Tuesday, April 15, 2014

பார்ப்பனர்கள், மைனாரிட்டி மதத்தவர் மற்றும் நரேந்திர மோடி!

இந்துக்கள் மத வெறியர்கள் எல்லாம் கெடையாது! ஏன் அவங்களையே விமர்சிக்கிற? மதத்தைத் தூக்கி ஓரமா வை! மனுஷாளை மனுஷாளாப் பாரு! னு எல்லாம் நல்லாவே வியாக்யானம் பேசலாம்.

ஒன்றைப்புரிந்து கொள்ளுங்கள். ஒரு மதத்தில் மத வெறியர்கள் அதாவது எக்ஸ்ட்ரீமிஸ்ட் என்னைக்குமே மைனாரிட்டிதான்! இந்துக்கள் மெஜாரிட்டியாக வாழும் இந்தியாவில், வட இந்தியர்கள், மற்றும் பார்ப்பனர்களில் உள்ள இந்து மதவெறியர்களே போதும், மைனாரிட்டிகளை கதிகலங்க வைக்க!  இந்துக்களை மத வெறியர்கள் என "லேபல்" செய்ய இவர்களே போதும்! ஒரே ஒரு கோட்சேதான் தேவைப்பட்டான் ஒரு காந்தியை அகற்ற! மறக்க வேண்டாம்!

எங்களுக்கெல்லாம் திறந்த மனது! நாங்க புத்தனை வழிபடுவோம்! வேளாங்கன்னி மாதாவை வணங்குவோம். நாகூர் தர்ஹாவுக்குப் போவோம். ஏற்வாடி தர்ஹா போயி எங்கவீட்டில் உள்ள பைத்தியத்தைக் கட்டிப் போடுவோம்! என்றெல்லாம் எல்லாரும் யோக்கியர்கள் பட்டம் நமக்கு நாமே கொடுத்துக்கலாம்தான். ஆனால் இதேபோல்தான் மெஜாரிட்டி கிருத்தவர்களும், இஸ்லாமியர்களும்கூட  சொல்லுவாங்க. அவர்களிலும் எல்லோருமே மத வெறியர்கள் அல்ல என்பதே உண்மை!

சங்கர் ராமன் கொலை வழக்கில் யாருமே தண்டிக்கப்படாமல் இந்து மத குருக்கள் காப்பாத்தப் படும்போது இந்துக்களுக்கு பெரிதாக எதுவும் தோணாதுதான். அதுலயும் இந்தப் பார்ப்பானுக கண்டுக்கவே மாட்டாணுக! ஊருக்காக வேணா அப்பப்போ நீலிக்கண்னீர் வடிப்பானுக! ஆனால் இதுபோல் செயல்கள் இந்தியாவில் வாழும் மைனாரிட்டிகளை இந்திய ஜனநாயகத்தின் மேல் உள்ள நம்பிக்கையை இன்னும் இழக்க வைக்கும் என்பதை உங்க மரமண்டையில் ஏற்றுங்கள்!

வரும் தேர்தலில் இன்றைய தமிழர்களின் அரசியல் நிலைப்பாடு என்ன?

தமிழ்நாட்டில் உள்ள பார்ப்பனர்கள் அனைவருமே மோடியிடம் உள்ள நல்லவைகளை மட்டுமே மிகைப்படுத்தி அவரே பிரதமராக வரவேண்டும் என்கிறார்கள். அது ஏன்? மோடியைப் பார்த்தால் ஏன் இவர்களுக்கு மட்டும் அருவருப்பாக பயமாகத் தோண மாட்டேன் என்கிறது? மோடி என்ன காந்தியா இல்லைனா அன்னா ஹாசரேயா? இல்லையே? ஒண்ணு புரிந்துகொள்ளுங்கள் பார்ப்பனர்கள் ஜெனட்டிக்கலாவே ஹிந்து மதவெறியர்கள் என்பதை அவர்களே உணர்வதில்லை! அவாள் மூளை இந்த விசயத்தில் கொஞ்சம் மழுங்கியேதான் இருக்கும்!

சரி,  மைனாரிட்டிகளான இஸ்லாமியர்கள், கிருத்தவர்கள் அரசியல் நிலைப்பாடென்ன? மோடியைப் பார்த்தாலே தங்களை ஒழித்துவிடும் எமன் என்பதுபோல்தான் அவர்கள் உணருகிறார்கள்.  பார்ப்பனர்கள் சிந்தனைக்கு எக்ஸாக்ட் ஆப்போசிட்! ஈழத்தமிழர்களுக்கு தொடர்ந்து தீங்கிழைத்த காங்கிரஸ் அரசியல்வாதிகள்கூட இவர்களுக்கு மோடியைப் பார்க்கும்போது எவ்வளவோ நல்லவர்களாகத் தோன்றுகிறார்கள். காங்கிரசுக்குத்தான்  மைனாரிட்டி மதத்தவர்  ஓட்டு விழும் என்று அடித்துச் சொல்லலாம்.

இதற்கிடையில் நம்ம திராவிட காமெடியன்கள்..

சீமான், ராம்தாசு, வை கோ, விசயகாந்துனு இதுகளும் இதுக அடிவருடிகளும், அப்புறம் திமுக ஆதரவாளர்கள், அதிமுக ஆதரவாளர்கள் எல்லாம் ஒரே குழப்பநிலையில் எப்படி அரசியல் பொழைப்பு நடத்துறதுனு தெரியாமல் என்ன எழவையோ அரசியல்னு பண்ணிக்கிட்டு திரிகிதுகள். இவர்கள் என்னைக்குமே எதையும் செய்ய லாயக்கில்லாதவர்கள் என்பதால்தான் தமிழ்நாட்டை ஆள ஒரு திராவிடன்கூட இல்லாமல் போய்விட்டது.

