாவான். ஆனால், காலப்போக்கில் அவன் புவனாவையே காதலிக்க ஆரம்பித்துவிடுவான். புவனாவின் மகன் இவன் மகனாகி விடுவான். "அப்பா" அப்பா" என்று அந்தப்பையன் சம்பத்தை விளிப்பது/அழைப்பது அவனுக்கு பிடிக்கும். ஆனால், சம்பத், அன்று அவ்வளவு பெரிய தியாகம் செய்தாலும் தான் ஒரு சாதாரண மனுஷந்தான் நான் என்று வெட்கமே இல்லாமல் ஒத்துக்குவான். புவனா இளமையா இருப்பாள், நல்லவள், அழகா இருப்பாள். அவளோட பிரிந்து "சும்மா" வாழும் சம்பத் காலப்போக்கில் அவளை காதலிக்க ஆரம்பித்துவிடுவான். அதை வெட்கமே இல்லாமல் அவளிடமும் சொல்லாமல் சொல்லிவிடுவான்! ஏன் பச்சையாகவே சொல்லிவிடுவான்!

புவனா, இன்றும் அதே மன உறுதியுடன் இருப்பாள். பிடிவாதம் அவளுக்கு பலம்! காலப்போக்கில் மாறமாட்டாள். சம்பத்தை தெய்வம் நிலையில் வைத்து அவனை உயர்த்தி ஒதுக்கிவிடுவாள்! தான் முடிவெடுத்தது போலவே வாழ்ந்து முடிக்க முடிவு செய்துவிடுவாள்.

ஒரு மாதிரி புவனா மனது "டபுள் ஸ்டாண்டார்ட்" வச்சிருக்கும். அதாவது தனக்கு ஒரு நியாயம் மற்றவருக்கு வேற என்பது போல.

Sampath will tell Bhuvana about his latest disturbance and his love for her, is not the same as what he had. Sampath will bring up a situation to Bhuvana, regarding what she thinks of young widows' remarriage?

அதற்கு, Bhuvanaa, இளம் விதவைகள் மறு கல்யாணம் செய்துகொள்ளனும்னு சொல்லுவாள். அதாவது தனிமையில் சாக வேண்டியதில்லை என்று சம்பத்திடம் சொல்லுவாள்.

உடனே சம்பத், அப்போ நீயும் நானும் சேர்ந்து வாழ்ந்தால் என்ன? என்று வெட்கத்தைவிட்டு (நாகரீகமான முறையில்தான்) கேட்பான். புவனா சொல்லுவாள் "நம்ம வேற". "நீங்கள் எனக்கு தெய்வம்போல!" "நான் உங்களுக்கு தகுதியானவள் அல்ல!" என்று சொல்லுவாள்!

ஆனால் சம்பத் சொல்லுவான், நான் ஒரு சாதரண மனுஷந்தான். பலஹீனம் நிறைந்த மனுஷன் என்பான்! புவனா அவனைப் புரிந்துகொண்டாலும் அவளால் இந்த ஒரு விசயத்தில் அவனுக்கு உதவ முடியாது!

இந்த சூழ்நிலையில்தான்

* "ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜியம் இல்லை ஆள ஒரு ராணியும் இல்லை வாழ" பாடல் இந்தப்படத்தில் இடம் பெரும்.

இது பஞ்சு அருணாச்சலம் எழுதிய பாடல்! ஆனால் கண்ணதாசன் லெவலுக்கு இருக்கும்!

அந்தப்பாடலில், சம்பத், புவனாவிடம்:

ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜியம் இல்லை ஆள

ஒரு ராணியும் இல்லை வாழ!

ஒரு உறவும் இல்லை! அதில் பிரிவுமில்லை!

அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகின்றேன் நானே!


ஆசைக்கு வெட்கமில்லை!

அனுபவிக்க யோகம் இல்லை!

பைத்தியம் தீர வைத்தியம் இல்லை!

ஏன் படைத்தானோ இறைவன் என்னை?

எனக்கு உலகில் நிம்மதி இல்லை!


புவனா, சம்பத்திடம்:

தெய்வத்தில் உன்னைக்கண்டேன்!

தினம் தினம் பூஜை செய்தேன்!

நிலவுக்கு களங்கம் என்று உறவுக்கு விலகி நின்றேன்!

கலக்கம் ஏனோ? தயக்கம் ஏனோ?


Friend of mine said long time ago that "Human minds have double standards" and that which is not uncommon! I did not believe it then but it is true!

புவனா மனதும், நாகராஜ் மனதும் இதில் "டபுள் ஸ்டாண்டார்ட்" வைத்திருப்பதை தெளிவாகப் பார்க்கலாம்! அது ஒருவர் மன உறுதி, மன தைரியத்துக்கு உதவும்னு தோனுது.


நாகராஜ்,

இந்த புவனா பிரச்சினை முடிந்ததும் நிம்மதியா இருப்பான். அந்த நிம்மதி ரொம்ப நாளைக்கு நிலைக்காது! He cant become a father anymore. His "sperm count" will go down. So he will become INFERTILE (not impotent!). அதனால் ஊர் உலகம் அவன் மனைவியை மலடி என்பார்கள்! ஆனால் பிரச்சினை நாகராஜ்க்குத்தான் என்று அவள் தெரிந்துகொள்வாள் அவனை ஹர்ட் பண்ண வேண்டாம் என்று அவளுக்குள்ளேயே வைத்திருப்பாள். நாகராஜுக்கும் உண்மை தெரியும். ஆண் என்ற ஆணவத்தாலும், அவன் ஏற்கனவே நெறைய பேரை கற்பம் உண்டாக்கியதாலும் அதை ஏற்றுக்கொள்ள அவன் மனம் முதலில் மறுக்கும்.

