Thursday, September 6, 2012

பிடிக்காதவர்களை பிடிப்பதுபோல் நடிப்பது தப்பில்லையா சார்??

"இந்த பாருங்க, உங்களை எனக்குப் பிடிக்கலை! நீங்க  எவ்ளோ பெரிய ஆளா இருந்துட்டுப் போங்க! நான் அடிமுட்டாளாவே இருந்துட்டுப் போறேன். என் பதிவிலே வந்து, ஆமா என் தளத்திலே வந்து,  நீங்க பெரியாளு,  நான் அயோக்கியன், அடிமுட்டாள்னு காட்டப்படாது" னு பச்சையா சொல்வதில் என்ன தப்பு?

"நில்லு! நில்லு! நில்லு! மெண்டலு! சயண்டிஸ்டு! சொல்றேன் இல்ல? நில்லுடா! சயண்டிஸ்டு வெண்ணை! ஆமா யாரு அப்படி செய்தா?"

"யாருனு காட்டிட்டா?"

"காட்டுடா வெண்ணை!"

"சும்மா கத்தப்படாது! கீழே பாரு! இரண்டு உதாரணங்களுடன்."

------------------

உதாரணம் 1)

"நிலா" னு ஒரு பதிவர் , "வருண், ஏதாவது அறிவியல் சமம்ந்தமா எழுதுங்களேன்?" என்பார்.

சரி, எதையாவது நமக்கு தெரிந்ததை எழுதுவோமேனு ஒரு கட்டுரை (எனக்கு தெரிந்ததை வச்சு).

தங்கம் பதுக்க ஒரு விபரீத வழி!


அதில் வந்த முதல் பின்னூட்டம், இளா உடையது..அதுக்கு பதில் பின்னூட்டமும் இருக்கு.
ILA(@)இளா said...
நீங்கதான் வவ்வாலோ?
வவ்வால் said...
@இளா,

//நீங்கதான் வவ்வாலோ?//

இப்படி கேட்க எப்படி மனசு வந்துச்சு ராசா? இது போல பிழையான பதிவெல்லாம் நான் போட மாட்டேன்னு தெரிய வேண்டாமா! இன்னிக்கு நைட் ரெண்டு பெக் எட்ச்ராவா போடனும் போல இருக்கு :-((

ஏதோ, தங்கம், தாமிரம்னு தலைப்பு பார்த்து வந்தேன்(எல்லாம் கம்மோடிடி டிரேட் பண்ணதால வந்த வினை)


நான் கற்ற பாடம் 1): 

இவரு ரொம்ப பெரிய ஆளு போல. இருக்கட்டும். ஆனா என்னை எதுக்கு இவரு பெரிய ஆளுனு சொல்ற  மாதிரி அவமானப்படுத்துறாரு? சரினு 
இங்கே ஒண்ணும் சொல்லாமல் விட்டுட்டேன்.

ஆனா, எனக்கு இவரை, இவரோட "ஆட்டிட்டூட்" சுத்தமா பிடிக்கலை!

----------

உதாரணம் 2)

பொங்கல் சம்மந்தமாக கோவி கண்ணன் பதிவுக்கு எதிர் பதிவு எழுதினேன்.

கோவியாரு ரம்ஷான், பக்ரித் எல்லாம் கொண்டாடுவாரா?



அங்கேயும் இவரு தொடர்ந்தார். "தான் எல்லாம் தெரிந்தவன், நீ ஒரு முட்டாள்!" என்பது போல!
வவ்வால் said...
// திராவிடர்களான தமிழ் இந்துக்கள் திருநாள்தான். தமிழர் திருநாள்னு சொல்லி பிற மதத்தவரை குற்றம் சொல்லுவது எந்த விதத்தில் நியாயம்?//

வருண்,

எதாவது வரலாறு தெரியுமா? இல்லைனா சும்மா இருக்கலாம். அமெரிக்கா போல நாட்டுக்கு போயிட்டா இப்படி தான் பேச தோனும்னு அடுத்தவங்க சொல்லிடுவாங்க அதுக்காக சொன்னேன் :-))

ஒன்னு நீங்க ஆரியனா இருக்கனும் இல்லை ஆரிய அபிமானியா இருக்கனும் அப்போ தான் திராவிட தமிழ் இந்துக்கள் னு எல்லாம் சொல்ல முடியும். அவங்க தான் எல்லாத்தையும் இந்துத்துவ டப்பாக்குள்ள போட வருவாங்க, சந்தர்ப்பவாதமா பேசி , பிரச்சினையை திருப்புவாங்க.

