நான் பதிவுலகில் நுழையும்போது மிகவும் ஆவலாக பதிவெழுதியவர்கள் எல்லாம் இப்போ மாதம் ஒரு முறைதான் பதிவு போடுறாங்க!
ட்விட்டெர் ஃபேஸ் புக் னு வந்ததாலா இல்லைனா ரொம்ப பெரிய நிலையை அடைந்துவிட்டார்களா னு தெரியலை. பதிவு எழுதுவது ரொம்ப குறைந்துவிட்டது. அதே சமயத்தில் புதிதாக பல வலைதளங்கள் ஆரம்பிச்சு நெறையா பதிவுகள் போட்டு முன்னால் நிற்கிறார்கள் பல இளம் பதிவர்கள். இவர்களுக்கு அந்தக்காலத்தில் பிரபலமாக இருந்த பதிவர்கள் பெயர்கள்கூட தெரியாது போல இருக்கு!
அந்தக்காலத்தில் எல்லோர் ஆவலைத்தூண்டும்படி எழுதிய பதிவர்கள் இன்னைக்கு எப்போவாவது ஒரு பதிவுபோட்டால் அன்றுபோல இவர்கள் பதிவுகளைப் பார்வையிட ஆட்களும் குறைந்து விடுகிறது.
என்னதான் கேலி செய்தாலும் டெய்லி ஒரு பதிவு போடுவதும் எளிதல்ல! குப்பையையும், மொக்கையையும் எழுதவும் ஒரு தன்னம்பிக்கை அவசியம்! எதையாவது எழுதவும் தோனனும். இந்தப்பதிவு போல! :)
ஆவலாக எழுதிக்கொண்டு இருந்தவர்கள் எல்லாம் போர் அடிச்சு ஒதுங்கி, பதிவுகளை குறைத்துக்கொள்வார்கள் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை! வாரம் ஒருமுறை வெளிவரும் இப்போதுள்ள தமிழ்மண முன்னனி வலைபதிவுகளில் இடம் பெறனும்னா முதலில் நெறையப் பதிவுகள் எழுதனும்! என்னதான் பெரிய ஆளாயிருந்தாலும் பதிவுகள் குறைந்தால் முன்னனியில் நிற்கமுடியாது. நாளடைவில் பிரபலங்கள் பதிவுகள் எழுதாததாலேயே இதுபோல் முன்னனியில் நிற்காமல் போயி இன்னும் ஆவல் குறைந்து மறைந்துவிடுவார்கள் போல தோனுது!
பதிவுலகம் மிக வேகமாக மாறிக்கொண்டு போகிறது!
19 comments:
புதுசு ஒன்னுமில்லீங்களே. இந்த லிஸ்ட்ல எத்தனை பேர் இப்போ இருக்காங்கன்னு பாருங்க
ஒரு வருடம் முதலில் இருக்கிற பதிவர்கள் அடுத்த வருடம் இருப்பதில்லை,.. இப்போது என்ன பதிவு எழுதினாலும் அது ஏற்கனவே எழுதப்பட்டதாகவே இருக்கிறது (அட டாபிக் சொன்னேன்),.. என்னுடைய 50 பாலோயர்களில் ஒரு பத்துப் பேர்தான் இன்னும் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள்.
புது ரத்தங்கள் வருவதால்தான் பதிவுலகம் இனிமையாக இருக்கிறது,..
புதிய பதிவர்கள் சிறப்பாக எழுதுகிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொள்ள வேண்டும்
pathivulaka arasiyal palarai othungka vaiththathu enbathu thaan unmai. melum intha oottu arasiyal enru maarumo anru unmaiyaana eluththu velipatum.
