Thursday, December 3, 2009

Eastwood in Pale Rider -part-2 (end)


வெளியூர் போயிருந்த அப்பா Coy லஹூட் திரும்பி வருவான். ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்ததும், கார்பன் கென்யான் நிலையை விசாரிப்பார். மகன், Josh லஹூட் கார்பன் கென்யான்ல நடந்த விபரத்தை சொல்லுவான். ஒரு ப்ரீச்சர் வந்து எல்லாவற்றையும் தலைகீழா மாற்றிவிட்டான் என்பதுபோல.

“What are you saying? Those guys were about to wind up when I was leaving” Coy Lahood will say.

“They have got a new preacher”

“Preacher?”

“A Big guy!”

“You let a preacher in Carbon Canyon?”

“We did not invite him. He joined them”

“Listne a preacher can give them hope. That is dangerous. We need to send them off and take over that land. Do arrange a meeting with the Preacher, let me talk to him” Coy lahood will say.

கார்பன் கென்யான்ல அன்று ஒரு கல்லை தோண்டி எடுக்கும்போது, ஹல் பேரட் ஒரு சின்ன தங்கக்கட்டி எடுப்பான். இதுபோல் அதிர்ஷ்டம் எப்போதாவதுதான் நடக்கும். அந்த சின்ன தங்கக்கட்டி பல நூறு டாலர்மதிப்புள்ளது! ஹல் பேரட் ஃபேமிலிக்கு ஒரே கொண்டாட்டம்தான் . தன் கடன்களையெல்லாம் அடைத்துவிட்டு வரலாம் என்று டவுனுக்கு போகலாமானு கேட்பான் ஹல், க்ளிண்ட் இடம். க்ளிண்ட் சரி என்றதும், க்ளிண்ட், ஹல், சாரா, மேகன் நாலு பேரும் ஒரு வாகனில் டவுனுக்கு போய் கடனை எல்லாம் அடைத்துவிட்டு ஷாப்பிங் பண்ணிவிட்டு திரும்பிவர ரெடியாகும்போது. ஜாஸ் லஹூட் அவர்களிடம் வந்து அவன் அப்பா "ப்ரீச்சரிடம்" பேசனும் என்கிறார் என்பான்.

சாரா, ஹல் ரெண்டு பேரும் போகவேணாம் என்பார்கள். க்ளிண்ட், என்னனு கேட்டுத்தான் வருவோமேனு லஹூடிடம் பேச அவன் இடத்திற்கு உள்ளே போவார். காய் லஹூட் க்ளிண்ட் ஈஸ்ட்வுட் வுடன் பேசுவான்.

“உனக்கும் இவர்களுக்கும் என்ன சம்மந்தம்? நீ ஏன் இதில் தலையிடுற?” என்பான் லஹூட்

“ஜஸ்ட் ஃப்ரெண்ட்ஸ்” என்பார் க்ளிண்ட்.

“நீ ஒரு ப்ரீச்சர்னு சொல்றாங்க! உனக்கு டவுன்ல ஒரு சர்ச் கட்டி தர்றேன். நெறைய காசு கிடைக்கும்”னு சொல்லி க்ளிண்டை ப்ரைப் பண்ணப்பார்ப்பான்.
“பணம் நெறையா சேர்ந்தால் என்னால கடவுளுக்கு சேவை பண்ணமுடியாது” நு நக்கலா சொல்லி க்ளிண்ட் அந்த பேச்சை முடித்துவிடுவார்.

“உனக்கு அவர்கள் இடங்கள் வேணும்னா அதற்கான பணத்தைக்கொடுத்து வாங்கிக்கோ” என்பார் க்ளிண்ட்.

“சரி, நான் அவர்களுக்கு பணம் கொடுத்து வாங்கிக்கிறேன்”னு முதலில் அடிமாட்டு விலைக்கு கேப்பான் லஹூட் அவர்கள் நிலத்தை எல்லாம்.

க்ளிண்ட், லஹூடிடம் ஒரு நல்ல விலை கொடுக்கச்சொல்லி கேட்பார்.

கோபம் வந்த லஹூட் "இப்படி ரொம்ப அடம் பிடிச்சால் “ஸ்டாக்பர்ன்”னு ஒரு பயங்கரமான மார்ஷலும் அவனுடைய 6 டெபுட்டீஸையும் கூட்டி வருவேன். அவர்கள் இவர்களை மிரட்டி வேணும்னா கொலையே பண்ணி வாங்கி கொடுத்துவிடுவார்கள்” என்று மிரட்டுவான் லஹூட்.

“நீ ஸ்டாக்பர்ன் மற்றும் அவன் 6 டெபுட்டிகளூக்கு நீ இவர்கள் கேட்பதைவிட பலமடங்கு அதிகப்பணம் கொடுக்கனும்” என்பார் க்ளிண்ட்

“உனக்கெப்படி தெரியும்?” என்று கேட்பான் லஹூட் ஆச்சர்யமாக.

க்ளிண்ட் ஏதோ சொல்லி சமாளிப்பார். ஆனால் ஸ்டாக்பர்ன் என்கிற கொடூரமான மார்ஷல் பத்தி க்ளிண்ட் நல்லா தெரிந்து இருக்கார் என்பது லஹூடுக்குப் புரியும்.

கடைசியில் லஹூட், முடிவா ஒரு நல்ல விலைகொடுத்து வாங்கிக்கிறேன் னு ஒரு நல்ல ஆஃபருடன் வருவான். நீ அவர்களிடம் பேசி, 24 மணி நேரத்தில் பணத்தை வாங்கிக்கொண்டுவிட்டு அவர்கள் போயிடனும். அப்படி 24 மணி நேரத்தில் அவர் சரினு ஏற்கலைனா நான் அந்த மார்ஷலையும் டெபுட்டிக்களையும் கொண்டுவந்துதான் காலி பண்ண வைப்பேன் என்பான்.

இந்த ப்ராப்பஸிசனுடன் க்ளிண்ட் வருவார். கார்பன் கென்யான் திரும்பிப்போனவுடன் ஒரு மீட்டிங் நடக்கும். க்ளிண்ட் லஹூட் உடைய ஆஃபரை சொல்லுவார். உங்களுக்கு பிடித்தால் அதை வாங்கிக்கொண்டு போங்க. இல்லைனா அவன் ஸ்டாக்பர்ன் னு ஒரு மார்ஷலை கூட்டிவருவான். அவனும் அவன் டெபுடிகளும் ரொம்ப மோசமான் கொலைகாரர்கள் என்று விபரத்தை சொல்லுவார். அந்த மோசமான மார்ஷல் பத்தி க்ளிண்ட் சொன்னதும். என்ன ஏதுனு அவர்கள் கேட்பார்கள். மறுபடியும் க்ளிண்ட் அவர்கள் யாரையும் கொல்லத்தயங்க மாட்டார்கள். இந்த பணத்துக்கு நீங்க சரினு சொல்லவில்லையென்றால். அவார்களை லஹூட் அழைத்து வருவான், நீங்க எல்லோரும் சேர்ந்து சண்டைபோட்டு அவர்களை ஒழிக்கனும் என்பார்.

கார்பன் கென்யான் மக்களுக்கு இப்போ க்ளிண்ட் இருப்பதால் லஹூட் மற்றும் ஸ்டாக்பர்ன் ஒண்ணும் பெரிய த்ரெட்டா தெரியாது. க்ளிண்ட் இருப்பதால், எல்லோரும் சேர்ந்து மார்ஷலையும் ஸ்டாக்பர்னையும் சமாளித்துவிடலாம் என்று தைரியம் வந்துவிடும். ஹல் பேரட் எல்லோரையும் ஒரு வழியா கண்விண்ஸ் பண்ணி லஹூட் ஆஃஃபரை டேர்ன் டவுன் பண்ணிவிடுவார்கள்.

ஆனால் அடுத்த நாள் காலையில் க்ளிண்ட் இருக்க மாட்டார். எழுந்து எங்கேயோ போய்விடுவார். யாரிடமும் எதுவும் சொல்ல்லாமல் போய்விடுவார்.

எல்லோருக்கும் ஒரே பீதி ஆயிடும். சாரா, க்ளிண்ட் ஆளை காணோம் என்றதும், ஹல் பேரட்டை திட்டுவாள். இப்போ அந்த கன் ஃபைட்டர் ப்ரீச்சர் இல்லை! எப்படி சமாளிப்ப அந்த மார்ஷலை? என்று. “அந்த ஆஃப்ரை நீ ஒத்துக்கொண்டு இருக்கனும்” என்பாள். ரெண்டு பேருக்கும் சின்ன வாக்குவாதம் வரும். க்ளிண்ட் இல்லாமல் எப்படி சமாளிக்கிறதுனு ஒரே பயம்மா இருக்கும் எல்லோருக்கும்.

க்ளிண்ட் காலையில் எழுந்து எங்கேயோ பக்கத்து ஊருக்கு ரயிலில் போக ரயில்வே ஸ்டேஷன் போவார். அப்படிப் போகும்போது வழியில், ஜாஸ் லஹூடிடம் போய், அவர்கள் உங்க அப்பாவுடைய ஆஃபருக்கு கார்பன் கென்யான் மக்கள் சரி என்று ஒத்துக்கவில்லை என்று சொல்லிவிட்டு போவார்.

இதைக் கேட்டவுடன், காய் லஹூட்யிடம் இருந்து மார்ஷலும் அவனுடைய ஆறு டெபுட்டிகளுக்கும் ஒரு டெலிக்ராம் போகும். காசுக்காக யாரையும் கொல்லும் அவர்கள் ஏழு பேரும் புறப்பட்டு வந்து கொண்டிருப்பார்கள்.

அதே நேரத்தில் க்ளிண்ட் வேறு ஒரு ஊருக்கு போய் அங்கே உள்ள பேங்க் லாக்கரில் அவருடைய துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் மற்றும் டைனமைட் எல்லாவற்றையும் பெற்றுக்கொண்டு கார்பன் கென்யான் திரும்பி வந்து கொண்டு இருப்பார்.

மேகன், அவள் முட்டாள்த்தனத்தால் ஜாஸ் லஹூட் மற்றும் அந்த அடியாட்களிடம் மாட்டிக்கொள்வாள். அவளை அவர்கள் பலவந்தப்படுத்திக் கொண்டு இருக்கும்போது க்ளிண்ட் திரும்பி வந்து ஜாஸ் லஹூட் கையில் சுட்டு, அவளை காப்பாற்றி கார்பன் கென்யான் அழைத்துக்கொண்டு வருவார்.

இதற்கிடையில் கார்பன் கென்யான்ல ஸ்பைடர் கான்வே னு இன்னொரு சுரங்கம் வேலை செய்பவர் ஒரு பெரிய தங்கக்கட்டி தோண்டி எடுப்பார். இவர் முன்னால் காய் லஹூடிடம் வேலைக்கு போய் வந்து கொண்டிருந்து இருப்பார். இப்போ லஹூடிடம் வேலை பார்க்காமல் தனியாக சுரங்கத்தில் தன் ரெண்டு மகன்களுடன் வேலை செய்வார். லஹூடுக்கும் ஸ்பைடருக்கும் ரொம்ப ஆகாது.

அந்த பெரிய தங்கக்கட்டியை எடுத்துக்கொண்டு தான் இரண்டு மகன்களுடன் டவுனுக்கு போவார். அங்கே தன் கடனை எல்லாம் அடைத்துவிட்டு நல்லா குடித்துவிட்டு, காய் லஹூட் இடம் வம்பு பேசுவார். நல்லா குடித்துவிட்டு அந்த தங்ககட்டியை காட்டி லஹூடுக்கு எரிச்சலை கிளப்புவார் ஸ்பைடர் கான்வே.

அந்த நேரத்தில் அந்த மார்ஷலும் அவருடைய டெபுட்டிகளும் லஹூட் இருப்பிடத்தில் வந்து உள்ளே இருப்பார்கள். லஹூட் எல்லா விபரத்தையும் சொல்லுவான். க்ளிண்ட் தான் இவர்கள் தைரியத்துக்குக் காரணம். அவன நீங்க கொல்லனும் என்பான்.

"ப்ரீச்சர் எப்படி இருப்பான்?" என்று ஸ்டாக்பர்ன் கேட்பான். க்ளிண்ட் பற்றி லஹூட் அடையாளங்களை சொல்லும்போது, ஸ்டாக்பர்ன் சொல்லுவான், "இது மாதிரி ஒருத்தனை எனக்கு முன்னாலேயே தெரியும்" என்று. உடனே லஹூட் சொல்லுவான், "அவனும் உன் பேரை சொன்னதும் நீ யாருனு தெரிந்த்து போல பேசினான்" என்பான் லஹூட். உடனே ஸ்டாக்பர்ன், "இருக்காது! நான் நினைப்பவன் செத்துட்டான்" என்பான்.

க்ளிண்ட்டும் ஸ்டாக்பர்னும் ஏற்கனவே ஒருமுறை மோதி இருப்பார்கள். அந்த மோதலில் க்ளிண்ட் இறந்து போய் இருப்பான். அதே க்ளிண்ட் இப்போ “ghost” ஆக ஸ்டாக்பர்னை பழிவாங்க வந்தது போலவும் காட்டப்படும்! க்ளிண்ட் மனிதனா இல்லை "கோஸ்ட்"டா என்பது தெளிவாக சொல்லப்படாது.

வெளியே ஸ்பைடர் சததம்கேட்டு வந்த ஸ்டாக்பர்னும் அவனுடைய டெபுட்டிகளும் வெளியே வருவார்கள். அவர்கள் ஸ்பைடரை சல்லடையாக சுட்டு கொல்வார்கள். ஸ்பைடர் பரிதாபமாக சாவான். அவனை கொன்றுவிட்டு, அவன் மகன்களிடம், "கார்பன் கென்யானுக்கு இவன் பாடியை எடுத்துபோய் அடக்கம் பண்ணு. அந்த ப்ரீச்சரை (க்ளிண்ட்) நாளைக்கு காலையில் வந்து என்னைப் பார்க்கச்சொல்லு" என்று சொல்லி அனுப்புவார்கள்.

தன் தந்தையின் இறந்த சடலத்துடன், இருவரும் கார்பன் கென்யான் வந்து சேருவார்கள். அந்த நேரத்தில் மேகனை காப்பற்றி வரும் க்ளிண்ட்டும் வந்து சேருவார். க்ளிண்ட் இடம் ஸ்டாக்பர்ன், ஸ்பைடரை கொன்னது மேலும் க்ளிண்ட்டை நாளை காலையில் வந்து பார்க்க வர்ச்சொன்னான் என்பது எல்லாமே சொல்லப்படும்.

அன்று இரவு, சாரா வந்து க்ளிண்ட்டிடம் வந்து நான் உன்னைத்தான் விரும்புறேன் ஆனால், நீ ஒரு நாள் என்னைவிட்டு போயிடுவ, அதனால ஹல் பேரட்டை கல்யாணம் பண்ணப்போறேன் என்பாள்.


அடுத்தநாள்...

ஸ்டாக்பர்ன் மற்றும் அவர் டெபுட்டிக்களை சந்திக்க க்ளிண்ட் காலையில் புறப்பட்டு போவார். துணைக்கு ஹல்லும் வர்றேன் என்பார். க்ளிண்ட் வேண்டாம் என்றாலும் கேட்கமாட்டார். இருவரும் போகும் வழியில் லஹூட் சுரங்கத்தை எல்லாம் டைனமைட் வச்சு தூள் தூளாக்குவார்கள்.

