Monday, March 8, 2010

சாமியார்களுக்கு அவசியம்? ரஞ்சிதாவுக்கு ஒரு கோயில்!

மனிதனுக்கு காமம் அல்லது செக்ஸ் அவசியம். ஹார்மோன்கள் மனிதனை ஒரு வழிபண்ணி அவன் சிந்தனைகளைத்தூண்டி காமுறவைக்கிறது. அது இல்லாமல் பொதுவாக மனிதன் வாழமுடிவதில்லை. இதற்கு விதிவிலக்கு யாருமில்லைனு இந்த நித்தி- ரஞ்சிதா கேஸை வைத்து அடித்து சொல்லமுடியாது!

ஆனால் ஒருவன் தன்னை கடவுள் போல் சித்தரித்து, தன்னைப்பற்றி ஒரு பொய் இமேஜ் உருவாக்கி பலரை ஏமாற்றியதால்தான் இங்கே பிரச்சினையே!

இந்த பொறுக்கி ராஜசேகர் விசயத்தில் பிரச்சினை என்னவென்றால், இவன் தன்னை கடவுள் ஸ்தானத்திற்கு தானாகவே உயர்த்திக் கொண்டான். தான் சிற்றின்பங்களை எல்லாம் துறந்தவன் என்று சொல்லிக்கொண்டான்!

பலியாடான ரஞ்சிதா மேலே எல்லோருக்கும் ஒரு பரிதாபம் இப்போ. படுக்கை அறை விசயத்தை எல்லாம் காட்டி அவரை அவமானப்படுத்தியதாக எல்லோரும் இந்த தனிமனித உரிமை மீறலைக் கண்டு அழுகிறார்கள். என்னைப்போல் இரக்கமில்லாதவர் ஒரு சிலரைத் தவிர!

பத்தினி தெய்வம் ரஞ்சிதாவுக்கு கோயில் கட்ட விரும்பும் பக்தர்களுக்கு சில கேள்விகள்!

* உலகமே சாமியாராக, கடவுளாக வணங்கிக்கொண்டிருக்கும் ஒரு ஆளுடன் படுத்து எந்திரிக்கும்போது, ரஞ்சிதாவுக்கு அது தப்பா தெரியலையா?

* எத்தனையோ பெண்கள் இவரை கடவுளாக நம்பி இவரை கடவுளாக வணங்கியுள்ளார்கள்னு தெரியாதா இவருக்கு?

* இல்லை கடவுளோட படுத்தெழுந்திரிப்பது மோச்சத்திற்கு வழி என்று நம்பினாரா?

* ரஞ்சிதா ஒரு சக நடிகருடனோ, இல்லை ஒரு சாதாரண பாய் ஃப்ரெண்டிடமோ இப்படி நடந்திருத்தால், அதை சன் டி வி வெளியிட்டு இருந்தால், சன் டி வி யை பாய் காட் பண்ணனும், உடைத்து நொறுக்கனும்னு நானே சொல்லுவேன்.

* தன்னைக்கடவுளாகக் காட்டிக்கொண்டு திரியும் ஒரு பித்தலாட்டக்காரனை அம்பலப்படுத்தனும்னா, சிலர் பலியாவதைத் தடுக்க முடியாது. ரஞ்சிதா ஒரு பாவமும் அறியாதவர் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஊரே கும்பிடும் ஒரு "கடவுளுடன்" காமத்தில் இறங்குவது அவர் செய்த மிகப்பெரிய தப்பு!

* இந்த வீடியோ வெளியிடாமல் இந்த சாமியாரைப்பத்தி என்ன சொன்னாலும் மக்கள் நம்பப்போவதில்லை! இவன் தொடர்ந்து பல பெண்களை மோசடி செய்வான். ஏமாத்துவான்!

*அதுக்காக ஒரு அபலைப் பெண்ணை பலிகொடுக்கனுமா? என்று கேட்டால் அதை தவிர்ப்பது கடினம்.

* அவர் படுக்கை அறை வீடியோவை வெளியிட்டது தப்பு என்று நினைக்காமல், உலகமே கடவுளாக நினைத்து ஏமாந்து கொண்டிருந்த முட்டாள் மக்கள் கண்களை திறக்க தான் உதவியதாக ரஞ்சிதா இதை எடுத்துக் கொள்ளட்டுமே!

* இதுபோல் பலர் கண்களை திறந்த ரஞ்சிதா எதையும் கண்டு கலங்கக்கூடாது! தன்னை பலிகொடுத்து இத்தனை பேர் கண்களை திறந்ததற்காக இவருக்கு ஒரு கோயில் கட்டலாம்! தப்பே இல்லை!

