Tuesday, April 5, 2011

விஜய் மக்கள் இயக்கத்தலைவர் திமுகவுக்கு ஆதரவு!

அகில இந்திய விஜய் ரசிகர் மன்றத் தலைவர் ஜெயசீலன் ஒரு ரசிகர் பட்டாளத்துடன் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டாராம்! இப்போதைக்கு எஸ் எ சி உப்பு விக்கப் போனா மழை பெய்து! மாவு வாங்கப்போனா காத்தடிக்கிது! சட்டப்படி குப்பை மரண அடி வாங்கிய இந்த நிலையில். தன்மானம் உள்ள சுயசிந்தனை கொண்ட விஜய் ரசிகர்கள், எஸ் எ சி யிடம் "நீ என்ன சொல்றது நான் என்ன கேக்கிறது?" னு திமுக வுக்கு கொடிபிடிக்கிறார்கள்.

விஜய் மக்கள் இயக்கம்னு விஜயும் எஸ் எ சி யும் மட்டும் இதில் இருந்தால் பிரச்சினையில்லை! மக்களுக்கு தொண்டு செய்ய வந்த ரசிகர்களை தான் சொல்றதுக்கெல்லாம் தலையை ஆட்டனும்னு எஸ் எ சி நினைத்தது படுமுட்டாள்த்தனம்! விஜய் ரசிகர்களெல்ல்லாம் ஜெயா ரசிகர்களாவோ, இல்லை கலைஞரை மதிப்பவர்களாகவோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை திடீர் அரசியல்வாதி எஸ் எ சி மற்றும் விஜய் முதலில் உணரனும்.

விஜய் மக்கள் இயக்கம் நான் சொல்றபடி ஜெ க்கு ஆதரவு கொடுக்கனும்னு நெனைத்த எஸ் எ சி யை முட்டாளாக்கி உள்ளார் விஜய் ரசிகர் மன்றத் தலைவர் ஜெயசீலன்!

ஆரம்பமே மரண அடியாக இருக்கு! என்னத்தை இந்த எஸ் எ சி, ஜெ க்கு ஆதரவா கொடிபிடிச்சு ஒரே கிழியாக் கிழிச்சு பாடையிலே போகப்போறாரோ.. பாவம் விஜய், இப்படி ஒரு அப்பா அவருக்கு வந்து வாய்த்து, அவரை எப்படியெல்லாம் தலைகுனிய வைக்கப்போறாரோ! :(

4 comments:

வருண் said...

இன்னும் ஒரு குற்றச்சாட்டு!!!

அரசியல் அவ்வளவு சுலபம் அல்ல என்பதை இப்போதுதான் புரிந்து கொண்டிருப்பார்

நேற்றுதான் தனது பிரச்சாரத்தை துவங்கினார் அவர். இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியை ஆதரித்து அவர் பிரச்சாரத்திற்கு கிளம்பிய அதே நேரத்தில், ஏராளமான விஜய் ரசிகர்களுடன் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார் அகில இந்திய விஜய் ரசிகர் மன்ற தலைவர் ஜெயசீலன்.

இந்த பேரதிர்ச்சியை எஸ்.ஏ.சி யே கூட எதிர்பார்த்திருக்க மாட்டார். அவசரம் அவசரமாக ஜெயசீலனை விஜய் மக்கள் இயக்கத்தை விட்டு நீக்கியதாக அறிவித்திருக்கிறார் அவர்.

நாம் ஜெயசீலனை தொடர்பு கொண்டோம். எஸ்.ஏ.சி அதிமுக வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதோ, இந்த தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை ஆதரிக்க வைப்பதோ, மக்கள் மீதும் மன்றத்தின் மீதும் இருக்கிற பற்றினால் அல்ல. ஜெ.வை சந்தித்த அவர் இந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் தனக்கு மதுபான ஆலை வைக்க லைசென்ஸ் தரும்படி கேட்டிருப்பதாக சந்தேகப்படுகிறேன்.

இந்த தேர்தலில் நிற்க சீட் கேட்டிருந்தால் கூட கொடுத்திருப்பார்கள். ஆனால் அவர் கேட்டது இந்த லைசென்சைதானாம். தனிப்பட்ட லாபத்திற்காக எங்களை அடகு வைப்பதை எப்படி பொறுத்துக் கொள்ள முடியும் என்றார்.

எது எப்படியோ? கலகம் ஆரம்பித்துவிட்டது!

---நன்றி, தமிழ்சினிமா.காம்!

Chitra said...

இந்த தேர்தலில் நிற்க சீட் கேட்டிருந்தால் கூட கொடுத்திருப்பார்கள். ஆனால் அவர் கேட்டது இந்த லைசென்சைதானாம். தனிப்பட்ட லாபத்திற்காக எங்களை அடகு வைப்பதை எப்படி பொறுத்துக் கொள்ள முடியும் என்றார்.




........ தனிப்பட்ட ஆதயம்...... அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா.... ஹி,ஹி,ஹி,ஹி.... oops! :-(

வருண் said...

வாங்க சித்ரா!

ஜெயசீலன் சொல்ற இந்தக்குற்றச்சாட்டை நான் நம்பலைங்க! எனக்கு எஸ் எ சி பிடிக்காதுதான் ஆனால் நிச்சயம் அப்படி கேட்டிருக்க மாட்டார் (லைசெண்ஸ் எல்லாம்) னு நெனைக்கிறேன்.

இன்னைக்கு அரசியல்ல யாரையும் நம்ப முடியாது!

ராவணன் said...

அரசியலில் யாரை வேண்டுமானாலும் நம்பலாம், ஆனால் அந்த மட்டரகமான கேவலமான கருணாநிதி குடும்பத்தை மட்டும் நம்பமுடியாது.