வேட்டைக்காரன் ரிலீஸாகி வெற்றிநடை போடுகிறது. ரஜினிக்கு அடுத்து விஜய்தான் சூப்பர் ஸ்டார் என்கிறதை இன்னொருமுறை ஞாபகப்படுத்தும் அளவுக்கு நல்ல ஓப்பனிங்னு எல்லோருமே சொல்றாங்க. விஜய் ரசிகர்களுக்கு வேட்டைக்காரன் விருந்துதான் என்று சந்தேகமே இல்லாமல் சொல்கிறது, பத்திரிக்கை உலகமும் பதிவுலகமும். இருந்தாலும் விமர்சகரகளின் பார்வையில் ஏகமனதாக நல்ல விமர்சனங்கள் வரவில்லை. இதில் நிறைய அரசியல் காரணங்களும் இருக்கலாம். சன் க்ரூப் எதிரிகள் மோசமாக எழுதலாம். ஆனால் எனக்கு அந்த அரசியல் விபரங்களெல்லாம் தெரியாது. பத்திரிக்கையின் விமர்சனங்களை +ve, -ve ஆகப்பிரித்துள்ளேன்.
Sify: Entertainment guaranteed (+ve)
Idly vadai: Not a good review (-ve)
Indiaglitz: எந்தப்படத்துக்கும் மோசமான விமர்சனம் எழுவதில்லை! (+ve)
Thatstamil: நல்ல விமர்சனம் அல்ல (-ve)
Rediff: 1.5* (-ve )
விமர்சகர்களைப்பொறுத்தவரையில் சுமாரான விமர்சனங்கள்தான் இதுவரை வந்திருக்கு. ஆனால் பாக்ஸ் ஆஃபிஸ்ல இன்றுவரை படம் நல்லாப்போகுது. அனேகமாக விஜயின் வெற்றிப்படம்தான் வேட்டைக்காரன் என்று தோனுது. எவ்வளவு பெரிய வெற்றி என்பது இன்னும் சில வாரங்களில் தெரியும்.
No comments:
Post a Comment