Thursday, June 27, 2013

கலைஞர் காங்கிரஸுடன் கை குலுக்குவதுதான் புத்திசாலித்தனம்!

2 ஜி ஸ்கேமில் கனிமொழியை மத்திய ஆளுங்கட்சியான காங்கிரஸ் அரெஸ்ட் செய்தது! திஹார் சிறையில் ஜாமீன் இல்லாமல் கனிமொழி அடைக்கப்பட்டார்! இது அரசியல்! காங்கிரஸ் கட்சி தன்னை யோக்கியனாக காட்டிக்கணும்னா 2 ஜி ஸ்கேமில் கனிமொழியை அரெஸ்ட் செய்தே ஆகவேண்டிய நிர்பந்தம், கட்டாயம், இத்யாதி.

இப்போ வருகிற நாடாளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா தனியாகவே நின்று 40 எம் பி சீட்களையும் கைப்பற்றுவேன்னு நிக்கிறார். நல்லா நிக்கட்டும்!  நாப்பதையும் பிடிக்கட்டும்! "மைனாரிட்டி கட்சி" பிரதமராக ஆகட்டும்!  ஜெயா டி வி ல இவனுக வச்ச ஒப்பாரியத்தான் நாணும் சொல்றேன்! மெஜாரிட்டி கட்சிக்காரன் எல்லாம் ஒண்ணாச்சேர்ந்து ஆத்தாவின் ஆட்சியை மைனாரிட்டி ஆட்சினு கிண்டலடித்து, பாராளுமன்றத்தில் அ தி மு க எம் பி களை  ஏறி மிதி மிதினு மிதிக்கட்டும்!

கலைஞர் , ஏற்கனவே "தமிழின துரோகி" யாக ஈழ மக்களாலும், தமிழன உணர்வு அதிகம் கொண்ட தமிழ் மக்களாலும் ஆக்கப்பட்டுவிட்டார்!

இனிமேல் கலைஞர் இழக்க என்ன இருக்கு???

இப்போ கலைஞர் என்னதான் செய்தாலும் அந்த "தமிழின துரோகி" பட்டத்தை அகற்ற முடியாத ஒரு சூழல்.

இந்த ஒரு சூழலில், தன்னை "தமிழின துரோகி"யாக ஆக்கியத் தமிழனைப் பத்தி கலைஞர் கவலைப்படுவதை எல்லாம் முழுவதும் விட்டுவிட்டு, அந்தத் தொல்லை இல்லாமல் தன் அரசியலை தெளிவாக செய்யலாம்.

கனிமொழியை ராஜ்ய சபா எம் பி ஆக்க காங்கிரஸ் உதவுவதை ஏற்றுக்கொண்டு, கனிமொழியை அரெஸ்ட் செய்ததற்காக, காங்கிரஸை, "மறப்போம் மன்னிப்போம்" என்று ஒரு பாட்டுப்பாடி அதை விட்டுவிட்டு, வரும் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டமைப்பதுதான் புத்திசாலித்தனம்.

அப்படி செய்வதால் இனிமேல் எதை இழக்கப் போகிறார், கலைஞர்?

காங்கிரஸுடன் கூட்டமைத்து, "நிலையான ஆட்சி மத்தியில் அவசியம்" என்றும், "மதவாத கட்சியை நாட்டை ஆள விடக்கூடாது" னு பிரச்சாரம் செய்ய வேண்டியதுதான் புத்திசாலித்தனம்!

கலைஞரே!

உங்களைத் "தமிழின துரோகி"யாக ஆக்கிய தமிழனைப் பத்தியெல்லாம் இனிமேல் கவலைப்பட வேண்டாம்.

அவனை,  பகவானும், அம்மாவும், சோ ராமசாமியும் கவனமாகப் பார்த்துக்குவாங்க! காப்பாத்திப்புடுவாங்க! 

நீங்க பேசாமல் மத்தியில் "நிலையான ஆட்சி வேணும்" "அப்போத்தான் இருண்டு கிடக்கும் தமிழ்நாட்டை ஒளி பெறச் செய்யலாம்!" னு சொல்லி காங்கிரஸுடன் கை கோர்த்துக் கொள்ளுங்கள்! என்னதான் நடக்குதுனு பார்த்துடலாம்! :-)

6 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

என்னதான் நடக்கப் போகிறதென்று பார்ப்போம்

உஷா அன்பரசு said...

ம்..ம்

Anonymous said...

அவனை, பகவானும், அம்மாவும், சோ ராமசாமியும் கவனமாகப் பார்த்துக்குவாங்க! காப்பாத்திப்புடுவாங்க!....

ஆமாங்க, ஆமாம்!

Unknown said...

கருணாநிதியின் தொடர்ந்த தவறுகளால், திமுக மீள முடியாத அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. எத்தனையோ நெருக்கடிகளைச் சந்தித்து மீண்டெழுந்த திமுகவை, மீண்டெழ முடியாத மயான படுகுழியில் தள்ளியிருக்கிறார் கருணாநிதி.

sathishsangkavi.blogspot.com said...

எல்லாம் அரசியல்...

'பரிவை' சே.குமார் said...

அரசியல்
அரசியல்
அரசியல்

வேறொன்றும் இல்லை...