பொங்கலை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் எனில் முதலில் அது உழவர் திருநாள், பின்னர் தமிழ்ப்புத்தாண்டு, தமிழர் திருநாள். அப்புறம் உங்க விருப்பம் போல எது வேண்டுமானாலும். இது தமிழ் மண்ணுக்கான விழா.

//சங்க்ராந்தினு தெலுங்குக்காரன் கொண்டாடுறான். “தமிழர் திருநாள்”னா அவன் கொண்டாடுறான்? //

சுத்த பேத்தலா இருக்கே அதான் தெலுங்கு காரன் சொல்லியாச்சு அப்புறம் அவன் என்ன தமிழர் திருநாளா கொண்டாடுறான் னு ஒரு கேள்வி... ஒரு காமன் சென்ஸ் கூட இல்லையே :-))

இப்போ பேசுறது தமிழ் பேசும் மக்களுக்காக, தமிழன் என்று சொல்லிக்கொள்பவர்களூக்காக .

நாங்க எல்லாம் அரபி, இரான் சொல்லிக்கிட்டா யார் கேட்க போறா :-))இல்லை இட்டாலி, ரோம் சொல்லிக்கோங்க. :-))
வருண் said...
***வருண்,

எதாவது வரலாறு தெரியுமா? ***

நீங்க எழுதின வரலாறா. சொல்லுங்க கேட்டுக்கிறேன்.

***இப்போ பேசுறது தமிழ் பேசும் மக்களுக்காக, தமிழன் என்று சொல்லிக்கொள்பவர்களூக்காக .***

நீங்களா பிதற்றுறீங்க! எவன் உங்ககிட்ட வந்து சொன்னான்?
வருண் said...
***சுத்த பேத்தலா இருக்கே அதான் தெலுங்கு காரன் சொல்லியாச்சு அப்புறம் அவன் என்ன தமிழர் திருநாளா கொண்டாடுறான் னு ஒரு கேள்வி... ஒரு காமன் சென்ஸ் கூட இல்லையே :-))***

இஸ்லாமியரை எதுக்கெடுத்தாலும் தாக்குறவனிடம்தான் காமன் சென்ஸெல்லாம் இருக்கும். இங்கே வந்து அதையெல்லாம் தேடாதீங்க!
வருண் said...
***பொங்கலை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் எனில் முதலில் அது உழவர் திருநாள், பின்னர் தமிழ்ப்புத்தாண்டு, தமிழர் திருநாள். அப்புறம் உங்க விருப்பம் போல எது வேண்டுமானாலும். இது தமிழ் மண்ணுக்கான விழா.***

நீங்க எடுத்துக்கோங்க! உழவர் அல்லாதவர் எல்லாரும் இப்படித்தான் எடுத்துக்கனும்னு சொல்ல நீங்க யாரு சார்?
வருண் said...
***சுத்த பேத்தலா இருக்கே அதான் தெலுங்கு காரன் சொல்லியாச்சு அப்புறம் அவன் என்ன தமிழர் திருநாளா கொண்டாடுறான் னு ஒரு கேள்வி... ஒரு காமன் சென்ஸ் கூட இல்லையே :-))***

தமிழர் திருநாள்னு சொல்றதே அபத்தம். மெஜாரிட்டி (தெலுங்குக்காரன் நம்மலவிட அதிகம்) ஒத்துக்க மாட்டான்! நல்லளா சொல்லிக்கிட்டு திரிய வேண்டியஹ்துதான்

வருண் said...
***இப்போ உங்களுக்கு ஒரு நாளில் பிறந்த தினம் வருது. நீங்க அதை கொண்டாடுறிங்க. அதே நாளில் உங்க பக்கத்து வீட்டுக்காரர் வீட்டுல தாத்தா இறந்த நாளுக்கு நினைவு தினம் வருது. இப்போ அவங்களைப்பார்த்து நீங்க என் பிறந்த தினம் கொண்டாடுறிங்க சொல்வீங்களா? இல்லை அவங்க உங்களைப்பார்த்து எங்க தாத்தாவுக்கு நினைவு தினம் கொண்டாடுறிங்க சொல்வாங்களா? ***

வவ்வாலு!

ரொம்ப காமெடியா பேசுறீங்க போங்க! இந்தியாவே ஜனவரி 14 லை "உழவர் தினம்" னு கொண்டாடுறாக. நீங்க ஏதோ இது ஒரு "coincidence" என்பதுபோல பேசிக்கிட்டு இருக்கீங்க!

***உங்க பிரபல ஆசைக்கு இதை எல்லாம் கையில் எடுக்க வேண்டாம்***

இதெல்லாம் எரிச்சலைத்தான் கெளப்புது. Why do you have this filthy attitude? என் ஆசை என்னோடு. சும்மா தேவைல்லாமல் நீங்க பெரிய இவரு மாதிரி பேசிக்கிட்டுத் திரியக்கூடாது

நானும் பார்க்கிட்டே இருக்கேன். பதிவுலகில் வவ்வாலாக பறக்க ஆரம்பிச்சதுல இருந்து என்னவோ நீங்கதான் பெரிய புடுங்கி, எல்லாத்துக்கும் அத்தாரிட்டி மாதிரி இஷ்டத்துக்கு தற்பெருமை விமர்ச்னம் செய்தால் அப்புறம் நல்லாயில்லை சொல்லிட்டேன்!

If you want to show you are superior in every response you are posting, Get the hell out of here, vavvaal!

நான் கற்றபாடம் 2):

இவரோட நமக்கு நிச்சயம் இந்த ஜென்மத்துல  ஒத்துப் போகாதுனு தெளிவாத் தெரிஞ்சு போச்சு!
 ------------------

முடிவுரை:

* முதல்க் கோணல் முற்றிலும் கோணல்னு ஏதோ சொல்லுவாங்க. ஆரம்பமே (இவர் மறுபடியும் "ஆக்டிவ்" ஆன பிறகு)  இவரோட ஒத்துப்போகவில்லை!

* நான் கத்துக்கிட்டது.. இவருக்கும் நமக்கும் சந்தேகமே இல்லாமல் ஒத்துப் போகாது போல. ஆனா இவரு எவ்ளோ பெரிய ஆளாயிருக்கட்டும்,  எனக்கு நாந்தான் பெரியவன்!  அதுவும் என் தளத்தில் வந்து, "இவரு பெரிய ஆளு! வருண் ஒரு அறிவு கெட்டவன்" னு சொல்றதை எல்லாம் அனுமதிக்க முடியாது.

பச்சையா சொல்றேன், இவரு கடவுளாவே இருக்கட்டும், எனக்கு இவரைப் பிடிக்கலை. என் தளத்தில் என்னை அவமானப் படுத்துவதுபோல் பின்னூட்டம் வந்தால் இந்தாளை விடமாட்டேன்!

ஆமா, பிடிக்காதவர்களை, பிடிப்பது போல நடிப்பது தப்புத்தானே?

எனக்கு நடிக்கப் பிடிக்காதுங்க! :) ஆமா, பதிவர் வவ்வாலுக்கும் எனக்கும் இந்த ஜென்மத்தில் ஒத்துப் போகாது!

இங்கே யாரும் பஞ்சாயத்துக்கு வர வேணாம்! புரிஞ்சுக்கோங்க! 

என்னது?

வருண் தான் அயோக்கியனா?

ஆமா, நான் அதை  இல்லைனு எப்போ சொன்னேன்? :)))


நன்றி, வணக்கம்! :))

பின்குறிப்பு: இந்தப் பதிவுக்கு, மாடெரேஷன் ரொம்ப கடுமையாகவும் கொடுமையாகவும் இருக்கும்! :)

21 comments:

suvanappiriyan said...

ஹா..ஹா..உங்களின் சில கருத்துகளில் முரண்பட்டாலும் உங்களின் எழுத்து நடை ரசிக்கத்தக்க வகையில் உள்ளது. அதற்காகவே உங்கள் தளத்துக்கு அவ்வப்போது வருகிறேன்.

வருண் said...

சுவனப் பிரியன்:

நான் பொய்யெல்லாம் எதுவும் சொல்லப் போவதில்லை. அது ஒண்ணுதான் ஏதாவது நல்ல குவாலிட்டினு பார்த்தால் என்னிடம் உள்ள ஒண்ணே ஒண்ணு. மற்றபடி நான் "அயோக்கியன்" தான். ஆனால், ஒருவரை ஏன் நாம் வெறுக்கிறோம் னு விளக்கம் சொல்லவில்லைனா, அப்புறம் நுனிப்புல் மேயிறவா எல்லாம், உண்மை தெரியாமல் போயிடுவா! :)

உண்மையை சொல்றதுக்கு என்னைக்குமே நான் பயந்தது இல்லை! :)

பழமைபேசி said...

//ரிலாக்ஸ் ப்ளீஸ்//

இதை கொங்குக்கிராமத்தான் எப்படி சொல்லுவான்?

முருகனோட தங்கச்சி மாரிகோட ஓடிப்போய்ட்டா. முருகனுக்கு நெம்பக் கவலை. கவலைங்றதவிட அவ மேலயும் சொலுக்குமல் மாரிமேலயும் நெம்பக் கோவம். அந்தப் படபடப்புல அவன் ஊர்க்கெணத்து கல்கட்டுல ஒக்காந்துட்டு இருக்குறான், இதான் காட்சி!!

அந்த நேரத்துல டீக்கடை சுப்பு வந்து முருகங்கிட்டச் சொல்றான்.

“டே முருகா! உடுறா... ஆறவிட்டுப் பார்த்துக்கலாம் மத்ததை. இப்பத்திக்குக் கொஞ்சம் ஆறவிடு!”

//ரிலாக்ஸ் ப்ளீஸ்//

மனதார ஆறிடு!!

சொல்லுக்கு சொல் மொழியாக்கம் செய்ய முடியாதுன்னு சொன்னா, இராஜ நடராஜன் மறுக்க மாட்டாரு. ஆனா, இவன் என்னைய இழுத்து வுடுறான்னுக் கட்டாயம் சொல்வாரு. ஒருத்தருக்கொருத்தர் இழுத்துடுறதுலதான இருக்கு வாழ்க்கையே? என்ன நாஞ்சொல்றது??

வருண் said...

***ஒருத்தருக்கொருத்தர் இழுத்துடுறதுலதான இருக்கு வாழ்க்கையே? என்ன நாஞ்சொல்றது?? ***

அஹா, என்ன ஒரு தத்துவம், மணியண்ணா!!

நான் உங்க "ஒரிஜினல்" தத்துவம்னு எடுத்துக்கிறேன்!! :))

இனிமேல் எங்கேயேவது இதை நான் சொன்னால் உங்களுக்குத்தான் க்ரிடிட் கொடுக்கப்படும்! :)))

பழமைபேசி said...

மனக்குழப்பத்துல இருக்குற முருகனை, அதுல இருந்து விடுபட வெக்கிறதுக்காக டீக்கடை சுப்புரமணியஞ் செஞ்சதுகூட “இழுத்துடுற” வேலைதானுங்களே? இக்கட்டுல இருக்குறவனை அதுலயிருந்து இழுத்துடுறது!! இஃகிஃகி!!

வருண் said...

***பழமைபேசி said...

மனக்குழப்பத்துல இருக்குற முருகனை, அதுல இருந்து விடுபட வெக்கிறதுக்காக டீக்கடை சுப்புரமணியஞ் செஞ்சதுகூட “இழுத்துடுற” வேலைதானுங்களே? இக்கட்டுல இருக்குறவனை அதுலயிருந்து இழுத்துடுறது!! இஃகிஃகி!!***

முருகனை சுப்பிரமணி காப்பாத்திட்டான். ஆனா பாவம், சுப்பிரமணி இப்போ மாட்டிக்கிட்டான்!! :( காப்பத்தப்பட்ட முருகனாலை, சுப்பிரமணிக்கு ஒதவ முடியலை!! :(

எல்லாம் பகவாஞ்செயலுதாங்க, மணியண்ணா! என்ன நாஞ்சொல்றது?

