Wednesday, June 19, 2013

சித்திரப்பாவையை "வன்புணர்வு" செய்யும் ஜெயமோகன்!

அகிலன் எழுதிய சித்திரப்பாவை கதைக்கு பாரதீய ஞானபீட பரிசு கொடுக்கப் பட்டது உலகறியும். அகிலன், அந்தக்காலத்து எழுத்தாளர்களில் விரசமில்லாமல், நாகரிகமான தமிழ் நாவல்களைத் தந்தவர். அவர் நாவல்களில் தேசப் பற்று, காதல், நீதி போன்றவை தலைதூக்கி நிற்கும். சித்திரப்பாவையில், கதாநாயகி, ஆனந்தி, தன் கணவன், மாணிக்கம், கேவலமான்வன், அயோக்கியன் என்பதால் அவனைத் தூக்கி எறிந்துவிட்டு தன் காதலனுடன் போய் சேருவாள்! பாரதியின் புதுமைப் பெண்ணாக அகிலன் அவளை காட்டியதால்தான் அந்த நாவலுக்கு பாரதீய ஞானபீடப் பரிசு கிடைத்தது என்பது என் தாழ்மையான  கருத்து.

எவனோ ஒரு வேலை வெட்டியில்லாதவன், நம்ம மேதாவி  ஜெயமோகனிடம், " நீதான் உலகமகா மேதையாச்சே! சித்திரப் பாவை, அகிலன் பற்றி விமர்சி" னு கேட்டுப்புட்டான்.

உடனே, நம்மாளு.. இலக்கியம்னா என்னனு ஆரம்பிச்சு அந்தக்காலத்தில் சித்திரப்பாவை படிச்சு, ரசிச்ச பெண்கள் எல்லாம் எட்டாங்கிளாஸ் பாஸாகாத அறிவில்லாதவர்கள்னு ஒளறு ஒளறூனு உளறித்தள்ளுறான் மனுஷன்!

இந்தக்கதாபாத்திரங்களைக் கொண்டு அகிலன் உருவாக்கும் கதையில் அவரது தரிசனம் என ஏதேனும் இருக்கிறதா? அண்ணாமலை ஓவியன். பெரும் கலைஞனாக ஆக விரும்புகிறான்.ஆனந்திக்கு அவன் மேல் காதல்.ஆனால் அவளை மாணிக்கம் விரும்புகிறான். ஒருநாள் மாணிக்கம் ஆனந்தியை வலுக்கட்டாயமாக முத்தமிடுகிறான். ‘கறைப்பட்டு’போன தன் உடலைக் காதலனுக்கு அளிக்கவிரும்பாத ஆனந்தி முத்தமிட்ட மாணிக்கத்தையே திருமணம் செய்துகொள்கிறாள்.

அண்ணாமலை தன் முறைப்பெண் சுந்தரியை மணக்கிறான். சுந்தரிக்கு ஓவிய ஈடுபாடு இல்லை.சுந்தரி தற்கொலை செய்துகொள்கிறாள். மாணிக்கம் ஆனந்தியை கொடுமைசெய்கிறான். ஒரு சண்டையில் ஆனந்தியின் தாலி மாணிக்கத்தின் கையோடு வந்துவிடுகிறது. ஆனந்தி அண்ணாமலையைத்தேடி வருகிறாள். அங்கே அண்ணாமலை கையொடிய ஆனந்தியின் ஓவியத்தை வரைந்துகொண்டிருக்கிறான். அவள் வந்து அவனுடன் இணைகிறாள்.

இதில் என்ன தரிசனம் இருக்கிறது? இது உருவாக்கும் உலகம் எந்த தத்துவார்த்த உண்மையை நமக்கு காட்டுகிறது? இதன் நோக்கம் வாழ்க்கையைச் சொல்வது அல்ல. நம்முடைய யதார்த்தபோதத்துடன் உரையாடுவது அல்ல. இது ஒரு கற்பனையுலைச் சொல்கிறது. நம் பகற்கனவுகளுடன் உரையாடுகிறது.

இந்த ‘டெம்ப்ளேட்’டை நூற்றுக்கணக்கான கதைகளில் நீங்கள் கண்டிருக்கலாம். ஸ்ரீதர் சினிமாக்கள் எல்லாமே இந்தவகைதான். இன்றும்கூட ரமணிசந்திரன் இதே டெம்ப்ளேட் கதைகளை எழுதிக்கொண்டே இருக்கிறார். இந்த டெம்ப்ளேட் சரியாக அமைந்த புகழ்பெற்ற நாவல் என்றால் சார்ல்ஸ் டிக்கன்ஸின் டேல் ஆஃப் டூ சிட்டீஸ்தான். ஆனால் அது இலக்கிய ஆக்கம்.காரணம் அதன் பின்னணி.

இன்னொரு உதாரணம் தகழி சிவசங்கரப்பிள்ளையின் செம்மீன். பாடகனாகிய காதலன். அழகிய காதலி.முக்கோணக்காதல். ஆனால் அந்தக்கதைக்குள் தகழி கடல் என்ற மாபெரும் இருப்பை கொண்டுவந்து நிறுத்துகிறார். சமூகமாக, விதியாக, காலமாக ,கடவுளாக மாறிக்கொண்டே இருக்கும் கடல் செம்மீனை இலக்கியமாக ஆக்கிவிடுகிறது.
அதாவது ஒரு டெம்ப்ளேட் கதையில்கூட ஆசிரியனின் தரிசனம் இலக்கியத்தை உருவாக்கிவிடமுடியும். அங்கே புறவய யதார்த்தம் இல்லை. ஆனால் ஆசிரியன் உருவாக்கும் தரிசன யதார்த்தம் உள்ளது. சித்திரப்பாவையில் இவை இரண்டுமே இல்லை.
ஆகவே அதில் புதுமையை எதிர்பார்ப்பதில் பொருளே இல்லை. சொல்லிச்சொல்லிப் பழகிய கதை. சொல்லித்தேய்ந்த களம். வார்ப்புரு கதாபாத்திரங்கள். வழக்கமான கதைத்திருப்பங்கள். வழக்கமான வசனங்கள். வழக்கமான முடிவு.
சித்திரப்பாவையின் உரைநடையைப் பரிதாபம் என்றே சொல்லவேண்டும்.

அக்காலத்தில் வார இதழ்களின் வாசகர்கள் அதிகமும் பெண்கள். அவர்கள் அன்றெல்லாம் சராசரியாக எட்டாம் வகுப்பைத் தாண்டாதவர்கள். அவர்களுக்காக எழுதப்பட்ட கதைகளில் மொழி என்பது ஒருவகை ‘சின்னப்புள்ளை நடை’ தான்.

வணிக எழுத்தில் நடை என்ற அம்சம் குடியேறியதே எழுபதுகளின் இறுதியில் சுஜாதா நுழைந்தபோதுதான்.
அகிலனுக்கு மொழிநடையில் முன்னுதாரணமாக இருந்தவர் வி.ஸ.காண்டேகர். அவரது நாவல்கள் கா.ஸ்ரீ.ஸ்ரீ. மொழியாக்கத்தில் தமிழில் வந்து பெரும் வரவேற்பைப்பெற்ற காலம் அது. காண்டேகர் முக்கியமான இலக்கியவாதி. அவர் தன் படைப்புகளினூடாக ஒரு தனித்த வாழ்க்கைப்பார்வையைத் தொகுத்துவைக்க முயன்றவர். அவரது படைப்புகளில் அவர் சிந்தனைகளை முன்வைப்பார்; கதைமாந்தர் அவற்றைப்பேசுவார்கள். அவை அன்றைய வாசகர்களுக்குப் பிடித்திருந்தன

காண்டேகரை முன்னுதாரணமாகக் கொண்டு எழுதியவர் அகிலன். ஆனால் அவரது சிந்தனைகள் அசலானவை அல்ல. சூழலில் இருந்து பொறுக்கிக்கொண்ட எளிய கருத்துக்கள்மட்டும்தான் அவை. ஆகவே அவற்றுக்கு மொழிநடைசார்ந்து எந்தத் தனித்தன்மையும் அமையவில்லை. அகிலன்நடை என்ற ஒன்று உருவாகவேயில்லை

கடைசியாக, அகிலன் வாசகர்களின் கற்பனையைத் தூண்டும் நாவலாசிரியரே அல்ல. நல்ல நாவல் பறவைபோல நமக்குமேல் பறக்கும். நமக்கு முன் அதன் நிழல் பாய்ந்தோடும். நாம் நம் முழுமூச்சாலும் அதைப்பின்தொடர்வோம். சுமாரான நாவல்கள் குதிரைபோல நமக்கு முன்னால் ஓடும். எளியகதைகள் நம்முடன் அவையும் ஓடும். அகிலன் நாம் வெகுதூரம் ஓடி திரும்பிப்பார்க்கையில் நமக்குப்பின்னால் மூச்சிரைக்க வந்துகொண்டிருக்கிறார்.

எந்தவகையிலும் அகிலன் எழுதியவை இலக்கிய ஆக்கங்கள் அல்ல. அவை அக்கால வணிகப்படைப்புகள் மட்டுமே. அப்படியென்றால் எப்படி ஞானபீடம் கிடைத்தது? அதற்கான பதில் தமிழில் விருதுகள் படைப்புக்களை அடையாளம்காட்டக்கூடியவை அல்ல என்பதே.
அகிலன் காங்கிரஸ்காரர் என்பதே அவர் விருது பெற முக்கியமான காரணம்.அத்துடன் அகிலன் கல்வித்துறையில் ஆழமான தொடர்புகள் கொண்டிருந்தார்.அவரது படைப்புகளில் ஆய்வுசெய்து சாதாரணமான ஒரு முனைவர்பட்ட ஏடு வெளியிட்ட எழில்முதல்வன் என்பவர் அதற்காக சாகித்ய அக்காதமி விருதுபெற்றிருக்கிறார்.

சரி, அந்நாவலில் சாதகமான அம்சம் என ஏதுமில்லையா? ஒட்டுமொத்தமாகவே அகிலனின் நாவல்களுக்கு ஒரு சிறப்பம்சம் உண்டு. அவை இந்தியா சுதந்திரம் பெற்ற காலகட்டத்தின் மனநிலைகளை எளிய கருத்துக்களாகப் பிரதிபலிக்கக்கூடியவை. அன்றைய கனவை, இலட்சியவாதத்தின் கொப்பளிப்பை அவை ஓரளவு காட்டுகின்றன.

அன்றைய வணிக எழுத்தும் வாசிப்பும் கற்பனாவாதம் சார்ந்தது. காதல் அதற்கு இன்றியமையாதது. காதலுக்கு இலட்சியவாதம் சரியான கூட்டு என்பதனாலேயே அவர் அவற்றைக் கலந்தார். ஆனாலும் நாம் மறந்துவிட்ட இலட்சியவாத உலகை அவை காட்டுகின்றன என்பது அவற்றை இன்று கவனிக்கத்தக்கவையாக ஆக்குகிறது
ஜெ


அதாவது மேதாவி என்ன சொல்றார்னா..


* அகிலன், காங்கிரஸ்காரன் என்பதால் இந்த பாரதீய ஞானபீட விருது அவருக்கு கிடைத்தது.

* அப்புறம் அந்தக்காலத்து வாசகர்களெல்லாம் படிப்பறிவில்லாத பெண்கள்!  அதனால் இந்த நாவலை ரசித்தார்கள்! (எங்க பாட்டி எல்லாம் அந்தக் காலத்துலயே எஸ் எஸ் எல் ஸி படிச்சா! அவரையும் அவமானப்படுத்துறான் இந்தாளு!! எனக்கு ரத்தம் கொதிக்கிது!)

நான் சீரியஸா சொல்றேன்.. 

இந்தாள எங்கேயாவது ஏர்வாடிக்கு கூட்டிப்போயி தர்ஹால சங்கிலியை வச்சு கட்டிப்போடுங்கப்பா! தமிழில் வந்த ஒரு நல்ல படைப்பையும், ஒரு தரமான எழுத்தாளரையும், நம்ம தமிழ்ப் பெண்களையும்  இந்த மாரி எவனும் இதுவரை கேவலப்படுத்தியது இல்லை!

13 comments:

வருண் said...

***இந்த ‘டெம்ப்ளேட்’டை நூற்றுக்கணக்கான கதைகளில் நீங்கள் கண்டிருக்கலாம். ***

ஆமா, தமிழ் இலக்கியம் ஒன்றை தரமற்ரதுனு விமர்சிக்கிற நீர் ஏன் "டெம்ப்ளேட்" மண்ணாங்கட்டினு ஆங்கில சொற்களை எல்லாம் அசிங்க பயன்படுத்திக்கிட்டு??

ஓ!! உங்க ரசிகைகள் எல்லாம் பி எச் டி வாங்கியவா?? அப்படித்தானே?

வெளக்காம்மாத்து கட்டைக்கு பட்டுக்குஞ்சமாம்! அதுமாதிரி இருக்கு உம்முடைய ஆங்கில சொல்லாடல்!

sunaa said...

வந்துட்டியா ?

நமக்கு எதுக்கு ராசா இலக்கியமெல்லாம்? ஏதாவது வெட்டி சண்டை நடக்குற ப்ளாகுக்கு போனோமா ? எச்ச துப்பி எவனையாவது வம்புக்கு இழுத்தோமா? என்சாய் பண்ணினோமான்னு இல்லாம......

ஜெயமோகனெல்லாம் உன் ரேஞ்சுக்கு ரொம்ப அதிகம்...நீ இந்த ரமணி சந்திரன் , டிவி சீரியல் இப்டி ஏதாவது விமரிசனம் பண்ணென் ...இத விட ஜாஸ்தி ஹிட்டு கெடைக்கும்....

வருண் said...

நான் வந்தேனா? இல்லை நீ வந்தியா?

வந்தோமா ஒரு ஒரு "டெம்புளேட்டு" காமெண்ட் போட்டோமானு எடத்தைக் காலி பண்ணணும்! புரியுதா? :))))

கரந்தை ஜெயக்குமார் said...

அகிலன் போற்றப்பட வேண்டியவர்

வருண் said...

****கரந்தை ஜெயக்குமார் said...

அகிலன் போற்றப்பட வேண்டியவர்****

சித்திரப்பாவை ஒரு காலத்தால் அழியாத காவியம்ங்க! கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?

என்னவோ இலக்கியம்னா என்னனு சொல்ல இந்தாளுதான் அத்தாரிட்டி மாதிரிப் பேசுறான்.

இன்னைக்கு சாகித்ய அகாடமி வாங்குறவன் எல்லாம் கம்யூனிட்டுக்காரன் என்பதால் வாங்குறான்னு கொஞ்ச நாளைக்கு முன்னால ஒரே ஒளறல்..

இப்போ, பாரதிய ஞான பீடப் பரிசு கெடச்சது, அகிலன் காங்கிரஸ்காரன் என்பதால்ல்னு ஒளறல்..

என்ன வேணும் இந்தாளுக்குனு தெரியலை. தலைக்கணமும் திமிரும் ஏறிக்கிட்டே போகுது இந்தாளுக்கு!

குலசேகரன் said...

சித்திரப்பாவை வெளிவந்த வாரங்களிலும் ஞானபீட விருது பெற்ற ஆண்டிலும் ஜெயமோஹன் ஒரு வெளித்தெரியா எழுத்தாளர். எனவே அவரின் விமர்சனத்தை விட்டுவிட்டு அக்காலத்தில் அந்நாவல் தேர்ந்தெடுக்கப்பட்டதைப்பற்றி பொதுவாக வைக்கப்பட்ட விமர்சனம் unanimous opinion (என்னவென்றால் –
//அகிலன் எழுதிய நாவல்களில் சித்திரப்பாவை ஒரு ஆவ்ரேஜ் நாவல். இதற்காகப் போய் ஏன் கொடுத்தார்கள்? அவர் மற்ற நாவலகளின் சிறந்த மற்றொன்றைத் தேர்ந்தெடுத்திருக்கலாமே?//