That marital problem has been very well taken in this movie. Their arguments and the discussion of this sensitive issue is taken exceptionally well in this movie!

இப்போ நாகராஜின் குழந்தை, நண்பன் சம்பத்திடம் வளரும். அவனை தினமும் நாகராஜ் பார்ப்பான். நாகராஜை அவன் அங்கிள் னு கூப்பிடுவான்! I loved this part!

இந்த நிலைமையை சமாளிக்க As usual, Nagaraj will come up with another plan! That is, he will adopt his own son! This time he wont win! Because that is the only thing (the child) helps Bhuvana and Sampath to live at least this life. Moreover, Bhuvana will HATE nagaraj for what he has done and she will NEVER forgive him!

Even sampath will get tired of his friend. Their friendship will sort of crack.

சம்பத், நல்லவந்தான் ஆனால் நாகராஜிடம் அவன் எப்போவுமே ஒரு மாதிரி செடிஸ்டிக்காத்தான் நடந்து கொள்வான்! நண்பன் என்கிற உரிமைனு கூட சொல்லலாம்! அவன் நாகராஜிடம் பேசும் சில வசனங்கள்!

* நாகராஜ் அண்ணே! கல்லுளிமங்கன் நீங்க! கடப்பாறைய முழுங்கிட்டு சுக்கு கஷாயம் சாப்பிடுற ஜாதி நீங்க!

* நாகராஜ் அண்ணே! நீங்க முழுங்கிய கடப்பாறை ஒரு நாள் வயித்தை கிழிச்சுட்டு வெளியே வந்துடும்!

* நாகராஜ்! கடப்பாறையை முழுங்கிட்டு, இப்போ குத்துது கொடையுதுனு சொன்னால் எப்படி!


ஒருமுறை நாகராஜ் வெறுப்புடன் சம்பத்திடம் சொல்லுவான்,

* உன்னை அன்னைக்கே சாக விட்டுருக்கனும்! உன்னை காப்பத்தினேன் பாரு! அதுக்கு நன்றிக்கடனா இது?! என்பான்.

அதற்கு சம்பத் சொல்லுவான்!

* அன்னைக்கே நிம்மதியா போய் சேர்ந்து இருப்பேன்! இப்போ பாரு என் வாழ்க்கையை! என்பான் ஒரு விரக்தியுடன்!

Conclusion!

Anyway, this world is not for "good people" and kind-hearted gentleman like Sampath! It is for people who knows how to survive rather. That we can see in our life. Not only in this movie but also in movies like "Gone with the wind"!

Kind-hearted, nice person Sampath dies of heart attack as this world is not for good people! :(

Bhuvana and Nagaraj will cry but I am sure they know how to survive and they have hearts which are strong enough to survive and continue living in this world!

6 comments:

ராஜாதி ராஜ் said...

" ஆண் என்பவன் ஒரு சில தெய்வீக குணாதிசீகங்களுடன் இருந்தாலும் "

"ஆண் வேறு பெண் வேறு! அவர்கள் உணர்வுகள் வேறு! "

" பொதுவாக பல ஆண்கள் ஒரு சில உயர்ந்த குணங்களுடன், உண்மை தத்துவங்களுடனும், மிகப்பரந்த மனதுடன் உள்ள உயர்ந்த ஜீவனாக இருந்தாலும் "

" பரந்த நோக்கெல்லாம் பொதுவாக பெண்களுக்குக் கிடையாது "

" தத்துவங்கள் எல்லாம் பெண்ணுக்கு பொதுவாகப் பிடிக்காது "

என்னங்க ஆச்சு உங்களுக்கு??&*%#$? போற போக்கில அள்ளி தெளிச்சிருக்கீங்க... படத்த பத்தின உங்க பார்வைகள மட்டும் ஒரே பதிவா சொல்லிருந்தா நல்லா இருந்திருக்குமோன்னு எனக்கு தோணுது... சொன்னது தப்புன்னா சொல்லிடுங்க...மறுபடி இது போல சொல்ல மாட்டேன் :).

அன்புடன்,
ராஜ்.

வருண் said...

***என்னங்க ஆச்சு உங்களுக்கு??&*%#$? போற போக்கில அள்ளி தெளிச்சிருக்கீங்க... படத்த பத்தின உங்க பார்வைகள மட்டும் ஒரே பதிவா சொல்லிருந்தா நல்லா இருந்திருக்குமோன்னு எனக்கு தோணுது... சொன்னது தப்புன்னா சொல்லிடுங்க...மறுபடி இது போல சொல்ல மாட்டேன் :).

அன்புடன்,
ராஜ்.***

நீங்க நான் சொன்ன மாதிரித்தான் இருக்கீங்க! LOL!

வருண் said...

ராஜ்: நெஜம்மாவே இது என் தப்பு இல்லைங்க. இந்தப்படத்தில் உள்ள ஆண், பெண் அவர்கள் உறவுதான் என்னை இப்படி எழுத வைத்தது.

உங்க கருத்துக்கு நன்றி :-)))

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//தெய்வத்தில் உன்னைக்கண்டேன்!

தினம் தினம் பூஜை செய்தேன்!//

இந்தக் கருமத்தை அந்த தெய்வமே கேட்கவில்லையே தல..,

வருண் said...

*** SUREஷ் (பழனியிலிருந்து) said...
//தெய்வத்தில் உன்னைக்கண்டேன்!

தினம் தினம் பூஜை செய்தேன்!//

இந்தக் கருமத்தை அந்த தெய்வமே கேட்கவில்லையே தல..,***

இது மாதிரி பெண்கள் நெறைய உண்டு, சுரேஷ் :)

சரவணன் said...

வருண் தமிழிலும் ஆங்கிலத்திலும் மாற்றி மாற்றி எழுதுரீங்க.