Monday, June 8, 2009

தவிர்க்க முடியாத பதிவுலக அரசியல்!

தமிழ்மணம், இன்று வாசகர் பரிந்துரையை மேல்தூக்கி வைத்துள்ளதன் நோக்கம், தரமான பதிவுகள் பலருக்கும் போய் சேரனும் என்கிற நல்லெண்ணத்தில். மேலும் கள்ள ஓட்டுக்களை தவிர்க்க இ-மெயில் ஓப்பென் ஐ டி மற்றும் ப்ளாக் ஐடெண்ட்டி சரிவர கவனித்து கள்ள ஓட்டுக்களையும் தவிர்க்க முயன்று ஓரளவுக்கு வெற்றியும் அடைந்துள்ளனர் தமிழ்மண நிர்வாகிகள்.


டி வி ஆர் அவர்கள் சமீபத்தில் எழுதிய பதிவில் "-ve பரிந்துரைக்கு -1 மார்க் என்பது எப்படி சரி?" என்பதுபோல பதிவில் வருத்தத்துடன் சொல்லியுள்ளார்.


http://tvrk.blogspot.com/2009/06/blog-post_07.html


அதற்கு காரணம், பதிவுலகில் உங்க பதிவுக்கேற்ப உங்களுக்கு நண்பர் பகைவர் உருவாகிவிடுகிறார்கள். உங்கள் முன்னேற்றத்தில் எரிச்சலடையும் சில பெரியமனிதர்கள்கூட இதில் அடக்கம். உங்களை வெறுப்பவர்கள் நீங்க சிறந்த பதிவு எழுதினாலும் உங்களுக்கு தவறாமல் -ve பரிந்துரைக்கு -1 மார்க் கொடுத்துவிட்டு போய்விடுவார்கள். இந்த மதிப்பெண் பொதுவாக உங்களுடைய இந்தப் பதிவுக்காக அவர்கள் கொடுப்பதல்ல! உங்களுக்காக கொடுக்கும் ஒரு "அன்புப்பரிசு"!

* இதைத் தமிழ்மணம் வாசகர்பரிதுரையை மாற்றியமைப்பதன் மூலம் சரி செய்ய முடியுமா?

* சரி செய்யனுமா?

* எப்படி செய்யமுடியும்?

என்கிற கேள்விகளுக்கு பதில் அளிப்பது மிகவும் கடினம்!

ஏன் என்றால்,

* உங்க பதிவை ரசிப்பதற்கு வெறுப்பதற்கும் ஒவ்வொருவர்க்கும் சம உரிமை உண்டு!

ரசிப்பவர் +1 கொடுத்தால், வெறுப்பவன் -1 தானே கொடுக்கனும்? இது எப்படி தவறாகும்?

இல்லை, இவருக்கு என்னை பிடிக்காது. அதனால் இப்படி செய்கிறார் என்றால், வினை விதைத்தது நாம் தானே?

I know it is not fair lots of times but we just have to learn to live with it! If we are really good, the time will tell. Whatever you write is going to stay here for ever. Your post which is treated unfairly today, might get recognized may be after 10 years! Who knows? The truth never dies as far as I know! :)

* பொறாமை, பாலிடிக்ஸ், வயிற்றெரிச்சல், வெறுப்பு இதையெல்லாம் பதிவுலகில் இல்லாமல் பண்ணுவது மிகவும் கடினம்.

* என்னைக்கேட்டால் தமிழ்மணம் இதை ஓரளவுக்குத்தான் சரி செய்ய முடியும். கடவுளே வந்தாலும் இதுபோல் பலவித மனநிலையில் உள்ள பதிவர்களை சரி செய்வது- நியாயமாக ஓட்டளிக்க வைப்பது- கடினம்!

பேசாமல் போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றறட்டும் என்று போய்விடுவது நல்லது!

9 comments:

பழமைபேசி said...

