Friday, August 28, 2009

உங்க கேர்ள் ஃப்ரண்டுதான்! - கடலை கார்னர் (14)

“பிருந்தா! என்ன ஒரு மாதிரியா இருக்க?”

“ஒண்ணும் இல்ல கண்ணன்”

“காலையில் நல்லாத்தானே இருந்த?”

“ஒண்ணும் இல்லைனு சொல்றேன் இல்லை, கண்ணன்?”

“சரி ஒரு சின்ன ஸ்மைல் பண்ணு!”

“சும்மா இருங்க கண்ணன்”

“என்ன ஆச்சு சொல்லு!”

“எனக்கு தலை வலிக்குது”

“சரி, காஃபியைக் குடி. தலைவலி சரியாயிடும்!”

பேசாமல் காஃபியை குடித்தாள் பிருந்தா.

“சரி, நான் போகனும் அப்புறம் பார்ப்போம், கண்ணன்”

********************************************

அன்று ஈவனிங்...

“ஹேய்”

“சொல்லுங்க கண்ணன். என்ன திடீர்னு ஃபோன்?”

“ஒண்ணும் இல்லை சும்மாதான்”

“சும்மாவா?'

“இப்போ மூடு எப்படி இருக்கு?”

“பரவாயில்லை”

“நான் உன் வீட்டுக்கு வரவா?”

“இப்போவா?. சரி வாங்க!”

******************************************

ஒரு ஒரு மணி நேரம் சென்றதும்..

“வாங்க கண்ணன்”

“என்னடா ஆச்சு? எதுவும் வொர்க்ல பிரச்சினையா? இல்ல இந்தியாவிலிருந்து எதுவும் கெட்ட செய்தியா?”

“அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை, கண்ணன்”

“இங்கே வா! என் பக்கத்தில் வந்து உட்காரு, ப்ளீஸ்”

அவன் அருகில் வந்து அமர்ந்தாள் பிருந்தா. அவள் கையை எடுத்து தன் கையில் வைத்துக்கொண்டான் கண்ணன்.

“ஏன் உன் உதடுலாம் ட்ரை ஆகி இருக்கு. லிப் க்ளாஸ் போடலயா?”

“காய்ச்சல் அடிச்சதாலயா இருக்கும்”

“இங்கே பாரு! நீ இப்படி இருந்தால் கஷ்டமா இருக்கு, பிருந்தா”

“ஏன்?”

“தெரியலை. ஆனா ரொம்ப கஷ்டமா இருக்கு”

“ஏன் உங்களுக்கு கஷ்டமா இருக்கு?”

“எப்போவும் சிரிச்சுப் பேசுற நீ திடீர்னு இப்படி அமைதியா இருந்தால் கஷ்டமா இருக்காதா?”

“அதுக்கு நான் என்ன செய்யனும்?”

“ஒரு வேளை பி எம் எஸ் ஸா?”

“அதெல்லாம் இல்லை, கண்ணன்”

“எனக்கு ஏதாவது தர்றியா?”

“எதாவதுனா? என்ன வேணும்?”

“காஃபிதான், வேறென்ன கொடுப்ப?”

“வேறென்ன வேணும்?”

“கொஞ்சம் சிரியேன்”

“சரி, காஃபி போட்டுட்டு வரவா?” அவள் புன்னகை புரிந்தாள்.

“சரி”

“கையை விடுங்க! அப்போத்தானே போக முடியும்?”

“சரி போய் காஃபி போட்டுட்டு வா!”

“என்ன? என் பின்னாலயே நீங்களும் வர்றீங்க?”

“இல்ல..பின்னால எத்தனை அழகா நீ இருக்கனு பார்க்கத்தான்..!'

“என்ன என்ன?”

“ஒண்ணும் இல்லை. கிச்சனுக்குத்தானே வர்ரேன்? நீ பாத் ரூமுக்கு போகும்போதா வரேன்?”

“அப்படி வேற ஒரு ஆசையா, உங்களுக்கு?”

“ஏன் அது ரொம்பத் தப்பா, பிருந்தா?”