அரசியலைப் பொருத்தவரையில் பார்ப்பனர்களும், மைனாரிட்டி மதத்தவரும்தான் என்னைக்குமே ஒரு தெளிவான முடிவுடன் இருக்காங்க. இவர்களில் மெஜாரிட்டிக்கு நல்லவனாகத் தோன்றுபவன், மைனாரிட்டிக்கு எமனாகத் தோணுகிறான். உண்மை நிலவரம் இப்படி இருக்க, "வாங்க! நம்ம ஆத்திகன் எல்லாரும் ஒண்ணாச் சேர்ந்து கடவுளைக் கட்டி அழுவோம்" னு ஒரு உலகத்துக்குகே ஒவ்வாத தத்துவத்தை சொல்லிக்கிட்டுத் திரியுது மூளை மழுங்கிய ஓரு ஆத்திகப் பண்டாரம்!

மதநம்பிக்கை இல்லாத இந்து திராவிடர்கள்  மற்றும் தமிழ்ப் பற்றாளர்கள் நிலைப்பாடு என்றுமே உறுதியில்லாததுதான். ராமன் ஆண்டா என்ன ராவணன் ஆண்டா என்ன? என்பதே. ஒரு வேளை இதுதான் பெரிய மனிதச் சிந்தனையோ என்னவோ?

20 comments:

காமக்கிழத்தன் said...

//.....இவர்கள் என்னைக்குமே எதையும் செய்ய லாயக்கில்லாதவர்கள் என்பதால்தான் தமிழ்நாட்டை ஆள ஒரு திராவிடன்கூட இல்லாமல் போய்விட்டது.//

பெரியாரின் கடுமையான உழைப்பும் தியாகமும் வீணாகிப்போனதை நினைத்தால் வேதனையே மிஞ்சுகிறது.

சோர்வடையாமல் இனியும் எழுதுங்கள்; எழுதுவோம். காலம் மாறும்.

viyasan said...

மோடிக்கும் குஜராத் கலவரங்களுக்கும் சம்பந்தமேயில்லை என்று உச்ச்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்பும், குஜராத்தில் முஸ்லீம்கள் கொல்லப்பட்டதற்காக, அவரைத் தமிழர்கள் எதிர்க்க வேண்டுமென்றால், , சிங்களவர்கள் தமிழர்களைக் கொலை செய்ய உதவியதுடன் இன்றும் உதவுவது மட்டுமன்றி, கிழக்கில் ஈழத்தமிழர்களையும் கொன்ற இலங்கை முஸ்லீம்களையும், ராஜபக்சவையும் ஆதரிக்கும் தமிழ்நாட்டு முஸ்லீம்களுக்காக, தமிழ்நாட்டுத் தமிழர்கள் மோடியை எதிர்க்க வேண்டுமா? உதாரணமாக, தமிழ்நாடு தெளவ்ஹீத் ஜமாஅத் ஜெய்னுலாப்தீன் என்பவர்ஈழத்தமிழர்களுக்கெதிராக, ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி, சிங்களவர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டு முஸ்லீம்களின் மத்தியில் பிரச்சாரம் செய்தவர் (காணொளி இன்றும் இணையத்தில் உண்டு). இன்று தெளகீத் ஜமாஅத்தும் ஜெய்னுலாப்தீனும் காங்கிரசுக்கு ஆதரவளிப்பதற்கும் காரணம் தமிழ்நாட்டு முஸ்லீம்களின் ஈழத் தமிழர் எதிர்ப்புத் தான்.

இந்துத்துவாக் கொள்கைகள் எதிர்க்கப்பட வேண்டியவை என்பதை பெரும்பாலான தமிழர்கள் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் முஸ்லீம்களின் மோடி எதிர்ப்பு என்பது முஸ்லீம்களைக் “கொன்ற” மோடியைப் பழிவாங்க வேண்டுமென்பது தானே தவிர, அநியாயமாக அப்பாவி மக்களைக் கொன்றதற்காக அவரை எதிர்க்கும் மனித நேயமல்ல. இந்துத்துவாவை எதிர்ப்பதாகக் கூறும் முஸ்லீம்களும் ஏனையோரும், இந்துத்துவாக் கொள்கைகளுக்கு இணையான அல்லது அதை விட மோசமான, இஸ்லாமியத்துவ, அரபுத்துவ, வஹாபியிசத்தை எதிர்க்கக் காணோம். அதனால் நாத்திகமும் பெரியாரிசமும் பேசுவோர் வஹாபிகளுடன் கை கோர்த்துக் கொண்டு, மோடியை எதிர்ப்பதைப் பார்க்க வேடிக்கையாக இருக்கிறது.
:-)

வருண் said...

***நாத்திகமும் பெரியாரிசமும் பேசுவோர் வஹாபிகளுடன் கை கோர்த்துக் கொண்டு, மோடியை எதிர்ப்பதைப் பார்க்க வேடிக்கையாக இருக்கிறது.***

வியாசன்: "எங்க ஊர் வஹாபிகள் எல்லாம் தமிழர்கள்/திராவிடர்கள்தான். குஜராத்கார மோடி ஆரியர் அவருக்கு தமிழ் தெரியாது!"

ஆமா, நீங்க ஏன் ஆரியன் மோடிக்கு சொம்பு தூக்குறீங்கனு சொல்லுங்க! :)))

வருண் said...

***காமக்கிழத்தன் said...

//.....இவர்கள் என்னைக்குமே எதையும் செய்ய லாயக்கில்லாதவர்கள் என்பதால்தான் தமிழ்நாட்டை ஆள ஒரு திராவிடன்கூட இல்லாமல் போய்விட்டது.//

பெரியாரின் கடுமையான உழைப்பும் தியாகமும் வீணாகிப்போனதை நினைத்தால் வேதனையே மிஞ்சுகிறது.

சோர்வடையாமல் இனியும் எழுதுங்கள்; எழுதுவோம். காலம் மாறும்.***

வாங்க காமக்கிழத்தன். :) நம்ம செய்ய வேண்டியதை செய்வோம். நடக்கிறது நடக்கட்டும்! :)

viyasan said...

