Thursday, March 25, 2010

எங்கிட்ட மோதாதே! ராஜாதி ராஜா -விமர்சனம்

ஒரு க்ளீன் எண்டர்டைனர்னா என்னங்க? ஒரு உதாரணம் சொல்லுங்கனு சொன்னால் நம்ம சூப்பர் ஸ்டார் நடிச்ச ராஜாதி ராஜா னு சொல்லலாம்!

நடிகை நதியா, பூவேப் பூச்சூடவால தமிழில் அறிமுகமானார். ஆனால் அவருக்கு எல்லா நடிகைகள் போல கவர்ச்சியை வித்து சினிமா வாழ்க்கையை ஓட்ட இஷ்டமில்லை னு சொன்னாங்க! குறைந்த காலத்திலேயே நடிப்பு தொழிலை முடித்துக் கொண்ட இவர் கடைசியில் சூப்பர் ஸ்டாருடன் ஒரு படம் பண்ணினார். அதுதான் பாவலர் க்ரியாஷன்ஸ் உடைய ராஜாதி ராஜா! இன்னொரு ஹீரோயின் நம்ம ராதா, ராதா ஒரு மாதிரி பெரிய சைஸாகி ஹீரோயின் சாண்ஸ் முடிகிற சமயத்தில் ரஜினியுடன் இன்னொரு படம். அவரும் நல்லா செய்து இருப்பார் !

ரஜினி, யாரோட சேர்ந்து நல்லா காமெடி பண்ண முடியும். செந்திலா, கவுண்டமணியா இல்லை ஜெனகராஜா இல்லை வடிவேலா இல்லை விசு வானு கேட்பார்கள். இந்தக்கூட்டத்தில் முக்கியமாக முதலாவதாக சேர்க்க வேண்டிய இன்னொரு நடிகர்தான் விணுசக்ரவர்த்தி. He is one of the best actors to pair with Rajni in comedy scenes! Their "chemistry" works out so well!

கதை: பஞ்சு அருணாச்சலம் னு நெனைக்கிறேன்! அவர்தான் இது மாதிரி ரெட்டை வேஷம் கதைகளில் கில்லாடி!

தயாரிப்பு: பாவலர் க்ரியேசன்ஸ் ( இளையராஜா சொந்தப் படம்)

இந்தப்படத்தின் வெற்றிக்குக் காரணம், இயக்குனர் ஆர் சுந்தர் ராஜனின் "காமெடி சீன்ஸ்" எடுக்கும் திறமைனு சொல்லலாம். ஆர் சுந்தர் ராஜனின் திறமையால்தான் நம்ம கவுண்ட மணி கொடிகட்டிப் பறந்தார். அதேபோல் ரஜினியால் காமெடி நல்லாப் பண்ணமுடியும் என்று அறிந்து அவரை அழகா பயன்படுத்தி இருப்பார் ஆர் சுந்தர் ராஜன். இவர் ரஜினியை வைத்து இன்னும் பல படங்கள் பண்ணியிருக்கனும்னு எனக்கு ஒரு நப்பாசை! ஏனோ தெரியலை, இந்த பிரமாண்ட வெற்றிக்குப் பிறகும் இவர் ரஜ்னியுடன் மறுபடியும் சேரவில்லை!

அதற்கடுத்து படத்துக்கு பெரிய ப்ளஸ் நம்ம இசை ஞானி இளையராஜாவின் இசை! அதென்னவோ, சொந்தப்படத்துக்கு நல்லா அடிக்கிறாரோ இல்லையோ, ஆர் சுந்தர் ராஜன் படத்திற்கு (பல மோஹன் படங்களுக்கு) இவர் ஒரு தனி இசையோடதான் வருவார்.

பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட்!

* என்கிட்ட மோதாதே நான் ராஜாதி ராஜனடா மற்றும் * மாமா பொண்ணக்கொடு! இரண்டும் படமாக்கியிருக்கிற விதம் (அதாவது காமெடியும் மைல்ட் ரொமாண்ஸும் கலந்து ) ரசிக்கத்தக்க இருக்கும்!

* மலையாளக் கரையோரம் ரஜினி மட்டும் பாடும் இண்ட்ரோ சாங்.

* வா வா மஞ்சள் மலரே ஒண்ணு தா தா கொஞ்சும் கிளியே மற்றும் மீனமம்மா மீனம்மா கண்கள் மீனம்மா என்று ராதாவுக்கு ரெண்டு டூயட் வலுக்கட்டாயமாக திணித்து இருப்பார்கள்!

அதுபோக இன்னும் சின்ன சின்ன பாடல்கள் ரெண்டு "சின்ன ராசு" ரஜினி பாடுவதாக வரும். அவைகளும் ந்ல்லாத்தான் இருக்கும்!

