Saturday, March 13, 2010

Toyota (டொயோட்டா)வுக்கு கெட்ட நேரம் தொடர்கிறது!



டொயோட்டா காரில் உண்மையிலேயே பிரச்சினை இருக்கா? இல்லை தோண்டத்தோண்ட சாதாரண விசயம்கூட பெரிதாக்கப்படுகிறதா? ஃபோர்ட், ஜி எம், க்ரைஸ்லெர் கார்களில் எல்லாம் பிரச்சினையே இல்லையா?

மார்க்கட்டிலிருக்கிற ஹாண்டா அக்கார்ட், நீஸான் அல்டிமா, செவி மலிபு போன்றவற்றில் டொயோட்டாவில் உள்ளதுபோல் பிரச்சினைகளே இல்லையா? என்பது எல்லோருக்கும் எழும் கேள்விகள்!

உண்மை எது என்று யாருக்கும் தெரியாது. ஆனால் இதனால் டொயோட்டாவிற்கு மிகப்பெரிய இழுக்கு, நஷ்டம் என்பதை இந்த மாத கேம்ரி மற்றும் கரோல்லா விற்பனையிலிருந்து தெளிவாக உணரலாம்.

ஹாண்டா அக்கார்ட் விற்பனையில் #1 ஆக இருந்த டொயோட்டா கேம்ரியை இரண்டாவது மாதமும் சாய்த்துள்ளது!

தற்போது டொயோட்டா கேம்ரி மற்றும் கரோல்லா 0% வட்டி 60 மாதங்களுக்கு கொடுக்கப்படுகிறது. இதுபோல் பெரிய “தியாகம்” செய்த பிறகும் கேம்ரி விற்பனையில் #1 ஆகமுடியவில்லை!

February 2010 : Top-selling cars and trucks in America!

1. Ford F-Series: 32,895 (truck)
2. Honda Accord: 22,456 (including 2,432 Crosstours) (mid-size car)
3. Chevy Silverado: 19,822 (truck)
4. Toyota Corolla: 16,996 (compact)
5. Toyota Camry: 16,552 (mid-size car)
6. Honda Civic: 16,471 (compact)
7. Ford Fusion: 16,459 (mid-size car)
8. Nissan Altima: 16,198 (mid-size car)
9. Ford Escape: 15,156 (SUV)
10. Chevy Malibu: 15,150 (mid-size car)

இன்னைக்கும் டொயோட்டா காருடைய தரம் நல்லாத்தான் இருக்கிறது என்பது டொயோட்டாவின் லாயல் கஸ்டமர்கள் கருத்து மற்றும் இன்னும் மக்களுடைய கருத்து. இருந்தாலும் இந்த அடியிலிருந்து டொயோட்டா மறுபடியும் பழைய நிலையை அடைய சில ஆண்டுகள் ஆகலாம். இந்தப் பிரச்சினைகளால் டொயோட்டாவிற்கு பல பில்லியன் டாலர்கள் நஷ்டம்!

6 comments:

ராமலக்ஷ்மி said...

மூன்று வருடம் முன்னே டொயோட்டோ என்பதற்காக கொரல்லா வாங்க விருப்பிப் போய் திருப்தியில்லாமல், பிறகு ஹோண்டா சிவிக் வாங்கித் திரும்பினோம். சிவிக் இன்றுவரை எந்தப் பிரச்சனையும் தரவில்லை. நைஸ் ரைடிங். நைஸ் ட்ரைவிங்.

ராம்ஜி_யாஹூ said...

s is not Japan's good period. I think this decade is the book for Indian and China, so let Japan struggle now

வருண் said...

***ராமலக்ஷ்மி said...
மூன்று வருடம் முன்னே டொயோட்டோ என்பதற்காக கொரல்லா வாங்க விருப்பிப் போய் திருப்தியில்லாமல், பிறகு ஹோண்டா சிவிக் வாங்கித் திரும்பினோம். சிவிக் இன்றுவரை எந்தப் பிரச்சனையும் தரவில்லை. நைஸ் ரைடிங். நைஸ் ட்ரைவிங்.

13 March 2010 9:15 AM***

நல்ல முடிவுங்க, ராமலக்ஷ்மி. ரெண்டுமே தரமான கார்கள்தான் இருந்தாலும் நான் ஒரு ஹாண்டா விசிறி தான். இப்போ ட்ரைவ் பண்ணுவது ஹாண்டா அக்கார்ட்தான்!:)

ஆனால் ஆனஸ்ட்லி, ரெண்டுமே தரமான கார்கள்தான்.

ஹாண்டா சிவிவ் = டொயோட்டா கரொல்லா

டொயோட்டா கேம்ரி = ஹாண்டா அக்கார்ட்.

They both have equally good repution!

ஆனால், இங்கே ரி-சேல் வால்யுனு பார்த்தால் ஹாண்டா இஸ் லிட்டில் பிட் பெட்டெர். விலையும் ஹாண்டா கொஞ்சம் அதிகமாக இருக்கும். But there are so many who love toyota camry over honda accord and toyota corolla over civic EVEN ALL THESE bad publicity lately, especially indians here! :)

வருண் said...

***ராம்ஜி_யாஹூ said...
s is not Japan's good period. I think this decade is the book for Indian and China, so let Japan struggle now

13 March 2010 9:32 AM***

May be so. It may be their turn but I am sure they will resolve this problem and come up again pretty soon. They have excellent work ethics I believe.:)

ராமலக்ஷ்மி said...

உண்மைதான், இங்கே ரிவர்சாக ஹோண்டாவுக்கு ரீசேல் ரொம்பவும் கம்மியே. ஆனாலும் கூட புதிதாய் வாங்க அதுவே பலரது சாய்ஸாக உள்ளது:)!

வருண் said...

***ராமலக்ஷ்மி said...

உண்மைதான், இங்கே ரிவர்சாக ஹோண்டாவுக்கு ரீசேல் ரொம்பவும் கம்மியே. ஆனாலும் கூட புதிதாய் வாங்க அதுவே பலரது சாய்ஸாக உள்ளது:)!

17 March 2010 8:11 AM***

பகிர்தலுக்கு நன்றிங்க ராமலக்ஷ்மி :)