Wednesday, July 24, 2013

ஆமா சங்கர் ராமன் கொலை வழக்கு என்னாச்சு?

என்ன? சங்கர் ராமனா? யாரது? அந்த ப்பார்ப்பனரா? வெட்டிக்கொன்னு புட்டாளே? ஆமாங்காணும் சாக்ஷாத் அவாளேதான்!  ஒண்ணு தெரிஞ்சுக்கோங்காணும்! இந்து மதம்னு வந்துடுத்துனா, பார்ப்பான், பார்ப்பானைப் பத்தியே கவலைப் படமாட்டான்! மதத்தை புனிதமாக்க, பார்ப்பன மத குருவை காப்பாத்த,   சங்கர் ராமனை என்ன யாரை வேணா பலிகொடுப்பானுக, பார்ப்பானுக! "என்ன இப்படி வாய்தாமேலே வாய்தானு போயிண்டு இருக்கே" இதைப் பத்தி எதுவுமே பேசாமல் பொத்திக்கிட்டு இருப்பாணுக!

ஆமா உனக்கென்ன பார்ப்பான் மேலே அக்கறை? நாங்க பார்ப்பனர்கள் அடிச்சுக்குவோம், திராவிட கைக்கூலிகளை வச்சு வெட்டு குத்து எல்லாம் நடத்துவோம்!  ஏன் கொலைகூட செய்வோம்! அது எங்க பார்ப்பானுகளுக் குள்ள உள்ள பிரச்சினை! உனக்கென்ன அப்பாவிப் பார்ப்பான் மேலே அக்கறை?

என்ன இப்படி சொல்றேள்? இந்த அடாவடித்தனத்தை, கொலை பாதகத்தை எல்லாம் பார்த்துண்டு இருக்க பகவான் நம்ம கிருஷ்ண பரமாத்மா கோவிச்சுக்க மாட்டாளா? என்ன செய்றான் நம்ம பார்ப்பான் வாய்கிழ்யப் பேசும் சோ ராமசாமி? னு பகவான் வருத்தப் படமாட்டாளா?

கருணாநிதிக்கும் கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ள நம்ம ஜெயேந்திரப் பண்டாரத்துக்கும் ஏதோ "டீல்"னு சொன்னா! இன்னுமா அதையே சொல்லிண்டு இருக்கப் போறேள்? ஆட்சிதான் மாறிடுத்தேடா அபிஷ்டு!ஆமா தமிழ்நாட்டை ஆளும் பாப்பனர் ஜெயலலிதா ஏன் பார்ப்பான சங்கர் ராமன் கொலை வழக்கை துரிதப் படுத்த ரொம்பவே யோசிக்கிறா? சங்கர் ராமன் கொலை வழக்கு இப்படி இழுத்துக்கிட்டே போகுதேனு கவலைப் படுற ஒரு பார்ப்பனை காட்டு பார்ப்போம்??முடியாது! 

பார்ப்பானுக மூளையே ஒரு மாதிரித்தான் வேலை செய்யும்! மதவெறியில்லாதவாயெல்லாம் அதைப் புரிஞ்சுக்கிறது ரொம்ப ரொம்ப கஷ்டம்! மதத்தைக் காப்பாத்த, கொலை என்ன, மாமாவேலைகூட செய்வானுக! உலகிலேயே அடி முட்டாள்கள்னா, மதம் தலைக்கேறி, மதவெறிபுடிச்சு அலையும் இவனுகதான்! இவனுக எல்லாத்தையும் கொண்டுபோயி ஏதாவது ஒரு "சொர்க்க தீவு" ல விட்டுப்புட்டா நம்ம  நாடு உருப்படும்! முட்டா திராவிடனுகள் எல்லாம், இவனுகளால மூளைச்சலவை செய்யப்படாமல் ஒழுங்கா சிந்திக்க ஆரம்பிச்சுருவானுக!

என்ன செய்றது?  பார்ப்பானுக வாழ்கிற இந்தியால பொறந்து வீணாப் போயிட்டோம்! ஒரு பக்கம் பார்ப்பானுக அக்கப்போரு! இன்னொரு பக்கம் கோயில்கள் வளர்த்துவிட்ட பிச்சைக்காரர்கள் தொல்லை! ஊழல்! பொறுப்பில்லாத மக்கள்! மட்டமான அரசியல்வாதிகள்! சாதிக் கொடுமை! தெருவெல்லாம் குப்பை! அங்கே இங்கே வெறிநாயும் சொறிநாயும் திரியுது!
ஏன் நம்ம இப்படி இருக்கோம்?

ஏன் அமெரிக்காபோல், ஜெர்மனிபோல, ஜாப்பான் போல ஏதாவது பார்ப்பான் இல்லாத நாட்டிலே பொறந்து  இருக்கக்கூடாதா? நம்மாள ஏன் எதுவுமே   பெருசா சாதிக்க முடியலை! 1.2 பில்லியன் மக்கள் தொகை! ஆனால் ஒரு கால்ப்பந்து போட்டியில் உலகக் கோப்பை போட்டியில் தகுதி பெற வக்கில்லை! க்ரிக்கட் க்ரிக்கட்னு அதையே கட்டி அழறோம்?

சரி, இந்தியாவை பார்ப்பானுக பார்த்துக்குவானுக, நம்ம  உலக நடப்பை பார்ப்போம்னு பார்த்தால்..இந்தியா சொர்க்கம் என்பது போல் ஒரு செய்தி!

ஸிம்பாப்வே னா என்ன தெரியும் நமக்கு? அந்தக் காலத்தில் ஸிம்பாவேக்கு எதிராக 175 நாட் அவ்ட் நம்ம கபில்தேவ் அடிச்சு இந்தியா மானத்தை காப்பாத்தி உலகக் கோப்பை வெல்ல வழிவகுத்தாரு! அம்புட்டுத்தான்!

அங்கே உள்ள வாழ்க்கைத்தரம் தெரியுமா? கீழே உள்ள செய்தியை படிங்க!

Women charged $5 per scream while giving birth

The Washington Post has spotted an almost too-hard-to-believe nugget from an international report on corruption: A hospital in Zimbabwe charges women $5 for every time they scream during labor.
In theory, it's to curb "false alarms," but it's really about "separating mothers from their money," writes Max Fisher.
NEWSER: This exists: Cola-flavored wine
Zimbabwean hospitals also typically charge a $50 delivery fee, which may not sound like much until you realize it amounts to a third of an average citizen's yearly income, says Transparency International. That helps explain why so many women opt to give birth at home, and why the United Nations estimates that eight Zimbabwean women die each day in childbirth.
The overall report also found that 1 in 4 people paid a bribe last year.
Newser is a USA TODAY content partner providing general news, commentary and coverage from around the Web. Its content is produced independently of USA TODAY.

என்ன? இந்தியா எல்லாம் எம்பூட்டோ பரவாயில்லைனு ஆறுதல் அடைஞ்சிக்கிட்டு குப்பைமேலே நின்னுக்கிட்டு மறுபடியும் இந்தியப் பெருமை பேசுங்க! சங்கர் ராமன் ஆவியை ஏதாவது இப்படி பெருமை பாடி தூங்க வைங்கோ!

Sunday, July 21, 2013

யோகா, தியானம் செய்றவாளுக்கு அற்ப ஆயுசாமே?!

பகவத்கீதை படிங்கோ! யோகா பண்ணுங்கோ! தியானம் பண்ணுங்கோ! கெட்ட சிந்தனைகளை எல்லாம் தூக்கி குப்பையில் எறிங்கோ! இப்படி எல்லாம் அறிவுரை சொல்றவாள நீங்களும் பார்த்து இருக்கலாம். பொதுவா இளவயதில் எல்லா அயோக்கியத்தனமும் செஞ்சுட்டு சாவு பயம் வந்ததும்தான் இதுமாரி தத்துவம் எல்லாம் பேசுவா!

சரி, அப்படியெல்லாம் செய்தால் என்னாங்காணும் ஆகும்?னு கேட்டால்  என்ன சொல்லுவா?

* நீண்ட ஆயுள் உனக்குனா?

* இல்லைனா நிம்மதியா சீக்கிரம் போய் சேர்ந்துடுவனா???

என்ன இப்படி ஒரு சந்தேகம், உமக்கு? ணு கேள்வி கேட்காமல் பதிலை சொல்லுங்காணும்!

உலகில் இன்று நடப்பதென்ன? எல்லாமே அரைக்கிணறு தாண்டுறதுதான்.

ஒரு சிலர், எனக்கு ரத்தக் கொதிப்பு இருந்துச்சு (எப்படி கண்டு பிடிச்ச? ஹோமியோபதிக்காரன் சொன்னானா?), நான் மாமிசம் சாப்பிடுறதை நிறுத்தினேன், தியானம் பண்ணினேன், யோகா பண்ணினேன்  எல்லாம் போயிடுச்சுனு சிலவருடங்களோ மாதங்களோ சாப்பிட்டுக்கிட்டு இருந்த மாத்திரையை நிறுத்திடுறாங்க! ஆனால் "அல்லொப்பதி"ப் படிப் பார்த்தால் ஒரு சில மாதங்கள் இந்த மருந்தினை எடுத்துவிட்டால் அதன் பிறகு வாழ்நாள் பூராம் அதே மருந்து இல்லைனா அதேபோல் இன்னொரு மருந்தை சாப்பிடணும் என்பதே விதி!

நம்மாளு சாப்பிட்டுக்கிட்டு இருந்த மாத்திரையை நிறுத்தி கொஞ்சநாள் ஒழுங்கா வண்டி ஓடும். அப்புறம் மறுபடியும் திடீர்னுஒரு நாள் வேர்த்துக் கொட்டுச்சு, மூச்சுவிட முடியலை, என்னவோ பண்ணுதுனு ஹோமியோபதி டாக்டரிடம் போகாமல், அல்லோப்பதி வைத்தியரிடம் நம்பிக்கையே இல்லாமல் போய் நிக்கிறது. போனால், அவன் சொல்லுவான் "உனக்கு இதயத்திலே ஆர்ட்டரில 95% ப்ளாக்கேஜ் இருக்கு, ஆஞியோ ப்ளாஸ்ட்டி செய்யணும்" னு. நான் மாமிசம் சாப்பிடுற்து இல்லையே? யோகா பண்ணுறேன்! தியானம் பண்ணுறேன்! னு ஒப்பாரி வைக்கிறது! அதானல என்ன? என்ன எழவை சாப்பிட்டயோ, என்ன பண்ணினயோ, உனக்கு ஆர்ட்டரில 95% ப்ளாக்கேஜ் இருக்குடா முண்டம்!னு சொல்லுவான் அவன்!

உடனே அல்லோப்பதி வைத்தியப்படி, ஆஞ்சியோ ப்ளாஸ்ட்டி  பண்ணிப்புட்டு மறுபடியும் அல்லோப்பதி மருந்தை சாப்பிட்டுக்கொண்டு அவர்கள் லட்ச லட்சமா பில்லைப் போட்டுட்டாங்கனு திட்டிண்டே அலையிறது.

இதுபோதாதுனு சில அரைவேக்காடுகள், பதிவுலகில் மற்றும் பிற இடங்களில் வாய் கிழிய பிரசங்கம்! அதான் யோகா, ஹோமியோபதி, தியானம் மண்ணாங்கட்டிணு வியாக்யாணம் பேசுறது!  எல்லாம் தெரிந்த பெரிய புடுங்கிமாதிரித்தான் பேசுவாணுக. ஆமா, ஹார்ட் அட்டாக் வர்ர வரைக்கும்! ஆனால் உண்மையில் "இவனுக"  என்ன பண்ணுறாணுகனு பார்த்தால் ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் என்றுதான் போயிக்கிட்டு இருக்கும். மனசாட்சியை எல்லாம் பகவான் கிருஷ்ணனுக்கு காவு கொடுத்துடுவாணுக! மனசாட்சியே இல்லாமல், வாய் கிழிய, யோகா பண்ணு, மூத்திரத்தைக் குடி, பகவத்கீதை படிணு ஊருக்கு உபதேசம். இதில் நம்ம கடவுளா வாழ்ந்து செத்த சத்ய சாய்பாபாகூட விதிவிலக்கு இல்லை!

நான் சொல்ல வர்ரது என்னனா..

இந்த மண்டுகள் சொல்வதுபோல யோகா பண்ணி, தியானம் பண்ணி வாழ்றவனும் பலர் அற்ப ஆயிசுல போயிடுறான் என்பதே உண்மை!

இல்லைனு எவனாவது தில்லு இருந்தா சொல்லு பார்ப்போம்!

இங்கே கவனி!

உன்னைத்தான்!!! யோகா, தியானம்னு அலையிறவனா நீ? அப்போ கவனி!

* ஒழுங்கா மரியாதையா வருடம் ஒருமுறை physical check up, பண்ணித் தொலை! ஹோமியோபதிக்காரனிடம் இல்லை! அல்லோப்பதி வைத்தியனிடம் போயி! அப்போத்தான் யோகா எப்படி உதவுதுனு தெரியும்! சரியா?

 * மரியாதையா லைஃப் இன்சூரண்ஸ் ஒரு நல்ல தொகைக்கு செய்து வை. அப்புறம் போயி யோகா பண்ணு இல்லைனா காம சூத்திரம் படி, என்ன கருமாந்திரத்தை வேணா பண்ணு! 

புரியுதா?

Friday, July 19, 2013

23 குழந்தைகள் பரிதாப சாவு! மதிய உணவில் கலந்த விஷம் என்ன?


பீஹாரில் மதிய உணவு சாப்பிட்ட 23 குழந்தைகள் பரிதாபமாக இறந்ததாக செய்தி. என்ன காரணம் என்று யாருக்காவது விபரம் தெரியுமா?

 New Delhi/Patna: The forensic report on Bihar mid-day meal deaths is expected to be out on Friday even as the toll climbed to 23.

Union Minister for Human Resource Development M M Pallam Raju said the Centre is awaiting the forensic report to know the reason why "food was contaminated" causing deaths in a school in Bihar's Saran district.

Children in many other schools in the state have, meanwhile, as per reports, refused to eat the food provided as part of mid-day meals, saying their parents had asked them to stay away from such meals.

Police have yet to make any arrests in the case as the headmistress of the Chhapra school, Meena Devi, who has been named in the FIR, is on the run.

Jolted by the tragedy, the Bihar government is set to issue stringent instructions for quality check and improving infrastructural facilities.

“The notice for strict quality check of food served under mid-day meal scheme in schools across Bihar will be issued,” R Lakshamanan, director, mid-day meal programme, said.

He said inquiries into the Saran tragedy have revealed that standing orders like quality check of food and its maintenance by teachers and cooks were not observed in the Dharmasati Gandavan Primary School.

Lakshamanan said notwithstanding the ‘mishap’ at Chhapra and another at Madhubani on Wednesday in which 50 children fell ill, the mid-day meal scheme is continuing in other schools but with extra precaution.

He, however, admitted that in many schools children are refusing to take food packets provided to them under the programme.

The mid-day meal scheme, a flagship programme of the Central government, covers 70,000 schools of the state providing food to 1.25 crore children.



Bihar mid-day meal tragedy: Forensic report to be out today
மதிய உணவு சாப்பிடும் ஏழைக்குழந்தைகளைப் பார்த்தாலே கண்ணில் நீர் வருகிறது! அதில் விஷம் கலந்து கொடுத்து இருக்கார்கள்!


அதைவிட வேடிக்கை என்னவென்றால், அந்தப்பள்ளியின் பேராசிரியை தலைமறைவாகிவிட்டாராம்!!!

ஏழைக் குழந்தைகள், பரிதாபமாக கொல்லப்பட்டு இருக்கிறார்கள். இதில் தவறு செய்தவர்கள் இந்திய ஜனநாயகத்தில் தண்டிக்கப்படுவார்களா?

நான் படித்தவரைக்கும், சமையல் எண்ணெயில் பூச்சுக்கொல்லி மருந்து கலந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. அதாவது பூச்சிக்கொல்லி மருந்துபயன்படுத்திய ஒரு குடுவையை சரியாகக் கழுவாமல் அதில் எணெணெய் ஊற்றி வைத்திருந்ததாகவும், அந்த எண்ணெய்யை சமையல் செய்ய பயன்படுத்தியதாகவும் சொல்லப்படுகிறது.

இது உண்மை என்றால்..

சாரின் என்னும் விஷம். பூச்சுக்கொல்லி மருந்து



அந்தக்குழந்தைகள் பரிதாபமாக இறந்து இருப்பார்கள். சமீபத்தில் "chemical warfare" பற்றி கொஞ்சம் விரிவாகப் படித்துக் கொண்டு இருந்தேன். அதாவது sarin எனப்படும் வேதிப்பொருள், கெமிக்கல் ஏவுகணையாக பயன்படுத்தப் பட்டது என்றும், அதை பூச்சுக்கொல்லி மருந்தாக பயன்படுத்துவதாகவும் சொல்லப்பட்டு இருந்தது.

"சாரின் எப்படி விஷமாக செயல்படுது, அது உடலில் எப்படி "Acetyl choline" என்னும் "neurotransmitter"ரை குழப்பத்தில் உண்டாக்கி அதை உட்கொண்டவர்கள்களை (பூச்சிகளை) கொல்லுகிறது என்று நினைத்துப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது.

இன்று பிஹாரில் நடந்த இந்த பரிதாப சாவுகளைப் பார்த்தால்.. சாரின் போன்ற ஒரு விஷம் கலந்து அதுதான் உண்மையில் குழந்தைகள் உயிரிழப்புகளுக்குக் காரணம் என்று தோணுகிறது.

 "Acetyl choline" மற்றும் "neurotransmitter" மற்றும் பூச்சுக்கொல்லி மருந்து எப்படி பூச்சிகளை கொல்லுகிறது பற்றி பின்னால் நேரமிருந்தால் பார்ப்போம்.

இப்போதைக்கு, எப்படி இந்தக்குழந்தைகள் சாப்பாட்டில் விஷம் கலந்தது என்று கண்டுபிடித்து, இந்தக்குழந்தைகளை பரிதாபமாக கொன்றவர்களுக்கு விரைவில் தக்க தண்டனை கிடைக்கிறதா என்பதைப் பார்ப்போம்!

Monday, July 15, 2013

ஒழிந்தது சனியன்! ஹாப்பி இன்று முதல் ஹாப்பி!

அவன் அவன் பிரச்சினை அவன் அவனுக்கு. இளவரசன் ஏன் தற்கொலை செய்தான்? ஒருவேளை இது கொலையா இருக்குமோ? அதான் இல்லைனு ஒரு போஸ்ட்மார்ட்டம் இல்லை ரெண்டு சொல்லிருச்சே! திவ்யா இனிமேல் சந்தோஷமாக வாழ்வாளா?  இதெல்லாம் என் பிரச்சினையா என்ன? எவன் எப்படிப் போனா நமக்கென்ன? எல்லாம் பகவான் செயல். பகவானும் அவனை கட்டி அழறவாளும், சாதியையும் இந்தக் கருமத்தையும் கட்டி அழட்டும்! நம்ம பொழைப்பைப் பார்ப்போம்!

நம்ம பிரச்சினை இந்த "ஸ்பைவேர்"! அதான்  "ஐ மீட்ஸு டாட் காம்" ரீடைரெக்ட் ஸ்பைவேர்!! தளத்துக்கு வர்ர நாலு பேரையும் எரிச்சலைக் கிளப்பி ஓடவைக்கும் இந்த எழவை ஒழிக்கணும்!

* எங்கேயிருந்துடா இந்த எழவு வந்துச்சு?

* ஒரு சில பேரு நானே வேணும்னே இப்படி ஒரு சைட்டை புதைத்து வைத்து சம்பாரிக்கிறேன்னு நெனச்சாலும் நெனைப்பானுக! :-)))

சரி, எங்கேயிருந்து இந்த எழவு வந்துச்சுனு கூகில் பண்ணினால் ஒரு பயலுக்கும் இந்தப் பிரச்சினை இருப்பதாகத் தெரியவில்லை! இந்தத்தளத்தைத் தவிர இன்னொரு தளத்தில் இந்தப் பிரச்சினை வந்ததாக மட்டும் தெரிந்தது.

அந்தம்மாவும் ஒப்பாரி மேல் ஒப்பாரி வச்சுட்டு எப்படியோ இந்த எழவை ஒழிச்சுக்கட்டிப்புடுச்ச்சுனு சொல்லியிருக்கு! இருந்தாலும் தெளிவாக சொல்லாததால எனக்கு எப்படி இதை ஒழிக்கிறதுனு சரியாகத் தெரியவில்லை.

அப்புறம் கொஞ்சம் யோசிச்சுப்பார்த்தால்தான் என்ன பிரச்சினைணு தெரிஞ்சது,

 "ஃப்ரீயூசர்ஸாண்லைன்.காம்"க்கும் "ஐமீட்ஸ்யுடாட்காம்"க்கும் ஏதோ டீல்னு.

அப்புறம் என்னுடைய சைட்டை கவனிச்சுப்பார்த்தால், இந்தத் தளத்தில் எத்தனைபேர் இருக்கிறா னு கண்டுகொள்ள ஒரு கவுண்டர் இணைத்து இருந்தேன். எத்தனை பேர் வந்து வாச்சிண்டு இருக்கானு சொல்லும் அந்தக் கவுண்டர். அது எங்கே இருந்து எடுத்து வந்தேன் என்று பார்த்தால் இந்த "ஃப்ரீயூசர்ஸாண்லைன்.காம்" சைட்ல இருந்து எடுத்துட்டு வந்து இருக்கேன். நிற்க, நான் எடுத்து வந்த போது, இந்த ஐமீட்ஸு தளத்துடன் இவர்களுக்கு டீல் கெடையாது. நான் அந்தக் கவுண்டரை இணைத்தபோது இந்த பிரச்சினை வரவில்லை! பின்னாலதான் இவர்கள் ஐமீட்ஸுக்கு தரகராக மாறி இருக்காங்க.  என் தளத்தை அவர்களுக்கு "விற்று" இருக்கார்கள் என்று விளங்கியது!

அந்த ஆண்லைன் கவுண்டரை கழட்டியதும், இந்த ஐமீட்ஸு ரீடைரக்ஸனும் ஒழிஞ்சது. சனியன் ஒழிஞ்சதுனு நிம்மதியா இருக்கு! :)))

Nothing is FREE in the world my friend!!! That's the moral of the story! :-)

Sunday, July 14, 2013

மார்ட்டின் மரணம்! ஸிம்மர்மேன் நாட் கில்ட்டி!

அமெரிக்காவில் ஒரு கொலை வழக்கு! இங்கு நீதிவழங்குவது எல்லாம் நம்ம ஊர்போல நீதிபதிகள் அல்ல! ஆமாம், ஒருவரை குற்றவாளியா? இல்லையா?னு முடிவுசெய்வது சட்டம் படித்த, வயதில் முதிர்ந்த  நீதிபதிகள் அல்ல! சாதாரண பொதுமக்களில் சிலர்.

* 17 வயது மார்ட்டின் என்கிற கருப்புப் பையன் கொலை செய்யப்பட்டார்.

* கொலைசெய்த, (லட்டினோ மற்றும் வெள்ளையர்கள் கலப்பு)  ஸிம்மர்மேன் (30 வயது? ), தற்காப்புக்காகக் கொன்றேன் என்று தன்னிலை விளக்கம் கொடுக்கிறார்.

சட்ட நிர்வாகத்தால் ஆறு பெண்கள்தான் (பொதுமக்கள்) ஜூரியாக தேர்ந்தெடுக்கப் பட்டார்கள். இவர்கள், சாதாரண பொது மக்கள் என்பதை மனதில் கொள்ளுங்கள், இவர்கள் முன்னால் அரசாங்க வ்க்கீல்கள் குழு, ஸிம்மர்மேன் கில்ட்டி என்று வாதிட்டது. குற்றம் சாட்டப்பட்ட ஸிம்மர்மேன் வக்கீல்கள் அவர் தற்காப்புக்காக கொன்றார் என்று வாதிட்டார்கள்.

நடந்தது என்ன?

மார்ட்டின் என்கிற 17 வயதுப் பையன் இரவு 6-7 மணிப்போல ஸிம்மர்மேன் வாழும் அந்தப்பகுதியில் நடந்து போய்க்கொண்டு இருக்கிறான். அவன் எதையோ திருடப்போகிறான் என்று அவன் நடவடிக்கை மற்றும் அவன் மேல் சந்தேகப்பட்ட ஸிம்மர்மேன் (போலிஸ் இல்லை), அவனை காரில் இருந்துகொண்டே தொடர்ந்து இருக்கிறான்.

இந்த நிகழ்வு நடந்தபோது இந்த இருவரைத் தவிர பக்கத்தில் யாருமே இல்லை. சாட்சினு யாரும் கெடையாது!

நிகழ்வு நடக்கும் முன்பு, ஸிம்மர்மேன், போலிஸை 911ல் அழைத்து இதுபோல் சந்தேகப்படும்படி ஒருவன் நடக்கிறான். அவனை நான் ஃபாலோ பண்ணுகிறேன் என்று சொல்ல, போலிஸ் அவனிடம் காரைவிட்டு வெளியில் வராதே! அவனைத் தொடாதே! என்று சொல்லியுள்ளது.

அதன்பிறகு, போலிஸ் அங்கு வருமுன்னே, தொடரப்பட்ட மார்ட்டினுக்கும், தொடர்ந்த ஸிம்மர்மேனுக்கும் கைகலப்பு நடந்து இருக்கிறது. தன்னைத் தொடர்வதை உணர்ந்த மார்ட்டின் ஸிம்மெர்மேனை பயங்கரமாகத் தாக்கியதாக ஸிம்மர்மேன் சொல்கிறார். ஆதாரமாக ஸிம்மர்மேன் மூக்கு லேசா உடைக்கப்பட்டு ரத்தம் வந்துள்ளது, பின் தலையில் (பிடரியில்) இரண்டு இடத்தில் சுமாரான ரத்தக் காயம். தன்னைத் தாக்கிய மார்ட்டினை ஸிம்மெர்மேன் தன் துப்பாக்கியை வைத்து இதயத்தில் சுட்டு கொன்றுவிட்டார். காரணம்? தற்காப்புக்காக கொன்றேன் என்கிறார்.

17 வயதே ஆன மார்ட்டின், ஒரு நல்ல மாணவனாக பள்ளியில் இல்லை. சமீபத்தில் அவன் பையில் போதை மருந்து இருந்தற்காகப் பள்ளியில் இருந்து தற்காலியமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளான். இது மார்ட்டினிடம் உள்ள பெரிய கருப்புப் புள்ளி!

ஸிம்மர்மேன், ஒரு "வாலண்டீர், neighborhood watch" தலைவர் என்கிறார்கள். அதாவது அந்தப் பகுதியில் எதுவும் திருட்டு, கற்பழிப்பு நடப்பதைத் தடுக்க, அந்தத் தெருவில் வாழும் சிலர் ஒன்று சேர்ந்து காவல்துறை போல் இயங்குவது. இவர்கள் துப்பாக்கி லைசெசெண்ஸ் பெற்று துப்பாக்கியும் வைத்து இருக்கலாம்.

இந்தத் ட்ரயல் நடக்கும்போது என்னுடைய கணிப்பின்படி, ஸிம்மர்மேன் "guilty" என்றுதான் ஜூரி முடிவு செய்வார்கள் என்று எண்ணினேன். ஆனால், நடந்தது வேறு! They found him, "Not guilty!"

Thursday, July 11, 2013

ஆல் மென் ஆர் பாஸ்டர்ட்ஸ்-ஐந்து

ரேச்சல் வீட்டிலிருந்து கிளம்பிய மோகனுக்கு நேராக வீட்டுக்குப் போக மனமில்லை. விஜியின் அப்பார்ட்மெண்ட் நோக்கி ட்ரைவ் பண்ணினான்..

விஜியை அவனால் ஒரு போதும் வெறுக்க முடியாது. அவள் என்னதான் பேசினாலும், எப்படியெல்லாம் அவனை வெறுக்க வைக்க முயன்றாலும், அவனால் அவளை வெறுக்க முடியாது. அவளுடைய கோபம், சுடும் சொற்கள் எல்லாம்  சில நேரம் அவள்மேல் கோபம் கொண்டு வந்தாலும், மறுநிமிடமே அந்தக் கோபபம் போய்விடும். அவளின் மறுபுறம் மிகவும் இனிமையானது.  காதலில், காம வேட்கையில் விஜி அவனிடம் நடந்துகொள்ளும் விதம், அவள் அன்பில் அவனிடம் உளறியதெல்லாம் ஒரு முறை நினைத்துப்பார்த்தால் மோகன் குளிர்ந்துவிடுவான்.

 விஜி ரொம்ப சிம்பிள் கேரக்டர். அவளிடம் எல்லாமே அதிகம். கோபம், அன்பு, நட்பு, சந்தோஷம், காமம் என்று எதை எடுத்தாலும் அவளிடம் அளவுக்கு மீறி இருக்கும். நெருங்கிப் பழகிய பிறகு நண்பனான பிறகு அவனிடம் அவள் உடலையோ அல்லது உள்ளத்தையோ  மறைத்ததில்லை. அவள் அப்பா, அம்மா  நிறை குறைகள் பற்றிய விரங்களையும் அவனிடம் அவள் சொல்லிவிடுவாள். அவனை முழுமையாக நம்புவதிலிருந்தே,  அவள் மேல் அவன் நம்பிக்கை வைக்க கற்றுக்கொடுத்தவள் அவள். தன் வாழ்வில் தனக்கு நடந்த கசப்பான அனுபவம் எதையுமே அவள் சொல்லாமல் விட்டதில்லை. தன் தோழிகளின் பரம ரகசியங்களையும் அவனிடம் சொல்லுவாள். ஒரு சில விசயங்களை அவள் சொல்லும்போது, "இதை எல்லாம் நீ சொல்ல வேண்டியதில்லை, விஜி" என்று மோகன் சொல்லியிருக்கான். இருந்தும் அவள், "உங்ககிட்டதானே சொல்றேன்" என்று எதையும் மறைக்க மாட்டாள். எப்போது அவளுக்கு முதல் "க்ரஷ்" வந்தது, யார்மேல் வந்தது, எந்த சொந்தக்கார அங்கிள் அவள் உடம்பில் வைக்ககூடாத இடத்தில் கை வைத்து தன் தரத்தைக் குறைத்துக் கொண்டார், முதன் முதலில் அவள் எப்படி மாஸ்டர்பேட் பண்ணினாள், என்பதைக்கூட அவள் அவனிடம் சொல்லி இருக்கிறாள். தன்னை முழுமையாகக் கொடுத்து, முழுமையாகக் காட்டி அவன் இதயத்தை வென்றவள், விஜி.

