Tuesday, June 9, 2009

சார்! கொஞ்சம் தள்ளி உட்காருங்க, ப்ளீஸ்!

"ஏண்டா அந்த ஆளுக்கு இப்படி ஒரு "மூக்கு உடை" கொடுத்த கார்த்திக்? பாவம் அவன்! அவன் மூஞ்சி போன போக்கை பார்த்தியா?" என்றான் சுந்தர்.

"நான் என்னடா செய்தேன்? "சரி அப்போ நீங்க உட்காருங்க நான் நிக்கிறேன்" னு சொன்னேன். இதிலென்ன பெரிய தப்பு?!"

"என்னடா சுந்தர்? என்னாச்சு?" என்றான் அப்போத்தான் வந்த ஆனந்த்.

"இல்லடா இன்னைக்கு ஆட்டோ எல்லாம் ஸ்ட்ரைக்காம்! படம் பார்த்துட்டு ஆட்டோ கிடைக்காமல் பஸ்ல ஏறி சிவாஜி நகர்ல இருந்து வந்தோம். வரும்போது நானும், கார்த்திக்கும் பஸ் ஸ்டாண்டிலேயே ஏறியதால் உட்கார இடம் கெடச்சது. அந்த சீட்ல இன்னொரு குண்டான ஆளும் ஜன்னல் ஓரத்தில் இருந்தான். அது 3 பேர் உட்காருகிற சீட். அந்த குண்டான ஆளு, நான் கார்த்திக் மூனு பேரும் உட்கார்ந்து இருந்தோம் அந்த சீட்ல. நான் நடுவில், கார்த்திக் ஓரமா இருந்தான். அடுத்த ஸ்டாப்ல ஒரு ஆள் ஏறி கார்த்திக் பக்கத்தில் நின்னுகொண்டு வந்தான். அவனுக்கு 35 வயசுபோல இருக்கும். நல்லாத்தான் கிழங்கு மாதிரி இருந்தான். அவன் கார்த்திக்கிடம் சொன்னான் "கொஞ்சம் தள்ளி உட்காருங்க! நானும் உட்கார்ந்துக்கிறேன்".

"சரி, அதுக்கு இவன் என்னடா செஞ்சான்?"

"உடனே கார்த்திக் சொன்னான், "இது 3 பேர் உட்காருகிற சீட், சார். நீங்களும் உட்கார்ந்தா யாரும் ஒழுங்கா வசதியா உட்காரமுடியாது" னு கனிவா இடம் கொடுக்க முடியாதுனு சொன்னான். ஆனால் அவன் இவனை விடலை. "கொஞ்சம் தள்ளி உட்காருங்க அட்ஜஸ்ட் பண்ணி உட்கார்ந்துக்கலாம்" னு விடாமல் நிக்கிறான்"

"அவனை திட்டிவிட்டானா, கார்த்திக்?"

"இல்லைடா, "அப்போ நீங்க உட்காருங்க சார் நான் நிக்கிறேன்!" என்றேன். இதைப்போய் பெருசா சொல்லிக்கிட்டு இருக்கான், சுந்தர்"

"அது ஒரு செம சிக்ஸ் டா அவனுக்கு. பாவம் அவன் மூஞ்சி போன போக்க பார்க்கனும் நீ!"

"ஏண்டா கண்டவனையும் போட்டு கடிக்கிற, கார்த்திக்?"

"இங்கே பாரு! நான் உண்மையிலேயேதான் சொன்னேன். I was ready to give that seat to him. It will be so uncomfortable for everybody otherwise. நாலு பேர் அதில் உட்காருவது இம்பாஸிபிள்டா. I could stand more comfortably than sitting with great difficulty. அதனாலதான் சொன்னேன். I really meant it"

"என்னவோ போ! அவன் இனிமேல் யாரிடமும் இப்படி இடம் கேக்க மாட்டான்"

"நீ வேற! காலம்பூராம் அவன் இப்படித்தான் இருப்பான்! இதைக்கேளுடா சுந்தர்! ஒரு 4 மாசத்துக்கு முன்னாலே பங்களூர்ல இருந்து மதுரைக்கு போனேன். கடைசி நேரத்தில் போனதால, ட்ரயின், டீலக்ஸ் பஸ் எதுலயும் டிக்கட் புக் பண்ண முடியலை. தீபாவளிக்கூட்டம் என்பதால் டிக்கட்டுக்கு சாண்ஸே இல்லை. சரி, மக்களோட மக்களா போவோமேனு ஒரு சேலம் பஸ்ஸை பிடிச்சு போனேன். சேலம் போய் மாறி போய்க்க்லாம்னு. நான் கடைசி சீட்ல உட்கார்ந்து இருந்தேன் இன்னும் 5 பேரோட சேர்த்து. கடைசி சீட்னால பஸ் தூக்கி தூக்கிப் போட்டுக்கிட்டே போச்சு. ஹொசூர் போனதும் அங்கே இதே மாதிரி அப்பாவி வேசத்துடன் வந்தான் ஒருத்தன்" "சார் கொஞ்சம் எடம் கொடுங்க, ஓரமா உட்கார்ந்துக்கிறேன்" என்றான் மரியாதையா.

"நானும், சரி தொலையிறான் னு உட்காரவிட்டேன். உட்கார்ந்தான் அந்த அப்பாவி. கொஞ்ச நேரத்தில் என்ன ஆச்சுனா, நான் ஏதோ அவன் இடத்தில் உட்கார்ந்த மாதிரி ஓரத்தில் ஒண்டிக்கிட்டு இருக்கேன். அவன் எதைப் பத்தியும் கவலைபடாமல் 2 பேர்க்கு தேவையான சீட் எடத்தை எடுத்துக்கிட்டான். என்னால உட்காரவே முடியலை. If anybody, who does not know the "history" sees us, it will look as if he was generous enough to accomodate me in his seat! He does not even remember I let him sit, there! You believe that? We have got these sort of cheap bastards everywhere"

"நீ என்னடா பண்ணின?"

"என்ன பண்ண சொல்ற? அவனுக்கு ஞாபகப்படுத்த சொல்றியா? நீதான் ஒண்ட வந்த பிடாரினு? நான் பேசாமல் எழுந்து நின்னுட்டேன். இதைக்கேளு! அப்பவும் நான் நிக்கிறதைப்பத்தி அவன் கவலையே படலைடா! அவன் 2 ஆளு இடத்தில் வசதியா உட்கார்ந்து வரான், சந்தோஷமா!"

"அந்த கசப்பான அனுபவத்தில் இவனிடம் "ரியாக்ட்" பண்ணுறியா?"

"இல்லடா, இவனுகளை அமெரிக்காவுக்கு கொண்டுபோய் விட்டேனா, அதையும் நம்ம ஊர் மாதிரி ஆக்கிவிடுவானுக! காட்டுமிராண்டிகள்! கொஞ்சம்கூட புத்தியே கிடையாது"

11 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஹா.. ஹா...,

பழமைபேசி said...

இஃகிஃகி!

வருண் said...

வாங்க சுரேஷ்!

வாங்க ப்ழமை பேசி :)

T.V.ராதாகிருஷ்ணன் said...

ha...ha..haa..

வருண் said...

வாங்க,TVR :-)))

இவன் said...

தேவர் மகன் படத்தில சிவாஜி கமலிடம் பேசின வசனம்தான் ஞாபகம் வருது

வருண் said...

***இவன் said...
தேவர் மகன் படத்தில சிவாஜி கமலிடம் பேசின வசனம்தான் ஞாபகம் வருது

10 June, 2009 5:29 AM***

வாங்க இவன்! :)))

அந்தப்படம் நான் பார்க்கவில்லை. :(

அது என்ன வசனம்னு நேரமிருந்தால் சொல்லுங்களேன், ப்ளீஸ்?

உங்கள் வருகைக்கு ந்ன்றி இவன் :)

*இயற்கை ராஜி* said...

ஹா.. ஹா...,

வருண் said...

***இய‌ற்கை said...
ஹா.. ஹா...,

10 June, 2009 6:59 AM***

வருகைக்கும், "சிரிப்பு"க்கும் நன்றி இயற்கை :-)

கலையரசன் said...

அருமையான பயணம் சார்..
வாழ்கையை அனுபவிக்கறிங்க!!
அவ்வ்வ்வவ்

வருண் said...

***கலையரசன் said...

அருமையான பயணம் சார்..
வாழ்கையை அனுபவிக்கறிங்க!!
அவ்வ்வ்வவ்

17 June, 2009 8:09 AM***

உங்கள் வருகைக்கு ந்ன்றி, கலையரசன் :)))