+1

ஆனா, தலைப்பையாவது தமிழ்ல வெக்கச் சொல்லி உங்களுக்கு என்னோட பணிவான வேண்டுகோள்! இஃகிஃகி!!

தமிழ்மணம்ங்ற திரட்டியோட வாக்களிப்புல கலந்துக்க தமிழில் தலைப்பு...யாராவது திரியக் கொழுத்திப் போடுங்க....

தவிர்க்க முடியாத பதிவுலக அரசியல்!

வருண் said...

***ஆனா, தலைப்பையாவது தமிழ்ல வெக்கச் சொல்லி உங்களுக்கு என்னோட பணிவான வேண்டுகோள்!**

சரிங்க மாற்றிவிடுறேன் :-)))

T.V.ராதாகிருஷ்ணன் said...

பதிவு போட்ட கொஞ்ச நேரத்தில..உங்க பதிவுக்கு விழுந்துள்ள -ve ஓட்டுகளைப் பார்த்தீங்களா வருண்....நாம என்னதான் அலட்சியப் படுத்தினாலும்...வேணும்னே போடற -ve ஒட்டுங்க கொஞ்சம் வருத்தத்தையே கொடுக்குது...கண்ணுக்கு தெரியாம நமக்கு வேண்டாதவங்க உருவாகிட்டாங்களேன்னு.

வருண் said...

**T.V.Radhakrishnan said...
பதிவு போட்ட கொஞ்ச நேரத்தில..உங்க பதிவுக்கு விழுந்துள்ள -ve ஓட்டுகளைப் பார்த்தீங்களா வருண்....நாம என்னதான் அலட்சியப் படுத்தினாலும்...வேணும்னே போடற -ve ஒட்டுங்க கொஞ்சம் வருத்தத்தையே கொடுக்குது...கண்ணுக்கு தெரியாம நமக்கு வேண்டாதவங்க உருவாகிட்டாங்களேன்னு.

8 June, 2009 12:24 PM***


திரு. TVR:

நீங்க சொல்வது நல்லா புரியுது. இந்தப்பதிவுக்கு -ve மதிப்பெண் போட்டாலாவது பரவாயில்லை, ஒரு சில நல்ல பதிவுகளுக்கும் அப்படித்தான். :-)))

இதற்காக நம்ம வருத்தப்படுவதைவிட, கண்டுக்காம போறதுதான் நல்லது. வருத்தப்பட்டா அது போல் உள்ள sadistic characters வெற்றி பெறுவதுபோல் ஆகுது :)))

தமிழ்மணம் இதற்கு, இதை "சரி செய்ய" வேறென்ன செய்ய முடியும்னு தெரியலை.

பார்க்கலாம் :)

ஜோசப் பால்ராஜ் said...

இதுக்குத்தான் நான் என்னோட பதிவுல ஓட்டுகளப்பத்தி கவலப்படுறதேயில்ல.
பின்னூட்டம், ஓட்டு, பரிந்துரை , சூடாண இடுகை இதுக்காகவா பதிவு எழுதுறோம்?

நாமக்கல் சிபி said...

/இதுக்குத்தான் நான் என்னோட பதிவுல ஓட்டுகளப்பத்தி கவலப்படுறதேயில்ல.
பின்னூட்டம், ஓட்டு, பரிந்துரை , சூடாண இடுகை இதுக்காகவா பதிவு எழுதுறோம்?//

அதானே!

குறை ஒன்றும் இல்லை !!! said...

நண்பரே..
பின்னூட்டம் சரி. ஆனா அந்த ஓட்டு,சூடான இடுகை இதன் மூலம் ஏதேனும் பயன் உள்ளதா?

வருண் said...
This comment has been removed by the author.
வருண் said...

வருண் said...

பால்ராஜ், நாமக்கல் சிபி, குறை ஒன்றும் இல்லை!

என்னுடைய சமீபத்து பதிவில் உங்களுக்கு பதில் சொல்லியுள்ளேன் :)))