Tuesday, August 25, 2009

யு டோண்ட் நோ ஹிந்தி? -கடலை கார்னர் (12)

"ஹாய் பிருந்தா! ஹவ் டு யு ஃபீல் நவ்?"

"மச் பெட்டெர், கண்ணன்! டிட் யு மிஸ் மி?"

"ஆமா, ரொம்ப மிஸ் பண்ணினேன்"

"நெஜம்மா?"

"உன் தலையில் அடிக்கவா? இல்லைனா உன் ப்ரஸியஸ்.."

"வர வர உங்களுக்கு ஒரு வரம்பு தெரியலை, கண்ணன். என்னிடம் அடி வாங்கப் போறீங்க"

"என்ன வரம்பு மீறி என்ன சொன்னேன்?"

"அதை நான் சொல்லனுமா?"

"சொன்னால்த்தானே என்னை திருத்திக்க முடியும்?"

"நீங்க திருந்துற கேஸா என்ன?"

"அவ்வளவு மோசமா?"

"ஆமா. அழாதீங்க! உங்களுக்கு வர்றவதான் பாவம்!"

"உனக்கு வர்றவன் ஏழேழு ஜென்மத்துக்கும் புண்ணியம் செஞ்சவன்னு நெனப்பா?"

"சரி, சரி, அந்த டெவான் ஸ்ட்ரீட் ஷாப்பிங்லாம் எப்படிப் போச்சு?"

"அதை ஏன் கேக்கிற? அங்கே போய் ஒரு ஜவுளிக்கடைக்காரரோட பெரிய சண்டை!"

"என்ன ஆச்சு? இது உங்க ஊர் இல்லை கண்ணன்! ஜாக்கிரதை"

"ஒரு கடையில் போய் சேலை பார்த்தோம். வெள்ளைக்காரியைப் பாத்ததும் எல்லாம் யானை வெலை, குதிரை வெலையா சொல்றான். உடனே அங்கே வாங்கிறதில்லைனு முடிவு செஞ்சாச்சு. இடத்தை காலி பண்ணலாம்னு பார்த்தா அங்கே வேலை பார்க்கிற ஒரு அம்மா விடமாட்டேன்கிது. அதை எடு, இதை எடுனு போட்டு கொல்ல ஆரம்பிச்சிருச்சு. ஒண்ண வாங்கிட்டுத்தான் போகனும்ங்கிற மாதிரி பேசுது"

"அப்புறம்?"

"நீங்க போய் இன்னொரு கஸ்டமரைப்பாருங்க நாங்க செலக்ட் பண்ணிட்டு வருகிறோம்னு பொலைட்டா இங்லிஷ்ல சொன்னேன்"

"ஐ ஹெல்ப் யு, யு நோ... யு டோண்ட் நோ ஹிந்தி?" னா அவள்.

"நோ, ஐ கேன் ஸ்பீக் இன் இங்லிஷ்! டு யு நோ தமிழ்? ஐ கேன் ஸ்பீக் இன் தமிழ் டூ" னு சொன்னேன் நான்.

"தமிலா?"னு முழிச்சா அவள்.

"யா தமிழ்" னு சிரிச்சேன்.

"தமில் நோ" என்றாள்.

"ஓ கே ப்ளீஸ் கோ வெயிட் தேர் வி வில் கெட் டு யு வென் வி ஆர் ரெடி" னு சொன்னேன்

"அவ போனாளா, கண்ணன்?"

"நல்லாப்போனா போ! சும்மா மறுபடியும் போட்டு உயிரை வாங்கினாள். நான் ஸ்டெய்ஸியை கூப்பிட்டு வெளியே வந்துட்டேன். அவ ஏதோ ஹிந்தில கத்தினா"

"அப்புறம்?"

"அப்புறம் இன்னொரு கடையில் போய் சும்மா ஒரு சாதாரண காட்டன் சாரி எடுத்துக்கொண்டு, அதுக்கு ப்ளவ்ஸ் அங்கேயே தைக்க கொடுத்துட்டு வந்தோம். அப்புறம் போய் இண்டியா பாலஸ்ல போய் சாப்பிட்டு திரும்பி வந்தோம்"

"சாப்பாடு நல்லா இருந்ததா?"

"ஸ்டெய்ஸிக்குப் "நான்" பிடிச்சது. அப்புறம் அவ அப்பார்ட்மெண்ட்க்கு போயி கொஞ்ச நேரம் இருந்துட்டு வீட்டுக்கு வந்தாச்சு"

"அவ அப்பார்ட்மெண்ட்க்கா? அங்கே எதுக்கு? அவ அப்பார்ட்மெண்ட்ல என்ன செய்தீங்க? ப்ளவ்ஸ் போட்டு பார்த்தாளா?"

"ஆமா, அவளுக்கு நாந்தான் ப்ளவ்ஸ் மாட்டிவிட்டு சேலை கட்டி விட்டேன். நீ வேற!"

"வேற என்ன செஞ்ச்சீங்க?"

"அம்மா தாயே! ப்ளவ்ஸ் இன்னும் தச்சுக் கொடுக்கலை. ஒரு மணி நேரம் ஆகும்னான். ஒரு மணி நேரம் சென்று போனால், இன்னும் தச்சு முடிக்கலை. நான் அடுத்த வாரம் போய் வாங்கிக்கிறேன் னு சொன்னா ஸ்டெய்ஸி. நீதான் போய் அவளுக்கு ஹெல்ப் பண்ணனும்!"

"அப்போ அவ அப்பார்ட்மெண்ட்க்கு எதுக்கு?"

"சும்மாதான். அவ ஏதோ எடுக்கனும்னு சொன்னாள். 5 நிமிடம் அவ சோஃபா உக்காந்து இருந்தேன், வந்துட்டா. உடனே வந்தாச்சு வீட்டுக்கு"

"நெஜம்மா?"

"சரியான மக்கு பிருந்தா நீ"

"ஏன்?'

"அவளை எனக்கு ரொம்ப எல்லாம் தெரியாது"

"இல்லை சும்மாதான் கேட்டேன். அவ அப்பார்ட்மெண்ட்க்கு எதுக்கு தேவையில்லாமல்னு"

"நீ அவகிட்டயே கேட்டுக்கோ! அவசரமா எதுவும் பாத்ரூம் போக வேண்டியது இருந்ததோ என்னவோ. சரி அடுத்த வாரம் நீதான் போய் அவளுக்கு ஹெல்ப் பண்ணனும். நீ அவளுக்கு பளவ்ஸ் மாட்டி விடும்போது அவளை எதுவும் செஞ்சிறாத!"

"நானா?!! அவளையா?"

"இந்தக்காலத்தில் யாரை நம்ப முடியுது? அவளும் பாய்ஃப்ரெண்ட் இல்லாமல் இருக்காள்"

"உங்களை என்ன பண்ணுறேன் பாருங்க! அவகிட்ட சொல்லுறேன், நீங்க சொன்னதை அப்படியே"

"ஷி வில் டேக் இட் ஈஸி. உன்னை மாதிரி அடிக்க வரமாட்டாள்"

"ஒரு நாளில் அத்தனை இண்ட்டிமேட் ஆயாச்சா அவளோட?'

"இண்ட்டிமேட் எல்லாம் இல்லை. நான் சும்மாதான் கேலிக்கு சொன்னேன்னு அவளுக்குப் புரியும்"

"ஆமா, அந்த ப்ரஸாத் கூட உங்களுக்கு என்ன பிரச்சினை?"

"He is a cheap bastard, a low-life"

"That much hatred!!"

"Yeah, let us leave those cheap people. It is not worth spending our time even in gossip!"

"OK, உங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம் வருது?!"

"என்னைக் கேட்டா? உன் கடவுளைக் கேளு!"

"எந்தக் கடவுளை?"

"எந்தக் கடவுளை கேக்கலாம்னு ஒரு கடவுளைக்கேளு! அப்புறம் அடுத்த ஸ்டெப் போகலாம்!"

"கடவுளுக்கு என்னை பிடிக்கலையே"

"ஏன்?"

"ஏன் னா? நான் கண்ணன் ஃப்ரெண்டா இருப்பதால்தான்"

"ஐ லவ் வென் யு டால்க் லைக் திஸ், பிருந்தா!"

"ஹாய் பிருந்தா! ஹாய் கண்ணான்!"

"ஹாய் ஸ்டெய்ஸி"

-தொடரும்

9 comments:

ஐந்திணை said...

சூப்பரு

வருண் said...

***Blogger ஐந்திணை said...

சூப்பரு

25 August, 2009 7:42 AM***

நன்றி, ஐந்திணை :-)))

nila said...

நல்லா இருக்கு வருண்... ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்து கத்துட்டு இருக்கேன் உங்க பதிவுக்காக... keep going................. is brindha in love with kannan????

ராஜாதி ராஜ் said...

Sorry Varun,நடுவில கொஞ்சம் பிஸி...couldn't follow up... will read all parts of kadalai corner and comment a little here... by the way, just happened to notice some 'feedback-makes-friction' stuff...hope all is fine now..

end of the day 'how to put kadalai with american chicks' அப்டின்னு ஒரு புக் side-ல ரெடி பண்ணிடலாம் :)

Keep up the good work :).

நட்புடன்,
ராஜ்.

ராஜாதி ராஜ் said...

comment a little later***

வருண் said...

***nila said...
நல்லா இருக்கு வருண்... ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்து கத்துட்டு இருக்கேன் உங்க பதிவுக்காக***

வாங்க நிலா! தொடர்ந்து வாசிப்பதற்கு நன்றிங்க :-)

***... keep going................. is brindha in love with kannan????**

ஒரு பெண்ணின் மனது உங்களப்போல் இன்னொரு பெண்ணுக்குத்தான் தெரியும். பார்க்கலாம் :-)))

வருண் said...

***ராஜாதி ராஜ் said...
Sorry Varun,நடுவில கொஞ்சம் பிஸி...couldn't follow up... will read all parts of kadalai corner and comment a little here... by the way, just happened to notice some 'feedback-makes-friction' stuff...hope all is fine now..

end of the day 'how to put kadalai with american chicks' அப்டின்னு ஒரு புக் side-ல ரெடி பண்ணிடலாம் :)

Keep up the good work :).

நட்புடன்,
ராஜ்.***

வாங்க ராஜ் :-)

காஸுவலா ஆரம்பிச்சு காஸுவலாவே முடிச்சுடலாம்னுதான் இருக்கேன். ஒண்ணும் சீரியஸா பெருசா எழுதலைங்க, ராஜ் :-)))

sriram said...

Know what..? you can keep the people guessing like whether the Moulder-Scully pair of X-files have anything going between them or not. Nice one. :)

வருண் said...

s***riram said...

Know what..? you can keep the people guessing like whether the Moulder-Scully pair of X-files have anything going between them or not. Nice one. :)

26 August, 2009 7:35 PM***

Thanks, sriram :-)