Friday, December 4, 2009

நடிகர் திலகமும் உலகநாயகனும்!


தமிழ்நாட்டில், தமிழன் முத்திரையுடன் தமிழ் சினிமாவில் கொடிகட்டிப்பறந்த நடிகர்களில் சிவாஜியும், கமலும் முக்கியமானவர்கள். சிவாஜியும், கமலும் இணைந்து நடித்த முதல்ப்படம் எ வி எம்மின் * பார்த்தால் பசிதீரும். அதன் பிறகும் கமல் குழந்தை நட்சத்திரத்திலிருந்து நட்சத்திரமாக ஆனபிறகு நடித்த படம் * சத்தியம் . கடைசியாக கமல் பெரிய சூப்பர் ஸ்டார் ஆனபிறகு இணைந்து நடித்த படம் * தேவர் மகன் .

ஆக எனக்குத்தெரிய கமல்-சிவாஜி இணைந்து நடித்த படங்கள் மூன்றே மூன்றுதான்.

* பார்த்தால் பசி தீரும் (1962, இயக்கம்: பீம்சிங்)

* சத்தியம் (1976, இயக்கம்: எஸ் எ. கண்ணன்)

* தேவர் மகன் (1992, இயக்கம்: பரதன்) ..


கிருஷ்ணா அவர்கள் பின்னூட்டத்தில் சொன்னதுபோல், கமல்-சிவாஜி இணைந்து நடித்த இன்னொரு படம் (நாலாவது படம்) எனக்கு இப்போத்தான் தெரியும்.

* நாம் பிறந்த மண் (1977, இயக்கம்: வின்சண்ட்)



சிவாஜி ப்ரொடக்ஸன்ஸ்ல கமல் நடித்த ஒரே படம்

* வெற்றி விழா (1987, இயக்கம்: ப்ரதாப் போத்தன்)

நண்பர்கள், காந்தி மற்றும் கிருஷ்குமார் பின்னூட்டத்தில் என்னுடைய தவறை சுட்டிக்காட்டிய பிறகு, கமல் சிவாஜி ஃபிலிம்ஸ்ல கதாநாயகனாக நடித்த இன்னொரு படமும், அவர் கெளரவவேடத்தில் நடித்த ஒரு படமும் இங்கே சேர்க்கிறேன்

* கலைஞன் (1993, இயக்கம்: ஜி பி விஜய்)

* மை டியர் மார்த்தாண்டன் [கெள்ரவ வேடம்] (1990, இயக்கம்: பிரதாப் போத்தன்)

அதேபோல் ராஜ்கமல் ஃபில்ம்ஸ்ல சிவாஜி நடித்த ஒரே படம் * தேவர் மகன்.


சிவாஜி மற்றும் கமல் பத்தி நெறைய பேசலாம். ஆனால் இது கொஞ்சம் வம்பான விசயம்.

என்ன காரணம்னு தெரியலை சிவாஜிக்கு ஒருமுறை கூட நேஷனல் அவார்ட் கொடுக்கப்படவில்லை. இவர் நடித்த * முதல் மரியாதை, * கெளரவம், * வியட்நாம் வீடு, * கர்ணன் போன்ற பல படங்களுக்கு இவருக்கு நேஷனல் அவார்ட் கொடுத்து இருக்கலாம். நேஷனல அவார்ட் என்கிற சொல்லையே வெறுப்பவர்கள் சிவாஜி ரசிகர்கள்! சந்தேகமே இல்லாமல் இவர் பல நேஷனல் அவார்ட் பெறுவதற்கு தகுதியானவர் என்று சிவாஜியைப் பிடிக்காதவர்கள்கூட ஒத்துக்கொள்வார்கள். அதே சமயத்தில் நடிகர் கமலஹாசன் மூன்றுமுறை நேஷனல் அவார்ட் பெற்றிருக்கிறார்!

10 comments:

கிருஷ்ணா said...
This comment has been removed by the author.
கிருஷ்ணா said...

நான் பிறந்த மண் (1977) - கமல் குழந்தை நட்சத்திரத்திலிருந்து நட்சத்திரமாக ஆனபிறகு சிவாஜியும் கமலும் இணைந்து நடித்த முதல்ப்படம்

வருண் said...

நன்றி, கிருஷ்ணா!

இந்தத்தவற்றை என் பதிவில் பிறகு திருத்தி சரி செய்கிறேன்.

வேலன் said...

காலம் சென்ற நடிகர் நாகேஷ் கூட தனது பத்திரிகை நண்பரிடம் இத்தகு ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். சபிக்கப்பட்டவர் சிவாஜி

வருண் said...

**வேலன் said...
காலம் சென்ற நடிகர் நாகேஷ் கூட தனது பத்திரிகை நண்பரிடம் இத்தகு ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். சபிக்கப்பட்டவர் சிவாஜி***

பகிர்தலுக்கு நன்றிங்க வேலன்.

வருண் said...

**கிருஷ்ணா said...
நான் பிறந்த மண் (1977) - கமல் குழந்தை நட்சத்திரத்திலிருந்து நட்சத்திரமாக ஆனபிறகு சிவாஜியும் கமலும் இணைந்து நடித்த முதல்ப்படம்

4 December, 2009 10:21 AM***

பதிவை சரி செய்துவிட்டேங்க, கிருஷ்ணா. ஆனால் நடிகர்திலகம்.காம் படி, சத்தியம் (1976) இதற்கு ஒரு வருடம் முன்னால் வந்தபடம்ங்க.

Suresh Gandhi said...

kamal sivaji filmsla nadicha padankal moonru.
1.vertri vizha
2.kalaignan
3.my dear maarthandan (cameo)

IKrishs said...

Kalaigan kooda sivaji films dhan...
Thagavalgalla romba kulappam niranju irukke..Sari pannunga boss..

வருண் said...

**** SBSGandhi said...
kamal sivaji filmsla nadicha padankal moonru.
1.vertri vizha
2.kalaignan
3.my dear maarthandan (cameo)

4 December, 2009 10:58 PM***

நன்றி எஸ் பி எஸ் காந்தி, என் பதிவில் இதையும் சரி செய்கிறேன்.

என் "அறியாமையை" சரி செய்ததற்கு நன்றி :)

வருண் said...

*** கிருஷ்குமார் said...
Kalaigan kooda sivaji films dhan...
Thagavalgalla romba kulappam niranju irukke..Sari pannunga boss..

4 December, 2009 11:14 PM***

கன்லஹாசனுக்கு பல வெப்சைட்கள் இருந்தும், அவர் படங்களை சரியாக வரிசைப்படுத்திய நல்ல வெப்சைட் இன்னும் எனக்கு அகப்படவில்லைங்க.

தவறை சரி செய்துவிடுகிறேன். மன்னிச்சுக்கோங்க, கிருஷ்குமார்!