Thursday, March 3, 2011

ராணாவில் ரேகா, வித்யாபாலன், தீபிகா படகோன்!

நான் என்னமோ "ராணா" படம் எடுப்பதா சொன்னது சும்மா புரளிதான்னு நெனச்சேன். ஆனால் இப்போ போற போக்கப் பார்த்தால் ரஜினி சீரியஸா இதில் இறங்கிவிட்டதாகச் சொல்லுறாங்க. இருந்தாலும் ரஜினி பண்ணுவது அநியாயம்! என்ன அநியாயமா? நம்ம ட்ரிஷாக்குட்டி ரஜினியோட நடிக்கனும்னு ஆசையினு வெட்கத்தைவிட்டு நெறையத்தரச் சொல்லியும் மூணு ஹீரோயின்ல ஒண்ணா ட்ரிஷாவை போடாமல்..

என்னவோப்பா.. ட்ரிஷா, நீலாம்பரியா மாரி ரஜினியைப் பழிவாங்காமல் இருந்தால் சரிதான்!

* ஆமா, ராணாவில் ரஜினிக்கு 3 ஹீரோயினாம்!

யாரு யாரா?

* 26 வயதேயாகியிருக்கும் தீபிகா படகோன்,

* முப்பத்திமூனு வயது வித்யா பாலன் (இவரு, தன் தாயும் ரஜினி விசிறினு சொல்லி ரஜினியை புகழ்ந்து தள்ளிப்புட்டாரு),

* அப்புறம் நம்ம காதல் மன்னன் ஜெமினியோட பொண்ணு நடிகை ரேகாவும் (இவருக்கு வயது 56) ஒரு ஹீரோயினாம்!

இதையெல்லாம் வச்சுப் பார்க்கும்போது எந்திரன் உண்மையிலேயே மிகப்பெரிய ஹிட் தான் போல இருக்கு! இல்லைனா "ராணா" படத்திற்கு எப்படி இவ்வளவு சீரியஸா நம்பிக்கையுடன் இறங்குவார் (இந்த வயதில்!). சந்திரமுகியிலும் இப்படித்தான் இறங்கினார். படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. "ராணா" என்ன ஆகுதுனு பார்ப்போம்.

இப்போ நம்ம ரஜினியுடைய ஹீரோயின்களைப் பார்த்து ரசிப்போம்!

இதோ இருக்காங்க! யாருங்க இதில் பெஸ்டூ? ரேகாவா? :))







கூச்சப்படாமல் அம்மணிங்க படத்துமேலே க்ளிக் பண்ணிப் பெரியபடமாக்கிப் பார்த்துச் சொல்லுங்க! யாரு பெஸ்ட்டுனுதான்! சரியா? :)

3 comments:

Anonymous said...

இரண்டு பெண்ணுக்கு அப்பன் மாதிரியா நடந்துக்கிறான் .. அல்லது ஒரு பெரிய மனுஷன் மாதிரியா நடந்துக்கிறான். தீபிகா படுகோன் - கொடுமைடா..................... !

வருண் said...

***மதுரை சரவணன் said...

thanks for sharing.
3 March 2011 11:24 AM

------

இக்பால் செல்வன் said...

இரண்டு பெண்ணுக்கு அப்பன் மாதிரியா நடந்துக்கிறான் .. அல்லது ஒரு பெரிய மனுஷன் மாதிரியா நடந்துக்கிறான். தீபிகா படுகோன் - கொடுமைடா............ !**

வாங்க, மதுரை சரவணன் & இக்பால் செல்வன்!

தங்கள் கருத்துக்கு நன்றி! :)

பூங்குழலி said...

இன்னும் சின்ன வயசு பொண்ணா கிடைக்கல போலிருக்கு ,...சரி ஒரு குழந்தை கதாநாயகியோட நிப்பாட்டிட்டாங்களே அதுவரையில் சந்தோஷப்பட்டுக்க வேண்டியது தான் .
இதுக்கு நடுவுல சுல்தான் தி வாரியர் ன்னு மகளோட பேர்ல படம் துவங்கி ,அதுல நிறைய பணப் பிரச்சனை வேற ..அப்புறம் அதையும் இதுல சேர்க்க போறாங்களாம்....கொடுமை