//வியாசன்: "எங்க ஊர் வஹாபிகள் எல்லாம் தமிழர்கள்/திராவிடர்கள்தான். குஜராத்கார மோடி ஆரியர் அவருக்கு தமிழ் தெரியாது!"///

உங்க ஊர் தமிழர்களாகிய வஹாபிகள் எதற்காக ஈழத்தமிழர்களை எதிர்க்கிறார்கள், ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்ட காலத்தில் சிங்களவர்களுக்கு ஆதரவளித்தார்கள். தமிழ்நாட்டு வகாபிகளின் அன்பும், விசுவாசமும் தமிழர்களுடனல்ல, குஜராத்தி, ஆபிரிக்க, அரேபிய முஸ்லீம்களுடன் தான். அவர்கள் மோடியை பழிவாங்கத் துடிப்பதற்குக் காரணமே அவர்களின் குஜராத்தி முஸ்லீம் சகோதர்களை மோடி "கொன்று" விட்டாராம். ஆனால் தமிழர்களைக் கொன்ற ராஜபக்சாவை அவர்கள் ஆதரிக்கிறார்கள். தமிழ்நாட்டு வஹாபிகள் எல்லாம் தமிழர்கள்/திராவிடர்கள் என்றால் ஈழத்தமிழர்கள் ஆரியர்களா?


//ஆமா, நீங்க ஏன் ஆரியன் மோடிக்கு சொம்பு தூக்குறீங்கனு சொல்லுங்க! :)))///
மோடிக்கு நான் எப்பொழுது சொம்பு தூக்கினேன். என்னுடைய பதிவுகளில் உண்மையைக் கூறினேன் அவ்வளவு தான். என்னைப் பொறுத்தவரையில் பாஜகவும், காங்கிரசும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். எந்தக் கட்சிக்கு ஆட்சிக்கு வந்தாலும் ஈழத்தமிழர்களுக்கு எந்தவித பயனுமில்லை. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் எந்தவித மாற்றமும் ஏற்படாது. அதனால் தான் ஜெயலலிதா 39 தொகுதிகளையும் வென்றால், மோடி தலைமையிலான மத்திய அரசு ஈழத்தமிழர்களுக்கெதிராக சிங்கள சார்பு முடிவுகளை எடுக்கும் போது தமிழ்நாட்டின் கையிலும் பலமிருக்கும், துணிச்சலுக்குப் பெயர் போன ஜெயலலிதா, அந்த பலத்தை தமிழர்களின் நலன்களைப் பாதுகாக்கப் பயன்படுத்துவார் என்ற நம்பிக்கை தான். தமிழ்நாட்டில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெல்லாது போனாலும் எனக்கு மகிழ்ச்சியே.

நன்னயம் said...

"பார்ப்பனர்கள் ஜெனட்டிக்கலாவே ஹிந்து மதவெறியர்கள் என்பதை அவர்களே உணர்வதில்லை! "

இஸ்லாமியர்களும் ஜெனலிடிகளாக மதவெறியர்கள் தான் (பெரும்பான்மை ) . அது அவர்களுக்கு கூட தெரியாது . :)

இஸ்லாமியர்கள் என்றைக்குமே தங்கள் சார்ந்த சமூகத்தை சேர்ந்தவன் தவறு செய்தால் ஒத்து கொளவதில்லை. ஒன்று அவன் அந்த தவறை செய்யவில்லை என்பார்கள் சரியான ஆதாரத்தை காட்டினால் அந்த குற்றத்துக்கு ஒரு காரணத்தை காட்டுவார்கள் . இதுவும் ஒருவகை சங்கரராமன் வழக்கு கேஸ்தான் .

சங்கரராமன் வழக்கில் இரண்டு பேரும் பார்ப்பனர்கள் . மோடி பிரச்சினையில் இந்துக்கள் ஏன் மோடியை அருவருப்பாக பார்க்க வேண்டும் .

சீக்கியர்கள் கொலை செய்யப்பட்ட போது முஸ்லிம்கள் காங்கிரசை , அல்லது ராஜீவை அருவருப்பாக பார்த்தார்களா ?
இல்லையே ...
அவர்களுக்கு தேவைக்கு தகுந்த மாதிரி பார்வையை மாற்றும் போது இந்துக்களும் தங்கள் தேவைக்கு தகுந்த மாதிரி பார்வையை மாற்றுவது தவறு அல்ல .

என்னுடையை தமிழ் பெயரை முன்பு கேட்டிருந்தீர்கள். என்னுடைய பெயரில் தமிழ் சொல் கிடையாது .
HARRIS DAVID . இரண்டாவது நான் இந்தியாவை பிறப்பிடமாக கொண்டிராத இந்திய வம்சாவளி (NRI )

நன்னயம் said...

"மோடி எனது நல்ல நண்பர் என்கிறார் ரஜினிகாந்த். "
"வலிமையான தலைவர், சிறந்த நிர்வாகி என்கிறாரே ரஜினி. "

அது உங்கள் அபிமான நடிகர் உதிர்த்த முத்துக்கள் தான் இவை . இவை பற்றி தங்கள் கருத்து .
(இந்த கருத்தை கமல் சொல்லியிருந்தா நிலைமை வேறாக இருந்திருக்கும் . கமலை கேவலமாக திட்டி ஒரு பதவி கட்டாயம் போட்டிருப்பீர்கள் . அதில் எனக்கு கொஞ்சம் கூட சந்தேகம் இல்லை )

:) :)

குலசேகரன் said...

“ஒண்ணு புரிந்துகொள்ளுங்கள் பார்ப்பனர்கள் ஜெனட்டிக்கலாவே ஹிந்து மதவெறியர்கள் என்பதை அவர்களே உணர்வதில்லை! அவாள் மூளை இந்த விசயத்தில் கொஞ்சம் மழுங்கியேதான் இருக்கும்!”

Half-baked conclusion. They are not fanatical Hindus. Their attachment to Hindu religion of Vedic kind cannot be called fanatic. Fanaticism means unchanging uncompromising dogmatic attitude at all events and costs. Muslims and Xians have that. Tamil Brahmins move with times and there have been so many changes in the religion they follow, it will be manifest to you as you compare their orthodoxy of pre-Independent India and now. . Religion is not ‘be all and end all’ of their lives. You can find many atheists among them, especially in the present generation. Communist leaders of great repute like P.Ramamurthy, Varadarajan, Muthia, Deekkadir editor, his father Amritalinga Iyer who wrote a scathing attack on Ramayanam, the late Dathachaariyaar Swamy who attacked Srivaishnavite Brahmins for many things, and many aggressive leaders of Vinavu group which attacks Paarpaneeyam with unrelenting harshness et al, come from this community. Only in comparing them with others you can appreciate their lives.

Hinduism came to them as legacy. If practised to a letter, it is a very good religion doing good to them as well as to others. Therefore, they want to preserve it, albeit mutatis mutandis i.e. keeping with times. If they don’t, the religion will die a natural death in TN esp in the surroundings of Hindu religion haters who are burgeoning day by day. The Non-Brahmin Hindus practise Hindu religion, a heady cocktail mixed with other religious practices. And they are not loyal to it as they easily get converted for material inducements. However hard Rev Robert Caldwell attempted, he couldn't convert Tamil Brahmins but he could succeed in converting Hindu Nadars. Hence, the Hindu religion looks to the loyal Tamil Brahmins for her survival. To help a religion survive in a peaceful way is not to be fanatical, and the Tamil Brahmins need not feel they are doing wrong.

- Kulasekharan

Unknown said...
This comment has been removed by a blog administrator.
பெங்களூர் இரவிச்சந்திரன் said...

மைனாரிட்டி என்று சொல்லப்படுகிற துலுக்கர்களும் மற்றும் பார்ப்பனர்களும் ஜெனட்டிக்கலாக (இந்து/இஸ்லாமிய) மத வெறியர்களாய், இருப்பதன் காராணம் - அவர்கக் ஆப்கானிஸ்தானிலிருந்து வந்த வந்தேறிகளின் வழித்தோன்றல்கள் என்றே எண்ணுகிறேன்.

நேர்கோடு said...

@viyasan: //மோடிக்கும் குஜராத் கலவரங்களுக்கும் சம்பந்தமேயில்லை என்று உச்ச்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்பும்.....

இதே லாஜிக்கில் கருணாவுக்கும் 2Gக்கும் சம்பந்தமில்லை என்றும் சொல்லலாமா?

Unknown said...

//பார்ப்பனர்கள் ஜெனட்டிக்கலாவே ஹிந்து மதவெறியர்கள் என்பதை அவர்களே உணர்வதில்லை//

ஜெனிட்டிக்காலாகவே மதவெறியர்கள் என்று உன்னைப் போன்றவர்கள் மட்டுமே சொல்ல முடியும். என்ன படிச்சயோ என்ன கிழிச்சயோ?

வருண் said...



***Liza Ratnam said...

//பார்ப்பனர்கள் ஜெனட்டிக்கலாவே ஹிந்து மதவெறியர்கள் என்பதை அவர்களே உணர்வதில்லை//

ஜெனிட்டிக்காலாகவே மதவெறியர்கள் என்று உன்னைப் போன்றவர்கள் மட்டுமே சொல்ல முடியும். என்ன படிச்சயோ என்ன கிழிச்சயோ?***

Liza or whatever is your real name:

You seem like got offended pretty badly.

Here is a theory for you which you need to consider by another blogger.

**** பெங்களூர் இரவிச்சந்திரன் said...

மைனாரிட்டி என்று சொல்லப்படுகிற துலுக்கர்களும் மற்றும் பார்ப்பனர்களும் ஜெனட்டிக்கலாக (இந்து/இஸ்லாமிய) மத வெறியர்களாய், இருப்பதன் காராணம் - அவர்கக் ஆப்கானிஸ்தானிலிருந்து வந்த வந்தேறிகளின் வழித்தோன்றல்கள் என்றே எண்ணுகிறேன்.***

Why dont you chat with him and arrive at a conclusion? ROTFL

Saha, Chennai said...

@viyasan
//மோடிக்கும் குஜராத் கலவரங்களுக்கும் சம்பந்தமேயில்லை என்று உச்ச்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்பும், குஜராத்தில் முஸ்லீம்கள் கொல்லப்பட்டதற்காக, அவரைத் தமிழர்கள் எதிர்க்க வேண்டுமென்றால்..//

அண்ணே, வியாசன் அண்ணே, எந்த உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதுன்னு சொன்னா நல்லாயிருக்கும். எப்புடின்னே கொஞ்சம் கூட வெக்கப்படாம பொய்யி சொல்லுரிங்க?

viyasan said...

காக்கா, Saha காக்கா,

குஜராத் கலவரத்தில் மோடிக்கு தொடர்புண்டென நிரூபிக்க எந்த வித ஆதாரமுமில்லை என இந்தியாவின் 'உச்சநீதிமன்றத்தால்' நியமிக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு (Supreme court-appointed special investigation team) அறிவித்துள்ளது. அதைத் தான் நான் குறிப்பிட்டேன். உச்சநீதிமன்றத்தின் விசாரணைக் குழுவினால் நிரபராதி என்று கூறப்பட்ட மோடியை, முஸ்லீம்களைக் “கொன்றார்” என்று, தமிழர்கள் எதிர்க்க வேண்டுமென்றால், எந்த வித விசாரணையுமில்லாமல், விசாரணை எதுவும் நடைபெறுவதையே அனுமதிக்காத, ஈழத்தமிழர்களை வேரோடழித்த ராஜபக்சவை, இலங்கை முஸ்லீம்களும், தமிழ்நாட்டு முஸ்லீம்களும், தமிழைப் பேசிக்கொண்டே ஆதரிக்கிறார்கள். அதை தமிழர்கள் ஏற்றுக்கொள்ளலாமா? அது தான் என்னுடைய வாதமே தவிர, மோடிக்கு வக்காலத்து வாங்குவதல்ல என்னுடைய நோக்கம்.

