“அண்ணே! ஓரினச்சேர்க்கை தம்பதிகளுக்குள் விவாகரத்து எதுவும் நடந்து இருக்கா?”
“இன்னும் நம்ம ஊர்ல கல்யாணமே நடக்கலை. அதுக்குள்ள விவாகரத்து பத்தி பேசுற.. இதெல்லாம் உனக்கே அதிகமாத்தெரியலையா?”
“இல்லண்ணே! நான் எதிர்காலத்தைப் பத்தி இப்போவே யோசிக்கிறேன்.”
“சரி, உனக்கென்ன வேணும் இப்போ?”
“இல்லண்ணே! அவங்களுக்குள்ள மனக்கசப்பு எதனால் வரும்னு யோசிச்சேன்.”
“இன்னொரு நபர் மேலே காதல் வரலாம்!”
“காதலா?”
“ஆமாம். காதல்! இல்லைனா கள்ளக்காதல்!”
“அண்ணே! நீங்க சீரியஸாத்தான பேசுறீங்க? தண்ணி கிண்ணி போட்டு இருக்கீங்களா?”
“கள்ளக்காதல், அதாவது அடல்ட்டரி, துரோகம், ஏமாற்று இதுபோல் பிரச்சினை ஏன் வராது?”
“எப்படிண்ணே இவங்களுக்குள்ள இதெல்லாம்..."
“இந்த பாரு, முதல்ல தங்கள் ஓரினச்சேர்க்கைத் திருமணத்தையும் ஈர்ப்பையும் நியாயப்படுத்துவாங்க. அதை, புரிந்து அங்கீகரிச்ச பிறகு இப்போ என்ன எல்லாம் பிரச்சினை ஆண்-பெண் பந்தத்தில் இருக்கோ எல்லா எழவும் இவர்கள் இடையிலும் வரும்!”
“கள்ளக்காதல், ஏமாற்று, துரோகம்.. அப்புறம்?”
“டொமஸ்டிக் வயலண்ஸ்! அதாவது அவர்களுக்குள் அடிதடி, சண்டை, சித்ரவதை, வெறுப்புணர்வு எல்லாமே டைவோர்ஸை தூண்டும்.”
“அப்புறம் வேற?”
“ஈகோ க்ளாஸ், பணப்பிரச்சினை, அவர்கள் பேமிலி மெம்பர்ஸால பிரச்சினை எல்லா எழவும்தான் வரும்.”
“நாசமா போச்சு போங்க!”
“இவர்களும் மனிதர்கள்தானே? எந்தவகையில் இவர்கள் உறவோ, இல்லை இவர்களோ வேற மாதிரி இருப்பாங்கனு நினைக்கிற?”
“அண்ணே! இவங்களுக்கும் கற்பெல்லாம் உண்டா அப்போ?”
“அது இல்லாமலா?”
No comments:
Post a Comment