Anonymous said...

//இஃகிஃகி!!
இதுக்கு ':)' அப்படீன்னு அர்த்தமா?

வருண் said...

***edhiri pudhiri said...

//இஃகிஃகி!!
இதுக்கு ':)' அப்படீன்னு அர்த்தமா?

6 September 2012 10:26 AM***

அது புன்னகை எல்லாம் இல்லைங்க. வில்லங்கமா, நக்கலா, ஒரு தினுசா சிரிக்கிறதுனு நெனைக்கிறேன். :)

Anonymous said...

//அது புன்னகை எல்லாம் இல்லைங்க. வில்லங்கமா, நக்கலா, ஒரு தினுசா சிரிக்கிறதுனு நெனைக்கிறேன். :)

அப்போ பி.எஸ்.வீரப்பா மாதிரி சிரிப்புன்னு சொல்லுங்க இஃகிஃகி!!

Anonymous said...

நீங்களும் பழமை பேசியும் கோவிச்சுக்க மாட்டீங்கன்னா இந்த பாட்டுல நாற்பத்து ஒன்பதாவது விநாடி பாருங்க. இதே இஃகிஃகி!! சிரிப்பு :)
http://www.youtube.com/watch?v=wL-n6CXw6_c

nila said...
This comment has been removed by the author.
nila said...

:) கடலைக் கார்னர் பகுதில அப்பப்போ வந்துகிட்டு இருந்த சைன்டிபிக் இன்பார்மேசன இன்னும் கொஞ்சம் போட சொன்னதுக்கு இந்த எப்பெக்டா??? அது நடந்து இரண்டு மூணு வருஷம் இருக்குமே... பின்னாடி எழுதி இருக்குறத படிச்சதும் விஷயம் புரியுது.. (அந்த நிலா நான்தானா?? இல்ல வேற யாரும் சொன்னதுக்கு நான் வாலண்டியரா ஆஜராகிடேனா?? )

வருண் said...

சம்மன் இல்லாமலா?? உங்களுக்கு நான் மென்மடல்கூட அனுப்பவில்லை! உங்க பேருக்கும் தொடுப்பும் கொடுக்கலை. சரியாக வந்து "அக்னாலட்ஜ்" பண்ணுறீங்க!!! இல்லைனா நான் ஏதோ "கற்பனை கேரக்டர்" பத்தி பேசுறேன்னு நெனைத்துக்கொள்ளும் இந்த முட்டாள்கள் நிறைந்த உலகம்!

3 வருடமா? எல்லாமே எனக்கு நேத்து மாரித்தான் இருக்கு!!!

உங்க பெயரை இங்கே சொன்னதுக்கு மன்னிச்சுக்கோங்க!

Hope your studies are going well, nila! Very nice to see you! :))))

Take it easy, nila!

nila said...

சே சே!! இதுல மன்னிப்பு கேட்குறதுக்கு என்ன இருக்கு...
இல்ல ஏதோ சீரியசான பதிவுல என் பேர் வந்திருக்குன்னு கொஞ்சம் நான் பயந்துட்டேன்... பதிவுலகத்துல கிட்டத்தட்ட இறந்து போன ஜீவனச்சே நான்னு யோசிச்சுட்டு இருந்தேன்... மத்தபடி முழு பதிவையும் படிச்சதுக்கப்புறம் ரிலாக்ஸ் ப்ளீஸ்னு ஆகிட்டேன் :)
my studies are going fine... (well with ups and downs )
thanks :)

வருண் said...

***மத்தபடி முழு பதிவையும் படிச்சதுக்கப்புறம் ரிலாக்ஸ் ப்ளீஸ்னு ஆகிட்டேன் :)***

:-)

**my studies are going fine... (well with ups and downs )
thanks :) ***

That's normal life! :-)

Take care!

அஜீம்பாஷா said...

நல்ல எழுதியிருகிங்க வருண், நீங்க எழுதியிருக்கிற ஸ்டைல பார்த்தா நம்ம கிளாஸ் மேட்ஸ் திருச்சி ரெட்டைமால் தெரு திரு.ராமன்,வெங்கட்ராமன்,மணிகண்டன், மலைக்கோட்டை வெங்கடேஷ் (எல்லாரும் ஐயர்ஸ்) இவங்ககிட்ட பேசுற மாதிரி இருக்குது,

வருண் said...

azeem basha said...

***நல்ல எழுதியிருகிங்க வருண், நீங்க எழுதியிருக்கிற ஸ்டைல பார்த்தா நம்ம கிளாஸ் மேட்ஸ் திருச்சி ரெட்டைமால் தெரு திரு.ராமன்,வெங்கட்ராமன்,மணிகண்டன், மலைக்கோட்டை வெங்கடேஷ் (எல்லாரும் ஐயர்ஸ்) இவங்ககிட்ட பேசுற மாதிரி இருக்குது,

7 September 2012 7:55 AM***

வாங்க, அஸீம் பாஷா!

உங்க தோழர்கள் எல்லாருமே ஐயரா? எனக்கு ஐயங்கார் தோழி ஒருத்தி இருந்தா. அவகிட்ட பேசி பேசி, அவ ஆத்து பாஷை வந்திடுத்து போல!! :-)))

இவளவுக்கும் அவ ஆங்கிலத்துலதான் பேசுவா! :)))

வருண் said...

***பழமைபேசி said...

தளபதிக்கு எதிரிகள் வேண்டாமாம். ஆனால் புதிரிகள் வேணுமாம். அப்படின்னு குகு சொல்றாருன்னும் சொல்லலாம்; சொல்லாமலும் விட்டுடலாம். ***

நாசமாப் போச்சு! நெஜம்மாலுமே இவருதான் தளபதியா!!!எனக்கு இது புரிய இத்தனை நாளாச்சே!! :(((

ஆமா, ஏன் இந்தக் கோலமாம்?? :-))

வருண் said...

***edhiri pudhiri said...

//அது புன்னகை எல்லாம் இல்லைங்க. வில்லங்கமா, நக்கலா, ஒரு தினுசா சிரிக்கிறதுனு நெனைக்கிறேன். :)

அப்போ பி.எஸ்.வீரப்பா மாதிரி சிரிப்புன்னு சொல்லுங்க இஃகிஃகி!!
6 September 2012 6:41 PM
edhiri pudhiri said...

நீங்களும் பழமை பேசியும் கோவிச்சுக்க மாட்டீங்கன்னா இந்த பாட்டுல நாற்பத்து ஒன்பதாவது விநாடி பாருங்க. இதே இஃகிஃகி!! சிரிப்பு :)
http://www.youtube.com/watch?v=wL-n6CXw6_c***


ஏனுங்க, நீங்க இப்படி "எதிரும் புதிருமா" வந்து நின்னா நான் எப்படி அடையாளம் கண்டுக்கிறது?

பழமைபேசியும் "பாடிப் பாடி" கவிதை வடிவில் சொன்னதாலே, இப்போத்தான் அவரு பாடியபாட்டு புரிஞ்சு, இது நம்ம தளபதினு புரிஞ்சது! :))

நன்னாயிருக்கேளா? ஆத்துல எல்லாரும் ஷேமமா? :)))

Anonymous said...

ஆஹா நீங்க நினைக்கிற தளபதி நான் இல்லேங்க. நான் சும்மா ஒரு வாசகன். அவ்ளோதான்.

வருண் said...

*** edhiri pudhiri said...

ஆஹா நீங்க நினைக்கிற தளபதி நான் இல்லேங்க. நான் சும்மா ஒரு வாசகன். அவ்ளோதான்.

9 September 2012 6:15 PM***

சரிங்க, நீங்க சும்மா ஒரு வாசகன் தான்! :-)