Wednesday, April 20, 2011

ஐயோ! தமிழ் பதிவுலகம் ஜோஸியர்களின் மடமாகிறது!

தமிழனுக்கு உள்ள ஒரே பெருமை என்னனா தமிழன் எதை அவனிடம் சொன்னாலும் தலையை ஆட்டமாட்டான். உண்மையா இருந்தாலும் ஜோடிச்ச உண்மையா இருந்தாலும் எதைச் சொன்னாலும் வாதம், சர்ச்சை இல்லைனா விதண்டாவாதம் பண்ணுவான் தமிழன். இல்லைனா கூந்தல்ல மணம் இருக்கானு ஆராச்சி பண்ணி இருப்பானா? இதுதான் தமிழனுக்குள்ள தனித்துவம்! அதனால்தான் தமிழன் "பகுத்தறிவுவாதி"னு தன்னை பெருமையாகச் சொல்லிக்கொள்கிறான். "ஏன் எதற்கு எப்படி" என்கிற சிந்தனைகளை வளர்ப்பதால்தான் தந்தை பெரியார் போல சிந்தனையாளர்கள் தமிழ்நாட்டில் மட்டும் உருவானார்கள்!

ஜோசியம்கிறது என்னங்க? அதை நம்புவறன் யாரு? ஜோஸியம் சொல்லி பொழைப்பு நடத்துறவன் யாரு? அதில் லாஜிக் ஏது? ஜோஸியத்தில் எதையாவது ஏன் எதற்குனு கொடஞ்சு கொடஞ்சு கேள்வி கேக்க முடியுமா? ஜோசியம் என்பது விஞ்ஞானம் அல்லது அறிவியல் அல்லனு நான்தான் எல்லாருக்கும் சொல்லனுமா என்ன? உலகிலேயே சாமியாரை கட்டிக்கொண்டு அழுவதுபோல் ஜோசியத்தை கட்டிக்கொண்டு அழுபவனுகள் இந்தியர்கள் மட்டுமே!

சரி, படிப்பறிவு இல்லாதவன் சுய சிந்தனை இல்லாதவந்தான் ஜோசியத்தை நம்புவான். அதுபோல் நெறைய முட்டாத்தமிழர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இருந்துட்டுப் போகட்டும்!

ஆனால் இப்போ சிந்தனையைத்தூண்டும் கருத்துக்களைப் பரிமாற வேண்டிய ஒரு இடமான தமிழ்ப் பதிவுலகே ஒரே ஜோசியமயமாகிக் கொண்டு போகுது! போற போக்கபார்த்தால் பதிவுலகம் முழுவதும் பிரபல ஜோசியக்காரனுக எதையாவது ராகு, கேது னு எதாவது சனியனை எழுதி ஒப்பேத்துற இடமாகிப்போயிடும் போல! அப்புறம் ஏன் பதிவுலகம் "டல்" அடிக்காது??

தமிழ்மணத்தில் முகப்பில் இருந்து சினிமா பதிவுகளைத் தனியாக பிரிச்சோம்! ஈழம் சமமந்தப்பட்டப் பதிவுகளை தனியாக பிரித்தோம்! இந்த வீணாப்போன ஜோசியப்பதிவுகளையும் பிரிச்சு ஜோசியக்காரர்களையும், ஜோஸியத்தை நம்புகிறவர்களையும் தனியா ஒரு பக்கம் அனுப்பினால் என்ன? ஏன் சொல்றேன்னா போற போக்கப்பார்த்தால் இந்த பதிவுலகில் பிரபல ஜோசியக்காரங்க பதிவெழுதி எழவைக்கூட்டுற அக்கப்போர் தாங்கமுடியாது போல!

11 comments:

MANI said...
This comment has been removed by the author.
Chittoor Murugesan said...

நல்ல யோசனை. ( ஜோதிட பிரியர்கள் பிற குப்பைகளை கிளறி மாய வேண்டியதில்லை)

இந்த டீலிங் ரொம்ப பிடிச்சிருக்கு.

MANI said...