ஆனால் மோகன் அப்படியல்ல! ஒரு சில விசயங்களை விஜியிடம் சொல்ல மாட்டான். தன்னுடைய பெரிய தோல்விகள், தன் வாழ்க்கையில் அனுபவித்த பெரிய அவமானங்கள், தான் செய்த பெரிய முட்டாள்த்தனங்கள் போன்றவற்றை சொல்லத்தேவையில்லை என்று அவைகளை அவளிடம் சொல்லாமல் தவிர்த்து விடுவான். இப்போதுகூட, ரேச்சல் பற்றி, அவளை சந்தித்த விதம், அவளுக்கு அவன் கெமிஸ்ட்ரி ட்யூட்டரிங் செய்வது பற்றியெல்லாம் விஜியிடம் அவன் தெளிவாக ஒரு இ-மெயிலில் சொல்லியிருக்கலாம்.  எல்லாவற்றையும் தெளிவாக அவளுக்குப் புரியும்படி, அவள் புரிந்துகொள்ளும்படி கனிவாகச் சொல்லியிருக்கலாம். கவனமாக அனாலிசிஸ் செய்துபார்த்தால் விஜி ரொம்ப நல்லவள், மோஹன் ஒரு ஜெண்டில்மேன் மாதிரி நடிக்கும் ஒரு சாடிஸ்ட் என்றுகூட சொல்லலாம். அவளிடம் எதையும் தெளிவு படுத்தாமல விஜிக்குக் கோபம் வரவைத்து வேடிக்கை பார்ப்பவன் மோகன். ஏன் அப்படி? பொதுவாக ஆண்களே சுயநலக்காரர்கள்தான். காலங்காலமாக மரபியலாக வந்த ஆண் என்கிற கர்வம் அவர்களிடம் இன்னும் இருக்கத்தான் செய்கிறது. எல்லா அயோக்கியத்தனமும் செய்துகொண்டு பெரிய மனிதன் போர்வையில் தத்துவங்கள் பேசிக்கொண்டு வாழ்வதுதான் ஆண் இனம்.

அவளுடைய அப்பார்ட்மெண்ட் கதவருகில் நின்று கொண்டு அவளை செல் ஃபோனில் கூப்பிட்டான். ரெண்டு ரிங் போனதும் டோர் பெல்லை அழுத்தினான். மறுபடியும் கால்ப் பண்ணி, அவள் மெசேஜில், "ஹே, நான் உன் வாசல்ல இருக்கேன்! கதவைத் திற!" என்றான்.

விஜி கதவைத்திறந்தாள் . அவன் உள்ளே சென்றதும் டோரை அடைத்துவிட்டு..

"வெல்? என்ன வேணும்?'

"உனக்கு என்னாச்சு? லூஸாயிட்டியா?"

"எனக்கா? I think I am sexually frustrated. My boyfriend does not give me a good fuck!"

"Really?" என்றான் அவன் சிரித்துக்கொண்டே.

"Yeah, That bastard is busy fucking his new girl friend!"

"ஏய் நான் சொல்றதை எதுவுமே நீ கேட்பதில்லை! நான் அவளுக்கு கெமிஸ்ட்ரி ட்யூட்டரிங் பண்ணுகிறேன்."

"ரியல்லி? பிஸைட்ஸ் ஃபக்கிங்?"

 அவன் விஜியின் அருகில் சென்று, அவள் நாடியை மிருதுவாகப் பிடித்து தன் புறம் திருப்பினா. அவள் வலது கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான். அவள் காதுகளை கைகளால் மெதுவாக வருடி, அவள் உதட்டில் தன் இதழ்களை பொருத்தினான். விஜி சிலையாக நின்றாள். அவளுக்கு அந்நேரம் அவனிடம் இருந்து "இவை"யெல்லாமே தேவைப்பட்டது.

-தொடரும்

 தொடர்புடைய பதிவுகள்!

Tuesday, July 9, 2013

புரோட்டாவும் நானும் நீரிழிவு வியாதியைத் தருகிறது?!

சமீபத்தில் இந்தியாவில் தோழி ஒருத்தியிடம் பேசும்போது, "மைதாவில் தயாரித்த எதுவும் சாப்பிடாதீர்கள்! அது உடல் நலக்கேட்டை உருவாக்கும்" என்று ஒரு இந்திய மருத்துவரல்ல, பலர் சொன்னதாக என்னிடம் அடித்துக் கூறினாள். அப்படியா?! என்று கேட்டுவிட்டு உண்மை என்ன என்று இணையதளத்தில் தேடிப்பார்த்தால்..

மைதா என்பது என்ன? ஏன் அது வெள்ளையாக இருக்கிறது? என்பதை இன்னொரு முறை படிக்கும்போது..

* மைதா, கோதுமையில் இருந்து தயார் செய்வது.

* கோதுமையை "ப்ளீச்" (ஒரு மாதிரியான ஆக்ஸிடேஷன் தான்) செய்வதால் மைதா வெள்ளையாகி விடுகிறது.

* கோதுமையை ப்ளீச் செத்ய்து மைதாவாக்குவதற்கு  "பென்சாயில் பெராக்ஸைட்" பயன் படுத்துவது உண்டு! அது  நல்லதல்ல! என்பதால் சில நாடுகளில் மைதாவை விற்பதற்கு தடை விதித்து உள்ளார்கள் என்கிற உண்மைகள் தெரிய வந்தது..

அதன் பிறகு, மைதா சாப்பிட்டால், அதில் உள்ள "அல்லாக்ஸான்" என்கிற வேதிப்பொருள், நமது  "பாங்க்ரியாஸ்" (கணையம்?) உள்ள பீட்டா செல்களை எல்லாம் கொன்று விடும். இன்சுளின் சுரக்கும் அந்த பீட்டா செல்கள் இறந்துவிட்டால், நமக்கு நீரிழிவு வியாதியைத்தரும் என்று பலர், முக்கியமாக "இந்தியர்கள்", கருத்து தெரிவித்து உள்ளார்கள்!!

இது சம்மந்தமாக ஆராய்ச்சியும் சரி, கருத்துக்களும் சரி, இந்தியர்கள்தான் தெரிவித்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில், தமிழ்நாடு மற்றும் கேரளாவில் நீரிழிவு வியாதி அதிகம் உள்ளதுக்குக் காரணம் மைதாவை அதிகமாக பயன்படுத்துவதுதான் என்றும் ஒரு சிலர் ஆணித்தனமாக கருத்து தெரிவித்து உள்ளார்கள்.

சரி, இணையதள அறிவியல் விவாதக்களங்களில் இது சம்மந்தமாக என்ன சொல்கிறார்கள் (முக்கியமாக இந்தியரல்லாதவர்கள்) என்று பார்த்தால்..


* நம் பாங்க்ரியாஸில் உள்ள பீட்டா செல்கள், மைதாவில் உள்ள அல்லாக்ஸானால் கொல்லப்பட்டால், ஒருவருக்கு வரவேண்டிய டயபெட்டிஸ், நீரிழிவு வியாதி, டைப் ஒண்ணாக இருக்க வேண்டும்!

* இந்தியாவில் மைதா அதிகமாக சாப்பிடும் மக்களுக்கு வருவது டைப் 2 டயபட்டிஸ் (டைப் 2 நீரிழிவு வியாதி) என்று சொல்கிறார் மேலை நாட்டவர்.

காலங்காலமாக இந்தியர்களுக்கு சாபம்! எந்த எழவையும் ஒழுங்காகப் புரிந்து கொள்ளாமல், மூத்திரத்தை குடிக்கிறது நல்லது, மைதா சாப்பிட்டால் அது குடல்ல மாட்டிக்கும்னு எதையாவது அரைகுறை ஞானத்தை வைத்து உளற வேண்டியது. இதுதான் இந்தியர்கள் அடிக்கடி உலக அளவில் சாதிப்பது!

It is always the case..

They can't do any damn thing correctly! Let it be scientists or doctors or ramar pillai kind alchemists! They all fuck up one way or other!

எல்லாரும் போயி பகவத் கீதா படிங்க! படிச்சுப்புட்டு பரிணாமம் பத்தி வாய் கிழியப் பேசுங்க!

Monday, July 8, 2013

இளவரசன் மரணம்! யார் குற்றவாளி?!