இதுதான் அன்றைய விமரசனம். அப்போது ஜெயமோஹன் சாருவெல்லாம் கிடையா. இப்படி தகுதியற்ற ஒன்று தேர்ந்தெடுத்துக் கொடுக்கப்பட்டால் அங்கு அரசியல் நெருக்கடி இருந்திருக்கவேண்டுமென்று அச்சப்படுவதில் நியாயமுண்டு.
சாஹித்ய அகாடமி; பத்மா, கலைமாமணி விருதுகள் போன்ற அரசு விருதுகள்; அல்லது அரசியல்வாதிகளின் தயவு வேண்டியோர் வழங்கும் விருதுகள் – இவையெல்லாம் நம்பிக்கை தரும் விருதுகள் கிடையா. இவ்வருது பெற்றது எனவே சிறந்த நாவல் என நினைகக் கூடாது. நீங்களாகவே படித்து நீங்களாகவே முடிவு செய்யவேண்டும்.

However, all these awards are not always politically motivated or interfered. Because, there are many novels or books, personalities which/who have received these awards for their sheer merits. Nowadays no one cares for such awards. This year V.N.Janaki rejected the Padma award. MGR winning the best actor award and also winning Bharat Ratna award posthumously – are pure politics.

In Gnanapith awards, when someone wants that, politics will come and play a role in pushing him upwards and he gets that award. That occasion appeared to be a possibility in marking out Chitthirappaavai, an average novel from the repertoire of Akilan, for Gnanapith award. Whether Akilan did that, or some people lobbied for him, is all in the realms of conjectures. Forget Jayamohan - he is a cantankerous fellow. For our own part, we can say that the novel does not deserve Gnanapith award and, that’s all.

நண்பா said...

வருண்,
அந்த விமர்சனம் படிக்கும்போது எனக்கும் கிட்டதட்ட இதே உணர்வு தான். அதுவும் அந்த கால பெண்கள் எல்லாம் எட்டாம் வகுப்பு என்பது எல்லாம் சரியான வாதம் இல்லை. குறிப்பாக
***இந்த நான்கு பொது அளவுகோலிலில் சித்திரப்பாவை ஒரு இலக்கியமல்ல என்பதைக் காணலாம். அதன் கதை அகிலனின் வாழ்க்கையனுபவத்தில் இருந்தோ அவரது வாழ்க்கைத்தரிசனத்தில் இருந்தோ உருவானது அல்ல.
அதற்கு அன்றாட உண்மையுடன் தொடர்பே இல்லை. அந்தக் கதாநயகன் கதாநாயகி இருவருக்கும் தமிழ்வாழ்க்கையில் இருந்து வந்தவர்கள் அல்ல. அவர்களைப்போன்றவர்களை நாம் எங்கும் சந்தித்திருக்க மாட்டோம். ***..

நம் தமிழ் வாழ்க்கையில் அந்த நாயகன் நாயகி இருந்ததே இல்லையா? அவருடைய எல்லா கதைகளில் வரும் கதாபாத்திரமும் "தமிழ்" வாழ்க்கையில் இருக்கிறதா??

வருண் said...

****குலசேகரன் said...

சித்திரப்பாவை வெளிவந்த வாரங்களிலும் ஞானபீட விருது பெற்ற ஆண்டிலும் ஜெயமோஹன் ஒரு வெளித்தெரியா எழுத்தாளர். எனவே அவரின் விமர்சனத்தை விட்டுவிட்டு அக்காலத்தில் அந்நாவல் தேர்ந்தெடுக்கப்பட்டதைப்பற்றி பொதுவாக வைக்கப்பட்ட விமர்சனம் unanimous opinion (என்னவென்றால் –
//அகிலன் எழுதிய நாவல்களில் சித்திரப்பாவை ஒரு ஆவ்ரேஜ் நாவல். இதற்காகப் போய் ஏன் கொடுத்தார்கள்? அவர் மற்ற நாவலகளின் சிறந்த மற்றொன்றைத் தேர்ந்தெடுத்திருக்கலாமே?//

இதுதான் அன்றைய விமரசனம். அப்போது ஜெயமோஹன் சாருவெல்லாம் கிடையா. இப்படி தகுதியற்ற ஒன்று தேர்ந்தெடுத்துக் கொடுக்கப்பட்டால் அங்கு அரசியல் நெருக்கடி இருந்திருக்கவேண்டுமென்று அச்சப்படுவதில் நியாயமுண்டு.
சாஹித்ய அகாடமி; பத்மா, கலைமாமணி விருதுகள் போன்ற அரசு விருதுகள்; அல்லது அரசியல்வாதிகளின் தயவு வேண்டியோர் வழங்கும் விருதுகள் – இவையெல்லாம் நம்பிக்கை தரும் விருதுகள் கிடையா. இவ்வருது பெற்றது எனவே சிறந்த நாவல் என நினைகக் கூடாது. நீங்களாகவே படித்து நீங்களாகவே முடிவு செய்யவேண்டும்.

However, all these awards are not always politically motivated or interfered. Because, there are many novels or books, personalities which/who have received these awards for their sheer merits. Nowadays no one cares for such awards. This year V.N.Janaki rejected the Padma award. MGR winning the best actor award and also winning Bharat Ratna award posthumously – are pure politics.

In Gnanapith awards, when someone wants that, politics will come and play a role in pushing him upwards and he gets that award. That occasion appeared to be a possibility in marking out Chitthirappaavai, an average novel from the repertoire of Akilan, for Gnanapith award. Whether Akilan did that, or some people lobbied for him, is all in the realms of conjectures. Forget Jayamohan - he is a cantankerous fellow. For our own part, we can say that the novel does not deserve Gnanapith award and, that’s all.***

குலசேகரன்: எந்த ஒரு பரிசையும், பெற்றவருக்கு தகுதி இல்லை! பாலிட்டிக்ஸ்தான் எல்லாம்னு சொல்லலாம். அதற்கேற்றார்போல் ஜோடிச்சு பத்தி பத்தியா எழுதலாம்.

நீங்க சித்திரப்பாவை படிச்சு இருக்கீங்களா?

நான் ரசித்து ரசித்துப் படித்த ஒரு கதை. அண்ணாமலை பாத்திரத்தையும் என்னால் விமர்சிக்க முடியும்.

அதில் நடப்ப்து ஏன் வாழ்க்கையில் நடக்காது. அதில் எதார்த்தமில்லை என்பது வடிகட்டின கூமுட்டைத்தனம்.

இலக்கியத்தை எப்படி இருக்கணும்னு விமர்சிக்க இந்தாளு யாரு?

Who is HE to tell us what is literature and what not?

NOBODY can!

This guy is really becoming insane!!

வருண் said...

****சிவக்குமார் said...

வருண்,
அந்த விமர்சனம் படிக்கும்போது எனக்கும் கிட்டதட்ட இதே உணர்வு தான். அதுவும் அந்த கால பெண்கள் எல்லாம் எட்டாம் வகுப்பு என்பது எல்லாம் சரியான வாதம் இல்லை. குறிப்பாக
***இந்த நான்கு பொது அளவுகோலிலில் சித்திரப்பாவை ஒரு இலக்கியமல்ல என்பதைக் காணலாம். அதன் கதை அகிலனின் வாழ்க்கையனுபவத்தில் இருந்தோ அவரது வாழ்க்கைத்தரிசனத்தில் இருந்தோ உருவானது அல்ல.
அதற்கு அன்றாட உண்மையுடன் தொடர்பே இல்லை. அந்தக் கதாநயகன் கதாநாயகி இருவருக்கும் தமிழ்வாழ்க்கையில் இருந்து வந்தவர்கள் அல்ல. அவர்களைப்போன்றவர்களை நாம் எங்கும் சந்தித்திருக்க மாட்டோம். ***..

நம் தமிழ் வாழ்க்கையில் அந்த நாயகன் நாயகி இருந்ததே இல்லையா? அவருடைய எல்லா கதைகளில் வரும் கதாபாத்திரமும் "தமிழ்" வாழ்க்கையில் இருக்கிறதா??***

ஆனந்தி தாலியைத் தூக்கி எறிந்து விட்டு காதலுடன் போய் சேருவது அந்த காலகட்டத்தில் ஒரு மிகவும் துணிச்சலான செயல்.

அது நடைமுறையில் சாத்தியம் இல்லை என்பதை ஏற்கலாகாது.

நம்ம கலாச்சாரத்தில் தீர்ந்து கட்டுவதென்பது இருந்து வருகிறது. ஒரு சில கிராமியப்பெண்கள்கூட பொறுக்கிக் கணவனி தூக்கி எறிந்துவிட்டு வாழாவெட்டியாக வாழ்வதுண்டு.

இந்தாளுக்கு கூறு இல்லாமல் போயிடுச்சு. "மொண்ணை மொண்ணை"னு ஒரு 1000 பதிவு போட்டு எழவைக்கூட்டினான்.

இப்போ இப்படி..

இந்தாளுடைய சின்னப்புத்திதான் வர வர தெளிவாகத் தெரிகிறது.

எழுத்தாளன் எப்படி இவ்வளவு ஒரு கேவலமா, குறுகிய மனப்பான்மையோட இருக்கிறான் என்பது பெரிய அதிர்ச்சி!

வருண் said...

சிவகுமார்:

****வருண்,
அந்த விமர்சனம் படிக்கும்போது எனக்கும் கிட்டதட்ட இதே உணர்வு தான். அதுவும் அந்த கால பெண்கள் எல்லாம் எட்டாம் வகுப்பு என்பது எல்லாம் சரியான வாதம் இல்லை.****

இது மிக வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய ஒரு ஒண்ணு.

ஒரு கதையை உன்னால ரசிக்க முடியலைனா ஒதுங்கிப்போயிடு. நீ எவ்ளோ பெரிய மேதையா இருந்தாலும் சரி. ரசனை என்பது வேறு. நீ ஆண்! உன் ரசனை அப்படி! இந்தக் கதை பெண் விடுதலை பற்றிய கதை! உன் மரமண்டைக்கு அதெல்லாம் புரியாது!

ஆணகளால் பலவாறு இன்னல்களை அனுபவிக்கும் பெண்கள் இதுபோல் கதைகளை ரசிப்பதைக்கூட இழிவுபடுத்துறான், இந்த வெளக்கெண்ணை!

அந்த காலகட்டத்தில் படிக்க அறிவிருந்தும், ஆண்களைவிட திறமை இருந்தும் 8 கிளாசுடன் நிறுத்தப்பட்ட பெண்கள் எல்லாம் லட்சக்கணக்கில் உண்டு! அவர்களை அவமானப்படுத்துகிறான் நேத்து கேரளாவில் இருந்து வந்து வயித்துப் பொழைப்புக்காக தமிழைக் கட்டி அழும் இந்த வீணாப்போனவன்!

அவங்க எல்லாம் இதுபோல் ஒரு கதையை ரசித்துப் படித்து பாராட்டுவதை, அந்த உணர்வுகளை இந்நாளைப்போல் முட்டாள்களால் சிந்திக்க முடியாது!

Jayadev Das said...

ஜெயமோகனைப் பத்தி இத்தனை பதிவுகள் போட்டு தாக்குவதைப் பார்த்தா எனக்கென்னவோ வருண் தான் ஜெயமோகனை............. சரி வேணாம் விடு.

வருண் said...

ஒரு சிலர் எழுதுவது ஒரு சிலருக்கு மிகவும் எரிச்சல் தரும். இதை பதிவுலகிலேயே பார்க்கலாம். உங்களால் ஒரு சிலரை கண்டுக்காமல் (உதா: ஜெயமோகன்) விட முடியும். அதே போல உங்களுக்கு எரிச்சல் தரும் ஒரு சில பதிவர்களை என்னாலும் கண்டுக்காமல் சட்டை செய்யாமல் போக முடியும்!

Amudhavan said...

