Friday, December 18, 2009

எங்களை வாழவைத்த தமிழ்சினிமா!



"என்னண்ணே எல்லோரும் அர்ச்சனை தட்டும் கையுமா நிக்கிறாங்க? என்ன விசேஷமாம்?"

"உனக்குத் தெரியாதா? இன்னைக்கு "தமிழ்சினிமா தினமாம்" !"

"என்னாது? தமிழ்சினிமா தினமா? அப்படினா?"

"மதர்ஸ் டே, ஃபாதர்ஸ் டே, காதலர் தினம் எல்லாம் இருக்கு இல்லையா? அது மாதிரித்தான் இதுவும். தமிழ் சினிமாவாவை வச்சு வாழ்ந்த குடும்பங்கள். தமிழ் சினிமாவை மனதில் நெனச்சு வணங்கி, வழிபட்டுட்டுப் போவாங்க!"

"ஆமாண்ணே எல்லா தயாரிப்பாளர்களும் இருக்காங்க! நடிகர்கள், இப்போ பாப்புளரா உள்ள நடிகைகள், அப்புறம் சந்திரசேகரா, கஸ்தூரிராஜா குடும்பம் இப்படி பலர் வந்திருக்காங்கண்ணே! தமிழ்சினிமா இல்லைனா இவங்க கஷ்டப்பட்டு இருப்பாங்கண்ணே"

"அங்க பாரு நம்ம சூப்பர் ஸ்டார் தட்டு எல்லாம் இல்லாமல் வெறும் கைய்யோட கோபமா நிக்கிறாரு!"

"ஏண்ணே?'

"அவர் கண்டக்டரா நிம்மதியா இருந்து இருப்பாராம். இந்த தமிழ்சினிமா பணத்தைக்கொடுத்து நிம்மதியைப் பறிச்சுருச்சாம்.. அதனால இந்த தினத்தில் வந்து திட்டிட்டுப்போவாரு வருஷா வருசம்!"

"கண்டக்டராவே இருந்து இருந்தா இத்தனை தமிழனிடம் திட்டு வாங்க வேண்டியதிருந்திருக்காதுதான்.. இல்லண்ணே? ஆனா கோடிக்கணக்கான ரசிகர்கள் கொடுத்தது தமிழ் சினிமாதானே? ஆமா எங்கே நம்ம உலகநாயகன் கமலைக் காணோம்?"

"நம்ம உலகநாயகன் கலைத்தாயை மட்டும்தான் வணங்குவார். தமிழ்சினிமா உலகமே அவரை வணங்கனும்னு நினைக்கிறாராம்"

"ஆமாமா, அவரு இல்லைனா தமிழ்சினிமா ஏதுண்ணே?"

"நியாயமான நெனப்புத்தாங்கிறயா?"

"ஆமாண்ணே! ஒரு 7 வருஷம் முன்னால பெரிய ஹீரோயிணியா இருந்த நடிகைகளை மட்டும் காணோம்? அவங்கல்லாம் இன்னைக்கு தமிழ்சினிமா தினத்தைக் கொண்டாடமாட்டாங்களா?"

"அவங்க எல்லாம் தமிழ் சினிமாமேலே கோபமா இருக்காங்களாம்! கொஞ்ச நாட்களில் இவங்களை தூக்கி எறிஞ்சிருச்சாம்!"

"என்னண்ணே இது நம்ம வலை பதிவர்கள் பலர் நிக்கிறாங்க! அந்தா நமிதா படம் போடுறவரு! அப்புறம் சாருவை வச்சு பொழப்பை ஓட்டுறவரு இருக்காரு, அப்புறம் கமலை திட்டியே எழுதுறவர் எல்லாரும் நிக்கிறாங்க!"

"தமிழ் சினிமா பகுதியாலதான் இவங்க பொழைப்பு ஓடுதாம். இவங்க யோசிச்சு யோசிச்சு கவிதை கட்டுரை எழுதினால் ஒரு பய வரமாட்டேன்கிறானாம். தமிழ்சினிமா மேட்டர் மட்டும் இல்லைனா இவங்க வலைதளத்துக்கு மக்கள் வரமாட்டாங்களாம்! தமிழ் சினிமா சம்மந்தமா என்ன எழவை எழுதினாலும் இவங்க ஃப்ளாக்ல ட்ராஃபிக் அதிகமாகுதாம்."

"என்னமோ எல்லோரும் சேர்ந்து சொல்றாங்க! என்னனு கேப்போம்!"

"எங்களை வாழவைத்த தமிழ்சினிமாவை வணங்கி, வழிபடுறோம்!"

"ஆமென்!"

No comments: