Friday, March 12, 2010

கவர்ச்சிக்கன்னினா இவங்கதான் #1!

தமிழ்சினிமாவில் கவர்ச்சி நடிகைகள் அந்தக்காலத்திலிருந்து இருக்காங்க. இன்னைக்கு யாரு பெரிய கவர்ச்சி நடிகை? நமிதாவா இல்லை வேற யாருமானு தெரியலை.

ஜெயமாலினி, சில்க் சுமிதா, அனுராதா, டிஸ்கோ சாந்தி, மும்தாஜ், ஷ்கீலானு இதுக்குனே படங்களில் இவர்களை வைத்து ஒரு மாதிரி ரசனை உள்ளவங்களை திருப்திப்படுத்த பாடல்கள் எடுக்கப்படுவது காலங்காலமா நடக்கிறது.

நம்ம தாத்தா காலத்தில் இருந்த கவர்ச்சிநடிகதான் படத்தில் உள்ளவர்! இவர் வேறயாருமில்லை ஷாத்ஷாத் டி ஆர் ராஜகுமாரி யேதான்.

இவருடைய கவர்ச்சி மற்றும் வில்லத்தனமான நடிப்புதான் மனோகரா, தங்கப்பதுமை போன்ற படங்களின் மிகப்பெரிய வெற்றிக்குக் காரணம்.

மனோகராவில், சிவாஜி(மனோகரா)யின் தந்தையுடைய "கீப்" வசந்தசேனையாக நடித்துள்ளார். சிவாஜியின் நடிப்பெல்லாம் இவருடைய நடிப்புக்குப் பிறகுதான். இதில் இவர் பேசும் சில வசனங்கள்!

* வீராதி வீரர்களால் முடியாதது, இந்த வேஷிமகனால்தானா முடியப்போகிறது?

* கணவனுக்கு விஷம் கொடுத்து கொன்றேன், கலங்கமற்ற பத்மாவதி கற்பிழந்தாள் என கதை கட்டினேன்.என்னடா உண்மையை எல்லாம் சொல்கிறாள் என்று பார்க்கிறீரா? இதையெல்லாம் கூறி உம்மிடம் மன்னிப்புப்பெற அல்ல! இனி உம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்கிற மனதைரியத்தில்!

வரலாறு காணாத ஒரு வில்லத்தனம்!

*****************************
தங்கப்பதுமை படத்தில் பத்மினியை விட்டுவிட்டு நன்னடத்தை இல்லாத இவர் காலில்போய் விழுந்துகெடப்பார் சிவாஜி. கடைசில எல்லாவற்றியும் இழந்து, கண் பார்வையும் போய்விடும். திரும்பி மனைவியிடம் வருவார். அப்போத்தான் இந்தப்பாடல் (சி எஸ் ஜெயராமன் பாடல்)இடம் பெறும்.

ஒரு நிமிஷம்! நீங்க "பேட்டைராப்" அல்லது "முக்கால முக்காப்புல" பாட்டு கேட்டு ரசிக்கிற டைப்பா? இதோட நிறுத்திக்கோங்க! மேலே படிக்க வேண்டாம்!

ஈடற்ற பத்தினியின் இன்பத்தை கொன்றவன் நான்

அவள் இதயத்தில் கொந்தளித்த இன்பத்தைக் கொன்றவன் நான்

வாழத் தகுந்தவளை வாழாமல் வைத்துவிட்டு

பாழும் பரத்தையினால் பண்புதனைக் கொன்றவன் நான்

அந்தக் கொலைகளுக்கே ஆளாகி இருந்து விட்டேன்

இனி எந்தக் கொலை செய்தாலும் என்னடி என் ஞான‌ப்பெண்ணே

ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே

அவன் ஆடி அடங்குவதும் மண்ணுக்குள்ளே

மனிதன் ! ஆரம்பம் ஆவது பெண்ணுக்குள்ளே

அவன் ஆடி அடங்குவதும் மண்ணுக்குள்ளே

ஆராய்ந்து பார் மனக்க‌ண்ணுக்குள்ளே

ஆத்திரம் கொள்ளாதே நெஞ்சுக்குள்ளே

அன்பைக் கெடுத்து நல்லாசையைக் கொன்றவன்

அஞ்சி நடப்பானோ ஞான‌ப்பெண்ணே

துன்பத்தைக் க‌ட்டி சும‌க்க‌த் துணித்த‌வ‌ன்

சொன்னாலும் கேட்பானோ ஞான‌ப்பெண்ணே

சொன்னாலும் கேட்பானோ ஞான‌ப்பெண்ணே

ஆரம்பமாவது மனிதன் ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே

அவன் ஆடி அடங்குவதும் மண்ணுக்குள்ளே

த‌வ‌றுக்கும் த‌வறான‌ த‌வ‌றை புரிந்துவிட்டு

தனிப்ப‌ட்டுப் போன‌வ‌ன் ஞான‌ப்பெண்ணே

தனிப்ப‌ட்டுப் போன‌வ‌ன் ஞான‌ப்பெண்ணே

ப‌தறி ப‌த‌றி நின்று க‌த‌றி புல‌ம்பினாலும்

ப‌ய‌ன்ப‌ட்டு வ‌ருவானோ ஞான‌ப்பெண்ணே

ப‌ய‌ன்ப‌ட்டு வ‌ருவானோ ஞான‌ப்பெண்ணே

சிங்கார‌ம் கெட்டு சிறைப்ப‌ட்ட‌ பாவிக்கு ச‌ம்சார‌ம் ஏதுக்க‌டி த‌ங்க‌ம் ச‌ம்சார‌ம் ஏதுக்க‌டி

சிங்கார‌ம் கெட்டு சிறைப்ப‌ட்ட‌ பாவிக்கு ச‌ம்சார‌ம் ஏதுக்க‌டி த‌ங்க‌ம் ச‌ம்சார‌ம் ஏதுக்க‌டி

ம‌னைவியை குழ‌ந்தையை ம‌ற‌ந்து திரிந்த‌வ‌னை வாழ்த்துவ‌தாகாத‌டி‌ங்க‌ம் ம‌ன்னிக்க‌ கூடாத‌டி

எல்லாத்தையும் இழந்தபிந்தான் நம்மாளு ஞானோதயம் வந்து திருந்துவான்.

10 comments:

ttpian said...

nalla kooththudaa

Tamilan said...

Hi,

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.tamildaily.com ல் சேர்த்துள்ளோம்.

இதுவரை இந்த www.tamildaily.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

உங்கள் நண்பர்களுக்கும் இத் தளத்தை அறிமுகம் செய்து வையுங்களேன்...

கிரி said...

வருண் கலக்கல்.. இவங்க அழகிற்கு நான் ரசிகன். எல்லாவற்றையும் காண்பித்துக்கொண்டு இருப்பது தான் கவர்ச்சி என்று நினைக்கிறார்கள்.

இவரின் கவர்ச்சி பேச்சிற்க்கும் முக பாவனைக்கும் உடல் மொழிக்கும் இணை தற்போது யாரும் இல்லை.

வருண் said...

***Blogger ttpian said...

nalla kooththudaa

12 March 2010 8:40 PM
Delete***

:-))))

வருண் said...

*** Tamilan said...

Hi,

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.tamildaily.com ல் சேர்த்துள்ளோம்.

இதுவரை இந்த www.tamildaily.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

உங்கள் நண்பர்களுக்கும் இத் தளத்தை அறிமுகம் செய்து வையுங்களேன்...

13 March 2010 10:58 PM***

நன்றி, தமிழன்! :)

வருண் said...

***கிரி said...

வருண் கலக்கல்.. இவங்க அழகிற்கு நான் ரசிகன். எல்லாவற்றையும் காண்பித்துக்கொண்டு இருப்பது தான் கவர்ச்சி என்று நினைக்கிறார்கள்.

இவரின் கவர்ச்சி பேச்சிற்க்கும் முக பாவனைக்கும் உடல் மொழிக்கும் இணை தற்போது யாரும் இல்லை.

13 March 2010 11:06 PM***

டி ஆர் ஆர் ரசிகர்மன்றத்தில் என்னையும் உங்களோட சேர்த்துக்கோங்க, கிரி! :)

SUREஷ் (பழனியிலிருந்து) said...

//இவங்க அழகிற்கு நான் ரசிகன். //

என்ன கொடுமை சார் இது

//எல்லாவற்றையும் காண்பித்துக்கொண்டு இருப்பது தான் கவர்ச்சி என்று நினைக்கிறார்கள். //

சில பழைய படங்களில் பாட்டி பல சாதனைகள் செய்திருக்கிறார் ஐயா..,

SUREஷ் (பழனியிலிருந்து) said...

//அன்பைக் கெடுத்து நல்லாசையைக் கொன்றவன்

அஞ்சி நடப்பானோ ஞான‌ப்பெண்ணே //

:00

வருண் said...

*** SUREஷ் (பழனியிலிருந்து) said...

//இவங்க அழகிற்கு நான் ரசிகன். //

என்ன கொடுமை சார் இது

//எல்லாவற்றையும் காண்பித்துக்கொண்டு இருப்பது தான் கவர்ச்சி என்று நினைக்கிறார்கள். //

சில பழைய படங்களில் பாட்டி பல சாதனைகள் செய்திருக்கிறார் ஐயா..,

15 March 2010 9:30 AM***

வாங்க தல!

எங்களோட நீங்களும் ரசிகர் மன்றத்தில் சேருவீங்கனு பார்த்தா...

என்ன இப்படி சொல்லீட்டீங்க! :(

maruthu said...

வருண்,

மஞ்ச துண்டு,அண்ணா,பெரியார் போன்ற திராவிட சிங்கங்களை மயக்கிய அங்கமுத்துவை கனவு கன்னிகள் லிஸ்டில சேர்க்காம விட்டுவிட்டீர்களே,நியாயமா?