Monday, March 1, 2010

விண்ணைத்தாண்டி வருவாயா? vs அலைகள் ஓய்வதில்லை


சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னால் வந்த அலைகள் ஓய்வதில்லைக்கும், இன்று வந்துள்ள விண்ணைத்தாண்டி வருவாயா? வுக்கும் பெரிய வித்தியாசம் எதுவுமில்லை!

ரெண்டுமே ஒரு அழகான க்ரிஷ்டியன் பெண்ணைப்பார்த்து மயங்கி காதல் வயப்படுவது. It is pure INFATUATION in both cases! அதில் அன்று ராதா, ஒரு கிருஷ்தவப் பெண், கார்த்திக் ஒரு பிராமண பையன். இருவருக்கும் இடையில் நிற்பது மதம்!

இன்று, அதேபோல த்ரிஷா (ஜெஸ்ஸி) ஒரு கிருஷ்டவப்பெண். அவள் அழகைப்பார்த்து மயங்கி விழுவது ஒரு இந்து, கவனமாக வீரகுடி வெள்ளாளராக்கப் பட்டுள்ளார். 30 வருடங்களுக்கு முன்னால் பாரதிராஜா, மதத்தை தூக்கி எறிந்து அந்த இருவரை சேர்த்து வைத்தார். ஆனால் இன்று, இந்த நவநாகரிக உலகில் கெளதம் மேனன், மதம் என்பது மிகவும் முக்கியம் என்பதை வலியுறுத்தி த்ரிஷா வை இன்னொருவரை மணந்துகொள்ள வைத்துள்ளார்!

இதுதான் நம்ம முப்பது ஆண்டுகளில அடைந்த முன்னேற்றம் போல இருக்கு! இன்னும் நம் நாட்டில் பெற்றோர்கள்தான் யாரை மணக்கனும் என்பதை முடிவு செய்கிறார்கள்!

இந்தப்படத்தை க்ரிடிக்க்ஸ் ஆஹா ஓஹோனு புகழ்றதுக்கு என்ன காரணம்னு தெரியவில்லை!

அலைகள் ஓய்வதில்லை யில் இளைய ராஜாவின் இசை, மற்றும் வைரமுத்துவின் பாடல்கள், அழகாக படத்துக்கதையுடன் சேர்ந்து கலந்து போனது. இன்னைக்கு வந்துள்ள நம்ம கெளதம் மேனனின் நவநாகரிகக் காதல்ல என்னவோ நாலு ராப்பரை ஆடவிட்டு பாட்டு எடுக்கிறார்கள்! இசை நல்லாத்தான் இருக்கு!

இது ஒரு சாதாரண நம்ம ஊர்க்காதல் கதை! அதாவது வயதுக்கு வந்த தன் பிள்ளைகள் யாரைவேணா காதலிப்பதை தவிர்க்க முடியாது அதை நிறுத்தவும் முடியாது. ஆனால் கல்யாணம் என்று வரும்போது, அது பெற்றோர்களை திருப்திப்படுத்த வேண்டும் என்று நம்முடையை இன்றைய கலாச்சாரத்தை வலியுறுத்தும் படம்!

30 வருடத்தில் நாம் எவ்வளவு கீழே போய்க்கொண்டிருக்கோம் என்பதற்கு இந்தப் படத்திற்கு கிடைக்கும் பாராட்டுகள் ஒரு நல்ல உதாரணம்!

6 comments:

ராம்ஜி_யாஹூ said...

hey, you are comparing apple with orange.

comparing Karthik with Simbu, Raadha with Trisha, even in dream I will not do that comparisan.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

வித்தியாசமான சிந்தனை,

மதத்தை தூக்கி எரிவது போல படங்கள் தொடர்ச்சியாக வரவேண்டும்.

காதலுக்கு மரியாதை ட்ரெண்டில் பெற்றோரே மதத்தைத் தூக்கி எரிந்தால் நலம்..,

பூவே உனக்காகவில் அதை அழகாகச் செய்திருப்பார்கள்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

அலைகள் ஓய்வதில்லை பட்த்தில் கார்த்திக்குக்கு மீசை இல்லாமல் பார்த்த நினைவு..,

வருண் said...

***யாஹூராம்ஜி said...

hey, you are comparing apple with orange.

comparing Karthik with Simbu, Raadha with Trisha, even in dream I will not do that comparisan.***

LOL

It is all about love and religion I thought, yahoo ramji!

வருண் said...

***SUREஷ் (பழனியிலிருந்து) said...

வித்தியாசமான சிந்தனை,

மதத்தை தூக்கி எரிவது போல படங்கள் தொடர்ச்சியாக வரவேண்டும்.

காதலுக்கு மரியாதை ட்ரெண்டில் பெற்றோரே மதத்தைத் தூக்கி எரிந்தால் நலம்..,

பூவே உனக்காகவில் அதை அழகாகச் செய்திருப்பார்கள்.***

உண்மைதான் சுரேஷ், நம்ம விஜய் படத்தில் பொதுவாக மதத்தை கவனமாக ஹேண்டில் பண்ணுவாங்க :)

வருண் said...

*** SUREஷ் (பழனியிலிருந்து) said...

அலைகள் ஓய்வதில்லை பட்த்தில் கார்த்திக்குக்கு மீசை இல்லாமல் பார்த்த நினைவு..,***

நீங்க சொல்வது சரிதான். இந்த ஸ்டில் ஒரிஜினல் இல்லை. ஏதோ டி வி டிக்காக கார்த்திக்கையும், ராதாவையும் ஒட்டியிருக்காங்க. அதில் உள்ள இன்னொரு ஸ்டில் (கீழே) ஒரிஜினல் மாதிரி இருக்கு! :)