"மரணம் என்னும் தூது வந்தது! அது மங்கை என்னும் வடிவில் வந்தது!" என்று காதல் தோல்வியின்போது பெண்களை வில்லனாக்கி இப்படி பலவாறு விமர்சிப்பதே நம் கலாச்சாரம், பண்பாடு!

காதலனை காதலி  கைவிடுவதற்கு என்ன காரணம்? கவனமாக அலசி, யோசித்துப் பார்த்தால் பல நேரங்களில் நமது சமுதாயம் மற்றும் அவளைப் பெற்றவர்கள்,   ஒரு இளம் பெண்ணை, அவள் விருப்பப்படி முடிவு எடுக்கவிடுவதில்லை! காதலியின்  முடிவை முடிவு செய்வதே அவள் பெற்றோர்கள், சாதி சனம், சொந்த பந்தம்னு சொல்லிக்கிட்டு அலைபவர்கள்தான். இவர்களுக்கெல்லாம் அவள் ஒரு அடிமை என்பதுதான் நிதர்சனம். இதில் அந்த மங்கை என்ன செய்வாள் பாவம்?

சட்டப்படி "அவள் வயதில் முதிர்ந்தவள், தன் வாழ்க்கையை முடிவு செய்ய தகுதியானவள்" என்றாலும் அவள்  ஒரு சின்னப்பொண்ணுதான். உலக அனுபவம் இல்லாதவள்தான்.

உலக அனுபவம்? வயதில் முதிர்ந்த, படித்த,  வலைபதிவர்களே,  தன் சாதிக்காரன் எல்லாம் யோக்கியன், தன் சாதித் தலைவர்களெல்லாம் புத்தனும், காந்தியும் என்று  பிதற்றிக்கொண்டு வெட்கமே இல்லாமல் சாதித்தளம் ஒன்றை நடத்திக்கொண்டு திரிகிறார்கள்!

அனுபவம் மிக்க இவர்களே தான் ஒரு சாதி வெறி பிடித்து அலையும் அடிமுட்டாள் என்று தன் ஒவ்வொரு பதிவிலும் காட்டும்போது, ஒரு இளம்பெண்ணின் உலக அனுபவம் எப்படி போதுமானதாகும்?

அவளுக்கு உலக அனுபவம் இருந்து இருந்தால்.. தன் சாதி மக்கள் பற்றி நன்றே அறிந்து இருப்பாள். அவள் என்னவோ..நாளுக்கு நாள் உலகம் முன்னேறுகிறது. நம் சாதியும் முன்னேறிவிட்டது! நம் சாதி மக்களுக்கும் மூளை வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது! அவர்களுக்கு சாதி வெறி தணிந்து இருக்கும் என்று நம்பிவிட்டாள்! அது எவ்வளவு பெரிய முட்டாள்த்தனம்! 

காதலிக்க அவள் கற்றுக் கொள்ளவில்லை! காதல் அவளுக்கு காதலிக்க கற்றுக்கொடுத்தது. காதல் இனிமையாக இருந்தது. காதலனால், அவன் அன்பால் தன் மனம் சந்தோஷம் அடைவதால்  அவள் அவனைக் காதலித்தாள்! காதலன் சாதி அவள் கண்ணுக்குத் தெரியவில்லை!  தான் விரும்பியவனை தைரியமாக கல்யாணமும் செய்துகொண்டாள்.

அவளை வாழவிடுமா அவள் சமூகம்? 

வாழவிட்டதா அவள் சாதி சனம்?  

நமது சமுதாயத்தில் ஒரு இளம் பெண்ணின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுப்பதில்லை! ஏன் அவளுக்குத் தெரியவில்லை? திரும்பத் திரும்ப சொல்லணுமா? அவள் ஒரு சிறுமி! அவளுக்கு உலக அனுபவம் பத்தாது! யார் அவள் உணர்வுகளை மதிப்பதில்லை!  அவளைப் பெற்றெடுத்தவர்களே! அவளுடைய சொந்த பந்தம்! அவர்கள் சாதி சனம். அவர்கள் சாதித்தலைவர்கள்!  

யார் இவர்கள் எல்லாம்?  

ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கையை முடிவு செய்ய அவளைவிடத் தனக்குத்தான் அதிக உரிமையுண்டு என்று நம்பும், சாதி வெறி பிடித்து அலையும் முட்டாள்கள்!

அறியாமையில் வாழ்ந்த அவள் தந்தை, காதல் திருமணம் செய்தது ஏதோ கொலைக்குற்றம் செய்ததுபோல்,  மகளைப் பற்றி கவலைப்படாமல், தான் இல்லையென்றால் அவள் வாழ்க்கை எவ்வளவு கஷ்டம் என்று கொஞ்சம்கூட யோசிக்காமல்,  முட்டாள்த்தனமாக தன்னை மாய்த்துக் கொண்டார்!

அதன் பிறகு அவள் சொந்த பந்தம், சாதி சனம், சாதித்தலைவர்கள் எல்லாம் அவள் அனுபவமற்ற இளமனதை "இந்த எழவை" பயன்படுத்தி அவளைக் குற்றவாளியாக்கி, அவள் மனதை கலைத்துவிட்டு , அவளைக் குழப்பி, அவள் நிம்மதியை பறித்து அவளை நடமாடும் பிணமாகவும், மன நோயாளியாகவும், ஆக்கிவிட்டார்கள். மேலும் அவள் தந்தை மரணத்திற்கு அவளே காரணம் என்பதுபோல் அவளை பலவாறு சாடி,  அவளை நம்பவும் வைத்து விட்டார்கள்!

அனுபவமற்ற இளம் பெண் அவள்!  என்ன செய்வாள் பாவம்? அவள் செய்யாத தவறுக்கு "நல்ல தீர்வு" என்று அவள் சாதி சனம் சொன்ன "தீர்வை" அவள் தன் முடிவாகச் சொன்னாள்! வேறு வழியில்லாமல்,  தன் காதலனை, கணவனை கைவிட்டாள்! அவளுக்குத் தெரியாது, அவள் காதலனுக்கும் இவ்வுலகில் அவளில்லாமல் வாழ முடியாது என்று! அவளுக்குத் தெரியாது! அவனும் ஒரு கோழை என்று.

பொதுவாக பெண்களுக்கு "ஆண்கள் ஏன் இப்படி பெண்களை அடிமைப் படுத்தினார்கள்?" என்பது தெரியாது. ஆண் கவிஞர்கள் எல்லாம் "ஏன் பெண்களை அரக்கியாகவும் இரக்கமில்லாதவர் களாகவும் ஆக்கி ரசிக்கிறார்கள்?" என்பதும் தெரியாது! 

ஆண்கள், பெண்களை விட மனபலம் எதுவுமில்லாத பலஹீனமானவர்கள்!  கோழைகள்! என்பதே உண்மை.

புரிந்துகொள்! கலப்புத் திருமணம், காதல் திருமணம் எல்லாம் நம் சமூகத்தில் இல்லாமல் இல்லை! இப்போவும் நடந்துகொண்டுதான் இருக்கு. அந்த  அதிர்ஷ்டம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை!   அதுவும் சாதி வெறி பிடித்தலையும் உன்  காட்டுமிராண்டி சமூகத்தில் எல்லாம் அதற்கு வாய்ப்பே இல்லை!

ஒரு சில படித்த பண்புள்ள அப்பாகள், அம்மாக்கள் ஊர் உலகத்தை, சாதி சனங்களை தூக்கி எறிந்துவிட்டு தன் ம்களின் அப்போதைய சந்தோஷத்தை (நாளைக்கு அவர்கள் எப்படி உணருவார்களோ? என்கிற கேள்விகள் இருந்தாலும்) மதித்து திருமணம் செய்து வைக்கிறார்கள். நிற்க, நாளைக்கு அதே திருமணம் மணமுறிவில் முடிந்தாலும், அதையும் ஏற்றுக் கொண்டு, அதற்கானதை செய்யும் படிப்பறிவுள்ள, பண்புள்ள அப்பா அம்மாக்கள் எல்லாம் தமிழர்களில் இருக்காங்க. அந்தளவுக்கு பக்குவம் அடைந்த, ஊர் உலக்த்தை சுச்சமாக மதிக்கும் அப்பா அம்மாக்கள் மிகவும் சொற்பமே.

இன்னொன்று புரிந்து கொள்..

உன் தந்தை ஒரு ஆண்!  மனதைரியமில்லாதவர்! தன் மகளுக்காக, இந்த சமுதாயத்தை எதிர்த்து போரிட தைரியமில்லாத ஒரு கோழை!

உன் முன்னால் காதலன், முன்னால் கணவன், அவனும் ஒரு ஆண்! ஒரு கோழைதான்!

ஆண்கள் கோழைகள் என்று தெரிந்து கொள்! கோழைகளைப் பார்த்து பரிதாபப்படுவதால் நீயும் கோழையாக வேண்டிய கட்டாய சூழல் உனக்கு! இந்த உலகை இனிமேலாவது புரிந்துகொள்! நடந்தவைகள் எதுவுமே உன் தவறல்ல! காதலிப்பது தவறல்ல! காதலித்த காதலனை மணப்பதும் தவறல்ல!  அதன் பிறகு ஏற்பட்ட உயிரிழப்புகள்? அது அவரவர் எடுத்த முடிவு! அவர்கள் தலை எழுத்து! கோழைகள் சாகட்டும் விடு! நீ வாழக்கற்றுக்கொள்! வாழ்ந்து காட்டு!

Thursday, July 4, 2013

வன்னியர் அருள்! இப்போ சந்தோஷம்தானே?

வன்னியர் சாதியச் சேர்ந்த  இளம் பெண், திவ்யா, தனிப்பட்ட தன் காதல், தன் கல்யாணப் பிரச்சினை, நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து பெரிதாக ஆக, பயந்து, நடுங்கி, எதுக்கு வம்பு னு  , மணம் முடித்த தலித் கணவனை விட்டு வந்துவிட்டாள்!

மனைவியைப் பிரிந்த காரணத்தினாலோ என்னவோ "என்னடா இது உலகம்!" னு இளவரசன் ஒரேயடியா இந்த உலகத்தை விட்டுப் போயித் தொலைஞ்சுட்டான்!

இங்கே நம்ம அருள், பதிவுமேலே பதிவுபோட்டு, ஆனந்தக் கண்ணீருடன் கலந்த நீலிக்கண்ணீர் வடித்து, திவ்யாவை நினைத்து பெருமிதமும், இளவரனை நினைத்து எல்லையில்லா வருத்தமும் அடைகிறார்! பாவம், அவருக்கு யாராவது ஆறுதல் சொல்லி தேத்துங்கப்பா!

ஒரு சாதாரண காதல் பிரச்சினையை, இந்த 21ம் நூற்றாண்டில், சாதிப் பிரச்சினையாய் ஆக்கி, உலகப் பிரச்சினையாய் ஆக்கி.... இளம் காதலர்களை, கலங்க வைத்து, குழப்பி..விவாகரத்து செய்ய வைத்து..காதலனை உயிரை இழக்க வைத்து..காதலியின் இதயத்தில் வாழ்நாள் முழுவதும் ஆறாத ஒரு வடுவை உண்டாக்கி என்னப்பா சாதிச்சீங்க? கொஞ்சம்கூட மூளையே வேலை செய்யாதா, சாதி வெறிபிடித்தலையும் இந்த மூடர்களுக்கு?


Wednesday, July 3, 2013

வயாகரா தோற்றது கவர்ச்சியான அவள் இதழ்களிடம்!

அவள் ஒரு 30-32 வயதுப்பெண், படு கவர்ச்சியாக இருந்தாள். பங்களூர் செல்லும் அந்த பேருந்தில்  கொடை ரோட்டில் ஏறினாள். அவள் ஏறி வந்து தன் சீட்டை தேடி கண்டு பிடிக்கும் முன்னே, பஸ்ஸில் இருந்த அனைத்து ஆண்களும் அவளை அளவு பார்த்தார்கள், "முன், பின்" எடை போட்டார்கள். புடவைதான் கட்டியிருந்தாள். அவள் தலையில் மல்லிகைச்சரம், அவள் பின்னழகுகளும், முன்னழகுகளும் கவர்ச்சியாக இருந்ததற்கு காரணம், அவள் இடையும், இடுப்பும் கொடிபோல இருந்தததுதான். ரெகுலளராக உடல்பயிற்சி செய்பவள் போல. உள்ளே வந்தவள் தான் ரிசர்வ் செய்த  தன் இருக்கையை தேடிக் கண்டு கொண்டாள்.

அந்த வரிசையில் அவள் இடது பக்கம் ஜன்னல் பக்கம் உள்ள இருக்கையில் அமரவேண்டும். அதன் பக்கத்து இருக்கையில் ஏற்கனவே அமர்ந்து இருந்த ஒரு 35 வயது ஆண், அவள் உள் நுழைவதற்காக எழுந்துகொண்டான். அவள் உள்ளே சென்று அமர்ந்துவிட்டு அவனுக்கு ஒரு நன்றிகூட சொல்லவில்லை!

அதே வரிசையில் இன்னொரு பக்கம் அமர்ந்திருந்த கல்லூரி மாணவன், அவள் அடுத்த இருக்கையில் அமர்ந்திருந்த அந்த நடுவயது ஆளை பொறாமையுடன் பார்த்தான் . ஏதோ அந்த ஆளுக்கு  மட்டும் சொர்க்கத்தில் ஒரு இருக்கை கிடைத்துவிட்டது போல அவனுக்குத் தோன்றியது போலும். அவன் வயது அப்படி!  பங்களூர் போய் சேரும் வரை, அவள் மற்றும் அருகில் அமர்ந்து இருந்த அந்த ஆளின் அசைவுகளை நொடிவிடாமல் வேடிக்கைப் பார்ப்பதில் அந்த மாணவன் இரவு முழுவதும் தூங்கவே இல்லை!

************************

"பவித்ரா! எங்கம்மாக்கு கண்ல ஒரு சர்ஜரி செய்யணுமாம். 50 ஆயிரம் இந்த மாதம் அனுப்பப்போறேன்"

"ஏன் இப்போ என்ன கண் தெரியாமலா இருக்கு?"

"வர வர மங்கிக்கிட்டே வருதாம்! சர்ஜரி செய்தால் நல்லாத் தெரியுமாம்"

"போன முறை பார்த்தப்போ எல்லாம் நல்ல்லாத்தானே இருந்தாங்க!"

"உனக்கென்ன பிரச்சினை இப்போ? அவங்களுக்கு நான் இந்தப் பணம் அனுப்பப்போறேன். உன்னிடம் பர்மிஷன் எல்லாம் கேட்கவில்லை! பொது அக்கவுண்ட்ல இருந்து அனுப்புறதால சொன்னேன்!"

"நீங்க முடிவு செய்துவிட்டால் எதுக்கு சொல்லணும்?"

"சரி, அடுத்த முறை உன்னிடம் சொல்லாமலே அனுப்பி விடுறேன். சரியா?"

********************************

"வேலையில் இருந்து வரும்போது எம் ஜி ரோட்ல சிக்னல்ல உங்க காரைப்  பார்த்தேன். யார் அந்தப் பொண்ணு, உங்க பக்கதிலே, ரொம்ப கொஞ்ச வயசா அழகா இருந்தாள்?"

"என்னுடைய கோ வொர்க்கர். அவ  கார்ல ஏதோ பிரச்சினை. அதனால அவளுக்கு ரைட் கொடுத்துட்டு வர்ரேன்!"

"ரொம்பப் பெரிய மனசுதான் உங்களுக்கு?"

"பவித்ரா! Will you STOP your bullshit?"

