Monday, December 31, 2012

விஸ்வரூபம் அதுக்குள்ளே 300 கோடி வசூல்?!

அதற்குள்ளே 30 லட்சம்  பேர் டி ட்டி எச்க்கு ரூ 1000 கொடுத்து விஸ்வரூபத்திற்கு அட்வாண்ஸ் புக்கிங் செய்துள்ளதாக இணையதள் உலகில் ஆதாரப்பூர்வமான செய்தி வந்துள்ளதாக வதந்திகள் உலவுகிறது! "இந்த உண்மையான செய்தியை நம்பாதவன் எல்லாம் மனநோயாளி" என்று வந்தியத்தேவன் என்னும் ஈழத்தமிழர் மற்றும் கமல் ரசிகர் கோபமாக சொல்லியுள்ளார்! உண்மைகள் முதலில் வதந்தியாக வருவது இது முதல் முறை அல்ல! இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் 150 கோடி இண்வெஸ்ட் செய்த கமலஹாசன் படம் வெளிவரும் முன்பே 150 கோடி வருமானம் செய்துள்ளார் என்று ஆகிறது! இந்த மிகப்பெரிய சாதனைக்கு கமலஹாசனை நாம் வாழ்த்துவோம்!

பூஜாகுமார் மற்றும் ஆண்ட்ரியா

இன்னும் இந்தப்படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்யவில்லை! கேரளா மற்றும் தமிழ் நாட்டில் உள்ள தியேட்டர் ஓனர்களெல்லாம் பிரச்சினை செய்துகொண்டுள்ளனர். எப்படியோ விஸ்வரூபம் திரையரகுகளில் வெளிவந்தால் அங்கே குறைந்தது ஒரு 100 கோடியாவது வந்துவிடும்.

ஆக, கமலஹாசனின் விஸ்வரூபம் குறைந்தது 400 கோடியாவது  கலக்சன் பெற்றுவிடும்.

கமலின் விஸ்வரூபம் ரஜினியின் * எந்திரன், * சிவாஜி,  கமலின் *தசாவதாரம், விசய்யின் * துப்பாகி  எல்லாவற்ரையும் தூக்கி எறிந்துவிட்டு முதல் இடத்தை அடைந்துவிடும்!

படம் நல்லாயிருக்கோ இல்லை குப்பையோ, க்ரிட்டிக்ஸ்க்கு பிடிக்கிதோ என்பதெல்லாம் இப்போ முக்கியம் அல்ல! கமலஹாசன் தான் செலவழித்த பணத்தைவிட படம் வெளிவரும் முன்பே இரண்டு மடங்கு சம்பாரித்து விடுவார் என்பதே இங்கே முக்கியம்.

இது அவருடைய திறமைக்கான பரிசு! அவருடைய வியாபார உக்திக்கான பரிசு! எம் பி எ பட்டம் பெற்றவன் சாதிக்க முடியாததை நமது மேதை, சகலகலா வல்லவன் சாதித்து உள்ளார்! அவர் ஒரு தமிழன் என்று பெருமைப் படுவோம்! அவரு ஒரு நாத்திகன் என்று பெருமைப்படுவோம்! மனதாறப் பாராட்டுவோம் அவரை, அவருடைய துணிவுக்காக!

இன்னொரு நல்ல செய்தி என்னானா, இத்தனை கோடிகள் சம்பாரித்த கமலஹாசன் அடுத்து தான் சம்பாரித்த 300 கோடியையும் அப்படியே செலவழித்துமருதநாயகம் எடுக்கத் தயாராகிவிடுவார்.  மருதநாயகம் வியாபாரம் ஒரு 1000 கோடியாவது டி ட்டி எச் மற்றும் சினிமா ரிலீஸ் மூலம் கலக்சன் பெற்றுத்தரும்!  ஆக, கமல் இந்தியாவிலேயே #1 ஆக்டராகவும், #1 தயாரிப்பாளாரகவும், கின்னஸில் இடம் பெறுவார்! அவரை வாழவைத்த தமிழர்களுக்காக  என்னன்ன செய்யப் போகிறாரோ!!

டி ட்டி எச் ரைட்ஸை ரூ 50 கோடிக்கு கமல் விற்றுவிட்டார் என்கிற செய்தி ஒன்று உலவியது. அது உண்மை என்றால், இலாபம் ஏர் டெல் நிறுவனத்திற்கு போய்விடுமா என்னனு தெரியலை!

எது எப்படியோ, வாழ்க உலக நாயகன் புகழ்!! வாழ்க அவரை வாழவைக்கும் ரசிகாமணிகள்!

17 comments:

ராஜ நடராஜன் said...

திரையரங்கு உரிமையாளர்கள் கல்லா கட்ட இயலாத நிலையில் கமலுக்கு எதிராக கொடி பிடிக்கிறார்கள்.கமலின் டி.டி.ஹெச் திட்டம் வெற்றிகரமானால் இதனால் மறுமுறை பலன் அடைப்வர்கள் திரைப்படத் தயாரிப்பாளர்களும்,திரையரங்கு உரிமையாளர்களுமே.

அமெரிக்காவில் வூடு போன்ற ப்ளூரே டிவிடிகள்,டி,டி.ஹெச் மாதிரி நெட்பிளிக்ஸ் போன்றவை இருந்தும் உலக திரையரங்குகள் கல்லா கட்டுகின்றன.இது போக மிச்சம் மீதியே திருட்டு வீடியோவுக்கு போகிறது.அடுக்கடுக்காய் குவித்த திருட்டு வீடியோப் பக்கம் நான் இப்பொழுது போவதேயில்லை.

மாற்றங்களை வரவேற்போம்.அதற்கான கமலின் முதல் முயற்சியை ஆதரிப்போம்.

வருண் said...

***அதற்கான கமலின் முதல் முயற்சியை ஆதரிப்போம்.***

ஆதரிக்கிறதுனா என்ன, நடராஜன்? ரூ 1000 கொடுத்து டி ட்டி எச் ல மனம் குளிரப் படம் பார்க்கிறதா? :)))

கமல்ஹாசன் டி ட்டி எச் மூலம் 400 கோடி சம்பாரிக்க ஆதரவு அளிப்பது என்னவோ நாட்டுக்காக தியாகம் பண்ணுறமாரி சொல்றீங்க. எனக்குப் புரியலை???

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

நம்ப முடியல!பாப்போம்

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சகோ.வருண்,

அவர்களின் விளம்பரத்தை நம்பும் முன்னர் நாமும் சில கணக்குகளை போட்டுப்போர்ப்போம்.
இந்தியாவில் சுமாராக மொத்தம் 41 மில்லியன் அதாவது சுமார் நான்கு கோடி DTH subscribers இருப்பதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

இந்திய மக்கள் தொகையில் தமிழகம் சுமார் 17 இல் ஒரு பாகம் என்று மக்கள் தொகை புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.
எனவே, இதன்படி சுமார் 24 லட்சம் DTH subscribers தமிழகத்தில் உண்டு எனலாம். இவர்கள் 'எல்லாரும்' ரூபாய் 1000 கொடுத்து விஸ்வரூபம் பார்க்கும் சினிமா வெறியர்களாகவோ பொருளாதார சிக்கனம் அறியாத மடையர்களாகவோ நிச்சயமாக இருக்க முடியாது. அப்படியே இருந்தாலும் அவர்கள் நிச்சயமாக அதிகபட்சம் 25% பேர்தான் இருப்பார்கள் என்பது எனது கணிப்பு.

இவர்களிலும்கூட... 1000 ரூபாயை கட்டிவிட்டு, ரிலீஸ் அன்று... தனது 40'' ஸ்கிரீன் டிவியை கூடத்தில் வைத்து அக்கம்பக்கம் மற்றும் தெருவில் உள்ளவர்களிடம் ஒரு டிக்கட் 25 ரூபாய் என்று 50 பேரை வீட்டில் அனுமதித்து போட்ட காசுக்கு இலாபம் பார்க்கும் புத்திசாலிகளே இன்று நம் மாநிலத்தில் அதிகம்..!

ஆக, இதன்படியும் பார்த்தால்.... சுமார் 6 கோடி ரூபாய் இதுவரை விஸ்வரூபத்திற்கு வசூல் ஆகி இருக்கலாம்..! அவ்ளோதான்..!

மொத்தத்தில்..... இப்பதிவு-இதுபோன்ற இலவச விளம்பரம் தற்போது கமல் போன்ற கருமிகளுக்கு மிகவும் தேவை..! உங்கள் பதிவை படித்தால் அவர் அகம் மகிழ்வார்..!

உஷா அன்பரசு said...

வியப்பாகத்தான் இருக்கிறது. பார்க்கலாம்.......

ராஜ நடராஜன் said...

வருண்!நேற்று இரவே போடவேண்டிய பின்னூட்டம்.புத்தாண்டுக்கு பார்ட்டிக்கு போய்ட்டேன்.

நான் அவதாருக்கே விஸ்வரூபத்தை விட 5 மடங்கு செலவு செய்தேன்:)

இப்பவும் எப்பவும் அந்த கூகுள் அனுபவம் நெஞ்சில் இருக்குது.

ஒரு பொருளின் விலை அதிகமாக இருந்தாலும் தரத்திற்காகவும்,விலை குறைவு என்பதற்காகவும் வாங்கும் மனபாவம் ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.நான் தர பிரியன்.

பொருளை தயாரிப்பவனுக்கும்,நுகர்பவனுக்கும் என்ன நாட்டு தியாகம் தொடர்பு இருக்கிறது?

ராவணன் said...

இந்த கமல்காசன் நடித்தால் ஆயிரம் என்ன? பத்தாயிரம் கூடக் கொடுக்கலாம். இந்த வயதான காலத்தில் மேட்டர் படத்தில்...சாரி இதுபோன்று மேட்டர் உள்ள படத்தில் நடிப்பது சாதாரண விசயமா?

ஆனா நான் ஓசியில்தான் பார்ப்பேன்.

காசு கொடுத்து பார்க்குமளவிற்கு அந்த ஆள் வொர்த் இல்லை

ராவணன் said...

இஸ்லாமிய பெயரைக் கொண்ட கமல ஹாசன், இஸ்லாமியர்களின் எதிர்ப்பால் டிடிஹெச்சில் முதலில் வெளியிடுகின்றார்.

போட்ட காசை எடுக்க இதுபோன்ற ஒரு பொழப்பு.

நேற்றுவரை இதே திரையரங்குகளால் மட்டுமே கோவணத்தில் அலைந்த கமல ஹாசன் ஜட்டியுடன் திரிகின்றார். அந்தத் திரையரங்குகள் இல்லாவிட்டால் இந்த கமல ஹாசன் அம்மணமாக நடுரோட்டில் இருந்திருப்பார்.

ராவணன் said...

வெறும் 300 கோடிதானா?

தசாதாவரம் என்ற சாதாரண படமே 18,000 கோடிகளை அள்ளியபோது இந்த விஸ்வரூபம் சுமார் 3 லட்சம் கோடிகளை அள்ளும் என்று ஹாலிவுட்டில் பேசுகின்றார்கள்.

அதுக்கு வருமானவரி பிரச்சனை வரக்கூடாது என்பதற்காகவே நேற்று மத்திய நிதிஅமைச்சர் ச்சிதம்பரத்தைப் புகழ்ந்து பேசியுள்ளார்.

Jayadev Das said...

@ராவணன்
\\ இஸ்லாமிய பெயரைக் கொண்ட கமல ஹாசன், இஸ்லாமியர்களின் எதிர்ப்பால் டிடிஹெச்சில் முதலில் வெளியிடுகின்றார்.

போட்ட காசை எடுக்க இதுபோன்ற ஒரு பொழப்பு.\\

இதுதான் மேட்டரா அடங்கொய்யால.........!!

Avargal Unmaigal said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்

அன்புடன்
மதுரைத்தமிழன்

வருண் said...

*** T.N.MURALIDHARAN said...

நம்ப முடியல!பாப்போம் ***

இது வீண் புரளினு கமல் தரப்பு கோபத்துடன் சொல்வதாக இன்னொரு வதந்தி :)

வருண் said...