அண்ணே! வாங்க இவரு உருப்படியான நல்ல யோசனை சொன்னாரு அதுக்கு முதல்ல நன்றி சொல்வோம். தமிழ்மணத்தில் ஜோதிடத்தை தனியாக பிரித்து தலைப்பு வைத்தால் நமக்கு மிகுந்த உபயோகமாக இருக்கும் நமது வேலையும் சீக்கிரம் முடியும். கண்ட கண்ட குப்பையெல்லாம் நம் கண்ணில் படாது பாருங்க.

நாமும் இதுங்க அறிவாளித்தனமா எழுதின மொக்கையெல்லாம் படிக்க வேண்டியதில்லை பாருங்க.

இதுங்க மொக்கையில தான் பதிவுலகமே மணக்குதாமே! மிஞ்சிப்போனா இதுங்க என்னா எழுதுதுங்க எந்த நடிகை எவன வச்சிருக்கான்னு, அப்புறம் குப்பை படத்துக்கெல்லாம் விமர்சனம், அரசியல்ல எவனோ சம்பாதிக்க இவனுங்க அவன் சரியில்ல இவன் சரியில்லன்னு மொக்கை போடுவானுங்க. இதுதான் இப்போது இதுங்க சிந்தனைய தூண்டுதாம்ல்ல.

ஜோசியம் பொய்ன்னு சொல்றதுக்கு எதுவும் தெரிய வேணாம். அது மெய்ன்னு சொல்றதுக்கு அதுபத்தி தெரிஞ்சிரிந்தாதான முடியும். கடவுளே இல்லன்னு சொல்லிட்டு இதுங்க கிழிச்ச கிழிப்ப இந்த நாடு பார்த்துக்கிட்டுதான இருக்கு.

பதிவுலகம் அனைவருக்கும் பொதுவானது, தங்களுக்கு விருப்பமான விஷயங்களை தெரிந்த, தெரிந்துகொள்ள விரும்பிய விஷயங்களை பதிவுலகில் எழுதுவதும் விவாதிப்பதும் தவறுன்னு சொல்ல கூகுள் என்ன இவங்க அப்பன் வீட்டு சொத்தா.

இவனுங்க மொக்கை கூடத்தான் படிக்க சகிக்கலன்னு சொன்னா எழுதாம இருப்பானுங்களா. வந்துட்டானுங்க பெருசா புத்திமதி சொல்ல போங்கடா நீங்களும் உங்க.....

வருண் said...

***சித்தூர்.எஸ்.முருகேசன் said...

நல்ல யோசனை. ( ஜோதிட பிரியர்கள் பிற குப்பைகளை கிளறி மாய வேண்டியதில்லை)

இந்த டீலிங் ரொம்ப பிடிச்சிருக்கு.

21 April 2011 1:40 AM***

அண்ணே! தனிப்பட்ட முறையில் உங்க அனுகுமுறையைப் பார்த்து உங்கமேலே எனக்கு மதிப்பும் மரியாதையும் உண்டு. ஆனால் எனக்கு ஜோஸியத்திலெல்லாம் நம்பிக்கை இல்லை! என்னை சரியாப் புரிஞ்சுக்குவீங்கனு நம்புறேன்!

வருண் said...

***MANI said...

அண்ணே! வாங்க இவரு உருப்படியான நல்ல யோசனை சொன்னாரு அதுக்கு முதல்ல நன்றி சொல்வோம். தமிழ்மணத்தில் ஜோதிடத்தை தனியாக பிரித்து தலைப்பு வைத்தால் நமக்கு மிகுந்த உபயோகமாக இருக்கும் நமது வேலையும் சீக்கிரம் முடியும். கண்ட கண்ட குப்பையெல்லாம் நம் கண்ணில் படாது பாருங்க.***

பரவாயில்லை, என் கருத்தை சரியா எடுத்துக்கிட்டீங்க!

*** நாமும் இதுங்க அறிவாளித்தனமா எழுதின மொக்கையெல்லாம் படிக்க வேண்டியதில்லை பாருங்க.

இதுங்க மொக்கையில தான் பதிவுலகமே மணக்குதாமே! மிஞ்சிப்போனா இதுங்க என்னா எழுதுதுங்க எந்த நடிகை எவன வச்சிருக்கான்னு, அப்புறம் குப்பை படத்துக்கெல்லாம் விமர்சனம், அரசியல்ல எவனோ சம்பாதிக்க இவனுங்க அவன் சரியில்ல இவன் சரியில்லன்னு மொக்கை போடுவானுங்க. இதுதான் இப்போது இதுங்க சிந்தனைய தூண்டுதாம்ல்ல.

