"கண்டேன் காதலைப் படம் பார்த்தீங்களா, அண்ணே?"
"கடைசியிலே பார்த்தாச்சுப்பா!"
"எப்படி இருந்தது? காதலை கண்டீங்களா?"
"தமன்னாவை கண்டேன். ஆனாலும் அவ பேசியே கொல்றாப்பா!"
"தமன்னாக்கு தமிழ் தெரியாதுண்ணே!"
"தமன்னாவுக்கு யாரு கொறல் கொடுத்தாங்களோ அவங்க! வசனம் எழுதினாங்களோ அவங்க! வளவளனு பேசியே கொல்றாங்க! அழகான பொண்ணுனாலும் அளவுக்கதிகமா பேசினால் ரசிக்கமுடியாது போல"
"கதை என்னண்ணே?"
"என்ன கதையா? தமன்னா தேனிக்காரப்பொண்ணாம். அதனால அவளுக்கு கொம்பு மொளைச்சி இருக்குமாம். சரி அதைவிடு. மெயின் ஸ்டோரி பெருசா ஒண்ணும் இல்லைதான். முக்கோணக்காதல்தான். ஆனால் சைட்ல ஒரு சீரியஸ் மெசேஜ் சொல்றாரு இயக்குனரு."
"என்னண்ணே அது? சீரியஸ் மெசேஜ்? சொல்லுங்கண்ணே!"

"அதாவது அம்மாவுடைய அஃபையர் அல்லது "காதலை" புரிஞ்சுக்கனுமாம்."
"என்னண்ணே சொல்றீங்க?"
"பரத் பெரிய பணக்காரராம். பரத்தோட அம்மா ஒரு 45 வயசுல ஒரு ஆடிட்டரோட காதலிச்சு ஓடிப்போயிடுறாராம். அப்புறம் அதனால பரத்க்கும் லவ் ஃபெயிலாயிடுதாம். ஒரே அப்சட் ஆகி, எங்கே போகுதுனு தெரியாமல் ஒரு ட்ரெயின்ல ஏறி உக்காந்து இருக்காராம். அதே ட்ரெயின்ல வர்ற கல்லூரியில் படிக்கும் தமன்னா அவரை மீட் பண்ணுகிறாள். அவளுக்கு ஏற்கனவே ஒரு காதலன் இருக்காராம். அவர் பேரு கவுதமாம். தமன்னா பரத்துடன் நெறையா பேசுறார். பரத் நிலைமையைத் தெரிஞ்சதும் சொல்றாரு "உங்கம்மாவை நீங்க ஜட்ஜ் பண்ணாதீங்க!"னு. காதல்னு வந்துட்டா யாருக்கும் அவர்கள் செய்வது தப்பாத்தெரியாது.. அப்படி இப்படினு பெரிய தத்துவமெல்லாம் சொல்றாரு இந்த சின்ன வயசிலே.."
"அதனால அதைக் கண்டுக்காம விட்டுட்டு கம்பெணியை ரன் பண்ணப்பாருனு சொல்றாரு."
"ரொம்ப புதுமைதாண்ணே!"
"ரொம்ப புதுமைதாண்ணே!"
"ஆமா, ஏதோ வட இந்தியாப்படம் இறக்குமதியாயிருக்கு இல்லையா? அதான் ரொம்ப முற்போக்கா இருக்கு போல.. என்னவோ போப்பா"
"பரத் எப்படிண்ணே?"
"பரத்தோட ஷக்தி கேரக்டர், சூர்யா கஜினில பண்ணிய சஞ்சய் ராமசாமி ரோல் ஞாபகத்துக்கு வருவது மட்டுமல்லாமல், சூர்யா ரொம்ப நல்லா பண்ணி இருக்கார்னு வேற தெளிவா சொல்லுது. பரத்க்கு இந்த ரோல் ஒத்துவரலைனுதான் தோனுது."
"அம்மாவுடைய கள்ளக்காதலை எல்லாம் புரிஞ்சுக்கனும்னு சொல்ல வர்றாங்களா? பரத் புரிஞ்சுக்கிறாரா?"

"அம்மா போனது போனதுதான் நீ அதை ஒண்ணும்பண்ணமுடியாது. நீ அதுக்கு பொறுப்பல்ல! அம்மா-அப்பா காதல் காம வாழ்க்கை பற்றி உனக்குத் தெரியாது! அதனால, அதை நெனச்சு வருத்தப்படாம, அதை பாஸிடிவா எடுத்துக்கோனு சொறாரு தமன்னா. ஏன்னா அவ அம்மா அப்படி யாரோடயும் ஓடல பாரு? அதனால அவளால தெளிவா யோசிக்க முடியுதுனு தோனுது"
"பாட்டெல்லாம்?"
"ஏதோ இருக்கு! ரொம்ப சுமார்தான்"
"இது புது மேட்டராண்ணே? இந்த "அம்மா காதல்"?"
"அப்படித்தான் போல! நம்ம "அம்மா வந்தாள்" ல அப்புவுடைய அம்மா அலங்காரத்தின் "கெட்ட நடத்தையை" ஜானகிராமன் ஜஸ்டிஃபை பண்ணவில்லை. அவள் நடத்தையை நினைத்து அவளே வருந்துவது போலத்தான் காட்டியிருப்பார். ஆனால் இதில், பரத் அம்மாவின் காதலை புரிந்துகொள்ளனும்னு சொல்வது ஏதோ புதுமையா சொல்ல முயற்சித்து இருக்கார். அதுபோல் நிலைமையில் உள்ள மகன்(ள்)களுக்கு ஆறுதலா இருக்குமோ என்னவோ.."

"வேற மத்தபடி படம் தொய்வில்லாம போகுதாண்ணே?"
"ரொம்ப போர் அடிக்கலை. பார்க்க முடியுது. ஆனால் மெயின் ஸ்டோரி முடிவு ரெண்டு வயசு பாப்பாகூட ப்ரிடிக்ட் பண்ணிடும். எதுவும் சர்ப்ரைஸ் இல்லை!'
"வேற?"
"இன்னொரு விசயம். கல்யாணம் பண்ணும்போது நீ காதலித்த அழகான வேவெரிங் மைண்ட் உள்ள கோழையை கல்யாணம் பண்ணாதே! கல்யாண்மனு வந்துட்டா ஒரு நம்பிக்கைக்கு பாத்தியமான, உன்னை மதிக்கிற, உன்னை விரும்புறவனை, ஒரு டிப்பெண்டபிள் ஆண்மகனை கல்யாணம் பண்ணுனு நல்லா சொல்றாங்க! அது ரொம்ப நல்ல மேட்டர்தான்!"
6 comments:
//யாரு கொறல் கொடுத்தாங்களோ அவங்க//
சின்மயி
இவ்ளோ சீரியஸான கதையை ரொம்ப சாதாரணமா பேசிட்டு இருக்காங்க..,
***ILA(@)இளா said...
//யாரு கொறல் கொடுத்தாங்களோ அவங்க//
சின்மயி
15 December 2009 7:56 AM***
நன்றி, இளா! :-)
//"இன்னொரு விசயம். கல்யாணம் பண்ணும்போது நீ காதலித்த அழகான வேவெரிங் மைண்ட் உள்ள கோழையை கல்யாணம் பண்ணாதே! கல்யாண்மனு வந்துட்டா ஒரு நம்பிக்கைக்கு பாத்தியமான, உன்னை மதிக்கிற, உன்னை விரும்புறவனை, ஒரு டிப்பெண்டபிள் ஆண்மகனை கல்யாணம் பண்ணுனு நல்லா சொல்றாங்க! அது ரொம்ப நல்ல மேட்டர்தான்!"
//
அடப்பாவிகளா...!
*** SUREஷ் (பழனியிலிருந்து) said...
இவ்ளோ சீரியஸான கதையை ரொம்ப சாதாரணமா பேசிட்டு இருக்காங்க..,
15 December 2009 7:57 AM***
சுரேஷ் நம்ம ஊர் ரொம்ப முன்னேறிருச்சு!
யாராவது நம்ம ஊர்ல "ஹைசொசைட்டியில வைஃப் ஸ்வாப்" பண்ணுறவன் ஒரிஜினல் கதை திரைக்கதையை எழுதி இருக்கலாம்!
நம்க்குத்தான் இது சீரிய்ஸான மேட்டர். அவனுகளுக்கு அவன் வாழக்கையில் நடந்ததை ஜஸ்டிஃபை பண்ண ஒரு ஆப்பர்ட்ச்சூனிட்டியாக் கூடஇருக்கலாம்!
***பிரியமுடன்...வசந்த் said...
//"இன்னொரு விசயம். கல்யாணம் பண்ணும்போது நீ காதலித்த அழகான வேவெரிங் மைண்ட் உள்ள கோழையை கல்யாணம் பண்ணாதே! கல்யாண்மனு வந்துட்டா ஒரு நம்பிக்கைக்கு பாத்தியமான, உன்னை மதிக்கிற, உன்னை விரும்புறவனை, ஒரு டிப்பெண்டபிள் ஆண்மகனை கல்யாணம் பண்ணுனு நல்லா சொல்றாங்க! அது ரொம்ப நல்ல மேட்டர்தான்!"
//
அடப்பாவிகளா...!***
வசந்த்!
அந்த கெளதம் ஒரு பயங்கரமான கோழை கேரக்டர் (உண்மையிலேயே அப்படி ஒரு கேரக்டர் இருக்காது). அதை நம்பி வாழ்க்கையில் இறங்க முடியாது!
Post a Comment