Tuesday, June 11, 2013

க்ரிஃபித் ! பகுதி 1- அறிவியல் பகுதி-6

மரபுகுணம் தாய் தந்தையரிடம் இருந்து குழந்தைக்குப் போகிறது என்பதை ஓரளவுக்கு புரிந்துகொண்டாலும், அது எப்படி, அது எந்த மூலக்குறுமூலம் செல்கிறது (டி என் எ அல்லது ப்ரோட்டீன்) என்பது சரியாக விளங்காத காலம், அது.

அந்த கால கட்டத்தில் ஃப்ரெட்ரிக் கிரிஃபித் னு ஒரு ஆராய்ச்சியாளர். நிம்மோனியா என்கிற வியாதியை உருவாக்கும் பாக்டீரியா பத்தி ஆராய்ச்சி செய்துகொண்டு இருந்தாராம். அப்போ அவரிடம் ரெண்டு விதமான நிம்மோனியா உருவாக்கும் பாக்டிரியா இருந்ததாம்.

அது ரெண்டும் எப்படி வேறுபடுதுனு பார்ப்போம்..

நிம்மோனியா-பாக்டீரியல் ஸ்ட்ரைன் ஒண்ணு:

 இந்த பாக்டீரியல் ஸ்ட்ரைனை  மைக்ராஸ்கோப் மூலம் பார்த்தால், இது கொஞ்சம்  கரடு முரடாத் தெரியுமாம். 

He called this as ROUGH STRAIN. 

கரடுமுரடா இருந்தாலும், இந்த பாக்டீரியல் ஸ்ட்ரெயினால், அது உட்செல்லும்  விலங்கை கொல்ல முடியாது!!! அதற்கு காரணம் என்னனா.. அந்த பாக்டீரியா இன்னொரு விலங்கின் உடம்பில் சென்று, அதன் ரத்தத்தில் கலந்த உடன், பாக்டீரியா தன் இனத்தை இனப்பெருக்கம் மூலம் பெருக்கமுடியாமல் அதனை அந்த விலங்கின் எதிர்ப்பு சக்தி, அடித்து நொறுக்கி கொல்ல முடியும். அதாவது நம் உடம்பில் உள்ள எதிர்ப்பு சக்தி இந்த பாக்டிரியல் ஸ்ட்ரைன், நம் செல்லுக்குச் சென்று, தன் வேலையை ஆரம்பிக்குமுன்னே, எளிதில் கொன்றுவிட முடியும். சரியா? இந்த பாக்டீரியல் ஸ்ட்ரெய்ன்  பார்க்க கரடு முரடா இருந்தாலும், இந்த பாக்டீரியல் ஸ்ட்ரெயினால் அது உள்நுழையும் விலங்கை கொல்ல முடியாது.

இன்னும் புரியலையா?

பொதுவாக பாக்டீரியா, வைரஸ் எல்லாம் என்ன செய்யும்னா...

 நம்ம உடம்புக்குள்ள போயி ரத்தத்தில் கலக்கும். கலந்து நம்ம செல் க்கு உள்ள போயி, அவைகளுக்கு, அவைகளுடைய செல்லுக்குத்தேவையான எல்லா மூலக்கூறுகளையும் நம்ம செல்லை வச்சே உருவாக்கும்! அப்படி உருவாக்கிய அதையெல்லாம் வச்சு அதைப்போல இன்னொரு பாக்டீரியாவை உருவாக்கும். மேலும் எந்த செல்லில் இதை எல்லாம் செய்ததோ அந்த செல்லையும் கொன்றுவிடும். இதுபோல் பல ஆயிரக்கணக்கான பாக்டீரியாக்களை உருவாக்கி, நம்ம செல்களைஎல்லாம் கொன்னுடும், கடைசியில் நம்ம செல் எல்லா செத்ததனால் நம்மளயும் கொன்னுபுடும்.

ஆனால் அது போல் பாக்டீரியா உள்ள நுழைந்து இனப்பெருக்கம் செய்ய முயலும்போது..அதை நம்ம உடலில் உள்ள எதிர்ப்பு சக்தி தடுக்க முயலும். எப்படி? 