ஜோசியம் பொய்ன்னு சொல்றதுக்கு எதுவும் தெரிய வேணாம். அது மெய்ன்னு சொல்றதுக்கு அதுபத்தி தெரிஞ்சிரிந்தாதான முடியும். கடவுளே இல்லன்னு சொல்லிட்டு இதுங்க கிழிச்ச கிழிப்ப இந்த நாடு பார்த்துக்கிட்டுதான இருக்கு.

பதிவுலகம் அனைவருக்கும் பொதுவானது, தங்களுக்கு விருப்பமான விஷயங்களை தெரிந்த, தெரிந்துகொள்ள விரும்பிய விஷயங்களை பதிவுலகில் எழுதுவதும் விவாதிப்பதும் தவறுன்னு சொல்ல கூகுள் என்ன இவங்க அப்பன் வீட்டு சொத்தா.

இவனுங்க மொக்கை கூடத்தான் படிக்க சகிக்கலன்னு சொன்னா எழுதாம இருப்பானுங்களா. வந்துட்டானுங்க பெருசா புத்திமதி சொல்ல போங்கடா நீங்களும் உங்க.....

21 April 2011 2:07 AM***

மேலே சொன்னது வஞ்சப்புகழ்ச்சியா!!! சரி விடுங்க, என் பிரச்சினையை நான் எடுத்து வச்சேன் உங்க பிரச்சினையை நீங்க சொல்றீங்க! அதுக்குத்தானே இந்த கருத்துலகம்! இல்லையா? :)

நீங்க நல்லாயிருக்கனும்! :)

Anonymous said...

ஜோசியம் பொய்ன்னு சொல்றதுக்கு எதுவும் தெரிய வேணாம். அது மெய்ன்னு சொல்றதுக்கு அதுபத்தி தெரிஞ்சிரிந்தாதான முடியும். கடவுளே இல்லன்னு சொல்லிட்டு இதுங்க கிழிச்ச கிழிப்ப இந்த நாடு பார்த்துக்கிட்டுதான இருக்கு//
;-))

வருண் said...

***ஆர்.கே.சதீஷ்குமார் said...

ஜோசியம் பொய்ன்னு சொல்றதுக்கு எதுவும் தெரிய வேணாம். அது மெய்ன்னு சொல்றதுக்கு அதுபத்தி தெரிஞ்சிரிந்தாதான முடியும். கடவுளே இல்லன்னு சொல்லிட்டு இதுங்க கிழிச்ச கிழிப்ப இந்த நாடு பார்த்துக்கிட்டுதான இருக்கு//
;-))

21 April 2011 7:21 AM***

வாங்க சதீஷ்குமார்! :)

கடவுள் இருக்குனு சொல்றவன் எல்லாம் பொறுக்கிகளாவும் மொள்ளமாரியாகவும் இருக்கதையும் இந்த உலகம் பார்த்துக்கொண்டுதான் இருக்கு!

மணியண்ணா!

ஆமா கடவுள் எங்கே இருக்காரு? :)))

ராவணன் said...

சோதிடம் கற்றுக்கொள்ள ஒரு இரண்டு மணிநேரம் போதும். பின்னர் நீங்களும் சோதிடர்தான்.வெறும் சோதிடர் அல்ல சோதிட சிகாமணி என்றும் பெயர் போட்டுக்கொள்ளலாம்.

நீங்கள் சோதிடம் கற்க வேண்டுமா?
நம்ம பேட்டையில் கிடைக்கும்.

சோதிடம் என்பது ஒரு பெரிய விசயமே இல்லை.

கவிதை பூக்கள் பாலா said...

unmai sila nerankalil palarukku kasakkum pathivukku nanri

Anonymous said...

இதைப்போலவே சமையல், பெண்களின் அந்தரங்க வாழ்க்கை போன்ற பதிவுகளும் தனியே ஓரங்கட்டப்பட்டால் வேண்டியவர்கள் அங்கே போய் படித்துக்கொள்ளலாம்.

