Wednesday, March 24, 2010

அந்தக்காலத்து சூப்பர் ஸ்டார்கள் தெரியுமா?


தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்கிற பட்டத்துக்குரியவர் நம்ம ரஜினிகாந்த் ஆகிவிட்டார். இருந்தாலும் தமிழ் சினிமா உலகில் எப்போவுமே ரெண்டு சூப்பர் ஸ்டார்கள் இருந்து இருக்கிறார்கள். அதாவது ரைவல்ரி இரண்டு பெரிய நடிகர்களுக்குள் இருந்து கொண்டேதான் இருக்கிறது. ரஜினியும் கமலும்தான் சமீபத்திய சூப்பர் ஸ்டார்கள். ரசிகர்கள், வெறியர்கள்னு பார்த்தால் இவர்கள் இருவருக்கும் சம பலம்தான். அதேபோல் அதற்கு முன்னால் சிவாஜியும், எம்ஜிஆரும். அதற்கு முன்னால்?

இவர்கள் நால்வரைப்போலவே ரசிகர்கள் மனதைக் கவர்ந்தவர்கள் நம்ம எம் கே தியாகராஜ பாகவதரும், பி யு சின்னப்பாவும்னு சொல்றாங்க. சொல்றாங்களா? ஆமாங்க, இவங்க நடிச்சபடம் ஒண்ணுகூட நான் பார்த்ததில்லை. இருந்தாலும் இவர்களைப் பற்றி கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணி கொஞ்சம் விசயங்கள் சேகரித்து வந்தேன்.

பி யு சின்னப்பா, புதுக்கோட்டையில் பிறந்தவராம். இயற்பெயர் சின்னச்சாமி நு சொல்றாங்க. இவர் பிறந்த தேதி 05.05.1916. தன்னுடைய 35 வது வயதிலேயே இவர் எல்லாப்புகழும் அடைந்து இந்த உலகத்தைவிட்டும் மறைந்துவிட்டார். 29.01.1951 ல இவ்வுலகைவிட்டு மறைந்துவிட்டார். 35 வயதுக்குள் இவர் சாதித்த சாதணைகள் பற்பல.

இவர் மனைவி பெயர் ஏ சகுந்தலாவாம். இவருடைய படம் பிரிதிவிராஜ்னு ஒரு படம் வந்ததாம். அதில் சம்யுக்தையாக நடித்த இவரை காதலித்து திருமணம் செய்துகொண்டாராம். இவர்களுக்கு ராவ்பகதூர் என்கிற மகனும் பிறந்தாராம்.

----------------------------

எம் கே தியாகராஜ பாகவதர்தான் இன்னொரு சூப்பர்ஸ்டார்.
பி யு சின்னப்பா ரசிகர்களும், எம் கே டி ரசிகர்களும் நம்ம ரஜினி-கமல், சிவாஜி - எம்ஜிஆர் ரசிகர்கள் அடிச்சுக்கிற மாதிரி அடிச்சுக்குவாங்களாம். நம்ம ஆளுக அந்தக்காலத்திலிருந்து இந்தக்காலம் வரை ஒரேமாதிரிதான் இருந்திருக்காங்க!

பி யு சின்னப்பா கொஞ்ச வயதிலேயே இறந்துவிட்டார்னா, நம்ம எம் கே டி நடிச்ச மொத்தப் படங்களே 14 படங்கள்தானாம்! இதில் பி யு சின்னப்பாவை விட அதிக புகழடைந்தார்னு சொல்றாங்க!

இவர் பிறந்தது மார்ச் 1, 1910, மறைந்தது நவம்பர் 1, 1959. தனது 49 வய்திலேயே மறைந்துவிட்டாராம்!

பாகவதர் இன்னொரு பெரிய பிரச்சினையில் மாட்டிக்கிட்டார். அந்தக்காலத்தில் நடிகர்நடிகைகளை அவர்கள் தனிப்பட்ட காதல் வாழ்க்கையை, காம வாழ்க்கையை தரக்குறைவாக லக்ஷ்மிகாந்தன் என்கிற ஒரு ஆசிரியர் எழுதி எல்லோருடைய வையித்தெரிச்சலிலும் விழுந்து, கடைசியில் கொலையும் செய்யப்பட்டாராம்! இந்த லக்ஷ்மிகாந்தன் என்கிற மஞ்சள் பத்திரிக்கை ஆசிரியரால் பாதிக்கப் பட்டவர்கள், நம்ம எம் கே டி யும் கலைவாணர் என் எஸ் கே யும் ஆவார்கள். இவர்கள் இருவரும் இந்த லக்ஷ்மிகாந்தன் கொலைக் குற்றத்திற்காக சிறையிலும் அடைக்கப் பட்டதாக சொல்றாங்க! இந்த லக்ஷ்மி காந்தனால், இருந்த போதும், இறந்தபோதும் பாதிக்கப்பட்டு பயங்கர இன்னல்களுக்கு ஆளானவர்களில் எம் கே டி யும் என் எஸ் கேயும் ஆவார்கள்!

பி யு சின்னப்பா நடித்த சில படங்கள்:

* உத்தம புத்திரன், * தயாளன், * தர்ம புத்திரன், * பிரிதிவிராஜன், *மனோன்மணி.

எம் கே தியாகராஜ பாகவதர் நடித்த சில படங்கள்:

* பவளக்கொடி, * நவீன சாரங்கதரா, * சிந்தாமணி, * சிவகவி, * அஷோக் குமார், * ஹரிதாஸ், * அம்பிகாபதி, * அமரகவி.
---------------------
என்ன இதெல்லாம் ரொம்ப அவசியமானு கேக்குறீங்களா? இன்னைக்கு இருக்கிற விஜய், சூர்யா, அஜீத் படங்களை ஒரு 100 வருடங்கள் கடந்து பார்க்கும்போது உங்களுக்கு உள்ள அதே உணர்வுகள்தான் இருக்கும் 100 வருடம் கடந்து வரப்போகும் இளசுகளுக்கு! நீங்க எல்லாம் அந்தக்காலத்து ரசனை இல்லாத கிழங்களாத் தோனும்! :)

2 comments:

சகாதேவன் said...

பி.யு.சின்னப்பா நடித்த ஒரு படம் மங்கையர்க்கரசி. இதில் அவருக்கு மூன்று வேடங்கள். அப்பா, மகன், பேரன். கண்ணாம்பாதான் ஹீரோயின். நல்ல பாடல்கள்.

பாகவதர் நடித்த ஹரிதாஸ் எங்க ஊர் ராயல் டாக்கீஸில் தீபாவளியன்று ரிலீஸாகி அடுத்த தீபாவளி முடிய ஓடியதாம்

வருண் said...

பகிர்தலுக்கு நன்றி, சகாதேவன்! :)

கண்ணாம்பா ஹீரோயினா? :))))

ஹீரோயின் அம்மாவா மாறுவது காலங்காலமாக நடக்குதுபோல! பராசக்தியில் பண்டரிபாயை ஹீரோயினா பார்த்திருக்கேன்! :)))

அதென்னவோ அம்மானா ஒரு மரியாதை வந்துவிடுகிறது. அம்மாவா முதலில் பார்த்துவிட்டு அதன் பிறகு ஹீரோயினா பார்க்கிறது எனக்கு கஷ்டம் :)

இருவரும் கொஞ்ச காலத்திலேயே பல சாதனைகள் புரிந்து இருக்காங்க போல இருக்கு!

லைஃப் எக்ஸ்பக்டென்ஸி நடிகர்களுக்கும் அந்தக்காலத்தில் கம்மியாத்தான் இருந்து இருக்கும்போல! :(