Saha, Chennai said...

@viyasan
//குஜராத் கலவரத்தில் மோடிக்கு தொடர்புண்டென நிரூபிக்க எந்த வித ஆதாரமுமில்லை என இந்தியாவின் 'உச்சநீதிமன்றத்தால்' நியமிக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு (Supreme court-appointed special investigation team) அறிவித்துள்ளது. அதைத் தான் நான் குறிப்பிட்டேன். உச்சநீதிமன்றத்தின் விசாரணைக் குழுவினால் நிரபராதி என்று கூறப்பட்ட மோடியை, முஸ்லீம்களைக் “கொன்றார்” என்று,//

முதலில் அவரை விடுவித்திருப்பது உச்சநீதிமன்றமே அல்ல. அஹமதாபத்திலிருக்கும் மெட்ரோபாலிட்டன் நீதிமன்றம். அதாவது குஜராத் உயர்நீதிமன்றம் கூட அல்ல. அதற்கும் கீழ்நலையில் இருக்கும் ஒரு மாநகர நீதிமன்றம் மட்டுமே. எப்போதும் இந்த நிலையிலான நீதிமன்றங்கள் வழங்கும் முடிவுகள் இறுதியானவை அல்ல. அடுத்து மேலே இருக்கும் உயர்நீதிமன்றத்திலும் அங்கும் ஒருவேளை தோற்றால் உச்சநீதிமன்றத்திலும் மேல் முறையீடு செய்யலாம் (இப்போது அப்படித் தான் இறந்த ஜாஃப்ரியின் மனைவி குஜராத் உயர்நீதிமன்றத்தை அணுகி இருக்கிறார்).

என்வரையில் இந்தத் தீர்ப்பை நான் ஏற்கவில்லை. இது இந்த தேர்தல்களுக்காக அவசர கதியில் வாங்கப்பட்டிருக்கும் தீர்ப்பு மட்டுமே. இது போன்ற தீர்ப்புகளை நம்புவதாக இருந்தால் இந்தியாவில் எந்த அரசியல்வாதியும் ஊழல்வாதி அல்ல என்று மிகச் சுலபமாக நிரூபித்து விடலாம். இதை எல்லாம் அறியாத அப்பாவிகள் அல்ல இதை முன்வைக்கும் பிஜேபிகாரர்கள். ஆனால் அவர்களைப் பொறுத்தவரை அவர்களுக்குச் சாதகமாக வந்த தீர்ப்பு எனில் அது நீதி தேவதையே எழுதியது.

அடுத்தது இதை உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு என எப்படிக் கூசாமல் சொல்கிறார்கள், அறியாமல் நம்புகிறார்கள் என்பதைப் பார்க்கலாம். குஜராத் கலவரங்கள் தொடர்பாய் நிறைய வழக்குகள் உச்சநீதிமன்றத்திற்குச் சென்றதால், அவற்றிந் விசாரணைகள் மாநிலக் காவல்துறையால் சரியான முறையில் நடக்கவில்லை என்று கருதியதால் 2009ம் ஆண்டு உச்சநீதிமன்றம் முன்னாள் சிபிஐ இயக்குநர் தலைமையில் 5 நபர் கொண்ட சிறப்பு புலனாய்வுக்குழு என்ற விசாரணை அமைப்பை ஏற்படுத்தியது.

கவனிக்கவும்: இது உச்சநீதிமன்றம் நேரடியாய் விசாரித்தது அல்ல; சிபிஐயும் நேரடியாய் விசாரித்தது அல்ல. அதில் இருந்ததெல்லாம் ஒரு முன்னாள் சிபிஐ இயக்குநர், ஒரு ரிட்டயர்ட் போலீஸ் அதிகாரி மற்றும் மூன்று குஜராத் ஐபிஎஸ் அதிகாரிகள். அவர்கள் சாட்சிகளை விசாரித்து அறிக்கை அளித்தார்கள். அவ்வளவு தான். அந்த விசாரணை அறிக்கையை ஆதாரமாகக் கொண்டு தான் மேலே சொன்ன மெட்ரோபாலிடன் நீதிமன்றம் மோடியைக் குற்றமற்றவர் என அறிவித்தது. இந்த விஷயத்தைத் தான் சிபிஐயே சொல்லி விட்டது, சுப்ரீம் கோர்ட்டே விடுவித்து விட்டது என்றெல்லாம் தெரிந்தும் தெரியாமலும் மோடி ஆதரவாளர்கள் சொல்லித் திரிகிறார்கள்.

அடுத்து இந்த சிறப்பு புலனாய்வுக்குழுவின் விசாரணை எந்த அளவுக்கு நேர்மையாக இருந்தது என்பதற்கு ஒரு சம்பவத்தை உதாரணம் பார்க்கலாம்.

குஜராத் கலவர வழக்குகளில் பப்ளிக் ப்ராஸிக்யூட்டராக ஆஜரான ஆர்.கே. ஷா இடையில் விலகிக் கொண்டார். அவர் அதற்குச் சொன்ன காரணம் சிறப்புப் புலனாய்வுக் குழுவுடன் தம்மால் இணைந்து பணிபுரிய முடியவில்லை என்பதே. பல உயிர்கள் பலியான வழக்கில் முக்கியமான சாட்சிகளிடம் மிகக் கடுமையாக நடந்து கொள்கிறார்கள், அவர்களைக் குழப்புகிறார்கள், சாட்சி விவரங்களை சரியாகப் பகிர்வதில்லை, முறையான ஒத்துழைப்பு தருவதில்லை என்றார்.

சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணைகளில் சாட்சிகள் மழுப்பப்பட்டுள்ளன / மறைக்கப்பட்டிருக்கின்றன எனப் பரவலாய்க் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. அப்படி இருக்கையில் அதன் விசாரணை அறிக்கையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு சொல்லப்பட்டுள்ள ஒரு நீதிமன்றத் தீர்ப்பு வேறு எப்படி இருக்கும்?