ராதா- ரஜினி வருகிற சீன்களும் சுவராஸ்யம்தான் இருந்தாலும் ரஜினி - நதியா கெமிஸ்ட்ரிதான் நல்லா வொர்க் அவ்ட் ஆகியிருக்கு என்பது என் கருத்து

ஜனகராஜின் காமெடி, ரஜினி- ஜனகராஜ் சேர்ந்து செய்யும் லூட்டி, மேஜிக் எல்லாம் ஜாலியாக இருக்கும். வில்லன்கள் ராதா ரவி, மற்றும் பலர் இருந்தாலும் அந்த பார்ட்டும் காமெடியாத்தான் போகும். "வயலன்ஸ்"னு பார்த்தால் ஜெனகராஜ் கொல்லப்படும் விதம் மட்டும் கொஞ்சம் என்ன ரொம்பவே கஷ்டமா இருக்கும். அதைத்தவிர்த்துப் பார்த்தால் ஒரு முழுநீள ரொமாண்ஸ் கலந்த நல்ல பாடல்கள் நிறைந்த காமெடிப் படம்தான், ராஜாதி ராஜா!

படம் எடுத்தது வந்தது வெற்றியைடந்தது எல்லாமே சாதாரணமாக நடந்தது. ஒரு 2 மாதம் படப்பிடிப்பு, 1 மாதம் போஸ்ட் ப்ரடக்ஷன் வேலை , அவ்வளவுதான்! படம் மிகப்பெரிய வெற்றி! ஆனால் இன்னைக்கு எந்திரன், படம் எடுப்பது 2 வருடம், போஸ்ட் ப்ரடக்ஷன் வொர்க் 1 வருடம்னு போகுது! :( யார் சொன்னா நம்ம முன்னேறலைனு?

12 comments:

கயல்விழி said...

I remember seeing this movie back when I was a little girl, I don't remember the story- but I do remember it being very funny!

வருண் said...

It came out in 1989, Kayal. It is indeed a "funny movie" and enjoyable unless one is too logical and rational and looking for more than just entertainment in a movie. I believe you were a rajni fan then just like any other kids at that age! :)))

சரவணகுமரன் said...

// "வயலன்ஸ்"னு பார்த்தால் ஜெனகராஜ் கொல்லப்படும் விதம் மட்டும் கொஞ்சம் என்ன ரொம்பவே கஷ்டமா இருக்கும். //

எனக்கும் தான்...

Chitra said...

படம் எடுத்தது வந்தது வெற்றியைடந்தது எல்லாமே சாதாரணமாக நடந்தது.

........ :-)

ROBOT said...

இன்னும் பல முறை பார்த்தாலும் சலிக்காத ஒரு படம் . முதல் பாதி ஜனகராஜ் லூட்டி என்றால் இரண்டாம் பாதியில் சின்ன ராசு வேடத்தில் ரஜினி வெளுத்து வாங்கியிருப்பார். ஜெயிலில் செய்யும் அட்டகாசமகட்டும், மந்திரித்த தாயத்து கட்டியவுடன் முதலில் "சுப்பிரமணியை (பக்கத்து வீட்டு நாய் ) ஒரு கை பார்கிறேன்" என்று ஒரு வெகுளி தனமான கதாபாத்திரத்தில் காமெடி கலந்து கலக்கியிருப்பார் . மனோ பாடிய மலையாள கரையோரம் பாடலும், மாமா உன் பொண்ண கொடு பாடலும் நீங்கள் கூறிய அந்த இரண்டு சிறிய பாடல்களும் (அடி ஆத்துக்குள்ள அத்தி மரம் மற்றும் உலக வாழ்கையே ஒரு ஜெயிலு வாழ்க்க தான் ) எனது all time favourite. வினு சக்ரவர்த்தியை விட வேறு யாரும் அந்த கதாபாத்திரத்தை நன்றாக செய்திருக்க முடியாது. சிவாஜியில் கூட அவர் ஒரு காட்சியில் நடித்திருந்தார் ஆனால் நீளம் காரணமாக அவை வெட்ட பட்டு விட்டன . அவரின் அருமையான நடிப்பிற்கு இன்னொரு எடுத்துக்காட்டு அண்ணாமலை படத்தில் மறக்க முடியாத அந்த MLA character.

நல்ல நினைவுகளை நினைவு படுத்தியதற்கு நன்றி
ரோபோட்.

தமிழ் உதயம் said...

நாற்பது நாள்ல எடுக்கப்பட்ட மிகப் பெரிய வெற்றி படம் "தம்பிக்கு எந்த ஊரு". தமிழக திரை உலகை இன்று ஆட்டுவிப்பது பகட்டும், சோம்பேறி தனமும், சுயநலமும்.

வருண் said...

***சரவணகுமரன் said...

// "வயலன்ஸ்"னு பார்த்தால் ஜெனகராஜ் கொல்லப்படும் விதம் மட்டும் கொஞ்சம் என்ன ரொம்பவே கஷ்டமா இருக்கும். //

எனக்கும் தான்...

25 March 2010 7:12 PM***

Great minds think alikeனு சொல்லுவாங்க, சரவணகுமரன் :)

வருண் said...

