Monday, December 28, 2009

விகடனில் அடிவாங்கிய வேட்டைக்காரன்!



"அண்ணே விகடன்ல விஜய் படத்துக்குனா சும்மா மார்க்கை அள்ளிவிடுவாங்கனு சொன்னதை பொய்யாக்கிட்டாங்க!"

"விகடன் விமர்சனக்குழு திருந்திருச்சா? நல்ல விசயம்தான் போ!"

"அது என்னனு தெரியலை, விகடன் சன் பிக்ச்சர்ஸை ப்ரமோட் பண்ணும்னுதானே எல்லோரும் நெனச்சாங்க? மேலும் விஜய் படத்துக்கு ஒரு அஞ்சோ பத்தோ சேர்த்துத்தான் போடுவாங்கனு நெனச்சாங்க! எல்லாம் நாசமாப்போச்சு போங்க!"

"அதென்னவோ உண்மைதான்! வேட்டைக்காரனுக்கு நல்ல மார்க் கொடுக்கலையா!"

"வேட்டைக்காரனை கவுத்தீட்டாங்கண்ணே!"

"ஃபெயில் மார்க்கா? என்னப்பா ஆச்சு விகடனுக்கு? ஒரே குழப்பா குழப்புறானுகப்பா!"

"ஃபெயில் மாதிரித்தான் அண்ணே! நூத்துக்கு முப்பத்தி எட்டு மார்க்! கேவலமான ஒரு மார்க்கு"

"ஃபெயில் மார்க் போட்டு நல்ல விமர்சனம் எழுதினாலும் எழுதி இருப்பாங்க!"

"அதுவும் இல்லைண்ணே! இதைக் கேளுஙக! "பாட்ஷா + பகவதி + திருப்பாச்சி + சத்யம் = வேட்டைக்காரன் "னு கேவலமா ஆரம்பிக்கிறாங்க!"

"எப்படி முடிச்சாங்க?"

"பார்த்துச் சலிச்ச பழைய புலி! அதனால் உறுமுவதெல்லாம் இருமுவது போல கேக்குது!" இப்படி முடிச்சிருக்காங்க!"

"பாவம் விஜய்!"

"விகடன் மார்க் ஒண்ணும் பாக்ஸ் ஆஃபிஸ் கலக்சனை பாதிக்காதுனு விஜய் விசிறிகள் சொல்றாங்கண்ணே!'

"வேற என்னத்தை சொல்றது?"

8 comments:

ரிஷபன்Meena said...

பாவம் விஜய். இளைஞர் காங்கிரசிலாவது சேர்ந்து தொலைத்திருக்கலாம்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//நூத்துக்கு முப்பத்தி எட்டு மார்க்! //

நல்ல மார்க்??

thiyaa said...

நல்ல மார்க்

வருண் said...

***ரிஷபன் said...

பாவம் விஜய். இளைஞர் காங்கிரசிலாவது சேர்ந்து தொலைத்திருக்கலாம்

28 December 2009 11:17 AM***

விஜய், இப்போதைக்கு எந்தக் கட்சிக்கும் ஆதரவு செய்யாமல் இருப்பதுதான் நல்லதுங்க!

பகிர்தலுக்கு நன்றி, ரிஷபன்>

வருண் said...

***SUREஷ் (பழனியிலிருந்து) said...

//நூத்துக்கு முப்பத்தி எட்டு மார்க்! //

நல்ல மார்க்??

28 December 2009 5:59 PM***

மசாலா படத்துக்கு 40+ னாத்தான் நல்ல மார்க், சுரேஷ். 38 நிச்சயம் நல்ல மார்க் இல்லை! பொதுவா, விஜய் படத்துக்கு நல்ல மதிப்பெண்கள் விகடன் கொடுப்பதுதான் வழக்கம்!

வருண் said...

***தியாவின் பேனா said...

நல்ல மார்க்

28 December 2009 6:30 PM***

இல்லைங்க, இது நல்ல மார்க் இல்லை!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

தமிழீஷில் ஓட்டுக்கள் குவிந்திருக்கின்றன வாழ்த்துக்கள்

வருண் said...

சுரேஷ்: நிச்சயம் ஒவ்வொரு வாக்கும், அஜீத் ரசிகர்களுடையதுதான் :))