Wednesday, December 9, 2009

நீ என்ன தொட்டாச்சினுங்கியா?-கடலை கார்னர் (33)

"இந்தாடி உன் டீ கப், பிருந்தா!"

"இப்ப என்னடி "கப்"க்கு அவசரம்?" என்றாள் பிருந்தா அதை வாங்கிக்கொண்டே.

"இல்லை, இப்போ திருப்பி வரலைனா அப்புறம் என் "கப்" ஆயிடும்! திருப்பி கொடுக்க மறந்திடுவேன். "

"நல்ல பழக்கம்!"

"ஆமா, ஏன்டி வரக்கூடாத நேரத்தில் வந்துட்டேனா?" ஒரு மாதிரியா சிரித்தாள் பானு.

"அப்படினா?"

"அப்படித்தான். நீங்க எதுவும் முக்கியமான வேலை செஞ்சிக்கிட்டு இருந்தீங்களா?

"எதுக்கு சுத்தி வளைக்கிற? பச்சையாவே சொல்லு! "

"இல்லை.."

"ஆமா, நீ "அந்த நேரத்தில்" தான் வந்து உயிரை வாங்குற! கொஞ்சங்கூட உனக்கு இங்கிதம் தெரியாதாடி? இல்லை இதுல ஒரு சந்தோஷமா?"

"அதெப்படி அதுக்குள்ள ட்ரெஸ்லாம் மாட்டிக்கொண்டு வந்துட்ட? அவர் ட்ரெஸ் மாட்ட ஹெல்ப் பண்ணினாரா?"

"ஆமா தெரியாமல்தான் கேக்கிறேன், என்ன வேணும் உனக்கு? என்னை கொலைகாரி ஆக்கிடாதே!"

"உள்ள வாங்க பானு!. ஆமா என்ன ரகசியம் பேசுறீங்க ரெண்டு பேரும்?" என்றான் வாசலுக்கு வந்த கண்ணன்.

"இல்லை கண்ணன். பானுக்கு ஏதோ ஒரு சந்தேகமாம். நம்ம ரெண்டு பேரும்.."

"சும்மா இருடி!" பிருந்தா வாயைப் பொத்தினாள் பானு.

"நீ சொன்னதைத்தானே சொல்றேன்."

"இல்லை கண்ணன். சும்மா டீ கப்பை திருப்பிக்கொடுக்க வந்தேன்... ஆமா, எப்படி இருந்தது கண்ணன்?"

"எதுங்க பானு? நான் இன்னும் டின்னர் சப்பிடலைங்க."

"பிருந்தா அப்பெட்டைசர் எப்படி?" அவள் சிரித்தாள்.

"பிருந்தா அப்பெட்டைசர் எப்படி இருக்கும்? அது நல்லாத்தான் இருந்தது."

"சரி நான் வர்றேன், கண்ணன். இல்லைனா பிருந்தா கொலைகாரியாயிடுவாளாம்." என்று சிரித்துக்கொண்டே நடந்தாள்.

"போய்த் தொலைடி!" என்று கத்தினாள் பிருந்தா. பிறகு கதவை அடைத்தாள்.

*****************

"ஏய்! உன் ஃபிரெண்டு இங்கே எதுவும் கேமரா வச்சு பார்க்கிறாளா நம்மள?"

"அப்படித்தான் தோனுது. பார்த்தால் பார்த்துட்டுப் போகட்டும், கண்ணன்!" பிருந்தா சிரித்தாள்.

"ஏண்டா இப்படி கெட்டப்பொண்ணா இருக்கிற பிருந்த்! யு லைக் அதர்ஸ் வாட்ச்சிங் அஸ்?"

"அவ சும்மா வம்பு பண்ணுறா, கண்ணன். ஆமா நம்ம இப்போ என்ன பெருசா பண்ணிட்டோம்?"

"பெருசானா? இதுக்குமேலே கன்னிப்பொண்ணு என்ன பண்ணனும்ங்கிற?"

"மெயின் டிஷ்!"

"ஒரு முடிவோடதான் இருக்கியா நீ?'

"நான் மறுபடியும் குளிக்கனும் கண்ணன்! க்விக்கா ஒரு ஷவர் எடுத்துட்டு வந்திடவா? "

"இப்பவா? ஏன் அதுக்குள்ள அழுக்காகிட்டயா?"

"ஆமா. எல்லாம் உங்களாலதான்"

"நீ என்ன தொட்டால் சினுங்கியா?"

"உதட்டை உதட்டால் தொடுறது. நாக்கை நாக்கால் தொடுறதெல்லாம் சும்மா தொடுறது இல்லை, கண்ணன். உங்களுக்கு இதெல்லாம் புரியாது!"

"குளிச்சுட்டு என்ன ட்ரெஸ் போடப்போற?"

"ஒரு புடவை கட்டிக்கப்போறேன்."

"தட் வுட் பி செக்ஸி, பிருந்த்! ஒரு கொண்டை ஒண்ணு போட்டுகோ"

"நல்ல ஐடியா! அப்புறம் உங்ககிட்ட ரொம்ப பிகு பண்ணப்போறேன். அப்போத்தான் என்னை நல்லா கவனிப்பீங்க"

"யார் சொல்லிக்கொடுத்தா உனக்கு இதெல்லாம்?"

"நான் உங்களை ரிசேர்ச் பண்ணப்போறேன்."

"என்னை டேர்ன் ஆண் எப்படி பண்ணுறதுனா?"

"ஆமா. நீங்க கொஞ்சம் புரியாத புதிரா இருக்கீங்க இல்லையா? அதான்.."

"இப்போ என்ன அவசரம் உனக்கு?"

"அவசரமா? இதே ரொம்ப லேட். நமக்கு வயசாகிக்கிட்டே போகுது கண்ணன்?"

"அதனால?"

"இப்படியே போச்சுனா நான் கன்னியாவே நான் பேரிளம்பெண்ணாயிடுவேன்! "

"நீ மாமியானாலும் ஒரு மாதிரி நல்லாத்தான் இருப்ப பிருந்த்."

"நல்லானா?"

"சும்மா கும்முனு இருப்படி!" என்று பின்னால் தட்டினான்.

"தட் இஸ் செக்ஸி கண்ணன்! தெ வே யு சே இட்"

"யு நோ, ஐ வாண்டெட் டு டெல் ஹெர் ஹவ் த அப்பட்டைசர் வாஸ். ஐ மீன் ஹவ் யு டேஸ்டெட் அண்ட் ஸ்மெல்ட்."

"பானுட்டயா?"

"ஆமா."

"சரி அவளை இப்போக் கூப்பிடவா? சொல்றீங்களா?"

"ஏய் சும்மா இரு!"

"நெக்ஸ்ட் டைம் அவ முன்னாலே வச்சு உங்களை என்ன பண்ணுறேன் பாருங்க!"

"என்ன பண்ணுவ?"

"உங்களை கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுப்பேன். அதைப்பார்த்து அவளே மரியாதையா இடத்தை காலி பண்ணனும்! சரி நான் போய் ஷவர் எடுத்துட்டு ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வர்றேன். வந்ததும் டின்னர் சாப்பிடலாம். சரியா?"

"எனக்கு இங்கே போர் அடிக்குமே?"

"அதனால?"

"நான் வேணா வந்து உன் முதுக்குக்கு சோப் போட்டு விடவா?"

"முதுகுக்குனா பரவாயில்லை! நீங்க முதுகோட நிறுத்த மாட்டீங்களே! அதுக்குக் கீழேயும் போவீங்க"

"ஏய் நான் அப்படியெல்லாம் இல்லை. சொன்னால் சொன்ன படிதான் நடப்பேன். ஆனால் என் கண் மட்டும் அங்கே இங்கே பார்க்கத்தான் செய்யும்."

"அதானே? கண் பார்த்தால், அதுக்கு நீங்க என்ன செய்வீங்க பாவம்! கை எதுவும் பண்ணினாலும் அதுக்கு நீங்களா பொறுப்பு?"

"சரியா புரிஞ்சுக்கிறடா. நான் நெஜம்மாவே அப்பாவிதான். ஆனால் நீதான் ஏதாவது ட்ரிக் பண்ணி என்னை கவுத்திடுவ."