"இல்ல.. மத்த பெண்களிடம் நீங்க காட்டுற அன்பில்தான் உங்களுக்கு எவ்ளோ  பெரிய மனசுனு எனக்குத் தெரியுது"

"இதில் அன்பெல்லாம் எதுவும் இல்லை. ஒரு சின்ன உதவி. டெய்லி ரைட் கொடுக்கப் போவதில்லை. ஒரு நாள். அவ்ளோதான்"

"அப்படியா?! எதைப் பத்தி பேசிட்டு வந்தீங்க அந்த 40 மினுட்ஸ் ரைடின் போது?"

"எனக்கு ஞாபகம் இல்லை!"

"உங்களையே மறந்து பேசிட்டு வந்திருப்பீங்க, பாவம்!"

"வேணா அவ நம்பர் தர்ரேன். கூப்பிட்டு கேட்டுக்கோவேன்?"

"அவ்ளோ யோக்கியர்னா உண்மையான நம்பரை இல்லை தரணும்?"

" I can give you that! Here it is. I just gave her a ride. I did not fuck her! DO YOU UNDERSTAND?"

"சரி, கொடுங்க!"

************************************

"Is your wife crazy, Ram?"

"what happened?"

"She called me and asked me, what were we talking during your ride y'day"

"Are you serious?"

"She needs help, I think! I hung up immediately as she was getting on in my nerve. I am sorry I have to complain about her to you!"

" I apologize for her misbehavior. I never thought she would call you!"

"It's OK. I felt sorry for you!"

****************************************

நல்லவேளை, ராம் மற்றும் பவித்ரா தம்பதிகளுக்கு குழந்தை எதுவும் இல்லை. விவாகரத்து ஒரு வழியாக எளிதில் முடிந்து இப்போ இரண்டு வருடமாகிறது. பவித்ரா கவர்ச்சியானவள் என்பது அவளை ஆடையில்லாமல் பார்க்கும்போது மட்டுமல்லாமல் அவளுடன் வெளியே போகும்போது எல்லா ஆண்களும் அவளை எதிரில் பார்த்ததுடன் நிறுத்தாமல் திரும்பியும் பார்ப்பதில் இருந்து ராம்க்குத் தெரியும். ஆனால் அவள் வாயைத் திறந்து வம்பு பேச ஆரம்பித்தால், விஷமாக கக்குவாள்! அதன் பிறகு அவளிடம் அப்படியொரு உடல்வாகு இருந்தும் வயாகரா சாப்பிட்டாலும் அவளுடன் உடலுறவு வைத்துக்க முடியாது!  அந்த ரகசியம்  மட்டும் அவள் ஆம்படையானாக வாழ்ந்து "அனுபவித்த" அவனுக்கு மட்டும்தான் தெரியும்.

பங்களூர் புறநகர்ப் பகுதியில் பஸ் வந்து சேர்ந்தது. அவள் மட்டும் அந்த ஸ்டாப்பில் இறங்கினாள். அவள் இறங்கியவுடன், இரவு முழுவதும் தூங்காமல் வந்த  அந்த கல்லூரி மாணவன் ஒரு வழியாக தூங்க ஆரம்பித்தான்.

 "ஹாய் பவித்ரா!" என்று பஸ்ஸில் இருந்து இறங்கிய அவளை தன் காரில் ஏற்றிக்கொண்டாள் தோழி ஒருத்தி.

பாவம் அந்த மாணவனுக்கு எப்படித் தெரியும், அந்த அழகியின் அருகில் அமர்ந்து பயணித்தவர்தான் அவளை அறவே வெறுக்கும், அவளுடைய எக்ஸ் ஆம்படையான் என்று? தனித் தனியாக ரிசெர்வ் செய்தாலும் எப்படியோ எதார்த்தமாக ஒரே பஸ்ஸில் அடுத்த அடுத்த இருக்கைகளை ரிசெர்வ் செய்து பெற்றிருக்கார்கள் அந்த மாஜி தம்பதிகள். பஸ்ஸில் அமரும்போது ஒருவரை ஒருவர் பார்த்து அதிர்ச்சி அடைந்தாலும்  பொது இட நாகரிகம் கருதி இருவருமே அதை பெரிது படுத்தாமல் 12 மணி நேரத்தை கடத்தினார்கள்.

It was a LONG NIGHT not only for that college boy but for the couple too!

Monday, July 1, 2013

இதயத்துடிப்புடன் வாழும் பிணங்கள்!

அவளா இவள்? ரூபாவா?அவள்தான் பிணமாகிவிட்டாளே! ஆமாம், பழைய நண்பன் கார்திக்கும்தான்!  நண்பன் ரவி செத்து 5 வருடமாகிறது! பாலு செத்து சுமார் பத்து வருடங்கள் இருக்கும்.

கீறல்ப்பட்ட கண்ணாடியை என்னதான் சரி செய்தாலும் அது பழைய கண்ணாடி ஆவதில்லை! ராமகிருஷ்ணனுடன் அந்த மனக்கசப்புக்குப் பிறகு, மறுபடியும் என்னதான் அந்த நட்பை ஒட்டவைத்தாலும் அது ஒட்டவே இல்லை! மறுபடியும் கருத்து வேறுபாடு உள்ள அந்த விசயம் இருவருக்கும் இடையில் தோன்றியது. மறுபடியும் அந்த கீறல் பெரிதாகியது. இதே போல் எத்தனை முறை.

அப்போதுதான் ஒரு முடிவுக்கு வந்தான் அஷோக். இனிமேல் இதை ஒட்டவைப்பதில் அர்த்தமில்லை என்று. எதற்கு இப்படி மாய்ந்து மாய்ந்து சரிக்கட்டி வாழவேண்டும்? இது மிகப்பெரிய உலகம். எடுத்த முடிவை மாற்றாமல் அவனைப் பிணமாக்கி அவனுக்கு கடைசி சடங்குகள் எல்லாம் செய்துவிட்டு அவனைத் தலைமுழுகினான். அஷோக் அவனைக் கொன்று பிணமாக்கிய பிறகும், ராமகிருஷ்ணன் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறான். மிகவும் சந்தோஷமாக!

"நட்பு என்பது உயர்தரமானது. அது காலத்தால் அழியாதது" என்பதெல்லாம் எத்தனை விழுக்காடுகள் உண்மை கலந்தது? ஒவ்வொரு மனிதனும் அரசியல்வாதிதான். ஒவ்வொரு மனிதனும் சுயநலவாதிதான். அதுவும் ஒருவனுக்கு வயது அதிகம் ஆக ஆக சுயநலம்தான் மென்மேலும் தலை தூக்கும்! காலப்போக்கில், அன்று போற்றப்பட்ட நட்பு காணாமல்ப் போவதுதான் இயற்கை! அதை இல்லை என்று வாதிடுவது, நட்பு காலத்தால் அழியாதது என்று நிரூபிப்பதாக நடிப்பதெல்லாம் நமக்கு நாமே போட்டுக்கொள்ளும் நாடகம். நம்மை நாமே ஏமாற்றி வாழும் வாழ்க்கை!

அவனைக் கவனிக்காமல் இந்தியா செல்லும் அந்த விமானத்தில் முதல் வகுப்பில், இரண்டாவது வரிசையில் அமர்ந்து இருந்த ரூபாவை இன்னொரு முறை  பின்னால் இருந்து பார்த்தான், அஷோக்.  பக்கத்தில் அவள் குழந்தை விளையாடிக்கொண்டு இருந்தது. அவளைவிட அழகு அந்தக்குழந்தை. அவள் சந்தோஷமாகத்தான் இருந்தாள். ஆனால் அஷோக்கைப் பொறுத்தவரையில் அவள் நாட்கடந்து போன ஒரு பயணச்சீட்டு! ஆமாம் ஒரு காலத்தில் அவள் உயிருக்குயிரான தோழிதான்! இன்று? ஒரு அழகான உயிருடன் வாழும் பிணம்! நட்பு இறந்த பிறகு நண்பி பிணம்தானே? இதைத் திரும்பத் திரும்ப சொல்லணுமா என்ன?