அதிரடி எழுத்தாளர் சாரு நிவேதிதா எழுதும் "சரசம், சல்லாபம், சாமியார்" னு குமுதம் ரிப்போர்ட்டரில் ஒரு தொடர் வரப்போகுதாம். குமுதமும் சாருவும் இப்போ ராசியாகிட்டாங்க போலயிருக்கு!
பழசெல்லாம் மறந்துபோயிருச்சுனா நல்லாயிருக்கும். ஆனா, இன்னும் மறக்க முடியலையே. ஒரு சில மாதங்களுக்கு முன்னாலே நம்ம சாருவுக்கு இலக்கியம் தெரியாதுனு யாரோ ஒருவர் குமுதத்தில் எழுத, உடனே மனுஷனுக்கு கோபம் வந்து அந்த ஆளை மட்டுமல்லாமல் குமுதம் தரமும் சர்குலேசனும் கீழே போயிடுச்சு.. விகடன் சர்குலேசன் இப்போ அதிகமாயிடுச்சுனு குமுதத்தை கண்ணா பின்னானு திட்டினாரு சாரு. அதிலிருந்து நான் கற்றது குமுதம் ஒரு தரமற்ற பத்திரிக்கை என்பது. குமுதமே அப்படினா, குமுதம் ரிப்போர்ட்டர்?
இன்னைக்கு அதே குமுதம் க்ரூப் நடத்தும் குமுதம் ரிப்போர்ட்டரில் இவருடைய "முன்னால் தெய்வம்" போன்ற சாமியார்கள் பற்றி தொடரை எழுதச் சொல்லி இவரை அவமானப்படுத்திய அதே குமுதம் இவருக்கு ஒரு அழைப்பு விடுத்துள்ளது.
இவரும் பணம் கிடைக்குது, புகழ் கிடைக்குதுனு பழசையெல்லாம் மறந்து, இவரை கேவலப்படுத்திய குமுதத்தை மறந்து மன்னித்து குமுதம் ரிப்போர்ட்டர் சர்குலேசன் அதிகமாக்க உதவ எழுதவும் போறாரு. அது குமுதம், இது குமுதம் ரிப்போர்ட்டர்னு ஏதாவது சொல்ல வராதீங்க!
* சாருவுடைய நேற்றைய கடவுள், நேற்றைய தோழர் நித்தி இன்னைக்கு சாருவுடைய அகராதியில் துரோகி, அயோக்கியனாகிவிட்டார் என்பது உலகம் அறியும். "உயிர்காப்பான் தோழன்" னு ஒரு பழமொழி உள்ளது! அது சாருவுக்கும் நித்யாவுக்கும் ரொம்ப பொருந்தும்!
* சாருவுடைய கணிப்பில் படு மட்டமான பத்திரிக்கையான குமுதம் க்ரூப், இப்போ இவருக்கு வாய்ப்புக் கொடுத்தவுடன் உயர்ந்த தரமான பத்திரிக்கை ஆயிருச்சு போல இருக்கு! பணம், புகழ்னா பொணம்கூட வாயை திறக்குமாம். இந்த நாட்டிலே எழுத்தாளன் நெலைமை ரொம்ப மோசமா இருக்குப்பா, பாவம்! :(
What would Charu say, if you remind him of all these bad comments he made on Kumudham?
It is not personal just business!
Or It is all about money!
Or I will do anything for money!
Or There is a price for anything!
What would Charu say if you ask him about his "old friend" Nidhya?
He was not my friend! Dont you know, "Keep your friends close, but your enemies closer!"
ஆமா இப்போ இதிலே யாரு துரோகி? சாருவை ஏமாற்றிய நித்யானந்தாவா? இல்லை அவரை மன்னித்து விடாமல் பழி வாங்கும் சாருவா?
No comments:
Post a Comment