***Chitra said...

படம் எடுத்தது வந்தது வெற்றியைடந்தது எல்லாமே சாதாரணமாக நடந்தது.

........ :-)

25 March 2010 11:29 PM***

நெஜம்மாத்தாங்க, "ரஜினி ஃபார்முளா" ங்கிறது ரொம்ப சிம்ம்பிளா வொர்க் அவ்ட் ஆன காலம் அது! :) கந்துவட்டியெல்லாம் 3 வருசத்துக்கு கட்ட வேண்டியதில்லை பாருங்க! இன்னைக்கு தயாரிப்பாளர்களுக்கு முதலைவிட வட்டி அதிகமா வந்து நிக்குது because of the all kinds of delay!

வருண் said...

*** ROBOT said...

இன்னும் பல முறை பார்த்தாலும் சலிக்காத ஒரு படம் . முதல் பாதி ஜனகராஜ் லூட்டி என்றால் இரண்டாம் பாதியில் சின்ன ராசு வேடத்தில் ரஜினி வெளுத்து வாங்கியிருப்பார். ஜெயிலில் செய்யும் அட்டகாசமகட்டும், மந்திரித்த தாயத்து கட்டியவுடன் முதலில் "சுப்பிரமணியை (பக்கத்து வீட்டு நாய் ) ஒரு கை பார்கிறேன்" என்று ஒரு வெகுளி தனமான கதாபாத்திரத்தில் காமெடி கலந்து கலக்கியிருப்பார் . மனோ பாடிய மலையாள கரையோரம் பாடலும், மாமா உன் பொண்ண கொடு பாடலும் நீங்கள் கூறிய அந்த இரண்டு சிறிய பாடல்களும் (அடி ஆத்துக்குள்ள அத்தி மரம் மற்றும் உலக வாழ்கையே ஒரு ஜெயிலு வாழ்க்க தான் ) எனது all time favourite. வினு சக்ரவர்த்தியை விட வேறு யாரும் அந்த கதாபாத்திரத்தை நன்றாக செய்திருக்க முடியாது. சிவாஜியில் கூட அவர் ஒரு காட்சியில் நடித்திருந்தார் ஆனால் நீளம் காரணமாக அவை வெட்ட பட்டு விட்டன . அவரின் அருமையான நடிப்பிற்கு இன்னொரு எடுத்துக்காட்டு அண்ணாமலை படத்தில் மறக்க முடியாத அந்த MLA character.

நல்ல நினைவுகளை நினைவு படுத்தியதற்கு நன்றி
ரோபோட்.

25 March 2010 11:51 PM***

பகிர்தலுக்கு நன்றி ரோபாட் அவர்களே! :)

வருண் said...

*** தமிழ் உதயம் said...

நாற்பது நாள்ல எடுக்கப்பட்ட மிகப் பெரிய வெற்றி படம் "தம்பிக்கு எந்த ஊரு". தமிழக திரை உலகை இன்று ஆட்டுவிப்பது பகட்டும், சோம்பேறி தனமும், சுயநலமும்.

26 March 2010 10:10 AM***

40 நாட்கள்தானா?!

அந்தப்படம் மதுரை நடனாவில் பிச்சுக்கிட்டு ஓடுச்சுனு சொல்றாங்க!

மாதவிக்கு ராசியில்லாத நடிகைனு இருந்த ஒரு கெட்டபெயரை எடுக்க உதவிய படம்னு சொல்லுறாங்க! :)

Unknown said...

என்னா படம் எவளோ கஷ்டத்துல இருந்தாலும் சர்வசாதரணமா நம்மை வேற உலகிற்கு அழைத்தும் செல்லும்
அதிலும் ரஜினி " அந்த பணையாரிடம் வேலை கேற்கும் விதம் , கடைசியில் கல்யாணத்துல கூட வினுவை வெளியே நிக்க வைப்பது "

எத்தனைமுறை பார்த்தேன் ஞாபகம் இல்ல இதோ மீண்டும் பாக்க போறேன்
மிக்க நன்றி ..
ஹரிசிவாஜி

வருண் said...

***harikrishnan said...

என்னா படம் எவளோ கஷ்டத்துல இருந்தாலும் சர்வசாதரணமா நம்மை வேற உலகிற்கு அழைத்தும் செல்லும்
அதிலும் ரஜினி " அந்த பணையாரிடம் வேலை கேற்கும் விதம் , கடைசியில் கல்யாணத்துல கூட வினுவை வெளியே நிக்க வைப்பது "

எத்தனைமுறை பார்த்தேன் ஞாபகம் இல்ல இதோ மீண்டும் பாக்க போறேன்
மிக்க நன்றி ..
ஹரிசிவாஜி***

ஹரி கிருஷ்ணன்!

அந்தப் பண்ணையாரிடம் வேலை கேக்கிற சீன் உணமையிலேயே ரொம்ப நல்லாயிருக்கும்! பகிர்தலுக்கு நன்றிங்க! :)