Thursday, March 11, 2010
சிலம்பரசனுக்கு வி தா வ வெற்றியா தோல்வியா?
விண்ணைத்தாண்டி வருவாயா படம் அமோக வெற்றியடைந்ததாக உலகமே சொல்கிறது. அதுவும் நம்ம "காதலர்கள்" மேலும் காதலில் தோல்வியுற்றவர்கள் இந்தப்படத்தை ஆஹா ஓஹோனுதான் சொல்றாங்க. நம்ம நாட்டிலே காதலிச்சா பொதுவா >90% தோல்விதானே? அதனால பெரும்பான்மை பலமுள்ள காதல் தோல்வியடைந்து அரேஞ்சிட் மேரேஜ் பண்ணியவர்கள் எல்லாமே இந்தப்படத்தை ரொம்பத்தான் மெச்சுறாங்க!
இந்தப்படத்தில் மாதவன் நடித்திருந்தால் இதை பெரிய வெற்றியாக கருதலாம். ஆனால் நடித்தது சிலம்பரசன். அதனால என்ன? மாதவனைப்போல் அல்லாமல் சிலம்பரசன் பி & சி செண்டர்களில் கொட்டிகட்டிப் பறப்பவர். ஆனால் பி & சி செண்டர்களில் கெளதம் மேனன் படமெல்லாம் சரியாப் போகாது. விண்ணைத்தாண்டி வருவாயாவும் ஏ செண்டர்களில்தான் நன்றாகப் போகிறது. பி & சி செண்டர்களில் எப்போதும் கெளதம் மேனன் படத்திற்கு கிடைக்கும் அதே ரெஸ்பாண்ஸ்தான் இதுக்கும் கிடைத்துள்ளது. அதாவது பெரிய வெற்றியெல்லாம் அடையவில்லை!
கெளதம் மேனனுக்கு இந்தப்படம் வெற்றிப்படம் என்றாலும், பி & சி செண்டர்களில் வெற்றியடையாத, இந்த ஹை லெவெல் காதல் கதையான வி தா வ சிலம்பரசனுக்கு பெரிய வெற்றிப்படமா என்பது விவாதத்திற்குரியது!
Labels:
அனுபவம்,
சிந்தனைகள்,
திரைப்படம்,
திரைவிமர்சனம்,
மொக்கை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment