Wednesday, December 30, 2009

எந்திரனின் எதிரி சிவாஜி த பாஸ் தான்!


"எந்திரன் எப்போண்ணே ரிலீஸ்?"

"ஷங்கர் போஸ்ட் ப்ரடக்ஷன் வேலை ஒரு 6 மாதம் செய்து ஜூன், 2010 போல வெளியிடுவாருன்னு தோனுது"

"ஏப்ரல் 14 போல விட்டால் நல்லதுண்ணே. ரஜினிக்கு அந்த நேரத்தில் வெளியாகி வெற்றியடைந்த படங்கள் நெறையவே இருக்கு. ஆனா ஷங்கர் என்னத்தை.."

"ஆமா, ஏப்ரல்14 னா ஃபேமிலி ஆடியண்ஸ், சிறுவர் சிறுமியெல்லாம் அம்மா அப்பாவோட ரஜினி படம் பார்க்க போவாங்க! படம் ரொம்ப நல்லாப்போக வாய்ப்பிருக்கு."

"ஆனால் சிவாஜி ஜூன்ல வெளியாகி நல்லாத்தானண்ணே போச்சு? இல்லையாண்ணே? அதனால் ஜுன்னாலும் பராவாயில்லத்தாண்ணே!"

"இருந்தாலும் ஏப்ரல் 14, ரஜினிக்கு ரொம்ப நல்ல நேரம்தான். நான் இல்லைனு சொல்லலப்பா! அதுக்குக்கூட சாண்ஸ் இருக்குனுதான் நெனைக்கிறேன்"

"அண்ணே! ஷங்கர் பத்தி நமக்குத் தெரியாததா? இந்தப்படம் ஏப்ரல் 14, 2010ல வெளி வர வாய்ப்பே இல்லண்ணே! ஏப்ரல்14 தான் வேணும்னா, ஏப்ரல் 14, 2011 வேணா வரலாம்!"

"நிச்சயம் 2010 ல ஏதாவது ஒரு மாதத்தில் வெளிவந்துவிடும்! ஆமா, எந்திரனுக்கு யாரு எதிரினு தெரியுமா உனக்கு?"

"என்ன சொல்ல வர்றீங்க? ஷாருக்கான் ரொம்ப கோபமா இருக்காராம். அதை சொல்றீங்களா? அவர் பண்ண இருந்த ப்ராஜெக்ட் இல்லையாண்ணே?"

"அவர்தான் மாட்டேன் னு சொன்னது. ஷங்கர் அவரை கழட்டவில்லையே!"

"ஆமா, நம்ம கமல் ஏண்ணே வேண்டாம்னு சொன்னாரு?"

"தெரியலையே. கமல் இந்தப்படத்தை பண்ணி இருக்கலாம்தான். இந்தியன் நல்லா க்ளிக் ஆச்சு. இதுவும் நிச்சயம் க்ளிக் ஆயிருக்கும். என்ன பிரச்சினைனு தெரியலையே!"

"எல்லோரும் தூக்கி எறிஞ்சதை ரஜினியை வச்சு பண்றாருண்ணே, ஷங்கர்!"

"இடையில் விக்ரம், அஜீத்தை எல்லாம் கன்சிடர் பண்ணிதாகவும் சொல்றாங்க! இது ஷங்கரோடைய ட்ரீம் ப்ராஜெக்ட்னு வேற ஏதோ சொல்றாங்க."

"என்னண்ணே கதையாம்?"

"அந்தக்காலத்தில் சுஜாதா ஒரு கதை எழுதினாராம். அதுதானாம் கரு. நான் அதைப் படிக்கலிப்பா! டபுள் ஆக்ட்டாம். ஒரு ரஜினி வில்லன், ரோபாட்டாம். இன்னொருவர் ஹீரோ போல!"

"ஹீரோவுக்கு ஜோடிதான் நம்ம ஐஸா?"

"அப்படித்தான் போல! ஐஸ்வர்யாராய் இருப்பதால ஓரளவுக்கு ஓவர் சீஸ் மற்றும் வட மாநில கலக்ஷனை அதிகப்படுத்தும்!"

"ஏன் அண்ணே வட இந்தியா மட்டுமா?? நம்ம ஆளுகளும் ஐஸ்னா இன்னும் ஜொல்ளுவிடத்தான் செய்வார்கள்!"

"எந்திரனுக்கு மிகப்பெரிய எதிரி சிவாஜி த பாஸ்தான்!"

"ஏன்ண்ணே?"

"சிவாஜி ஏற்படுத்திய ரெக்கார்டை எந்திரன் ப்ரேக் பண்ணியே ஆகனும்கிற கட்டாயம் இப்போ! அதுதான் எந்திரனுடைய முதல் டார்கெட்!"

"ஐங்கரன்தான், ஓவர்சீஸ்ல மார்க்கட் பண்ணுறாங்களாண்ணே?"

"பண்ணினால்தான் நல்லது. சன் டிவியுடன் என்ன டீல்னு தெரியலையே! ஆதவனை மார்க்கட் பண்னியது ஐங்கரந்தான். ஆனால் இப்போ வெளியான வேட்டைக்காரனை ஐங்கரன் ரிலீஸ் பண்ணல"

"எந்திரனை ஐங்கரந்தான் மார்க்கட் பண்ணுவாங்கண்ணே!"

"பார்க்கலாம். பாஸை எந்திரன் கலக்ஷனில் முறியடிக்கிறானா என்று!"

No comments: