ஞாயிறு காலையில்...
"சரி நான் போயிட்டு வரவா, பிருந்த்?"
"அதெல்லாம் வேணாம்! மணி எட்டுதான் ஆகுது! சும்மா படுங்க கண்ணன்." அவனை கட்டி அணைத்துக்கொண்டாள் பிருந்தா.
"ஏய், எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு!"
"என்ன வேலை? இங்கேயே இருந்து பண்ணுங்க!"
"லாண்ட்ரி போடனும்! என்னோட க்ளோத்ஸ் எல்லாம் இங்கேயா இருக்கு? ஒரு ரிப்போர்ட் எழுதனும்"
"லான்ட்ரி ல்லாம் மண்டே போடலாம். இப்போ ஒரு முத்தம் கொடுங்க!"
"இன்னும் ப்ரஸ் பண்ணலை. "
"நானும்தான். இட் இஸ் ஓகே! கிவ் மி எ கிஸ் டார்லிங்!"
"இப்படிக்கேட்டால் எப்படி மாட்டேன்னு சொல்றது?" அவள் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தான்."
"உங்க அணைப்பிலேயே இருக்கிறது நல்லா இருக்கு, கண்ணன்."
"குளிர்காலத்தில் அப்படித்தான் இருக்கும்!"
"ஜோக்கா? வெயில் காலத்திலும் அப்படித்தான்."
"ஒண்ணுமட்டும் ஞாபகம் வச்சுக்கோ நைட் பெருசா ஒண்ணும் நடக்கலை."
"அதெப்படி மறக்கும்? பரவாயில்லை.. ஐ லைக்ட் ஜஸ்ட் ஸ்லீபிங் வித் யு இன் த பெட். உங்களை கொஞ்சம் கொஞ்சமாத்தான் ஒரு வழி பண்ணனும்"
"நான் ப்ரஸ் பண்ணிட்டு வர்றேன்"
"சரி. ப்ரஸ் கொண்டு வந்தீங்களா?"
"ஆமா. ஒரு சின்ன ட்ராவெல் பாக். ஏன் உன் ப்ரஸை யூஸ் பண்ணிடுவேன்னு பயம்மா?"
"நானும் என் உடமைகளும் உங்களுடையது டார்லிங்!"
"யு ஸ்கேர் மி, பிருந்த்!"
"அப்படியா?"
"த வே யு லவ் மி, ஸ்கேர்ஸ் மி."
"ஏன்?"
"ஐ டோண்ட் நோ, யு நீட் டு கண்ட்ரோல் யுவர்செல்ஃப்."
"பயப்படாதீங்க, கண்ணன்!"
"வாட் இஃப் ஐ டை இன் அன் ஆக்ஸிடண்ட்?"
"கொஞ்சம் சும்மா இருக்கீங்களா?"
"சரி நான் ப்ரஸ் பண்ணீட்டு வர்றேன்."
********************
"இந்தா காஃபி! ப்ரு, மில்க், சுகர் எல்லாம் ஈஸிய கண்டுபிடிக்கிறாப்பில இருந்தது. பாவம்னு போட்டு வந்தேன்."
"ப்ரஸ் பண்ணாமலே காஃபி குடிக்கவா?"
"பெட் காஃபிதானே? பரவாயில்லை குடி. நான் யார்ட்டயும் சொல்ல மாட்டேன்."
"நாளைக்கு ரெண்டு பேருக்கும் சண்டை வந்துட்டா இதையெல்லாம் சொல்லிக்காட்டுவீங்களா?"
"சே சே!"
"இருங்க, நானும் ப்ரஸ் பண்ணிட்டு வந்துடுறேன். "
*****************
"உங்க காஃபி நல்லாயிருக்கு கண்ணன்."
"சரி நான் புறப்படவா?"
"என்ன அவசரம்? நீங்க போனதும் எனக்கு ரொம்ப போர் அடிக்கும், கண்ணன்!"
"துணைக்கு ஒரு ஆளு எப்போவுமே வேணும்னா கல்யாணம் பண்ணிக்கோ."
"இப்போவே பண்ணிக்குவோமா?"
"இப்ப என்ன அவசரம்? கல்யாணம் பண்ணிக்கிட்டா நானும் போர் அடிச்சுருவேன்"
"நீங்க வேற யார் பின்னாலயும் ஓடிட்டீங்கனா?"
"இதை எல்லாம் விட்டுட்டா?"
"என்னிடம் இருக்கிற இதுக்காகத்தான் என்னை கட்டிக்கப் போறீங்களா?"
"நீயும் என் மேலே ரொம்ப அன்பாயிருக்கிற இல்லையா? அதான் பிடிக்குது"
"எனக்கும் உங்களை ரொம்ப பிடிக்குதே!"
"இதெல்லாம் சும்மா மயக்கம், பிருந்த். கொஞ்ச நாளைக்குத்தான், பிருந்த்."
"அப்புறம் என்ன ஆகும்?'
"தெரியலை. மொதல்ல எல்லாமே நல்லாத்தான் இருக்குமாம். அப்புறம்தான் ஒருவர் குறையை இன்னொருவர் பார்க்க ஆரம்பிப்போமாம்."
"அதெல்லாம் பின்னால பார்ப்போம். அப்படி சண்டை வரும்போதெல்லாம் ஒரு மாதம் பிரிந்து இருப்போம்."
"நல்ல ஐடியா! ஆமா நம்ம மாதத்துக்கு எத்தனை நாளாம்?"
"தெரியலையே.. "
"ஏய் பிருந்த்! ஒரு விசயம்!"
"என்ன சொல்லுங்க?"
"பகக்த்தில் வா!"
"வந்தாச்சு!"
அவளை கட்டி அணச்சு அவள் உதட்டில் முத்தம் கொடுத்தான். பிறகு கன்னத்தில்...
"கொஞ்ச நாள் லிவ் இன் டுகெதெர் ஓ கே வா?"
"எனக்கு ஓ கே!"
"பட் நோ செக்ஸ்! ஒன்லி கிஸ் மட்டும்தான்!"
"சரி!" அவள் சிரித்தாள்.
"என்ன சிரிப்பு? ஆண்ட்டிட்ட கேட்டுச்சொல்லு!"
"எதுக்கு? நோ செக்ஸ் ஓகேவானா?"
"இல்லை, பின்னால என் பொண்ணுக்கு ஒண்ணுமே தெரியாது. அவளை ஏமாத்தி கெடுத்துட்டான் பாவினு ஆண்ட்டி திட்டக்கூடாது பாரு!" அவளை பின்னால கிள்ளினான்.
"சரி கேட்டு சொல்றேன். நீங்க கிள்ளினால் வலிக்க மாட்டேன்கிது.. சுகம்மா இருக்கு, கண்ணன்"
"நெஜம்மாவா? சரி ஆண்ட்டிட்ட என்ன கேப்ப?"
"நீங்க சொன்னதைத்தான்!"
"நெஜம்மா நேரடியா கேப்பியா?"
"வை நாட்?"
"சரி நான் போயிட்டு வர்றேன். சரியா?"
"ஓ கே! ஐ வில் மிஸ் யு டார்லிங்" என்று பிருந்தா கண்ணனை இறுகக் கட்டி அணைத்தாள்.
"பை டா. ஐ வில் கால் யு. ஓ கே?"
-தொடரும்
No comments:
Post a Comment