Thursday, December 3, 2009

Eastwood's Pale Rider (Hell followed him!)


இது ரொம்ப சிம்ப்பிள் ப்ளாட். கலிஃபோர்னியாவில் தங்கம் நெறைய இருந்ததை கண்டுபிடித்த காலத்துக்கு இந்தக்கதை போகுது. கார்பன் கென்யான் என்கிற ஒரு சுரங்கத்தில் உள்ள தங்கத்தை வெட்டி கையாளேயே சேகரிக்கும் ஒரு சில ஏழைகள் இருக்காங்க. அவங்க அந்த ஏரியாவில் உள்ள இடத்தை எல்லாம் வாங்கி "கேம்ப்" போட்டு, கஷ்டப்பட்டு உழைத்து சிறிய அளவில் தங்கம் வெட்டி, தோண்டி எடுத்து சம்பாரிக்கிறாங்க. அங்கே அவர்களுக்கு தலைவர் போல ஹல் பேரெட் நு ஒருவர் இருப்பார். அவருக்கு ஒரு சாரா என்கிற ஒரு விடோ கேர்ள் ஃப்ரெண்டு இருப்பார். அந்த சாராவுக்கு மேகன் என்கிற ஒரு 15 வயது மகளும் இருப்பாள். சாராவை ஹல் பேரெட் ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கொள்ள ஆசைப்படுவார். சாரா, இன்னும் அதற்கு ஓ கே சொல்லாமல் கேர்ள் பிரண்டாகவே இருப்பாள்.

இந்த நேரத்தில் ஒரு பணக்காரன், காய் லஹூட்னு ஒருத்தன், ரொம்ப சொஃபிஸ்டிகேட்டெட் ஃபெசிலிட்டி வைத்துக்கொண்டு அருகில் உள்ள எல்லா இடத்தையும் வாங்கி, பெரிய பம்ப் செட் வைத்து வேலையாட்கள் வச்சு தங்கத்தை தோண்டி அள்ளுவான். ஆனா அவனுக்கு ரொம்ப பேராசை. இந்த கார்பன் கென்யான்ல இந்த ஏழைகள் இருக்கும் இடத்தையும் வாங்கினால் நெறையா சம்பாரிக்கலாம்னு ஏழைகளிடம் தங்கள் நிலத்தை குறைந்த விலைக்குத்தரச் சொல்லி ஃபோர்ஸ்பண்ணி பேரம் பேசுவான். ஆனால் அந்த ஏழைகள் தங்கள் இடங்களை கொடுக்க மறுப்பார்கள். அதனால் லஹூட், அவர்களை அடியாட்கள் வைத்து அடிப்பான், மிரட்டுவான். அந்த ஏழைகள் பிடிவாதமாக அடியையும் வாங்கிக்கொண்டு அந்த இடத்தைவிட்டு போக மறுப்பார்கள். ஒரு சிலர் அடிக்கு பயந்துகொண்டு போய்விடுவார்கள். ஆனால் ஒரு சிலர் சட்டப்படி அது அவர்கள் இடமென்வதால், லஹூடால் இதைத்தவிர வேறெதுவும் செய்யமுடியாது என்று அங்கேயே இருப்பார்கள். அங்கே சட்டம்னு ஒண்ணும் பெருசாக்கிடையாது. அந்தப்பணக்காரன் லஹூட் எல்லா பாலிட்டிசியனையும் காசு கொடுத்து தன்னக்கட்டி வைத்து இருப்பான். ஆனால் அந்தப்பணக்காரன் தொடர்ந்து அவர்களை சித்ரவதை செய்து அவர்களை விரட்டப்பார்ப்பான்.

இந்த சூழ்நிலையில் ஒரு நாள் அந்த லஹூடின் அடியாட்கள் வந்து அவர்கள் குடிசை எல்லாத்தையும் அடித்து நொறுக்கிவிட்டு, அவங்க மாடு, குதிரை எல்லாத்தையும் கொன்றுவிட்டு போவார்கள்.

அந்த நேரத்தில் மேகன் என்கிற அந்தப் 15 வயதுப்பெண்ணுடைய நாய்க் குட்டியையும் சுட்டு கொன்றுவிடுவார்கள்.

************
மேகன், அழுகையுடன் அந்த நாயை புதைத்துவிட்டு அவள் கடவுளை வேண்டிக்குவா. "இறைவா ஏதாவது ஒரு அதிசயம் நடத்தி எங்களை காப்பாற்று" என்று ப்ரே பண்ணுவாள்.

அப்போ, மேகனுடைய ப்ரேயர் வில் பி ஆன்ஸ்வர்ட் பை த கடவுள்!கடவுள் க்ளிண்ட் ஈஸ்ட்வுடை அனுப்பி வைப்பார்!

*********************
சமீபத்து அட்டாக்கிற்குப் பிறகு பலர் அந்த இடத்தைவிட்டு காலி பண்ணி போய்விடுவார்கள். ஆனால் ஒரு சிலர் இன்னும் போகாமல் இருப்பார்கள். அதில் ஹல் பேரெட்ட்டும் ஒருவர். அன்று டவுனுக்கு பொருட்கள் வாங்க போவான் ஹல் பேரெட். அவனை டவுன்ல உள்ள லஹூடின் அடியாட்கள் பலர் சேர்ந்துகொண்டு பேஸ்பால் பேட் மாதிரி கட்டையை வைத்து அடி அடினு அடிப்பார்கள். கடைசியில் ஒருத்தன் ஹல்லுடைய வாகனை நெருப்பைவைத்து கொளுத்தப்போவான்.

ஒரு தீக்குச்சியை எரித்து நெருப்புவைக்கப் போகும்போது அங்கே ஒரு அதிசயம் நடக்கும்! நம்ம ஹீரோ க்ளிண்ட் ஈஸ்ட்வுட் வருவார்!

அவர் ஒரு பக்கட் தண்ணியை எடுத்து அந்த தீக்குச்சியை வைத்து லஹூட் வாகனை எரிக்க முயல்பவன் மேலே ஊற்றி,

“You should not play with matches!” என்று எரிச்சலூட்டி சண்டையை ஆரம்பிப்பார்.

க்ளிண்ட் ஈஸ்ட்வுட் ஒரு ஐந்து பேரை ஒரே ஆளா சமாளித்துப் போடும் அந்த கம்புச்சண்டை நல்லா இருக்கும். வழிப்போக்கனாக போகும் க்ளிண்ட் ஈஸ்ட்வுட் ஒரு அப்பாவி, ஹல் பேரட்டை பலர் அடிப்பதைப் பார்த்து, அவரை அவர்களிடம் இருந்து காப்பாத்துவார். அந்தச் சண்டை முடிந்ததும் ஹல், நன்றியுடன் க்ளிண்ட் ஈஸ்ட்வுடை தன்னுடன் தன் வீட்டிற்கு வந்து தங்குமாறு அழைப்பான். க்ளிண்ட், ஹல்லுடன் கார்பன் கென்யானில் ஹல் வீட்டிற்கு வந்து மேகன், மற்றும் சாரா, ஹல் பேரட் இவர்களோட தங்க வருவார். ஹல், தன் கதையை, அதாவது தான் சாராவை கல்யாணம் பண்ணப்போவதாகவும், அவளையும், அவள் மகள் மேகனையும் தான் பார்த்துக்கொள்வதாகவும் எல்லாவற்றையும் சொல்லுவார்.
------------------------------

Megan sits with her widowed mother and reads from the Bible:

"And I saw, and behold, a pale horse, and its rider's name was death, and hell followed him." Then a lone horseman (Clint Eastwood), dressed as a preacher, rides into camp.

க்ளிண்ட்டை அழைத்து வந்ததற்காக முதலில், சாரா, ஹல்லுடன் ஒரு சண்டை போடுவாள். அதாவது க்ளிண்ட் ஈஸ்ட்வுட் போல ஒரு “கன் ஃபைட்டர்” சகவாசம் வேண்டாம் என்று விவாதம் நடக்கும். “ஹல்” சாராவிடம் சொல்லுவார், “என் உயிரைக் காப்பாற்றி இருக்கிறார் சாரா” னு. இந்த நேரத்தில் டின்னர் சாப்பிட க்ளிண்ட் உள்ளே வருவார். இப்போ க்ளிண்ட் ஒரு “ப்ரீச்சர்” போல உடையணிந்து வருவார். க்ளிண்ட்டின் “ப்ரீஸ்ட்” கோலத்தைப் பார்த்தவுடன் சாரா மன்னிப்புக்கேட்பாள். “நீங்க யாருனு எனக்கு சரியா தெரியாததால தவறா பேசிட்டேன்” என்பாள். அதற்கு பிறகு எல்லோரும் “க்ளிண்ட்டை” ப்ரீச்சர்னு அழைப்பார்கள்.

இது இப்படி இருக்க, க்ளிண்ட்டிடம் அடிவாங்கிய லஹூடின் ஆட்கள் அடுத்த நாள் காயங்களுடன், கட்டுப்போட்டுக் கொண்டு போய் காய் லஹூடின் மகன் ஜாஸ் லஹூடிடம் தங்களை ஒரு “ஸ்ட்ரேஞ்சர்” ஒருவன் அடிச்சுட்டான் என்று போய் நிற்பார்கள். ஜாஸ் , காய் லஹூடுடைய மகன், ஒரு டீனேஜர், அவந்தான் அப்பா இல்லாதபோது அந்த சுரங்கம் தோண்டும் வேலைகளுக்கு இன்-சார்ஜ் ஆ இருப்பான். நேத்து வரை, இவர்கள் அடிக்க அடிக்க அடிவாங்கியவந்தான் ஹல் மற்றும் கார்பன் கென்யான் ல உள்ள அனைவரும். ஆனால் இன்னைக்கு ஒரு “ஸ்ட்ரேஞ்சர்” வந்து திருப்பி அடிச்சுட்டான். அதுவும் ஒரு ஆள். இவர்கள் 4-5 பேரை அடிச்சுட்டான் என்று அவன் வேலையாட்கள் சொன்னதும். ஜாஸ், தன்னுடைய மிகப்பெரிய அடியாள் ஒருவனை அழைத்துக்கொண்டு அந்த ஏழைகள் வாழும் கார்பன் கென்யான் போவான். அவர்களுக்கு மற்றும் க்ளிண்ட் ஈஸ்ட்வுட்க்கு ஒரு பாடம் புகட்ட போவான்.

அங்கே சென்றதும். யார் தன் வேலையாட்களை அடித்தது என்று உள்ள க்ளிண்ட்டை பார்த்து,

“you messed up my boys, preacher!” என்பான் ஜாஸ்.

“Nothing personal” Clint சொல்லுவார்.

He will ask that big guy to Clint to “take care” of him. But, Clint will beat him too in front of everybody and send him back. அந்த பெரிய முரடனையே க்ளிண்ட் அடித்து அனுப்பியவுடன் கார்பன் கென்யான்ல உள்ள எல்லோருக்கும் நம்பிக்கை மற்றும் தைரியம் வந்துவிடும். அடிவாங்கிய தன் அடியாளுடன் ஜாஸ் லஹூட் திரும்பிப்போய்விடுவான்.

15 வயது மேஹனும், அவள் அம்மா சாராவும் க்ளிண்ட் ஈஸ்ட்வுட்டை தங்களையே அறியாமல் விரும்ப ஆரம்பிச்சுரு வாங்க. கார்பன் கென்யான்ல புதுவாழ்வு எல்லோருக்கும் வரும்.

*********************

Then the teenager Megan will have a conversation with Clint Eastwood when they are alone.

She will say, “They killed my dog. I prayed the God for a miracle and that you are the miracle.” Then she will go on hug Clint (he is old, in his fifties?) and say, “I love you”

“There is nothing wrong in loving someone” Clint will say politely.

“If we love someone, what is wrong in making love?” will say 15-year old Megan.

“99% of men will say yes and they will make love with you but I can not” Clint will turn her down.

“I know why, you love only my mom! The way you look at each other tells me that you love each other. ” Megan will scream.

“Your mom is a fine person” Clint will say admitting that he likes her.

“I wish you go to hell” she will cry and go from there as Clint did not want to take advantage of a teenager.

-தொடரும்

No comments: