Wednesday, August 26, 2009

படிக்காதமேதை- விமர்சனம்

சிவாஜி கணேசனை ஏன் நடிப்பில் திலகம்னு சொல்றாங்கனு தெரியுனும்னா நீங்க இந்தப் படம் பார்க்கனும். இவர் நடித்துள்ள "ரங்கன்" என்கிற இந்தக்கேரக்டர் உண்மையாகவே நம் வாழ்வில் சந்திக்கும் ஒரு கேரக்டர்தான். வெகுளியாகவும். நல்லவனாகவும், அதே சமயத்தில் செய்வதெல்லாம் காமெடியாகவும் இருக்கும் ஒரு கேரக்டர். சிவாஜி, அந்த கேரக்டராகவே ஆகிவிடுவார் . இந்தப்படத்தில் அவர் நடிப்பது போலவே தோனாது. அப்படியே ஒரு வெகுளி ரங்கனை பார்ப்பதுபோல இருக்கும்.

ரங்காராவும், கண்ணாம்பாவும் அன்போடும் பாசத்தோடும், உரிமையோடும் ரங்கனை எடுத்து வளர்க்கும் மாமா, அத்தையாக நடித்துள்ளனர்.

ரங்காராவ் நடிப்பில் சிவாஜியையும் ஒரு படி மிஞ்சி இருப்பார் என்றுகூட சொல்லலாம்.

சவுகார் ஜானகி சிவாஜியின் மனைவியாக அழகா, கச்சிதமாக, அருமையாக நடித்து இருப்பார்.

முத்துராமன், அசோகன், டி ஆர் ராமச்சந்திரன், டி பி முத்துலட்சுமி, அப்புறம் நம்ம ஜெ ஜெயின் அம்மா சந்தியா, குட்டி பத்மினி இவர்கள் எல்லாம் சின்ன சின்ன ரோல்ல நடிச்சு இருக்காங்க

இயக்கம்: பீம்சிங்

இசை: கே வி மஹாதேவன்

பாடல்கள் எழுதியது: கண்ணதாசன் மற்றும் பாரதியார்

பாடியது: டி எம் எஸ் (சிவாஜிக்கு)

* உள்ளதை சொல்வேன் சொன்னதை செய்வேன் வேறொன்றும் தெரியாது

* படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு

* சீவி முடிச்சு சிங்காரிச்சு செவந்த நெத்தியில் பொட்டும் வச்சு

* பக்கத்திலே கன்னிப் பெண்ணிருக்கு

* ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா....

இந்தப்பாட்டில் "நன்றிகெட்ட மகனைவிட நாய்கள் மேலடா" னு ஒரு வரி வரும்!!!

* எங்கிருந்தோ வந்தான் இடை சாதி என்றான்

போன்ற நல்ல கருத்துள்ள பாடல்கள் உள்ள படம் இது.

படம் ஆரம்பமும் சரி, கதையோட்டமும் சரி, முடிவும் சரி ரொம்ப நல்லா இருக்கும். ஜாலியா ஆரம்பிச்சு, சீரியஸா ஆகி கடைசியில் சுமூகமாக முடியும். நிம்மதியா தியேட்டரைவிட்டு வெளியே வரலாம்.

9 comments:

blogpaandi said...

good vimarsanam.

வருண் said...

வருகைக்கும் பின்னூட்டதிற்கும் நன்றி ஜோ, & ப்ளாக் பாண்டி! :-)

SUREஷ்(பழனியிலிருந்து) said...

எப்படி இந்த விமர்சனத்தை தவறவிட்டேன் என்று தெரியவில்லை.

கண்ணாம்பா அவர்கள் இந்த வீட்டு வாசலை மிதிக்கவேண்டாம் என்று சொல்லிவிடுவார். தவிர்க்க முடியாத சூழலில் வரும் சிவாஜி பைப்லைனை பிடித்து வீட்டுக்குள் வருவார். அந்தக் காட்சி நகைச்சுவையாக இல்லாமல் நெஞ்சைத்தொடும் வண்ணம் அமைத்திருப்பார்கள்

sarath said...

தெய்வப் பிறவி விமர்சனம் எழுதுங்கள்.

வருண் said...

சரத்:
சமீபத்தில் அந்தப்படம் பார்க்கவில்லைங்க. நிச்சயம் விமர்சனம் எழுத முயற்சிக்கிறேன் :)

வருண் said...

SUREஷ் (பழனியிலிருந்து) said...

எப்படி இந்த விமர்சனத்தை தவறவிட்டேன் என்று தெரியவில்லை.

கண்ணாம்பா அவர்கள் இந்த வீட்டு வாசலை மிதிக்கவேண்டாம் என்று சொல்லிவிடுவார். தவிர்க்க முடியாத சூழலில் வரும் சிவாஜி பைப்லைனை பிடித்து வீட்டுக்குள் வருவார். அந்தக் காட்சி நகைச்சுவையாக இல்லாமல் நெஞ்சைத்தொடும் வண்ணம் அமைத்திருப்பார்கள்

30 August, 2009 9:03 AM***

ரொமப சரியா சொல்லி இருக்கீங்க, சுரேஷ்!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பீம்சிங்+சிவாஜி கூட்டில் வந்த உச்சங்களில் ஒன்று.
படமல்ல வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுத் தந்தவை. நீங்கள் குறிப்பிட்டது போல் ரங்கராவ் சிவாஜியை பல தடவை விஞ்சுவார், இவர் தமிழ்த் திரையுலகுக்குக்குக் கிடைத்த அப்பாக்களில் முதன்மையாகக் என்னைக் கவர்ந்தவர். அன்றைய நாட்களில் ரங்காராவ் நடித்தால் நான் படம் பார்க்கத் தவறமாட்டேன்.
கூச்சமின்றிக் குடும்பத்துடன் பார்க்கக்கூடியவை. தெவிட்டாட இசை, கருத்து மிக்க பாடல்கள்.
அன்றைய நாட்களில் படங்களில் எவ்வளவு நேர்த்தியை நோக்கியுள்ளார்கள். என்பதற்குச் சான்று
இன்றைய தலைமுறை 10 புதியதுடன் 1 பழையது என்றாவது இவற்றைப் பார்த்து இவற்றின் சிறப்பை
உணரவேண்டும்.
தங்கள் விமர்சனம் அருமை.மேலும் தேர்வு செய்து எழுதுங்கள்.

வருண் said...

***யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

1 September, 2009 3:11 AM***

வருகைக்கும், பகிர்தலுக்கும் நன்றி, யோகன் - பாரிஸ்! :)

Sakthi said...

உள்ளதை சொல்வேன் சொன்னதை செய்வேன் வேறோன்றும் தெரியாது.full lyrics kidaikkuma?