Wednesday, April 2, 2014

ஆன்மீகம் பேசுவதும் ஃபேஷன் தான்!

கண்ணதாசன் குடிகாரரா? இல்லை நல்ல ஆன்மீகவாதியா? இன்னைக்கு திருவள்ளுவரின் திருக்குறளை மேற்கோள் காட்டுவதைவிட, கண்ணதாசன் கவிதைகளை மேற்கோள் காட்டுபவர்கள்தான் அதிகம்னு சொல்லலாம். ஆத்திகன், நாத்திகன், பகுத்தறிவுவாதினு தன்னை சொல்லிக்கொள்பவன், தான் வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்ந்துகொண்டதாகவும் தன்னை நல்ல ஆன்மிகவாதினு தானே நினைத்துக் கொள்பவன் எல்லாருமே குடிகாரர் மற்றும் ஆன்மிகவாதி கவியரசர் கண்ணதாசன் கவிதையை தன் வசதிக்காக பயன்படுத்திக்கொள்வதைப் பார்க்கலாம்.

நாத்திகனாக இருந்து ஆத்திகனாக மாறியவர் கண்ணதாசன்! அர்த்தமுள்ள இந்து மதம்னு ஒரு புத்தகம் எழுதி இந்து மதத்தில் உள்ள சில மூடப் பழக்க வழக்கங்களை "அர்த்தமுள்ளதாக" இருப்பதாக்ச் சொல்லி தெளிவு படுத்த முயன்றவர் இவர். ஆனால் ஒருத்தன் நாத்திகனா இருந்து ஆத்திகனாயிட்டான்னு மட்டும் வச்சுக்கோங்க, அவன் குடிகாரனா இருந்தாலும் சரி பொம்பளைப் பொறுக்கியாக இருந்தாலும் சரி, அவனை ஆஹா ஓஹோனு புகழ்ந்து பேசுவது ஆத்திக்க அறிவீனர்களின்  வழக்கம்!

கவியரசருக்கு பல மனைவிகள், இவர் ஒரு முழுக் குடிகாரராக வாழ்ந்து இந்து மதப்புகழ் பாடி, ஆன்மிகத்தில் இறங்கினாலும், அதனால் முழுப்பயன் அடைய முடியாமல் குடி உடலைக் கெடுத்து உடல்ந்லம் பாதிக்கப்பட்டு நம்மை விட்டு கொஞ்ச வயதிலேயே மறைந்தவர் இந்த இதுமதப்பற்றாளர் மற்றும் ஆன்மீகவாதி மற்றும் கவியரசர் என்று எல்லாராலும் பாராட்டப் படும் இவர்! இவருடைய அரைவேக்காட்டுத்தனமான ஆன்மிகமோ, அந்த  வழியோ, அல்லது இந்துமதப்பற்றோ இவரை காப்பாற்றவில்லை. எத்தில் ஆல்கஹால் அடிக்ஷன் இவரை பலியாக்கிவிட்டது என்பதை மனசாட்சி உள்ள எவனும் மறுக்க முடியாது.

நண்பர் ஒருவர் பகுத்தறிவு பேசுவது ஃபேஷன் என்கிறார்! என்னைப் பொறுத்தவரையில் பகுத்தறிவு பேசுவது தந்தை பெரியார் காலத்தை சேர்ந்த ஃபேஷன். அது ஓல்ட் ஃபேஷன்.

இப்போ அரைவேக்காடுகளும், ஆத்திக சண்டியர்களும் பேசும் ஆன்மீகம் தான் இப்போதைய ஃபேஷன்!

* ஆன்மிகம் பேசுபவர்கள் குடிப்பதில்லையா?

* யோகா செய்பவர்கள் சரக்கு எதுவும் அடிப்பதில்லையா? என்பது என் கேள்வி.

எனக்குத் தெரிய அமெரிக்காவில் யோகா, தியானம்  செய்யும் வெள்ளைக்காரர்கள்  குடிப்பழக்கமும் உள்ளவர்கள்தாம். நம்ம ஊரில் ஆன்மீகம் பேசுறவா எல்லாம் (முக்கியமாக ஆண்கள்) எப்படினு எனக்குத் தெரியவில்லை!