அதுக்கு தேவையான மூலக்குறுகளை உருவாக்க தடைகள் ஏற்படுத்தி! அப்படி நம்ம எதிர்ப்பு சக்தியால் முடியலைனா, நம்ம ஏதாவது ஆண்ட்டிபயாட்டிக் எல்லாம் சாப்பிட்டு அதை கொல்ல முயலுவோம். நம் எதிர்ப்பு சக்தியால் முடியாததை நம்ம சாப்பிடுற ஆண்ட்டி பயாட்டிக் செய்து சாதிக்கும். அதுவும் நம்ம உடம்பில் உள்ள எதிர்ப்பு சக்தி செல்களால் முடியலைனா, நம்ம கடவுளைப் போயி பார்க்க வேண்டியதுதான்- செத்தபிறகு!

சரி, இந்த கரடுமுரடான பாக்டீரியாவை எளிதில் நம்ம உடம்பு கொன்னுபுடும்.

 எக்ஸ்பெரிமெண்ட் 1:

ஒரு எலிக்கு இந்த பாக்டிரியாவைக் கொடுத்தால் என்ன ஆகுதுனு கீழே பாருங்க!

கீழே உள்ள எலி படத்தில் இடது கோடியில் உள்ளதைப் பாருங்க!  எலி இன்னும் உயிரோட இருக்கு! சரியா?






 

நிம்மோனியா-பாக்டிரியல் ஸ்ட்ரைன் ரெண்டு!

இது என்னனா, நிம்மோனியாவை நமக்குக் கொடுக்கும் இன்னொரு வகை பாக்டீரியா. இது பார்க்க ரொம்ப அழகா, சாஃப்ட்டா இருக்குமாம் (மைக்ராஸ்கோப்ல பார்க்கும்போது). 

He called this as SMOOTH STRAIN! 

ஆனால், இந்த பாக்டீரியா செல்லுக்கு ஒரு "பாதுகாப்புக் கவசம்" ஒண்ணு இருக்குமாம்! 

அது என்ன அது "பாதுகாப்புக் கவசம்"? 

இந்த பாக்டீரியல் டி என் எ மற்றும் ப்ரோட்டின்களை வைத்திருக்கும் செல்களை ஒரு "பாலி சாக்கர்ரைட்" "என்வெலப்" சுத்தி இருக்குமாம். அப்படி இருப்பதால், நம்ம எதிர்ப்பு சக்தி இந்த பாக்டிரியா செய்கிற இனப்பெருக்கத்தை தடுக்க முடியாதாம். ஆகையால், இந்த பாக்டீரியாவுக்குத் தேவையான, டி என் எ, ப்ரோட்டீன் எல்லாவற்றையும் நம்ம செல்லை பயன்படுத்தி தயாரிச்சு, நம்ம செல்லை எளிதில் கொன்னுபுடுமாம்! அப்படி இனப்பெருக்கம் செய்து நம்ம செல்லை எல்லாத்தையும் அழிச்சு நம்மளயும் கொன்னுபுடுமாம்! 

  எக்ஸ்பெரிமெண்ட் 2:

ஒரு எலிக்கு இந்த பாக்டிரியாவைக் கொடுத்தால் என்ன ஆகுதுனு கீழே பாருங்க!


கீழே உள்ள எலி படத்தில் இடது கோடியில் இருந்து ரெண்டாவது உள்ளதைப் பாருங்க! அந்த எலி இறந்து விடுகிறது! சரியா?




 இப்போ இதுவரை என்ன ஃப்ரெட்ரிக் க்ரிஃபித் எக்ஸ்பெரிமெண்ட்ல இருந்து  கத்து இருக்கோம்?

ஒரு முறை விவியூ பண்னுவோம்..

* நிம்மோனியா உருவாக்கும் ரெண்டு பாக்டீரியா வைத்திருந்தார் நம்ம க்ரிஃபித்.

* அதில்  பாக்டீரியா ஒண்ணு... பார்க்க கரடுமுரடா இருக்கும். ஆனால் அதை எலியோ, நாமோ எளிதில் "டாக்கிள்" செய்து நம் உடம்பில் உள்ள எதிர்ப்பு சக்தியை வச்சு ஒழிச்சுடலாம். அதனால் அந்த பாக்டீரியல் ஸ்ட்ரெய்ன் ஹார்ம்லெஸ்!