“கேள்வியைப்பாரு! உங்களுக்கு எதுதான் தப்பில்லை? கொஞ்சம் பேசாமல் இருக்கீங்களா?”

“பேசலைனாத்தான் ஆபத்து”

“அதென்ன பேசலைனா ஆபத்து?”

“பேசினால் வேற எதையும் கண் பார்க்காது. பார்த்தாலும் ஒண்ணும் தோனாது. பேசாமல் பக்கத்தில் இருந்தால் நீ அசையும்போது உன்னை அங்கே இங்க பார்க்க தோனும். நீ ரொம்ப ஒரு மாதிரியா கவர்ச்சியா இருக்கியா? அதில்தான் ஆபத்து”

“அங்கே இங்கேனா?”

“சரி பேசினால் என்ன இப்போ?”

“சும்மா தொனத் தொனனு பேசினால், என் கான்சண்ட்ரேசன் போயிடும். அப்புறம் காஃபி நல்லா வராது!”

“எப்படி இதெல்லாம், பிருந்தா?”

“எப்படி எதெல்லாம்?”

“உன் காஃபி டேஸ்டா இல்லைனாலும் அதுவும் என் தப்புதானா?”

“எல்லாமே உங்க தப்புதான், கண்ணன்”

“சரி நான் லிவிங் ரூம்லயே இருக்கேன்”

“பரவாயில்லை இங்கேயே இருங்க”

“ஏன் நான் பக்கத்தில் இருந்தால் நல்லா இருக்கா?”

“உங்களுக்கு என்ன ஆச்சு?”

ஏய் உன் செல்ஃபோன் கத்துது!

“இருங்க யாருனு பார்க்கிறேன்.. ஓ இவளா! நான் பிக் அப் பண்ணல!”

“யார் அது?”

“உங்க கேர்ள் ஃப்ரெண்டுதான்”

“யாருனு சொல்லு”

“ஸ்டேஸி”

“அவ என் கேர்ள் ஃப்ரெண்டா?”

“ஆமா, அவளுக்கு பெட்டிக்கோட் அளவுகூட சரியா சொன்னீங்களாமே?”

“உன்னை வம்பு பண்ண அவ ஏதாவது ரீல் விடுவா. நம்பாதே!”

“யார் ரீல் விடுறா? உங்களைப் பத்தி எனக்குத் தெரியாதா?”

“அங்கே அடுப்பிலே பால் பொங்குது பாரு!”

“உடனே ஏன் பேச்சை மாத்துறீங்க, இப்போ?”

“இப்போ நீதான் என் கேர்ள் ஃப்ரெண்டு மாதிரி ரொம்ப உரிமையா பேசுற?”

“மெளனம்”

“ஏய் என்ன கோபமா?”

“இல்லையே. இதுக்கெல்லாம் எனக்குக் கோபம் வராது. சரி லிவிங் ரூம் போங்க நான் சுகர் போட்டு எடுத்துண்டு வரேன்”

-தொடரும்

4 comments:

DHANA said...

//ஏன் அது ரொம்பத்தப்பா பிருந்தா?

கேலள்வியைப்பார் என்று உள்ளது.
திருத்தவும்.

எப்படியல்லாம்
கடலைபோடுகிங்க.

லதானந்த் said...

நெம்ப சுவாரஸ்யமாவும் விறுவிறுப்பாவும் இருக்கு. எப்படிங்க இதெல்லாம்?

வருண் said...

***DHANA said...
//ஏன் அது ரொம்பத்தப்பா பிருந்தா?

கேலள்வியைப்பார் என்று உள்ளது.
திருத்தவும்.

எப்படியல்லாம்
கடலைபோடுகிங்க.***

வருகைக்கும் பிழையை சரி செய்ய உதவியதற்கும் நன்றிங்க, தனா :-)

வருண் said...

***லதானந்த் said...
நெம்ப சுவாரஸ்யமாவும் விறுவிறுப்பாவும் இருக்கு. எப்படிங்க இதெல்லாம்?

29 August, 2009 1:45 AM***

என் உளறல்களை தொடர்ந்து வாசிப்பதற்கு நன்றிங்க லதானந்த் சார் :))