பஞ்சாபியை மணந்த பெண் பதிவாளர் தன் கணவனோடு சமையலறையில் எப்படி ஜிலேபி சுட்டேன் என்று பதிவு போடுகிறார். அதற்கு 50 பின்னூட்டங்கள் ஆண்களிடமிருந்து.

இன்னொரு பெண் பதிவாளர், தனக்கு ஜலதோசம் என்று பதிவு போட ஆண் பதிவாளர்கள் நலம் விசாரிக்க அது ஒரு பிரபல பதிவாகிறது \'மிகவும் படிக்கப்பட்ட பதிவாம்!\' இப்பதிவாளர் பாரதியாரின் பயங்கரவாத ரசிகராம்.

இவர்கள் பதிவில் எதிர் பின்னூட்டமிட்டால், இவர் ஆண் நணப்ர்கள் கூலிப்படைபோல வந்து தாக்கும்படி வைத்து விடுகிறார்கள.

இன்னொரு ஆண் பதிவாளருக்குப் பெண்குழந்தை பிறந்துவிட அக்குழந்தைக்கு என்னபெயர் வைக்கலாம் என்று ஆராய்கிறார்கள் அவரின் கூலிப்படை. அது, இவ்வாரம் நிறைய வாசகர்களால் பரிந்துரைக்கப்பட்டது என தமிழ்மணம் சொல்லி விளம்பரப்படுத்துகிறது. தமிழகத்தில் வேறு யாருக்குமே பெண்குழந்தை பிறக்கவில்லைபோல.

சிறுமதியாளர்களில் சின்னத்தனமான பதிவுகளும், அவர்களது அந்தரங்க வாழ்கை விடயங்களும் பொது மேடையில் வைக்கப்பட்டு, தமிழ் பதிவாளர்கள் என்றால் \'கட்டப்புத்தி\' தான் என்பதை தமிழ்மணம் சொல்லாமல் சொல்கிறது. இதை நாமும் சிலவேளைகளில் திறக்கவேண்டியதாகிறது ஏனென்றால், அவர்கள் கவர்ச்சிகரமாக ஏதோ புதிய கருத்தைச் சொல்லவருவது போல தலைப்பை வைத்து சுண்டியிழுக்கிறார்கள்.

எனவே தமிழ்மணம், பதிவுகளைப் படித்து வகைப்படுத்தி தனிப்படுத்தவேண்டியதை செய்யின், நமக்கு நேரம் நல்ல பதிவுகளில் செல்ல வாய்ப்புண்டு.

R.Puratchimani said...

ஹையோ ஹையோ எல்லாத்தையும் படிக்க சுவாரசியமா இருக்கு....
//ஜோசியம்கிறது என்னங்க? அதை நம்புவறன் யாரு? ஜோஸியம் சொல்லி பொழைப்பு நடத்துறவன் யாரு? அதில் லாஜிக் ஏது? ஜோஸியத்தில் எதையாவது ஏன் எதற்குனு கொடஞ்சு கொடஞ்சு கேள்வி கேக்க முடியுமா? ஜோசியம் என்பது விஞ்ஞானம் அல்லது அறிவியல் அல்லனு நான்தான் எல்லாருக்கும் சொல்லனுமா என்ன?//

ஜோதிடத்தில் உண்மையும் இருக்கு, லாஜிக் இருக்கு, பெரிய குழப்பமும் இருக்கு அங்கே கயவர்களும் இருக்காங்க
.......நீங்க சொல்ற அறிவியலுக்கும் இது பொருந்தும்.
//ஏன் எதற்குனு கொடஞ்சு கொடஞ்சு கேள்வி கேக்க முடியுமா?//
நிறைய கேள்விகள் கேட்கலாம்....கொஞ்சம் விடயம் தெரிந்தா போதும்.
நேற்றைய விஞ்ஞானமே இன்றைய ஜோதிடம்.
///ஆமா கடவுள் எங்கே இருக்காரு? :)))//
கீழே உள்ள பதிவு உங்களுக்கு புடிக்கும்னு நினைக்கிறேன்
http://kelviyumnaaneypathilumnaaney.blogspot.com/2011/04/3.html