*****************

நம்ம நாட்டில் சாமியார் தேவைகள் இருந்துகொண்டேதான் இருக்கு. இன்று ஒரு சாமியார் மாட்டினால் நாளைக்கு இன்னொரு சாமியார் உருவாகுவான். இது என்றுமே முடியாத ஒரு தொடர்கதைதான். எத்தனையோ சாமியார்கள் பொய்வேஷம் கலைந்து மாட்டிவிட்டார்கள். கொலைவழக்கில், ஏமாற்றுவதில், செக்ஸ் ஸ்கேண்டல் இப்படி நடந்துகொண்டேதான் இருக்கு. ஆனாலும் மக்களுக்கு சாமியார்கள் தேவை இருக்கு.

இதுபோதாதென்று ரஜினிகாந்த் போன்ற மிகப்பெரிய நடிகர்கள் சாமியார்களை நம்புகிறார்கள்.

ஆத்திகர்களை நிறைந்த உலகம் என்பதால் கமலஹாசன் போன்ற நாத்திகர்கள்கூட மற்றவர்கள் மனதை புண்படுத்தக்கூடாது என்பதாலும், ஆத்திகர்கள் 80 விழுக்காடுகளுக்கு மேலே இருப்பதாலும், தன்னுடைய நாத்திக கொள்கையைக்கூட அடக்கி வாசிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

நாத்திக கொள்கையுள்ள அரசியல்வாதிகள், முன்னேற முயன்றுகொண்டிருக்கும் பதிவர்கள் அனைவருமே தன் மக்கள்பலத்தை இழக்க விரும்பாமல் ஒரு வியாபார நோக்கில் நாத்திக கொள்கைகளை மூட்டைகட்டி வைக்கிறார்கள் என்பதை நீங்கள் கவனித்துப் பார்த்தால் உணரலாம்.

ஏன் நம்மநாட்டில் மட்டும் இப்படி? கவனமாகப் பார்த்தால் நம்ம மக்கள் மட்டுமல்ல! வெள்ளைக்காரன், அமெரிக்கர்கள், ஐரோப்பியர்கள் பலர் நம் நாட்டு சாமியார்களை நம்பி வணங்குறாங்க, அவர்களை "ஷக்தி" உள்ளவர்களாக நம்புறாங்க. இதற்கு அடிப்படைக் காரணம் மதமல்ல! மனப்பிராந்தி! பயம்! தன் சோகத்திற்கு ஒரு வடிகால்! தன் குழப்பத்திற்கு ஒரு மருந்து!

திடீர்னு ஒருவருடைய நிலைமை மாறிவிடுகிறது. தொழில் அல்லது வியாபாரத்தில் பயங்கர நஷ்டம். இதுபோல் சூழலில் கோழைகளுக்கு (யாரு வேணா கோழையாகலாம்) ஒரு சாமியார் தேவைப்படுகிறார். அந்த பயத்தைப் போக்க! நஷ்டமடைந்தவன் லாபமடைவது எல்லாம் இயற்கை. மறுபடியும் முயற்சி செய்யனும்! அதுக்கான நம்பிக்கையை சாமியார் கொடுக்கிறார்!

இன்னொரு உதாரணம்:

திடீர்னு ஒருவருக்கு கேன்சர் வந்துவிடுகிறது. டாக்டர்கள் எல்லாம் நாள் குறித்துவிடுகிறார்கள். இது எனக்கும் நாளைக்கு நடக்கலாம். ஒருவர் அந்த நிலைமைய அடையும்போது, அவருக்கு மன வியாதி வந்துவிடுகிறது. பயம்! இந்த பாழாப்போன உலகமே சொர்க்கமாகத் தெரிகிறது! கூட உள்ளவர்கள், அம்மா அப்பா, மனைவி குழந்தைகள் யாருக்குமே என்ன செய்வதென்று தெரியவில்லை. இதில் மனவியாதியே இந்த நிலையில் உள்ளவரை சீக்கிரம் கொன்றுவிடும் பரிதாப நிலை வருகிறது.

இந்த சூழ்நிலையில், இது போல் சாமியார்களிடம் இவர்கள் எடுத்துச் செல்லப்படுகிறார்கள் (இவர்கள் விருப்பத்துடனோ, அல்லது சுற்றத்தாரின் வற்புறுத்தலுக்காகவோ).

சாமியார், டாக்டர் அல்ல! அவருக்கு உண்மையான கேன்சர் நிலவரம் தெரியாது! அவருக்கு தெரிந்தது கீமோ தெரப்பி அல்ல. அவருக்கு இது கோலன் கேன்சரா, லங் கேன்சரா இல்லை ப்ளட் கேன்சரானு தெரியாது. அவருக்கு தெரிந்த வைத்தியம் ஒண்ணே ஒண்ணுதான். "எதையுமே நல்லபடியாக மாற்றிவிடலாம், எதையுமே கடவுள் கிருபையால் சரி செய்துவிடலாம்" என்று அந்த பரிதாப்பத்திற்குரியவரிடம் சொல்வது. இதுதான் சாமியார் கொடுக்கும் மருந்து!