"நீங்க அப்பாவியக்கும்? எல்லாம் நேரம்தான்."

"ஆனால், என் மனசையும் கண்ணையும் கண்ட்ரோல் பண்ண முடியாது!"

"நான் அவ்ளோ கவர்ச்சியாவா இருக்கேன்?"

"நீ படு செக்ஸி பிருந்த்! உன்னை ரசிக்க எனக்குத்தான் தெரியும்!"

"நெஜம்மாவா?"

"சத்தியமா!"

"இங்கேயா அடிச்சு சத்தியம் பண்ணுவாங்க?"

"நீ இப்படி செய்வது அதைவிட செக்ஸியா இருக்கு!"

"இருக்கும் இருக்கும். உங்களுக்கு மனசை கட்டுப்படுத்த தெரியாதா?"

"அப்படி முடிஞ்சா நான் புத்தராயிடுவேனே?"

"சரி, போயிட்டு வரவா?"

"உன் பெர்மிஷனோட நான் கற்பனையில் நீ குளிக்கிறதை பார்க்கிறேன்."

"அதெல்லாம் தப்பு இல்லையா?"

"யார் சொன்னா தப்புனு? கற்பனையில் பார்த்தால் தப்பில்லை."

"அப்போ அண்டர்வேரோடயே குளிக்கிறேன்."

"நீ செய்றதெல்லாம் அநியாயம், பிருந்த். என்னை வச்சுக்கிட்டே பக்கத்தில் உள்ள பாத்ரூமில் குளிக்கப்போறது. என்னாலம் எப்படி கற்பனைபண்ணாம இருக்க முடியும்? அது ஏன் உங்களுக்கு எங்களை ப்ரவோக் பண்றதுல அத்தனை இன்பம்?"

"என்னை இப்போ குளிக்க வச்சதே நீங்கதான், மிஸ்டர்!"

"சரி போயிட்டுச் சீக்கிரம் வாடா! ஏதாவது வேணும்னா கூப்பிடு. சரியா?"

"நிச்சயமா. சரி போயிட்டு வரவா?"

"உன் டி வி ல ஏதாவது ஸ்போர்ட்ஸ் சேனல் மாத்தி வச்சுட்டுப்போவேன் ?"

"இ எஸ் பி என் வைக்கிறேன். வேற எதையும் பார்க்காதீங்க!"

"கண்ட சேனலையும் சப்ஸ்க்ரைப் பண்ணுறியா?"

"அதெல்லாம் இல்லை. நீங்க மூவ் இன் பண்ணிய பிறகுதான் அதெல்லாம்! தேவையில்லாமல் தேடாதீங்க!'

"நான் மூவ் இன் பண்ணினால் ஆண்ட்டியை எப்படி கன்வின்ஸ் பண்ணுவ?'

"நீங்க ரொம்ப நல்ல பையன்.. வாயில விரலிவிட்டா கடிக்கத்தெரியாதுனு சொல்றேன்."

" கிஸ் பண்ணத்தெரியும்னு சொல்லு! ஏன் உண்மையை சொல்றதுதானே?"

"நீங்க வேற! பொய்மையும் வாய்மை இடத்து புறைதீர்த்த நன்மை பயக்கும் எனின்.."

"இந்தக்குறள் மட்டும் எல்லோருக்கும் சரியா சொல்லுவீங்களே! சரி, சீக்கிரம் குளிச்சிட்டு வாடி! எனக்குப் பசிக்குது."

"சரி டார்லிங்!"

-தொடரும்

2 comments:

அகில் பூங்குன்றன் said...

ரொம்ப நல்லா கடலை கார்னர் எழுதுறீங்க. பல வாரங்களாக தொடர்ந்து படித்து வருகிறேன். வாழ்த்துக்கள்.

வருண் said...

***அகில் பூங்குன்றன் said...

ரொம்ப நல்லா கடலை கார்னர் எழுதுறீங்க. பல வாரங்களாக தொடர்ந்து படித்து வருகிறேன். வாழ்த்துக்கள்.***

வருகைக்கும்,வாசிப்பிற்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றிங்க, அகில் பூங்குன்றன்! :)