* இன்னொரு வகை பாக்டீரியா ரெண்டு, பார்க்க அழகா சாஃப்ட்டா இருக்கும். அதுமட்டுமல்ல, இந்த பாக்ட்டீரியா செல்களை சுத்தி ஒரு "பாலிசாக்கரைட்" (கார்போஹைட்ரேட், க்ளுக்கோஸ்மாரி பல மூலக்கூறு ஒண்ணு சேர்ந்த) "கவசம்" இருக்கும். அதனால, இந்த பாக்டீரியா நம்ம எதிர்ப்பு சக்தியை எல்லாம் கடந்து போயி, நம்ம செல்லில் நுழைந்து, நம்ம செல்லை பயன்படுத்தி, தன் சந்ததிகளை உட்ருவாகி நம் செல்களை கொன்னுபுடும். கடைசியில் நம்மளும் போய் சேர்ந்துவிடுவாம்! இது ஒரு ஹார்ம்ஃபுள் பாக்டீரியா!

இப்போ பாக்டீரியா ஒண்ணு எப்படி இருக்கு பாருங்க!

 கீழே இடதுபக்கம் உள்ளது (அதனுடைய மேல்ப் பகுதி கரடுமுரட்ட இருக்கா? ஆனால் இது ஹார்ம்லெஸ்)

பாக்டீரியா ரெண்டு எப்படி இருக்குனு பாருங்க!

கவசம் போட்டது எப்படி இருக்கும்னு பாருங்க.! வலது பக்கம் உள்ளது. இது ஹார்ம்ஃபுள்)

 
கிரிஃபித் எக்ஸ்பெரிமெண்ட், முதல்ப்பகுதிதான் பார்த்து இருக்கோம். ரெண்டாவது பகுதியை அடுத்த பதிவில் பார்ப்போம்.

-தொடரும்

தொடர்புடைய பதிவுகள்! 

6 comments:

Unknown said...

வணக்கம்...!!!
உங்க பதிவு நல்லா இருக்கு. ஆனா, பதிவு நல்லா சுவாரஸ்யமா போயிட்டு இருக்கும்போது நிறுத்திட்டிங்க. இப்படி சொன்ன மேட்டரோட அறிமுகம் கூட முழுசா முடிக்காம நிறுத்தினா எப்படி ? தயவு செய்து சொல்றது சின்ன விசயமா இருந்தாலும் முழுசா சொல்லி நிறுத்துங்க.

வருண் said...

எனக்கே இங்கே நிறுத்த கஷ்டமாத்தான் இருந்துச்சுங்க. ஆனால், எல்லாரும் உங்களைப் போல ஓரளவுக்கு இதில் பின்புலம் உள்ளவங்க இல்லங்க. அதனால, காம்ப்ளெக்ஸ் பகுதியை அடுத்து சொல்லலாம்னு நெனச்சு விட்டுவிட்டேன். மேலும், க்ரிஃபித் எக்ஸ்பெரிமெண்டின் கடைசிப் பகுதியை எப்படி விளக்கி புரிவைக்கிறதுனு வேற யோசிச்சுக்கிட்டு இருக்கேன்.

"தடங்களுக்கு வருந்துகிறேன்" னு சொல்லி உங்ககிட்ட இருந்து தப்பிச்சுப் போறேன், இப்போ! :)

கவியாழி said...

அவ்வளவு ஆபத்தான நோயா? படங்களும் விளக்கமும் அருமை

கரந்தை ஜெயக்குமார் said...

படங்களும் விளக்கமும் அருமை

வருண் said...

****கவியாழி கண்ணதாசன் said...

அவ்வளவு ஆபத்தான நோயா? படங்களும் விளக்கமும் அருமை***

வாங்க கவிஞாழி!

இன்றைய காலகட்டத்தில் ஆண்ட்டிபயாட்டிக் எல்லாம் கண்டுபிடிச்சுட்டாங்க. அப்போ இது ஒரு பெரிய வியாதிதான்.

எலிகளை பலிகொடுத்துத்தான் இதைப்பத்தி தெரிந்து கொள்ளணும்னு சாகவிட்டு வேடிக்கை பார்க்கிறாங்க. :(

வருண் said...

***கரந்தை ஜெயக்குமார் said...

படங்களும் விளக்கமும் அருமை***

உங்க ஊக்குவிப்புக்கு நன்றிங்க, ஜெயக்குமார்!