பயந்த்தால் நடுங்கி தூக்கம் இல்லாமல் தவிக்கும் பலருக்கு அப்படி அவர் ஒரு ஆறுதல் கொடுக்கும்போது மனவியாதி போய்விடும், ஒரு நம்பிக்கை வந்துவிடும். இதுதான் சாமியார் செய்யும் உதவி. இதில் என்ன தப்பு? தப்பே இல்லை! ஆனால் கேன்சரை அவர் நல்லாக்கிவிட்டார்னு சொல்வதுதான் இங்கே தப்பு! அவர் மனவியாதியைத்தான் சரியாக்கினார்!

மனிதனுக்கு இதுபோல் தாங்கமுடியாத துயரம் வந்துகொண்டே இருக்கும். இதுபோல் மன ஆறுதல் கொடுக்கும் சாமியார்களும் வந்துகொண்டேதான் இருப்பாங்க!

இதுபோல் சாமியார்களுக்கும் எந்த மதத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை! அதனால் அவர்கள் சாதனைகளை ஹிந்து மத சாதனைகளாகவும், அவன் அயோக்கியத்தனம் செய்யும்போது அதை இந்து மதத்திற்கு ஒரு இழுக்காகவும் சில பாப்பான்கள் நினைப்பது அடிமுட்டாள்த்தனம்!

மெடிட்டேஷன் என்பது மனவியாதிக்கு ஒரு மருந்து! நம்பிக்கை, மனவியாதிக்கு மருந்து! அதைத்தான் இந்த காவி சாமியார் பயந்து நடுங்கும் மனிதனுக்கு கொடுக்கிறாங்க! இந்து மதப்போதனைகளை அல்ல!

6 comments:

தமிழ் மைந்தன் said...

ரஞ்சிதா எங்கே படுத்து எழுந்தார், அவர் கண்ணனோடு ராதை கலந்த மாதிரி கலந்தார்

Antony said...

அட ஏங்க தம்பி நீங்க வேற.. நல்ல பேருல ப்ளாக் வச்சுருக்கீங்க.. மனசுக்கு இதமான நாலு விஷயத்த பதிஞ்சு விட்டோமா நாலாயிரம் பேரு படிச்சிட்டு மனசுக்குள்ள சிரிச்சுட்டு போனாயங்களா நு ஹிட் கவுன்ட்டர் ல பாத்துட்டு சந்தோஷமா இருங்க.. கூத்தியா கூட கூத்தடிச்சவன் கதை நாட்டுக்கே தெரியும்.. நீங்களும் ஏன் மாங்கு மாங்கு நு அதையே சிந்திச்சு எழுதுறீங்க,, அறிவு இருக்கவன் செய்ய வேண்டியத செஞ்சுட்டு போறான்.. நீங்க அமெரிக்க சம்பவங்கள்.. அதில இருந்து கருத்துகள் நு ஹிட்ட் வாங்குற வழில போங்க.. ;) ((அதுலாம் சரி நான் இவ்ளோ வெட்டி ஆயிடனா.. ஐயோ!! ))

வருண் said...

***தமிழ் மைந்தன் said...
ரஞ்சிதா எங்கே படுத்து எழுந்தார், அவர் கண்ணனோடு ராதை கலந்த மாதிரி கலந்தார்

8 March 2010 8:33 PM***

LOL!

வருண் said...

***Antony said...
அட ஏங்க தம்பி நீங்க வேற.. நல்ல பேருல ப்ளாக் வச்சுருக்கீங்க.. மனசுக்கு இதமான நாலு விஷயத்த பதிஞ்சு விட்டோமா நாலாயிரம் பேரு படிச்சிட்டு மனசுக்குள்ள சிரிச்சுட்டு போனாயங்களா நு ஹிட் கவுன்ட்டர் ல பாத்துட்டு சந்தோஷமா இருங்க.. கூத்தியா கூட கூத்தடிச்சவன் கதை நாட்டுக்கே தெரியும்.. நீங்களும் ஏன் மாங்கு மாங்கு நு அதையே சிந்திச்சு எழுதுறீங்க,, அறிவு இருக்கவன் செய்ய வேண்டியத செஞ்சுட்டு போறான்.. நீங்க அமெரிக்க சம்பவங்கள்.. அதில இருந்து கருத்துகள் நு ஹிட்ட் வாங்குற வழில போங்க.. ;) ((அதுலாம் சரி நான் இவ்ளோ வெட்டி ஆயிடனா.. ஐயோ!! ))

8 March 2010 10:15 PM***


I learnt how to increase the hits. You just need to write some cinemaa articles! LOL!

But the blog is not just for geting the hits! To express yourself now and then! :)

ராஜ நடராஜன் said...

யோசிக்கிறீங்க!

வருண் said...

**Blogger ராஜ நடராஜன் said...

யோசிக்கிறீங்க!

13 March 2010 2:25 AM***

வாங்க, நடராஜன்! :)