Friday, April 1, 2011

எளைய தளபதி விஜய் அதிமுகவுக்கு இன்னொரு பலவீனம்!

இப்போ வெளியே வந்த எஸ் எ சி யின் "சட்டப்படி குற்றம்" பெருங்குப்பையாம்! ஆணானப்பட்ட பாலச்சந்தர், பாரதிராஜா, பாக்யராஜாலேயே இன்னைக்கு தமிழ் சினிமாவில் ஒண்ணும் சாதிக்க முடியலை! அப்படி இருக்கும் நேரத்தில் இந்த வீணாப்போன அரசியல் காமெடியன் எஸ் எ சி என்னத்தை படம் எடுத்துக் கிழிக்க முடியும்?

விஜயோட கசின், விக்ரந்த், மற்றும் சத்யராஜை வச்சு ஏதோ அரசியல் தாக்குதலாக எடுத்து தேர்தலுக்கு முன்னால ரிலீஸ் பண்ணனும்னு அவசரத்தில் வெளியிட்டதால் வெந்தும் வேகாமலும் அரைவேக்காடாக வந்திருக்காம் இந்தப் படம். கொஞ்ச நாள்ல பெட்டிக்குள்ளே போயி உக்காந்துக்கிடுமாம்! என்னவோ உலகத்தில் இல்லாத படத்தோட வந்திருக்கேன்னு ரிலீஸ் பண்ணி கடைசியில் படம் மண்ணைக்கவிடுச்சு, சட்டப்படி குற்றம் இல்லை சட்டப்படி குப்பை!

இதுல எஸ் எ சந்திரசேராவுடன் தமிழ்ப்படத்தில் வாய்ப்பில்லாத சத்யராஜ்ம் சேர்ந்துக்கிட்டு திமுக ஆட்சியில் நடந்த "ஸ்கேம்" எல்லாம் பத்தி பூடகமா விமர்சிக்கராங்கலாம்!

ஆனால் சத்யராஜ் தெளிவாக சொல்லிப்புட்டாரு! அவரு வெறும் ஒரு நடிகராம்! காசுகொடுத்தா என்ன ரோல்னாலும் நடிப்பாராம்!கீழே இருக்கு இவரு சமீபத்தில் உளறிய உளறல்!

புரட்சித் தலைவர் எம்ஜிஆர் முதலமைச்சராக இருக்கும் போதுதான் கலைஞர் வசனத்தில் பாலைவன ரோஜாக்கள் படத்தில் நடித்தேன். அதில் அப்போதிருந்த புரட்சித்தலைவர் அரசுக்கு எதிரான பல விஷயங்களை சுருக்கென்று எழுதியிருந்தார் கலைஞர். அதை பார்த்துவிட்டு என்னை எதுவும் கேட்கவில்லை எம்ஜிஆர். நான் நடித்த அமைதிப்படை அரசியல்வாதிகளை நார் நாறாக கிழிக்கிற படம்தான். அந்த படம் வெளியான நேரத்தில் ஜெயலலிதா மேடம்தான் சிஎம் ஆக இருந்தாங்க. அப்பவும் என் மேல் அவங்க கோபப்படல.

இப்போது இந்த படத்திலும் (சட்டப்படி குற்றம்) நான் அனல் தெறிக்கும் வசனங்களை பேசியிருக்கேன். என்னை பொறுத்தவரை நான் ஒரு நடிகன். அவ்வளவுதான். என் மீது எந்த விமர்சனமும் வராது என்று நம்புகிறேன் என்றார்.


பகுத்தறிவு பேசும் சத்யராஜ், கேவலம் பணத்துக்காக என்ன வசனம்னாலும் பேசுவேன், எவனோட வேணா கூட்டுசேர்ந்து அரசியல் வசனம் பேசுவேன்னு சொல்றாரே, அப்போ சத்யராஜ், பணத்துக்காக, நடிப்புத் தொழிலுக்காக, தமிழின எதிரி ராஜ்பக்சேயாவும் நடிக்கச் சொன்னா நடிப்பாரா?

முண்டம் வருண்!
இப்படியெல்லாம் பகுத்தறிவுவாதிபோல கேள்வி கேக்கப்படாது! கம்முனு கெட!