அகிலனுக்கு ஞானபீடம் கிடைத்தபோது அவருடைய மிகச்சிறந்த நாவலான பாவை விளக்கு நாவலுக்குத் தராமல் சித்திரப்பாவைக்கு ஏன் தரவேண்டும்? என்பதுபோன்ற வாதங்கள் வைக்கப்பட்டது உண்மைதான். பாவைவிளக்கை ஒப்பிடும்போது சித்திரப்பாவை அவருடைய மிகச்சிறந்து எழுத்து அல்ல என்பதும் உண்மைதான். ஆனால் பாவை விளக்கை அவர் எழுதியபோது ஞானபீடப்பரிசு என ஒன்று இருந்ததா என்பதே கேள்விக்குரியது. அப்படி ஒரு மிகப்பெரிய பரிசு பிற்காலத்தில் ஏற்படுத்தப்படும்பொழுது வாழும் தலைமுறையில் மிகப்பெரும் எழுத்தாளராய் இருக்கும் ஒருவரை விட்டுவிட முடியாது என்பதால், அந்த நாட்களில் அவர் எழுதிய ஒரு நல்ல நூலைத் தேர்ந்தெடுத்து அவரைச் சிறப்பிப்பார்கள். அகிலன் அவர்களின் விஷயத்திலும் அதுதான் நடந்தது.

அன்றைய நிலையில் தமிழின் மிகப்பெரும் எழுத்தாளராய் திகழ்ந்தவர் அகிலன்தான்.

அவரை அன்றைய காலகட்டத்தை வைத்துத்தான் அளவிட வேண்டுமே தவிர இன்றைய சமுதாய மற்றும் எழுத்து நிலையை வைத்து அளவிட முடியாது.

'அதோ வேட்டிகட்டி உட்கார்ந்திருக்கிறாரே அவர்தான் எங்க அப்பா' என்று சொல்லும் ஒருவரிடம் 'ஐயையே உங்க அப்பா வேட்டி கட்டியிருந்தாரா? இதோ பிளேனில் ஜீன்ஸ் போட்டுட்டு இறங்கறாரே அவர்தான் எங்கப்பா' என்று எவனாவது பெருமைப் பேசினால் அவனைப் பைத்தியக்காரன் என்றுதான் சொல்லவேண்டும்.

பொதுவாகவே இந்தப் பரிசுகளை எல்லாம் பார்த்தால், அவை எதுவுமே உரியவருக்கு உரிய நேரத்தில் உரிய படைப்புக்காகத் தரப்படவில்லை என்பதுவே உண்மை.
கவிஞர் கண்ணதாசனுக்கு அவர் எழுதிய சேரமான் காதலி என்ற ஒரு சாதாரண நாவலுக்குத்தான் சாகித்ய அகாடமி தந்தார்கள். அவரது கவிதைகளுக்காக அல்ல.

அன்றைய பெண்கள் எல்லாம் எட்டாம் வகுப்பு பெயிலானவர்கள் அவர்களுக்காகத்தான் அகிலன் எழுதினார் என்பதெல்லாம் ஒரு சமுதாயத்தையே சிறுமைப் படுத்துகின்ற அகங்காரம்.

அப்படிப் பார்த்தால் பாரதியார் காலத்தில் படிப்பறிவு இன்னமும் குறைவாக இருந்தது. ஆண்கள்கூட நான்காவது வகுப்பைத் தாண்டாதவர்களாகத்தான் இருந்தார்கள். நாலாம் கிளாஸ் படித்தவர்களுக்காக எழுதியவர் பாரதியார் என்று சொல்லலாமா?

இன்னமும் அப்படியே மேலே போனோம் என்றால் கம்பர் இளங்கோ வள்ளுவர் காலத்திலெல்லாம் படித்திருந்தவர்கள் எத்தனைப்பேர்? ஒரு சதவிகிதமோ அரை சதவிகிதமோ கூட இருக்கமாட்டார்கள். 'இல்லிட்ரேட்ஸ்களுக்காக' எழுதிய வள்ளுவர் என்று அடையாளப்படுத்தலாமா?

பல விஷயங்களில் வருண் முன்கோபத்தில் என்னென்னவோ எழுதுகிறவர்தான் என்றாலும் இந்த விஷயத்தில் அவர் எழுதியிருப்பதெல்லாம் சரியாகத்தான் இருக்கிறது.