நன்றி: திரு. சி. சரவணகார்த்திகேயன்

சொச்சத்த இந்த லிங்குல போயி படிச்சு தெரிங்குகுங்க, கிழிச்சு தொங்கவிட்டுருக்காங்க.

http://www.tamilpaper.net/?m=20140401

http://www.tamilpaper.net/?m=20140402

Ant said...

குஜராத்த கலவரம் மட்டுமே சிலரது கண்களுக்கு தெரிகிறது. கோவை குண்டு வெடிப்பு ஒரு போதும் நினைவுக்கு வருவதில்லை. பாஜக இந்துத்துவ கட்சி கிடையாது. இங்குள்ள இஸ்லாமியர்கள் மத அடிப்படையில் மோடியை எதிர்க்கும் நிலையில் பாஜக இந்துத்துவ கட்சியாக இருந்தால் ஈழத்தமிழர்களை காப்பாற்றியிருக்க வேண்டும். அவர்கள் விடுதலையை அங்கீகரித்திருக்க வேண்டும். மாறாக தமிழ் இந்துக்களை தாழ்ந்த இந்துகளாக பாஜக அடிமைப்படுத்தி வைக்கும் போக்கிலேயே அது செயல்படுகிறது. இந்துவாக இருப்பவனுக்கு உலகில் குரல் கொடுக்க ஒரு நாடு கூட இல்லாத ஈனப்பிறவிகள் தான் இந்து தமிழர்கள். பாஜக ஒரு இந்து கபட வேடமணிந்த கட்சி. அது ஒதுக்கப்படவேண்டிய கட்சி.

Anonymous said...

தமிழகத்தில் சிறுபான்மை குழுக்களுக்கு அரசியல் கள பலம் மிகக் குறைவு, ஆகவே தம் புவியியல் தாண்டிய தமை ஒத்த அரசியல் சக்திகளின் ஆதரவை நாடுகின்றனர்.. தமிழ் பார்ப்பனர்களில் பெரும்பான்மையானோர் பாஜக மற்றும் ஜெயலலிதாவின் அதிமுக விரும்பிகளே, சொல்லப்போனால் மத்தியில் பாஜக, மாநிலத்தில் அதிமுக என்போர், துக்ளக் சோ சொல்வது போல.. தமிழ் முஸ்லிம்கள் மற்றும் தமிழ் கிறித்தவர்கள் கடுமையான பாஜக மற்றும் ஜெயலலிதா எதிர்ப்பாளர்களே, காரணம் ஒன்று தான், பாஜக கடந்த 75 ஆண்டுகாலம் நிகழ்த்திய சிறுபான்மை மத விரோத அரசியல் கற்று கொடுத்த பாடங்களே. இது பாஜக தோன்ற முன் அதன் தாய் இயக்கங்களான ஆரிய சமாஜம், இந்து மகா சபை காலந்தொட்டே தொடங்கிய பிணக்கு. ஜெயலலிதா திராவிட அரசியலை தலைமை தாங்கினாலும் அவர்தம் பார்ப்பன விசுவாச கொள்கைகள் தமிழ் முஸ்லிம், தமிழ் கிறித்தவர்களை திமுக மற்றும் காங்கிரஸு சார்பாய் தள்ளிவிட்டுள்ளன. அதே போல தமிழ் தலித்கள் கூட என்றுமே பாஜக மற்றும் ஜெயலலிதா அதிமுக பக்கம் சாய்வதில்லை.. அவர்களின் வாக்கு வங்கியும் அவ்வாறே திமுக பக்கமே.. தமிழ் சூத்திரர்கள் தமிழகத்தில் மெஜராட்டி என்பதால் கொள்கை சார்ந்த நிலைப்பாடு அவசியப்படுவதில்லை, சந்தர்பவாத கூட்டமைப்பே போதுமானது, அது வெறும் பொருலாதார நல நோக்கை கொண்டது. ஆன போதும் கடும்போக்கு மதவாத மற்றும் பயங்கரவாத சக்திகள் தமிழகத்தில் வெல்ல இயலாமல் போனதற்கு காரணம் தமிழ் சூத்திரர்கள் மிதவாத போக்குடையோரையும், தமிழ் சூத்திரர் நலன் காக்கும் திராவிட கொள்கைகளை மென்மையாக பற்றுவோரையும் ஆதரிப்பதே. இலங்கையின் வடக்குத் தமிழ் இயக்கங்கள் முதலில் தாம் இலங்கையர் என்ற கொள்கையில் இருந்தன, அப்போது இந்திய பூர்விகம் கொண்ட பிற தமிழ் மக்களில் இருந்து தம்மை விலக்கிக் கொண்டனர். மலையக தமிழரை விரட்டினார்கள், இந்திய பூர்விகம் / சாயல் கொண்டதால் சோனகரையும், மட்டகளப்புத் தமிழரையும் சேர்த்துக் கொள்வதில்லை.. ஆனால் இலங்கையர் என்ற அடையாளம் உதவாமல் போகவே, தாம் தமிழர் என அரசியலை முன்னெடுத்தனர், ஆனால் இந்திய தமிழர்கள் இந்தியாவை விட்டுக்கொடுக்க தயங்கிதாலும், எதிர்பார்த்த கிளர்ச்சி ஏற்படாது போனதாலும், தமது தாம் இந்துக்கள் என்ற அடையாள அரசியல் நோக்கி நகர்ந்துள்ளனர். இதுவே அவர்களின் பாஜக மற்றும் ஜெயலலிதா ஆதரவுப் போக்கு.. இந்தியாவில் தமிழ் தேசியத்தை முன்னெடுப்போர் யாவருமே இலங்கையில் தமிழ் தேசியத்தை முன்னேடுத்த இயக்கங்களின் வட இலங்கைத் தமிழ் குழுக்களின் தயவில் இயங்குவோரே இன்று.. ஆகவே மோடிக்கு சொம்பு தூக்குகின்றனர்.. ஆனால் தமிழக சூத்திரர்கள் திராவிட மென் அரசியலில் தங்குவரா? அல்லது இந்துத்வம் சார்ந்த தமிழ் தேசியம் என்பதற்குள் புகுவரோ, என்பதை இத்தேர்தல் முடிவுகள் காட்டும்..

