"கடவுளைக் கண்டேன்" என்று கட்டுரை கட்டுரையாக சுவாமி நித்யானந்தா பற்றி அவரை "கடவுளுக்கு சமமாக" எழுதிய சாரு நிவேதிதா இன்னைக்கு தானும் தன் மனைவியும் ஏமாந்துபோனதாக புலம்புகிறார்! அவரை அயோக்கியன் என்றும் எழுதுகிறார். அது போதாதென்று சாமியார்களை வளர்த்துவிட்ட சாருவுக்கு கிடைத்த பட்டம் பெரியாரிஸ்ட்! என்ன கொடுமை இது? இதுதான் இன்றைய தமிழ் மீடியாவில் தினம் நடக்கும் கூத்து! தரங்கெட்ட பத்திரிக்கைகளும் தரமில்லாத எழுத்தாளர்களும் நடத்தும் நாடகங்கள் இவைதான்.
யாரு என்ன சொன்னாலும் சரி, இந்தப் பட்டம் கொடுக்க எல்லாம் எவனுக்கும் தகுதி வேணுமா என்ன? இவர் பெரியாரிஸ்டாவே இருந்துட்டுப் போகட்டும்.
ஆனால், இவருடைய கடவுளைக்கண்டேன் கட்டுரைகளை படித்து இந்த நித்யாவை நம்பிய பண்டாரங்கள் மற்றும் சாமியார் பகதர்கள் பலப் பல!
நித்யாவை இவர் இன்று திட்டுவதுடன், அயோக்கியனை நம்பி ஏமாந்துவிட்டேன் என்று புலம்புவதுடன், சட்டரீதியாக அனுகுவதுடன், இவருக்கு இன்னொரு முக்கியமான கடமை இருக்கிறது!
அது என்னன்னா, தன் வாசகர்களிடம் இவர் கேட்க வேண்டிய பகிரங்க மன்னிப்பு!
தன்னால், மற்றும் தன் கடவுளைக் கண்டேன் கட்டுரைகளால் நித்யாவை நம்பி ஏமாந்தவர்களிடம் தான் மன்னிப்பு கேட்கனும் என்பது எந்த ஒரு மனசாட்சி உள்ளவனுக்கும் தெரியும்.
நித்யாவை நம்பி ஏமாந்த இவர் களத்தில் வந்து வாசிக்கும் "மடம் விரும்பிகளை"யும் கடவுள் என்று ஏமாற வைத்ததால் இவருக்கு அந்த கடமை இன்னும் இருக்கிறது! மனசாட்சியுள்ளவன் எவனுமே மன்னிப்புக் கேட்பான்!
சாரு, தன் வாசகர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுவிட்டாரா? இல்லை கேட்கப்போகிறாரா? இல்லை இவருக்கு மனசாட்சியும் இல்லையா?
4 comments:
"இப்போதும் சொல்கிறேன், நித்யானந்தர் எழுதிய புத்தகங்கள் 300 இருக்கும். அத்தனையும் நம் இந்திய ஆன்மீகத்தின் சாரம். கீதைக்கு அவர் எழுதியிருக்கும் பிரம்மாண்டமான உரை ஒரு அற்புதம். நித்யானந்தர் ஒரு முட்டாள் அல்ல; நூறு மேதைகளுக்கு சமமான அறிவுத் திறன் கொண்டவர். "
Innum ippadi solbavar enge mannippu kEtpaar?
***இனியா said...
"இப்போதும் சொல்கிறேன், நித்யானந்தர் எழுதிய புத்தகங்கள் 300 இருக்கும். அத்தனையும் நம் இந்திய ஆன்மீகத்தின் சாரம். கீதைக்கு அவர் எழுதியிருக்கும் பிரம்மாண்டமான உரை ஒரு அற்புதம். நித்யானந்தர் ஒரு முட்டாள் அல்ல; நூறு மேதைகளுக்கு சமமான அறிவுத் திறன் கொண்டவர். "
Innum ippadi solbavar enge mannippu kEtpaar?
12 March 2010 10:25 AM***
இன்னமுமா நம்ம பெரியாரிஸ்ட் இப்படி சொல்கிறார்!!!!
என்னால நம்பவே முடியலை, இனியா! :(
பதிவர்கள் எழுதுறத அப்பிடியே நம்புற அப்பாவிங்க எல்லாம் இருக்காங்களா என்ன ?
தமாசு .. தமாசு
அஹோரி said...
பதிவர்கள் எழுதுறத அப்பிடியே நம்புற அப்பாவிங்க எல்லாம் இருக்காங்களா என்ன ?
தமாசு .. தமாசு
12 March 2010 5:44 PM***
என்னங்க இப்படி சொல்லீட்டீங்க? நம்பாமலா இத்தனை சாமியார் உருவாகி இருக்காங்க? எதைனாலும் நம்பீட்டு, "நம்பாதவங்களை" பாவமாபார்க்கும் மண்டுகள் நிறைந்த நாடுங்க நம்ம நாடு!
Post a Comment