Wednesday, March 17, 2010

ஷங்கரையும், ரஜினியையும் ஏன் பாராட்டக்கூடாது?


எந்திரனில் ரஜினிக்கு சம்பளம் 25 கோடியாக இருக்கலாம். இயக்குனர் ஷங்கர் ஒரு பெரிய தொகையை சம்பளமாகப் பெறலாம். ஆனால் இந்தப் படத்திற்காக அவர்கள் உழைக்கும் உழைப்புக்கு இந்தச் சம்பளம் வழங்குவதில் என்ன தப்பு?

சிவாஜி, எம் ஜி ஆர் எல்லாம் பெரிய ஆளான பிறகு தன் கைக்கு அடக்கமான இயக்குனரை வைத்து தன் “கெத்” திலிருந்து இறங்காமல்த்தான் நடித்தார்கள். ஆனால் ரஜினி? சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் எந்திரனில் அறுபது வயதை எட்டும் ரஜினி தன்னைவிட வயதில் அனுபவத்தில் மிகவும் கம்மியான ஷங்கரை “சார் சார்” என்றழைத்து, அவருடன் முழு ஒத்துழைப்புக் கொடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார் கடந்த 2 வருடமாக!

ஒருபக்கம் டி வி சீரியல் மாதிரி மலையாளப்படம்போல மொத்தத்தில் ஒரு கோடி செலவழிச்சு பல படங்கள் வந்துகொண்டு இருக்கின்றன. படம் வெற்றியடைந்தால் சில கோடி லாபம். விழுந்தால் ஒரு கோடி நஷ்டம். மொத்தத்தில் படம் விழுந்தாலும் ஒண்ணும் குடிமுழுகிப் போவதில்லை.

80 களில் ரஜினி படம் பூஜை போட்டால் 4 பாட்டு 5 சண்டை கொஞ்சம் காமெடினு 3 மாதத்திற்கு ஒரு படம் வரும். படம் வெளிவந்த 4 வாரங்களில் போட்ட காசை எடுத்து இலாபமும் சம்பாரித்தது பல நிர்வணங்கள். படம் ஹிட்டானாலும் சரி, விழுந்தாலும் சரி ரஜினி படத்தில்போட்ட காசை எடுத்துவிடுவார்கள். இதனால்தான் ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் வந்தது. மேலும் ரஜினிக்கு எ, பி மற்றும் சி என்று எல்லா செண்டர்களிலும் பலமான மார்க்கட் இருந்தது, இன்னும் இருக்கிறது.

இதேபோல் இன்றும் ரஜினி நினைத்தால் வருடத்திற்கு ரெண்டு படம் பண்ணி (10 கோடி சம்பளம் வாங்கினால் கூட), வருடத்திற்கு 20 கோடி எளிதாக சம்பாரிக்கலாம். குசேலன் ஃப்ளாப் ஆனதுக்குக் காரணம்கூட பிரமிட் சாய்மீராவின் முட்டாள்தனம். 30 கோடிக்கு வாங்க வேண்டிய படத்தை 60 கோடிக்கு வாங்கிய முட்டாள்த்தனம்.

இன்றைய நிலையில் ரஜினி ஒரு படத்திற்காக 2 வருடங்கள் கஷ்டப்பட்டு உழைத்து நடிக்க வேண்டிய அவசியமோ, ஷங்கர் போல இயக்குனர்களிடம் அவர்கள் சொல்வதை மதித்து அது போல் நடிக்க வேண்டிய தேவையோ இல்லை!

ஷங்கரை என்ன வேணா திட்டுங்க, ஆனால் தமிழ் சினிமாவை உலகமே திரும்பிப் பார்க்க வைத்தவர் ஷங்கர்தான். தமிழ் சினிமாவின் “ஜார்ஜ் லூக்காஸ்” ஷங்கர்தான்! உலக சினிமா, ஹாலிவுட் சினிமா, ஆஸ்கர் என்று அனலைஸ் செய்யும் மேதாவிக்கள் ஒத்துக்கொண்டாலும், கொள்ளா விட்டாலும் இதுதான் உண்மை!

ஷங்கரையும், ரஜினியையும் எந்திரனுக்காக இவர்கள் உழைக்கும் இந்த கடின உழைப்புக்கு பாராட்டுவதிலென்ன தப்புங்க?

6 comments:

ஆர்வா said...

வழிமொழிகிறேன்

பாலாஜி சங்கர் said...

வசனம் வாத்தியார் எனும்போது


நிச்சயம் சமூக அக்கறை இருக்கும் என நம்பலாம்

Unknown said...

:)

வருண் said...

***கவிதை காதலன் said...

வழிமொழிகிறேன்

17 March 2010 9:25 PM***

நன்றி, கவிதை காதலன்!
----------------
***பாலாஜி said...

வசனம் வாத்தியார் எனும்போது


நிச்சயம் சமூக அக்கறை இருக்கும் என நம்பலாம்

17 March 2010 9:49 PM***

தங்கள் கருத்துக்கு நன்றி, பாலாஜி :)

-------------

வருண் said...

***முகிலன் said...

:)

17 March 2010 10:21 PM***

வாங்க, முகிலன்! :)

R.Gopi said...

அட...

நல்லா தானே அலசி இருக்கீங்க...

எந்திரன் உலக அளவில் சாதனை படைக்கப்போவது உறுதி...

ஏனெனில், அத்துணை பேர்களின் கடின உழைப்பை இரண்டு வருடமாக எடுத்து வளர்ந்து வருகிறது...

வாழ்த்துக்கள் தலைவா...