கடைசியில் ஹல் குதிரையை க்ளிண்ட் வேணும்னே விறட்டிவிட்டு ஹல்லை அங்கேயே இருக்க வைத்துவிட்டு தான் மட்டும் தனியாக போவார் மார்ஷலைசந்திக்க.

க்ளிண்ட், ஹல்லிடம் சொல்லுவார். "யு ஆர் எ குட் மேன் ஹல்! டேக் கேர் ஆஃப் சாரா அண்ட் மேகன்!" என்று சொல்லிவிட்டு தனியாக தன் குதிரையில் சென்று அவர்களை சந்திப்பார்.

முதலில் க்ளிண்ட் 6 டெபுட்டிகளையும் தனித்தனியாக மறைந்திருந்து சுட்டுக்கொல்லுவார்.

கடைசியில் மார்ஷல் ஸ்டாக்பர்ன் வெளியே வருவான். அதுவரை க்ளிண்ட் முகத்தை ஸ்டாக்பர்ன் பார்த்து இருக்க மாட்டான். 6 பேரையும் கொன்னுட்டு, இப்போ க்ளிண்ட் அவருக்கு எதிரே நிற்பார்.

க்ளிண்ட் முகத்தைப் பார்த்துவிட்டு, "யூ! யூ!" என்பான் ஸ்டாக்பர்ன் பேயறைந்த மாதிரி. என்ன விசயம் என்றால் க்ளிண்ட்டை ஏற்கனவே ஸ்டாக்பர்ன் கொன்று இருப்பான். மறுபடியும் எப்படி உயிரோட அவன் வந்தான் என்று க்ளிண்ட்டை அதிர்ச்சியுடன் பார்த்து குழம்பும்போது க்ளிண்ட் அவனை சுட்டு கொல்வார்.

7 பேரையும் கொன்ன பிறகு, க்ளிண்டை மறைந்திருந்து காய் லஹூட் சுடப்போவான். அந்த நேரத்தில் அங்கே நடந்தே வந்த ஹல் பேரட் லஹூடை சுட்டுக்கொல்லுவான். ஹல் அங்கேயிருந்து பல மைல்கள் நடந்தே வந்து இருப்பான், க்ளிண்ட்க்கு உதவி செய்ய!

வேலை முடிந்தவுடன் ஹல் க்கு பை சொல்லிவிட்டு புறப்பட்டு போய்விடுவார் க்ளிண்ட்.

மேகன், ஒரு பெரிய வாகனில் அவசரமாக வந்து எங்கே ப்ரீச்சர் நு அங்கே வந்து தேடுவாள்.

“ப்ரீச்சர் போயிட்டார்” என்பார்கள் எல்லோரும்.

மேகன் சத்தமாக "ப்ரீச்சர்!" என்று க்ளிண்ட் போன திசையில் கத்துவாள்.

"ப்ரீச்சர் வி ஆல் லவ் யு!"

" ஐ லவ் யு ப்ரீச்சர்!" என்று கத்துவாள் மேகன்.

மேகனும், ஹல்லும் திரும்பி கார்பன் கென்யான் போவார்கள்.

படம் முடிந்துவிடும்.


பின் குறிப்பு: இதில் க்ளிண்ட் ஏற்கனவே கொல்லப்பட்டதாக இப்போது "கோஸ்ட்டாக" வந்ததாக நினைத்துக்கொள்ளலாம். அல்லது, க்ளிண்ட் மரணக்காயங்களுக்கு அப்புறம் எப்படியோ தப்பித்து வந்துவிட்டதாகவும் வந்து ஸ்டாக்பர்னை பழிவாங்கியதாகவும் நினைத்துக்கொள்ளலாம்! That is up to the viewer!

2 comments:

Unknown said...

Nicely said Varun.
Where is Kayal? Missing in action!!!

வருண் said...

Thanks, Abiramy! Kayal is too busy with her personal life these days. Lost interest in blogging now! :(