ஆன்மீக வழி, யோகா செய்வது குடிகாரர்களை குறைக்கிறது, அடியோடு ஒழிக்கிறது என்றால் குடியை மறக்க ஒரு வழி கண்டுபிடித்து அதை செயல்படுத்தும் ஆன்மிக வழி செல்பவர்களை ஏன் நானும் பாராட்டுகிறேன். நல்லதை நம்ம பாராட்டத் தயங்ககூடாது!

 ஒரு பக்கம் வீக் எண்ட், பார்ட்டி ஃபங்க்ஷன்ல எல்லாம் அப்பப்போ  குடிச்சுக்கிட்டே ஆன்மீகம் பேசுவேன்! ஆத்திக சண்டியர்த்தனம் பண்ணிக்கிட்டு ஆன்மீகம் பேசுவேன்னா நீ முழு அயோக்கியன்!  ஆமா நான் அயோக்கிய்ந்தான், கண்ணதாசன் மாதிரி அரைக்கிணறுதான் தாண்டுகிறேன்னு மனசாட்சிக்கு பயந்து உண்மையைச் சொன்னால், உங்களை நான் பாராட்டினாலும், ஊர் உலகம் உங்களைப் பார்த்து சிரிக்கும் என்பதை ஞாபகப்படுத்துகிறேன். சாதாரண ஒரு குடிப்பழக்கத்தை  நிறுத்த முடியாத ஆன்மிக வழி எனக்கு என்னவோ நல்வழியாகத் தோணவில்லை! உங்களுக்கு எப்படியோ???

நெறையாப் பேருக்கு மனச்சாட்சி வந்து சப்பு சப்புனு அறையும்!  அதனால் இங்கே வந்து நான் யோக்கியன் என்று பின்னூட்டம்கூட இட முடியாது! அதனால் என்ன இப்போ? நம்ம பகவானைப் போயி வழிபட்டால் எல்லாம் சரியாயிடும். அதுக்குத்தானே நம்ம பகவானை உருவாக்கி வச்சிருக்கோம். இல்லையா? :)

4 comments:

Unknown said...

கண்ணதாசனை ஹிந்து மதப் பற்றாளர் என்று கூட ஒப்புக் கொள்ளமுடியாது ,இயேசு காவியம் எழுதியவரும் அவர்தான் ...நல்ல வேளை,இன்னும் கொஞ்ச நாள் இருந்து இருந்தால் அல்லா காவியம்கூட படைத்து இருப்பார் ..இதையெல்லாம் அவர் துட்டுக்காகத் தான் செய்தார்,நீங்கள் சொல்வது போல் கூலிக்கு மார் அடித்தவரின் வார்த்தைகளை உதாரணம் காட்டுவதுகூட தவறுதான் !

Anonymous said...

கண்ணதாசன் இயேசு காவியம் எழுதியது, அவருடைய கிறித்தவ டாவுக்காக.. ஆனால் அர்த்தமுள்ள இந்து மதம் என்ற புத்தகம் ஊடாக அழகாக இந்து மத மூடநம்பிக்கைக்கு வக்கலாத்து வாங்கியவர் அவர். அவரது கவிப் புலமை அவரது அயோக்கிய தனங்களுக்கு முகமூடியாக அமைந்தது.

அவரை விடுங்கள் இத்தனை ஆண்டுகாலமாக எத்தனை எத்தனை இந்து மத சாமியார்கள், புலவர்கள், யோக்கியர்கள் இருந்துள்ளார்கள், அவர்களில் சாதியம் பார்க்காமல், சமத்துவம் பேணி, தனி மனித பண்போடு, உழைத்து வாழ்ந்தவர்கள் எத்தனை பேரு சொல்லுங்க.

இன்று இந்து மதத்துக்கு வக்கலாத்து வாங்குவோர் எத்தனை பேர் உண்மையில் இந்து மத நூல்களை முழுமையாக வாசித்துள்ளார்கள், இதிகாசங்களை படித்துள்ளார்கள், யாருமே கிடையாது.. எல்லாம் அவரவருக்கு சொல்லப்பட்ட்தன் அடிப்படையிலேயே தமது மதத்தை சீர்தூக்கி பார்க்கின்றனர். நல்லதாக காட்டியதால் அன்னை தெரசாவும் புனிதராகவே தென்படுகின்றார்..

மதங்கள் இந்து மதமோ, கிறித்தவமோ, இஸ்லாமோ அனைத்தும் சோம்பேறிகளின் கொட்டாரம், ஏமாளிகளின் பைகளில் உள்ளவற்றை கபளீகரம் செய்து நோகாமல் வாழும் தந்திரம்.

