Wednesday, December 9, 2009

யாருங்க லக்கி? கமலா? தமன்னாவா?


"விசயம் தெரியுமாண்ணே? தமன்னாதான் அடுத்த லக்கி கேர்ள்!"

"அப்படியா!"

"ஆமாண்ணே அடுத்த கமல் படத்தில், கமலுடன் ஜோடியாக நடிக்க சான்ஸ் இவருக்கு கெடச்சிருக்காம்! அதான் லக்கி!"

"யாரு இயக்குனர்?"

"கே எஸ் ரவிக்குமாராம்!"

"ராஜ் கமல் ப்ரடக்ஷனா?"

"இல்லைண்ணே! உதயநிதி ஸ்டாலின்!"

"ஸோ, இதையும் "சன் நெட்வொர்க்" ப்ரமோட் பண்ணும்!"

"ஆமாண்ணே!"

"ஆமா அது ஏன்ப்பா தமன்னா லக்கினு சொல்றீங்க?"

"நம்ம ஒலகநாயகனோட ஹீரோயினா நடிக்கிறது லக்கு இல்லையாண்ணே?"

"அது விவாதத்துக்குரியது! சமீபத்தில் கமலோட ஹீரோயினா நடித்த பிறகு யாருக்கும் பெரிய மார்க்கட் வந்ததால்லாம் சொல்ல முடியாது! ஒரு சிலர் காணாமலும் போயிட்டாங்க! ஆமா கமலஹாசன் என்னனவோ புதுமையை புகுத்துறாரு. இதுல மட்டும் எம்ஜிஆர் செய்த அந்த பழைய சரக்கைத்தான் இன்னும் ஃபாலோ பண்ணுறார்!"

"எதுண்ணே பழைய சரக்கு?"

"40 வயசு வித்தியாசத்தில் உள்ள ஹீரோயினோட ஜோடியா நடிக்கிறதுதான்!"

"ஆமாண்ணே, எம்ஜிஆர்-லதா, சிவாஜி-அம்பிகா, ரஜினி-ஸ்ரேயா, கமல்-அசின், இப்போ கமல்-தமன்னா! அது ஏண்ணே இதை மட்டும் மாற்றமுடியலை?"

"கமல் என்னதான் சினிமாவை படித்த மேதையாவும் ஏன் பெரிய மேதாவியா இருக்கலாம். அவராலையும் ஒரு சில விசயங்களை நம்ம தமிழ் சினிமால மாத்தமுடியாது. அதுல ஒண்ணுதான் இந்த 40 வயது வித்தியாசம் உள்ள ஹீரோயினைப்போட்டு நடிப்பது. என்ன செய்றது அப்போத்தான் நம்ம நாட்டான் பார்ப்பான்!"

"மஞ்சுளா, அம்பிகா, ராதா, ஸ்ரேயா, அசின் எல்லோருமே எம் ஜி ஆர், சிவாஜி, ரஜினி, கமலோட சந்தோஷமாத்தான் நடிச்சாங்க!"

"வேறென்ன செய்ய முடியும்? நடிக்க இஷ்டம் இல்லைனாலும் முடியாது னு அவங்க சொல்ல முடியாத நிலைனு தோனுது எனக்கு!"

"சரி, அப்போ இளம் ஹீரோயினுடன் டூயட் பாடப்போகும் கமல் லக்கினு சொல்றீங்களா?"

"நான் அப்படி எல்லாம் சொல்லலை. கமல் டூயட் பாடாமலும் இருக்கலாம்! தமன்னா லக்கினு சொல்றது தேவை இல்லாதது. இதல்லாம் என்ன பெரிய லக்கா என்ன?"

"நம்ம கமலோட நடிச்சு நாளைக்கு பெஸ்ட் ஆக்ட்ரெஸ் நேஷனல் அவார்ட் வாங்கினால்?"

"கே எஸ் ரவிக்குமார் இயக்கத்திலேயா!"

"கமலும் கூடவே இருக்கார்ண்ணே!"

"மொதல்ல "வின் பண்ணட்டும் அப்புறம் சொல்லுவோம்! லக்கியா இல்லை அன்லக்கியான்னு!"

4 comments:

Mouthayen Mathivoli said...

கமல் படம் ஆச்சே! முத்தக் காட்சி உண்டா? தமன்னா லக்கி தான்.

பீர் | Peer said...

காசு கொடுத்தால் கோயிந்துடனும் 'நடிப்பார்கள்'

வருண் said...

****Mouthayen said...
கமல் படம் ஆச்சே! முத்தக் காட்சி உண்டா? தமன்னா லக்கி தான்.

10 December 2009 10:34 PM****

இப்படிச் சொல்லிச் சொல்லி அவரை ஒரேயடியா ஒழிச்சிட்டாங்க, போங்க! அவர் தேவையான இடத்தில்கூட முத்தம் கொடுப்பதில்லை இப்போ :-)

வருண் said...

****பீர் | Peer said...
காசு கொடுத்தால் கோயிந்துடனும் 'நடிப்பார்கள்'

11 December 2009 2:35 PM***

இல்லைங்க ஒரு சில பாப்புளர் இல்லாத நடிகருடன் நடிக்க மறுப்பதும் உண்டுங்க, பீர் :)