ஆக படத்தில் வர்ற ஆளுங்கட்சிக்கு எதிரா வர்ற அரசியல் மேட்டருக்கும் சத்யராஜுக்கும் சம்மந்தம் இல்லை! ஸ்ரீகுமரன் தங்கமாளிகைல "ஃபிக்ஸெட் ப்ரைஸ்" கமர்சியல் மாதிரித்தானாம் இதுவும்! சரி விடுங்க!

ஆமா நடிகர் விஜய்க்கு இப்போ என்னங்க பிரச்சினை????

காவலன் மிகப்பெரிய வெற்றினு பிதற்றிக்கொண்டு இருக்கும், விஜயின் உண்மை நெலவரம் என்னனு பார்த்தால்.. நெறையாத்தர சொன்னது போல தாந்தான் பாக்ஸ் ஆஃபிஸ் கிங்னு நெனச்சுக்கிட்டு இருந்த இவர் மனக்கோட்டையை நேத்து வந்த சின்னப்பசங்கல்லாம் தகர்த்து எறிந்துகொண்டு இருக்காங்களாம். அதான் உண்மையிலேயே பிரச்சினையாம்!

பாக்ஸ் ஆஃபிஸை பொறுத்தவரையில் பொங்கலுக்கு வந்த சிறுத்தை, இவர் படம் காவலனை கழுத்தில் கடிச்சு திண்ணுப்புடுச்சாம். இது பத்தாதுனு ஆடுகளம் தரத்தில் காவலனைவிட பெட்டர்னு ஆயிப்போச்சு! தனுஸ் க்ரிட்டிக்ஸ்களிடம் கண்ணா பின்னானு பாராட்டு வாங்கிப்புட்டாராம்! ஆக, காவலன் "அவுட்கம்" வெறும் ஓ கே. அம்புட்டுத்தான்! ஒண்ணும் பெருசா சாதிக்கலை! இதான் இப்போ விஜய்க்கு பிரச்சினை.

இல்லையே ஆளுங்கட்சி அராஜகம் செய்து அவர் படத்தை எல்லாம் கவுத்துறாங்கலாமே????

எந்த ஆளுங்கட்சியும், வெற்றிக்கொடி கட்டு, வருங்காலம் நம்ம கையில்தான்னு பாடினால் அந்த நடிகனை தட்டத்தான் செய்வார்கள்! நம்ம ஜெயா சும்மா இருந்த ரஜினியை வம்புக்கு இழுக்கவில்லையா? இதே ஜெயா நாளைக்கு ஆட்சியை பிடிச்ச பிறகு இதேபோல "நாந்தான் அடுத்த முதல்வர்"னு விஜய் பாடினால் "சப்ரஸ்" பண்ணத்தான் போறாரு.

ஆனால் எதார்த்தமாக தன் படங்களுக்கு அவ்வளவு வரவேற்பு இல்லை, தன்மவுசு குறைவதுக்குக் காரணம் ஆளுங்கட்சிதான்னு நம்புகிறார் இந்த பிறநலவாதி விஜய்! இவர் வாயால வர்ற பிரச்சினைதான் பாதி!

ஆனால் காவலன் ரிலீஸ் பண்ணுற டென்ஷனில்
திமுகதான் என் படங்களை கவிழ்த்துனு வெளிப்படையாச் சொல்லி புலிவாலைப்பிடிச்சுட்டாரு விஜய்! பிடிச்சுட்டு இப்போ ஏன் பிடிச்சோம்னு விஜய் ஒரு மாதிரி அரண்டு போயி இருக்காரு. இன்றைய அரசியலில் திமுக வுக்கு எதிர்த்து கொடிபிடித்தே ஆகனும்னு ஒரு சூழல் விஜய்க்கு உருவாகிவிட்டது! அதனாலதான் விஜயும் அவர் அப்பாவும் அதிமுக வுக்கு ஆதரவு, ஆதரவுனு சொல்லிக்கிட்டு இருக்காங்க!

உங்களுக்குத்தெரியுமா? நமம விஜய், விஜய் மக்கள் இயக்கம்னு ஒரு இயக்கம் வச்சிருக்காராம். ஆனால் அதன் தலைவர் யாரு? ஒருவேளை அவரு அப்பாதானோ? எஸ் எ சி "விஜய் மக்கள் இயக்கம்" தலைவரா இல்லை கொ ப செ வா என்னனு தெரியலை! விஜயோட மக்கள் இயக்கத்தைப் பத்தியும் அதனுடைய தேர்தல் பிரச்ச்சாரம் பத்தியும், விசை எதுவும் சொல்றதுக்கு முன்னாலே அவர் அப்பா வந்து ஏதாவது சொல்றாரு..விஜய் மக்கள் இயக்கம் அதிமுகவுக்கு ஆதராவாம். விஜய் பிரச்சாரம் பண்ணூவாரானு விஜய்தான் சொல்லனுமாம்! ஆனால் இந்த வீணாப்போன விஜய் ரசிகர்கள் யாருக்கு சப்போர்ட் பண்ணனும்னு அவரு அப்பா எஸ் எ சி சொல்லுவாராம்!

Actor Vijay's Makkal Iyakkam to support AIADMK

Special Correspondent

TIRUCHI: Ilaya Thalapathy Vijay Makkal Iyakkam, a people's movement launched by actor Vijay, has decided to support the All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) led front in the Assembly elections.

S.A. Chandrasekar, noted film director and father of actor Vijay, called on AIADMK General Secretary Jayalalithaa at Sangam Hotel here on Sunday noon and informed her about the decision.

Later Mr. Chandrasekar told presspersons that the Iyakkam favoured a political change in the State for its overall development and for the wellbeing of all sections of the society. The Iyakkam is of the firm view that political change is the need of the hour, taking into consideration the happenings in various fronts.

Enormity of violence, price hike and rampant corruption prevailing in the administration were the three reasons that forced the Iyakkam to seek a change of government. “We will highlight all these issues during the campaign,” he said.

The Iyakkam will extend its total support for ushering in such a political change, to enable the AIADMK to capture power and form the next Government under Jayalalithaa.

Responding to a query, Mr. Chandrasekar said the decision to support AIADMK in the elections was not a prelude to the Iyakkam turning into a political movement. “We are not a political outfit. We are not against anybody. We only want a political change in the State now in the interest of the whole society.”

Mr. Chandrasekar said he will soon commence his campaign.

When asked whether Vijay will also campaign for the AIADMK front, he replied that it was for the actor to decide.
* மக்கள் இயக்கம் விஜயின் இயக்கம்! இதில் யாரு உறுப்பினராக இருப்பா? விஜய் ரசிகர்கள் உறுப்பினர்களாக இருப்பாங்க! விஜய் மக்கள் இயக்கத்தைப் பத்தி விஜய்தானே பேசனும்? விஜய் மக்கள் இயக்கத்தைப்பத்தி பேச சந்திரசேகரா யாரு?? விஜய் ரசிகர்கள் என்ன செய்யனும்னு சந்திரசேகரா எப்படிங்க சொல்லலாம்? அப்பானு சொல்லாதீங்க! அதெல்லாம் வீட்டுக்குள்ளதான்! விஜய் ஒரு வளர்ந்த மேஜரான பையன்/"அப்பா" இல்லையா? என்ன எழவுக்குனாலும் இந்தாளுதான் எதையாவது உளறிக்கிட்டு திரிகிறான்! ஒரு வேளை மக்கள் இயக்கத்தில் எஸ் எ சி உறுப்பினரா? இல்லை அதில் செயலாளரா? இல்லை, கொள்கை ப் பரப்பு செயலாளரா? இல்லை இந்த இயக்கமே சந்திரசேகரா உடையதா? இந்த விளக்கங்கள் இன்னும் எனக்கு கிடைக்கவில்லை!

என்னைப்பொறுத்தவரையில் விஜயும் அவங்க அப்பா உளறுவாயி சந்திரசேகராவும் அதிமுகவுக்கு இன்னொரு பலஹீனம்!

ஏன்???

ஒண்ணுமட்டும் கவனிக்கவும்! விஜயை வெளிப்படையா திமுக இதுவரை எந்தவிதமாகவும் விமர்சிக்கவில்லை! காவலன் பிரச்சினையோ, கருமாதி பிரச்சினையோ, இல்லை இந்த சட்டப்படி குப்பைப் படம் பிரச்சினையோ, எல்லாமே மறைமுகமாகத்தான் நடந்து இருக்கு!


அப்படி இருக்கும்போது திமுகவுக்கு எதிரா விஜய் ஏன் பிரச்சாரம் செய்கிறார்?

காவலன் படத்துக்கு வந்த தன் சொந்தப் பிரச்சினைக்காகவா? சட்டப்படிக் "குப்பை" படம் ரிலீஸுக்கு வந்த சொந்தப் பிரச்சினைக்காகவா? சரி, இதையெல்லாம் பிரச்சாரத்தின் போது வெளியிலே சொல்ல முடியுமா? முடியாது! ஏன் முடியாது? இவர்கள் சுயநலம்தான் இதில் தெரியும்!

ஆக விஜயும், விஜயோட வாயி எஸ் எ சி யும், அதிமுவுக்கு சப்போர்ட் செய்வதால், திமுகவை நேரிடையா எதுவும் குற்றம் சொல்ல முடியாது! சும்மா ஆட்சி மாற்றம் தேவைனு இவங்க சொல்வது இவங்க படத்தை ஓட்ட முடியலையேனு வந்த சுயநலம்தான் என்று மக்களுக்குத் தெரியும்! அதனால இவங்க தேர்தல் பிரச்சாரத்தால ஒரு எழவும் ஆகப்போவதில்லை! ஆத்தாவுடைய கட்சி செவிச்சாலும் தோத்தாலும் அதில் இவர்களுடைய காண்ட்ரிப்யூஷன் ஒண்ணுமே கெடையாது!

இப்போ லூசு விஜய்காந்து பண்ணுற பிரச்சாரக் காமெடியை பார்த்துட்டு விஜய், நிச்சயம் பிரச்சாரத்தில் இறங்கமாட்டார்னு நம்புறேன்! பார்க்கலாம்!


8 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

செம அலசல் மக்கா....

எனது வலைப்பூவில்: நமீதா குளியல் வீடியோ TVயில் ஒளிபரப்பு! (18+)

தமிழ்வாசி பிரகாஷ் said...

ஒவ்வொரு விசயத்தையும் புட்டு புட்டு வச்சிருக்கியே...

எனது வலைப்பூவில்: நமீதா குளியல் வீடியோ TVயில் ஒளிபரப்பு! (18+)

Chitra said...

நீங்க வேற..... தி மு க வில் வாரிசுகள், அடுத்து வர ரெடி. அதிமுக வில் இப்போவே நுழைந்து துண்டு போட்டு வச்சா, எதிர்காலத்துக்கு தலைவர் ஆகும் வாய்ப்பு இருக்கும்னு அப்பா முடிவு எடுத்து, மகனை தயார் படுத்துற மாதிரி தெரியுது. எப்படியும் மகனை முதல் அமைச்சர் ஆக்கி விடும் கனவு அவருக்கு. பட ப்ரச்சனை எல்லாம் கண் துடைப்பே.

தங்கராசு நாகேந்திரன் said...

நல்ல அலசல்தான் பாராட்டுக்கள்

குடுகுடுப்பை said...

அடுத்த அரசியல் ரஜினி விஜய்தான்.தன்னுடைய தேவைக்கு மட்டும் குரைக்கும் காவலர்கள்.

VJR said...

கலக்கல்.

ttpian said...

மகளிர் அணி நமீதாவை அனுப்பி புரட்டி,புரட்டி ....

ராவணன் said...

//இப்போ லூசு விஜய்காந்து பண்ணுற பிரச்சாரக் காமெடியை பார்த்துட்டு விஜய், நிச்சயம் பிரச்சாரத்தில் இறங்கமாட்டார்னு நம்புறேன்! பார்க்கலாம்!//

அப்ப அந்த லூசு கருணாநிதி குடும்பத்தை என்ன சொல்வீர்கள்?