Monday, June 15, 2009

காமக்கல்வி பற்றி யார் விவாதிக்கனும்?!

கல்யாணம் ஆனவன் குழந்தை பெற்றுக்கொள்வது பற்றி இல்லைனா விவாகரத்து பத்தி பேசனும்! காதலிப்பவர்கள் கல்யாணத்தை பத்தி பேசனும்! தாய்மை அடைந்துள்ளவர்கள் கைக்குழந்தை வளர்ப்பு பற்றி பேசனும்! அப்படி பேசினால்தான் அதில் ஒரு அர்த்தம் இருக்கும்!

அதேபோல் யாரு காமக்கல்வி பற்றிப் பேசனும்? விவாதிக்கனும்? உங்களுக்கு டீனேஜ் வயதில் பசங்க இருக்காங்களா? உடலில் பல ஹார்மோன்களும் சுரக்க ஆரம்பித்த இளம்வயது பதின்மர் இருக்காங்களா? நீங்கதான் காமக்கல்வி பற்றி பேசனும்! விவாதிக்கனும்!

இந்த இணையதள பதிவுலகில் பெரிய காமெடி என்னனா இளம் வயது ஆண்களும் பெண்களும் பெரிய பெரிய விசயங்களை பற்றி பேசுறாங்க! 10-15 வருடம் சென்று இவர்கள் இன்னைக்கு எழுதுவதை இவர்களே ஏற்றுக்கொள்வார்களா? என்பது சந்தேகத்துக்குரியது. மனிதன் மனம், அவனுடைய "ஒப்பீனியன்" காலப்போக்கில் மாறக்கூடியது. பெரிய பெரிய வீரர்களும் வீரங்கணைகளும் ஆடி அடங்குவதை நாம் பார்க்கவில்லையா? தனக்கென்று வரும்போது அவர்கள் சொன்னதெல்லாம் தண்ணீரில் எழுதியதாக முடிவதை நேற்றும், இன்றும், என்றும் பார்க்கிறோம்.

காமக்கல்வி பற்றி பேசனும்னா, பொதுவாக டீனேஜர் (பதின்மர்) வைத்திருப்பவர்கள் தங்கள் கருத்துக்களை அள்ளிவிடுவது நல்லது. அவர்களுக்குத்தான் தெரியும் அதில் உள்ள கஷ்ட நஷ்டங்கள்! அவர்களுக்குத்தான் கொஞ்சமாவது "ரியாலிட்டி" "ப்ராக்டிகாலிட்டி" னா என்னனு தெரியும்!

ஆனால் பொதுவாக இணையதளத்தில் டீனேஜரும், மற்றும் கல்யாண வயதில் உள்ளவர்கள், கைகுழந்தை வைத்துள்ளவர்கள் எல்லாம் ரொம்ப முற்போக்குவாதிகள்போல் காமக்கல்வி, இளம் வயதில் காமம் பற்றியெல்யாம் அடித்துப்பேசுவதெல்லாம் அர்த்தமற்றதாக தோனுது!

டீன் செக்ஸ்ல தப்பு இல்லை! நாங்கல்லாம் "லிபெரல்" என்று சொல்லும் அரைவேக்காடுகள் பலர் தன் 13 வயது மகளுக்கு காண்டம் வாங்கி கொடுத்து அவள் பாய்ஃப்ரண்டுடன் அனுப்பி வைப்பார்களா?

இல்லை தன் மகளோ, மகனோ தவறு செய்து எச் ஐ வி +ve ஆக வந்தால், அதை சமாளிக்க இவர்களுக்கு தைரியமோ பக்குவமோ இருக்கிறதா?

சும்மா பேசலாம்! அவ்வளவுதான்!

15 comments:

மயாதி said...

நல்ல கருத்து ஏற்றுக் கொள்கிறேன் நண்பரே!

ஆனாலும் சின்ன நெருடல் மன்னித்துக் கொள்ளுங்க...
``காமக் கல்வி ``
இந்தப் பதம் குறிப்பது முறையாக அனுபவம் அல்லது அறிவு பெற்ற ஒருவர் அதைப்பற்றி சொல்லுவதுதான்...
சும்மா இங்கே பிளாக்கில் சொல்லுவதை எல்லாம் கல்வி என்ற வகைக்குள் வருமா?
அது அவர்களின் கருத்து அவ்வளவுதான்....

வருண் said...

***மயாதி said...
நல்ல கருத்து ஏற்றுக் கொள்கிறேன் நண்பரே!

ஆனாலும் சின்ன நெருடல் மன்னித்துக் கொள்ளுங்க...
``காமக் கல்வி ``
இந்தப் பதம் குறிப்பது முறையாக அனுபவம் அல்லது அறிவு பெற்ற ஒருவர் அதைப்பற்றி சொல்லுவதுதான்...
சும்மா இங்கே பிளாக்கில் சொல்லுவதை எல்லாம் கல்வி என்ற வகைக்குள் வருமா?
அது அவர்களின் கருத்து அவ்வளவுதான்....***

உங்கள் கருத்துக்கு நன்றி மயாதி! :)

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//நாங்கல்லாம் "லிபெரல்" என்று சொல்லும் அரைவேக்காடுகள் பலர் தன் 13 வயது மகளுக்கு காண்டம் வாங்கி கொடுத்து அவள் பாய்ஃப்ரண்டுடன் அனுப்பி வைப்பார்களா?//

இதற்கான விளக்கமும் பாலியல் கல்வி பற்றிய சின்ன கருத்தும் இங்கே இருக்கிறது தோழரே


ஆனால் அதில் பாலியல் கல்வி பற்றித்தான் இருக்கும். காமக் கல்வி பற்றி இருக்காது.

காமம் என்பது உணர்வு
பாலியல் என்பது உண்மை

வருண் said...

சுரேஷ்:

உங்க பதிவுக்குப்போய் ஒரு கேள்வி கேட்டு இருக்கேன் :)

"பாலியல் கல்வி" தான் நல்லா இருக்கு! ஆனால் "காமக்கல்வி" என்பதுதான் சரி, இன்று தமிழர்கள் அதிகமான நேரம் செலவழிக்கும் போர்ன் உலகத்தில்!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

பதில் கொடுத்து விட்டேன் நண்பரே..,

கண்டிப்பாக திருமணத்திற்கு வெளியே ஏற்படும் உடலுறவுகளை அனுமதிக்கவே முடியாது. பாலியல்கல்வியின் மூலம் மட்டுமே அதைச் சாதிக்க முடியும்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//இன்று தமிழர்கள் அதிகமான நேரம் செலவழிக்கும் போர்ன் உலகத்தில்!//

ஏறக்குறைய உண்மைதான். அதில் ஏற்படுவது இன்பமே அல்ல., ஒரு வித சோர்வுதான் என்பதான புரிதல் இல்லாமையே அதற்குக் காரணம்.

இப்போதைய உலகத்தில் இந்த போதை எளிதில் கிடைக்கிறது.

வருண் said...

நன்றி சுரேஷ்!

உங்க தளத்தில் நான் மேலும் சில கேள்விகள் கேட்கிறேன். விவாதத்தை அங்கேயே வச்சுக்குவோம் :)

நிகழ்காலத்தில்... said...

\\காமக்கல்வி பற்றி பேசனும்னா, பொதுவாக டீனேஜர் (பதின்மர்) வைத்திருப்பவர்கள் தங்கள் கருத்துக்களை அள்ளிவிடுவது நல்லது. அவர்களுக்குத்தான் தெரியும் அதில் உள்ள கஷ்ட நஷ்டங்கள்! அவர்களுக்குத்தான் கொஞ்சமாவது "ரியாலிட்டி" "ப்ராக்டிகாலிட்டி" னா என்னனு தெரியும்!\\

ஆக்கபூர்வமாக பேசலாம்தான்.,

மணிகண்டன் said...

***
0-15 வருடம் சென்று இவர்கள் இன்னைக்கு எழுதுவதை இவர்களே ஏற்றுக்கொள்வார்களா? என்பது சந்தேகத்துக்குரியது. மனிதன் மனம், அவனுடைய "ஒப்பீனியன்" காலப்போக்கில் மாறக்கூடியது.
***

வருன், அது தான் கரெக்டா சொல்லி இருக்கீங்களே.. மனசுல என்ன தோணுதோ (இன்றைய நிலையில) அத எழுதறாங்க. அதுக்காக 10-15 வருஷம் வெயிட் பண்ண முடியுமா ?

பின்னாடி அவங்க சொன்னது தப்பா இருந்தா திருத்திப்பாங்க.

in the mean time இவங்களோட ப்ளாக் படிச்சி யாரும் கேட்டு போகமாட்டாங்க.

வருண் said...

நிகழ்காலத்தில்... said...
\\காமக்கல்வி பற்றி பேசனும்னா, பொதுவாக டீனேஜர் (பதின்மர்) வைத்திருப்பவர்கள் தங்கள் கருத்துக்களை அள்ளிவிடுவது நல்லது. அவர்களுக்குத்தான் தெரியும் அதில் உள்ள கஷ்ட நஷ்டங்கள்! அவர்களுக்குத்தான் கொஞ்சமாவது "ரியாலிட்டி" "ப்ராக்டிகாலிட்டி" னா என்னனு தெரியும்!\\

ஆக்கபூர்வமாக பேசலாம்தான்.,***


ஆமாங்க, அதைத்தான் நான் சொல்ல வந்தேன் :)

வருண் said...

***மணிகண்டன் said...
***
0-15 வருடம் சென்று இவர்கள் இன்னைக்கு எழுதுவதை இவர்களே ஏற்றுக்கொள்வார்களா? என்பது சந்தேகத்துக்குரியது. மனிதன் மனம், அவனுடைய "ஒப்பீனியன்" காலப்போக்கில் மாறக்கூடியது.
***

வருன், அது தான் கரெக்டா சொல்லி இருக்கீங்களே.. மனசுல என்ன தோணுதோ (இன்றைய நிலையில) அத எழுதறாங்க. அதுக்காக 10-15 வருஷம் வெயிட் பண்ண முடியுமா ?

பின்னாடி அவங்க சொன்னது தப்பா இருந்தா திருத்திப்பாங்க.

in the mean time இவங்களோட ப்ளாக் படிச்சி யாரும் கேட்டு போகமாட்டாங்க.

15 June, 2009 10:58 AM***

மணிகண்டன்!

நீங்க "இவங்களோட"னு யார் ப்ளாக் எல்லாம் சொல்றீங்கனு தெரியலை. இந்த "இவங்களோட"வில் பலவகையானவர் அடங்குவார்கள்!

அதில் சிலருடையது நிச்சயம் "harmless" தான் :)

Chittoor Murugesan said...

Very good .Keep it up. I agree with your opinions what about legal sanction to prostitution ? I am supporting it in my Tamil and Telugu blogs

வருண் said...

***chittoor.S.Murugeshan said...
Very good .Keep it up. I agree with your opinions what about legal sanction to prostitution ? I am supporting it in my Tamil and Telugu blogs

16 June, 2009 6:58 AM***

Thanks, Murugeshan!

If we seriously consider people those who are in need of sex and could not find a partner or do not have a spouse, I cant argue against you regarding legalizing prostitution!

But this subject is very hard to discuss as it might lead to unnecessary misunderstandings and misguidance!

BTW, I thought prostitution is already legalized in Bombay (mumbay) India or not?

கையேடு said...

காமக் கல்வியில் என்னவெல்லாம்? யாரால் கற்றுத் தரப்படயிருக்கிறது?

வருண் said...

கையேடு:

காமக்கல்வி என்கிறதே தவறான வார்த்தைனு சொல்றாங்க. பாலியல் கல்வினு சொல்வதுதான் சரியாம். இது என் தவறு.

பொதுவாக அமெரிக்காவில், ஒரு 11 வயது பெண் ப்ரோ அபார்ஷன், மற்றும் ப்ரோ லைஃப் பற்றி பேசுது. அந்த அளவுக்கு அவர்களுக்கு, குழந்தை பருவத்திலேயே செக்ஸ்னா என்ன, கர்ப்பம்தரிப்பதுனா என்ன என்று தெரிகிறது. பள்ளியில் சொல்லிக்கொடுக்கிறாங்க.

ப்ரைவேட் பார்ட்ஸை யாரும் தொடவொடக்கூடாது, ப்யூபர்ட்ட்டி, மெண்ஸ்ட்ருரேஷன் சைக்கிள் எல்லாம் பற்றி ப்ரிடீன் வயஹ்டிலேயே சொல்லிக் கொடுக்கிறார்கள்.

எஸ் டி டி போன்றவற்றையுமும் சொல்லி கொடுக்கிறாங்க.

நம்ம ஊரில் செக்ஸ் கல்வி எந்த நிலையில் இருக்கு, எப்படினு தெரியலை எனக்கு.

நம்ம சுரேஷ் ஒரு பதிவு போட்டு இருக்கார். அதில் அவர் சிந்தனைகளை சொல்லி இருக்கிறார், பாருங்க :)