***~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சகோ.வருண்,

அவர்களின் விளம்பரத்தை நம்பும் முன்னர் நாமும் சில கணக்குகளை போட்டுப்போர்ப்போம்.
இந்தியாவில் சுமாராக மொத்தம் 41 மில்லியன் அதாவது சுமார் நான்கு கோடி DTH subscribers இருப்பதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

இந்திய மக்கள் தொகையில் தமிழகம் சுமார் 17 இல் ஒரு பாகம் என்று மக்கள் தொகை புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.
எனவே, இதன்படி சுமார் 24 லட்சம் DTH subscribers தமிழகத்தில் உண்டு எனலாம். இவர்கள் 'எல்லாரும்' ரூபாய் 1000 கொடுத்து விஸ்வரூபம் பார்க்கும் சினிமா வெறியர்களாகவோ பொருளாதார சிக்கனம் அறியாத மடையர்களாகவோ நிச்சயமாக இருக்க முடியாது. அப்படியே இருந்தாலும் அவர்கள் நிச்சயமாக அதிகபட்சம் 25% பேர்தான் இருப்பார்கள் என்பது எனது கணிப்பு.

இவர்களிலும்கூட... 1000 ரூபாயை கட்டிவிட்டு, ரிலீஸ் அன்று... தனது 40'' ஸ்கிரீன் டிவியை கூடத்தில் வைத்து அக்கம்பக்கம் மற்றும் தெருவில் உள்ளவர்களிடம் ஒரு டிக்கட் 25 ரூபாய் என்று 50 பேரை வீட்டில் அனுமதித்து போட்ட காசுக்கு இலாபம் பார்க்கும் புத்திசாலிகளே இன்று நம் மாநிலத்தில் அதிகம்..!

ஆக, இதன்படியும் பார்த்தால்.... சுமார் 6 கோடி ரூபாய் இதுவரை விஸ்வரூபத்திற்கு வசூல் ஆகி இருக்கலாம்..! அவ்ளோதான்..!

மொத்தத்தில்..... இப்பதிவு-இதுபோன்ற இலவச விளம்பரம் தற்போது கமல் போன்ற கருமிகளுக்கு மிகவும் தேவை..! உங்கள் பதிவை படித்தால் அவர் அகம் மகிழ்வார்..!***

சகோதரர் ஆஸிக்!

என்ன செய்றது? ஒரு சில உண்மைகளை அறிந்துகொள்ள சிரத்தையுடன் தேடும்போது ஒரு சில தவறான விளம்பரங்களை தவிர்ப்பது கடினம், சகோ!

வருண் said...

**Blogger உஷா அன்பரசு said...

வியப்பாகத்தான் இருக்கிறது. பார்க்கலாம்.......***

வாங்க உஷா அன்பரசு!

உண்மை விரைவில் வெளிவரும்ங்க. பொறுத்திருந்து பார்ப்போம்!

வருண் said...

***ராஜ நடராஜன் said...

வருண்!நேற்று இரவே போடவேண்டிய பின்னூட்டம்.புத்தாண்டுக்கு பார்ட்டிக்கு போய்ட்டேன்.

நான் அவதாருக்கே விஸ்வரூபத்தை விட 5 மடங்கு செலவு செய்தேன்:)

இப்பவும் எப்பவும் அந்த கூகுள் அனுபவம் நெஞ்சில் இருக்குது.

ஒரு பொருளின் விலை அதிகமாக இருந்தாலும் தரத்திற்காகவும்,விலை குறைவு என்பதற்காகவும் வாங்கும் மனபாவம் ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.நான் தர பிரியன்.

பொருளை தயாரிப்பவனுக்கும்,நுகர்பவனுக்கும் என்ன நாட்டு தியாகம் தொடர்பு இருக்கிறது?***

தியேட்டர் ஓனர் என்கிற வியாபாரி நஷ்டமடைகிறான்.

தயாரிப்பாளர் என்கிற வியாபாரி இலாபம் சம்பாரிக்கிறான்.

அம்புட்டுத்தான் மேட்டர். :)

வருண் said...

***Jayadev Das said...

@ராவணன்
\\ இஸ்லாமிய பெயரைக் கொண்ட கமல ஹாசன், இஸ்லாமியர்களின் எதிர்ப்பால் டிடிஹெச்சில் முதலில் வெளியிடுகின்றார்.

போட்ட காசை எடுக்க இதுபோன்ற ஒரு பொழப்பு.\\

இதுதான் மேட்டரா அடங்கொய்யால.........!!***

என்னவோ போங்க!

வருண் said...

**Avargal Unmaigal said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்

அன்புடன்
மதுரைத்தமிழன்***

ரொம்ப நன்றிங்க! உங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும் என்னுடைய இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!