Anonymous said...

வியாசனுக்கு என்ன பிரச்சனை தெரியுமா.. இலங்கை முஸ்லிம்கள் விடுதலைப்புலிகளை ஆதரிக்கவில்லையே என்ற ஆதங்கம் தான். அதனால் தான் தமிழ்நாட்டு முஸ்லிம். குஜராத் முஸ்லிம் என கொக்கரித்துக் கொண்டிருக்கின்றார். எப்படியாவது தமிழ்நாட்டிலும் இந்து - முஸ்லிம் பிரிவினையை தூண்டிவிடலாம் என விடுதலைப் புலிகளின் பினாமிகள் முயன்று வருகின்றனர்.

அதற்குத் தான் மோடியின் அடிவருடிகளாக போய் சேர்ந்தும் உள்ளனர்.

தமிழ்நாட்டு முஸ்லிம்கள் தமிழர்களாகவும் முஸ்லிம்களாகவும் தம்மை அடையாளப்படுத்துவோர், உலகளாவிய முஸ்லிம் என்ற வகையில் உலக முஸ்லிம்களுக்கு ஆதரவு தருகின்றனர். தமிழர் என்ற வகையில் தமிழர்களுக்கு ஆதரவு தருகின்றனர். மற்றபடி வேறுபாடுகள் ஏதுமில்லை.

மும்பையில் சிவசேனாக்கள் தமிழரை அடித்து நொறுக்கும் போது, அங்கு தமிழருக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் யார் எனில் முஸ்லிம்கள் தான்..

ஆனால் இந்துக்கள் தமிழர்கள் என்று எந்த ஆரியப் பண்டாரக் கட்சியாவது ஆதரித்தது உண்டா? சிவசேனாவும், பாஜகவும் தமிழர்களை விரட்டியது நினைவில் இருக்கலாம். கருநாடகத்தில் இதே வீர சைவம் பேசும் இயக்கங்கள் தான் தமிழரை அடித்து நொறுக்கியது.

சொல்லப் போனால் இன்று தமிழ் தமிழ் என மாரடிக்கும் இதே யாழ்ப்பாணக் கூட்டம் தான் இலங்கையில் இருந்து தமிழ் வியாபாரிகளையும், தோட்டத் தொழிலாளர்களையும் நாடு கடத்த உதவியது. அப்போது இவர்களுக்கு எங்கே போனது தமிழ் பாசம்.

விடுதலைப் புலிகள் ஒட்டு மொத்த இலங்கையின் சிறுபான்மையினருக்கு போராடவில்லை, மாறாக வடக்குத் தமிழருக்கும் யாழ்ப்பாண மேட்டுக்குடிக்கும் தான் போராடியது.

அதனால் தான் 2001-யில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், உங்கள் தலைவர்களை போய் பாருங்கள் பேசுங்கள் என மலையகத் தமிழர்களையும், முஸ்லிம்களையும் சொன்னார்கள்.

கடைசியில் கொழுப்பெடுத்து அடங்கியதே மிச்சம். இன்று இதே புலிப் பினாமிகள், பாஜக இந்துத்வா சக்திகளையும், தெலுங்கு ஆதிக்க சாதிகளையும், பார்ப்பனர்களையும், சாதிக் கட்சிகளையும் தமிழகத்தில் அமர வைத்து அழகு பார்க்க கங்கணம் கட்டி வேலைப் பார்க்கின்றனர்.

கேட்டால் கருணாநிதி துரோகி, சோனியா துரோகி எனக் கூறிக் கொண்டு..

தமிழ்நாட்டில் வகாபியத்தை எதிர்க்கின்றோம், ஆனால் முஸ்லிம்களை அல்ல, குஜராத் போன்ற கலவரம் இங்கு தோன்ற நாம் விடக் கூடாது. அதே போல பார்ப்பினத்தையும், இந்துத்வா சக்திகளையும், புலிப் பாசிசங்களையும் எதிர்க்க வேண்டும்.. மத அடிப்படைவாதங்கள், தீவிரவாதங்கள் தமிழகத்துக்கு நல்லத்தல்ல.

viyasan said...

//வியாசனுக்கு என்ன பிரச்சனை தெரியுமா.. இலங்கை முஸ்லிம்கள் விடுதலைப்புலிகளை ஆதரிக்கவில்லையே என்ற ஆதங்கம் தான்.///

இலங்கை முஸ்லீம்கள் விடுதலைப்புலிகளை மட்டுமல்ல, ஈழத்தமிழர்களையும் ஆதரித்ததில்லை, அவர்கள் தம்மை தமிழர்களாக அடையாளப்படுத்துவதுமில்லை. அவர்களுக்கு ஆதரவாக, தம்மைத் தமிழர்கள் என்று கூறிக் கொள்ளும் தமிநாட்டு முஸ்லீம்களும், ஈழத்தமிழர்களுக்கெதிராக, ராஜபக்சவை ஆதரிக்கிறார்கள். அது தான் சிங்களவர்களின் சொம்பு தூக்கிகள் எனது கருத்தைத் திரிக்கிறார்கள்.