இதைத் தான் இன்று வரையில் செய்து வருகின்றனர்.

திருப்பதி உட்பட இந்தியாவின் கோவில் உண்டியலில் விழும் பணத்தைக் கொண்டு இந்தியர்களின் வறுமையை ஒழிக்கலாம். ஆனால் ஒழித்தார்களா? இல்லையே.

தப்பு செய்யும் ஒவ்வொரு மனிதனின் மனமும் குற்ற உணர்ச்சியால் துடிக்கும், அதனை போக்க தனக்குத் தானே சமாதானம் செய்ய ஆன்மிகம் பேசுறான். கஞ்சா அடிச்சிட்டு உலகை மறப்பது போல, கடவுளை நினைச்சிட்டு கையடிச்சிக்கிட்டா ஒரு ஆசுவசம் வருவது போல் உணர்கின்றான். ஆனால் எல்லாம் தற்காலிகமான ஒன்று என்பதை உணர்வதில்லை.

இந்த ஆசுவாசத்தை தர பஜனை, பூஜை, புனஸ்காரம், யோகம், கதை, கலாட்சபம்ம், ஜெபம், தொழுகை, மண்ணாங்கட்டி என வெவ்வேறு வடிவங்களில் பணம் பண்ணுகின்றார்கள் கொஞ்சம் புத்தியுள்ள மதவாதிகள்.

இவற்றை எல்லாம் இறுதியாக வெறியூட்டி தேர்தலில் வாக்குகளாகவும், பணக் காணிக்கையாகவும், சமயத்தில் உயிரையும் வாங்கி ஆதாயம் அடைவோருக்குத் தான் ஆன்மிகம் உதவுகின்றது.

ஆன்மிகம் என்பது வெறும் வேஷம், வெறும் ஏமாற்று, பித்தலாட்டம் அல்லது ஏமாளித்தனம், கோமாளித்தனம்..

வெளிநாட்டில் நம்மவர்கள் வெள்ளிக்கிழமை சாயந்திரம் கோவிலுக்கு போய் கும்பிட்டு விட்டு ராத்திரியான பாரில் குத்தாட்டம் போடுகின்றார்கள். இரண்டும் ஒன்று தான், இரண்டும் மதியை மயக்கி தற்காலிக relaxation தருகின்றது. அதைத் தவிர வேறு ஒன்றுமில்லை.

இந்த relaxation-ஐ தான் ஆன்மிகம் எங்கின்றார்கள், ஆனால் மன அழுத்தங்களுக்கு பூரண குணம் வேண்டுமானால் மருத்துவரைத் தான் அணுக வேண்டும், வெறும் ஆன்மிகம் குணப்படுத்தாத எவற்றையும்.

வருண் said...

***கண்ணதாசனை ஹிந்து மதப் பற்றாளர் என்று கூட ஒப்புக் கொள்ளமுடியாது ,இயேசு காவியம் எழுதியவரும் அவர்தான் ...நல்ல வேளை,இன்னும் கொஞ்ச நாள் இருந்து இருந்தால் அல்லா காவியம்கூட படைத்து இருப்பார் ..இதையெல்லாம் அவர் துட்டுக்காகத் தான் செய்தார்,நீங்கள் சொல்வது போல் கூலிக்கு மார் அடித்தவரின் வார்த்தைகளை உதாரணம் காட்டுவதுகூட தவறுதான் ! ***

அவருடைய "ஏசு காவியம்" பற்றி உங்கள் வாயிலாக அறிந்து கொண்டேன். நன்றி :)

வருண் said...


****இந்த relaxation-ஐ தான் ஆன்மிகம் எங்கின்றார்கள், ஆனால் மன அழுத்தங்களுக்கு பூரண குணம் வேண்டுமானால் மருத்துவரைத் தான் அணுக வேண்டும், வெறும் ஆன்மிகம் குணப்படுத்தாத எவற்றையும்.***

நோயாளிக்கு ட்ரக் ப்ரிஸ்க்ரைப் பண்ணிவிட்டு தனக்கு (தன் மனநோய்க்கு) ஆன்மீக மருந்துவம் அளித்துக் கொள்ளும் மருந்த்துவர்களும் இருக்காங்க, இக்பால். :)))