///தமிழ்நாட்டிலும் இந்து - முஸ்லிம் பிரிவினையை தூண்டிவிடலாம்///

இலங்கையில் கூட இந்து-முஸ்லீம் பிரிவினை கிடையாது. தமிழ்-முஸ்லீம் பிரிவினை தான் உண்டு. :-)

// தமிழ்நாட்டு முஸ்லிம்கள்... தமிழர் என்ற வகையில் தமிழர்களுக்கு ஆதரவு தருகின்றனர்.///

அப்படியானால் ஈழத்தமிழர்கள் தமிழர்கள் இல்லையா? :-)

//சொல்லப் போனால் இன்று தமிழ் தமிழ் என மாரடிக்கும் இதே யாழ்ப்பாணக் கூட்டம் தான் இலங்கையில் இருந்து தமிழ் வியாபாரிகளையும், தோட்டத் தொழிலாளர்களையும் நாடு கடத்த உதவியது. அப்போது இவர்களுக்கு எங்கே போனது தமிழ் பாசம்.///

இதுதான் சிங்களவர்களின் சொம்பு தூக்கிகளின் வேலை. ஈழத்தமிழர்களை யாழ்ப்பாணம், மலையகம், கிழக்கு மாகாணம், இந்து, கிறித்தவர்கள் என்று பிரித்து அறுபதாண்டுகளுக்கு முன்னால் நடந்த சம்பவங்களை நினைவு படுத்தி, தமிழ்நாட்டில் ஈழத்தமிழர்களுக்குள்ள ஆதரவை இல்லாமல் செய்ய வேண்டும். இதுதான் சிங்களச் சொம்பு தூக்கிகளின் வேலைத்திட்டம். இலங்கையில் இருந்து தமிழ் வியாபாரிகளையும், தோட்டத் தொழிலாளர்களையும் நாடு கடத்த “உதவிய” ‘ஒருவருக்கு’ ஈழத்தமிழர் கொடுத்த தண்டனை என்ன என்பதை பின்பு பார்ப்போம். ஆனால் இலங்கையில் இருந்து தமிழ் வியாபாரிகளையும், தோட்டத் தொழிலாளர்களையும் நாடு கடத்திய சிங்களவர்களுக்கு சொம்பு தூக்கும், சொம்பு தூக்கிகளுக்கு “தமிழ்ப்பாசம்” இருக்கிறதா அல்லது அதுவும் காணாமல் போய் விட்டதா?


//விடுதலைப் புலிகள் ஒட்டு மொத்த இலங்கையின் சிறுபான்மையினருக்கு போராடவில்லை, மாறாக வடக்குத் தமிழருக்கும் யாழ்ப்பாண மேட்டுக்குடிக்கும் தான் போராடியது. ///

ஒட்டு மொத்த இலங்கையின் சிறுபான்மையினருக்காக போராடுவதாக விடுதலைப் புலிகள் எப்போதாவது கூறியதுண்டா? விடுதலைப் புலிகள் போராடியது வடக்கு, கிழக்கில் வாழும் இலங்கையின் பூர்வீக தமிழர்களின் பாரம்பரிய மண்ணை மீட்டெடுப்பதற்காகத் தானே தவிர, முஸ்லீம்கள், பறங்கியர், மலே போன்ற இலங்கையில் வாழும் சிறுபான்மையினர் அனைவருக்காகவும் அல்ல. ஆனால் விடுதலைப்புலிகளின் போராட்டம் தான், மலையகத் தமிழர்களின் உரிமைகளைப் பெறவும் அவர்களுக்கு உதவியது என்பதை யாரும் மறுப்பதில்லை.

//அதனால் தான் 2001-யில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், உங்கள் தலைவர்களை போய் பாருங்கள் பேசுங்கள் என மலையகத் தமிழர்களையும், முஸ்லிம்களையும் சொன்னார்கள். ///

இதில் எந்தளவு உண்மையிருக்கிறதோ எனக்குத் தெரியாது, ஆனால் எந்தக் கேள்விக்கு அந்தப் பதில் கொடுக்கப்பட்டது என்பதை கூறவில்லை. முஸ்லீம்களுக்கும், மலையகத் தமிழர்களுக்கும் அவர்களின் அரசியல் தலைமைகள் உள்ளன. அவர்களுக்கு மதிப்பளித்து அப்படிப் பதிலளித்திருக்கலாம். மலையகத் தமிழர்கள் வடக்கு கிழக்கில் குடியேறினாலே தவிர, அவர்களின் அரசியல் பிரச்சனைகள் ஈழத்தமிழர்களின் பிரச்சனைகளிலிருந்து வேறுபட்டவை. அதில் வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் தலைவரகள் தலையிடுவதில்லை. இன்றும் வடக்கு, கிழக்கு அரசியல் கட்சிகள், தென்னிலங்கையில் அரசியலில் ஈடுபடுவதில்லை என்ற உண்மை கூட இவருக்குத் தெரியவில்லை. உதாரணமாக, அண்மையில் நடந்த தேர்தலில் கூட, கொழும்பில் மலையகத் தமிழர் தலைவர் மனோ கணேசனுக்கு தமிழர் தேசிய முன்னணி ஆதரவளித்ததே தவிர, அவர்கள் கொழும்பில் தேர்தலில் போட்டியிடவில்லை.


//இதே புலிப் பினாமிகள், பாஜக இந்துத்வா சக்திகளையும், தெலுங்கு ஆதிக்க சாதிகளையும், பார்ப்பனர்களையும், சாதிக் கட்சிகளையும் தமிழகத்தில் அமர வைத்து அழகு பார்க்க கங்கணம் கட்டி வேலைப் பார்க்கின்றனர்.///

புலி எதிர்ப்புப் பிரச்சாரமாக இருந்தாலும் கூட பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டும். கடைசியில் ஜெயலலிதா தமிழ்நாட்டை ஆள்வதற்கும், பார்ப்பனர்களின் ஆதிக்கத்துக்குக் கூடக் காரணம் புலிகளா? :-)
ராஜ ராஜ சோழனையே தெலுங்கனாக்கி, தமிழர்களின் வரலாற்றைத் திரித்து, தெலுங்கர்களுக்கு வக்காலத்து வாங்கியவர் இப்ப என்னடாவென்றால், தெலுங்கு ஆதிக்க சாதிகளை எதிர்ப்பது போல் பம்மாத்து விடுகிறார். :-)