***ILA(@)இளா said...
புதுசு ஒன்னுமில்லீங்களே. இந்த லிஸ்ட்ல எத்தனை பேர் இப்போ இருக்காங்கன்னு பாருங்க
2 March 2011 7:49 AM***
லிஸ்டைப் பார்த்தேன். 6 வருடம் பதிவுலகில் வாழ்ந்துட்டீங்க போல! வாழ்த்துக்கள் :)
***jothi said...
ஒரு வருடம் முதலில் இருக்கிற பதிவர்கள் அடுத்த வருடம் இருப்பதில்லை,.. இப்போது என்ன பதிவு எழுதினாலும் அது ஏற்கனவே எழுதப்பட்டதாகவே இருக்கிறது (அட டாபிக் சொன்னேன்),.. என்னுடைய 50 பாலோயர்களில் ஒரு பத்துப் பேர்தான் இன்னும் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள்.***
வாங்க, ஜோதி :)
*** புது ரத்தங்கள் வருவதால்தான் பதிவுலகம் இனிமையாக இருக்கிறது,..
புதிய பதிவர்கள் சிறப்பாக எழுதுகிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொள்ள வேண்டும்
2 March 2011 8:07 AM***
அழகா உண்மையச் சொல்லி இருக்கீங்க! நன்றி :)
பதிவு எழுதாட்டி போரடிச்சுடுச்சுன்னு அர்த்தமா என்ன?சில சமயம் பெவிலியன்ல உட்கார்ந்துகிட்டு ஆட்டம் பார்ப்பதும் சுவராசியம்தான்:)
புதியவர்களும் உற்சாகம் குறையாமல், தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்!
மாப்பு நீங்க புதுசா? பழசா?
ஆசை அற்பது நாள்; மோகம் முப்பது நாள்!!
நல்ல கேள்வி. சில நேரத்தில் பல விஷயங்களில் சலிப்பு தட்டி அதை செய்வதை நிறுத்திவிடுவோம். மற்றவர்களுக்காக மட்டுமில்லாமல் நம்மை நாமே உணர முடிந்தவரை நேரத்தை ஒதுக்கி எழுதுவது நல்லது என்று கருதுகிறேன்.
பழயன கழிதலும் புதியன புகுதலும் இயற்கையானதுதானே! நிறைய்ய புதிய பதிவர்கள் வருவது மகிழ்ச்சியான ஒன்று . அவர்களை வாழ்த்தி வரவேற்போம். நாமும் ஒரு காலத்தில் புதிய ,கத்துக்குட்டி பதிவர்களாக இருந்தவர்களே! :))))
***ராஜ நடராஜன் said...
பதிவு எழுதாட்டி போரடிச்சுடுச்சுன்னு அர்த்தமா என்ன?சில சமயம் பெவிலியன்ல உட்கார்ந்துகிட்டு ஆட்டம் பார்ப்பதும் சுவராசியம்தான்:)
2 March 2011 11:32 AM **
வாங்க நடராஜன்! எபடியோ திரும்பி வந்து நெறையப் பதிவுபோட்டால் சரிதான்! :)
***மதுரை சரவணன் said...
pathivulaka arasiyal palarai othungka vaiththathu enbathu thaan unmai. melum intha oottu arasiyal enru maarumo anru unmaiyaana eluththu velipatum.
2 March 2011 9:55 AM***
பதிவுலகில் பலவிதமான தாக்குதளுக்கு உள்ளாவதை தவிர்க்க முடியாதுங்க. நல்ல பாடமாக எடுத்துக்கலாம், இல்லைனா இவங்களுக்கு புரிந்தது இம்புட்டுத்தான்னு மனசுக்குள்ளே நெனச்சுக்கலாம். மனம் தளரக்கூடாதுங்க! :)
***Chitra said...
புதியவர்களும் உற்சாகம் குறையாமல், தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்!
2 March 2011 11:55 AM***
வாங்க சித்ரா! ஆமாங்க நாளாக ஆக உற்சாகம் குறையாமல் இருக்கனும்! :)
**நசரேயன் said...
மாப்பு நீங்க புதுசா? பழசா?
2 March 2011 2:29 PM***
நம்மல்லாம் ஒரே வகை, மாப்ளே! :)
பழையவங்களுக்கு எல்லாம் புதுசு. புதியவங்களுக்கெல்லாம் பழசு! :)
***பழமைபேசி said...
ஆசை அற்பது நாள்; மோகம் முப்பது நாள்!!
2 March 2011 4:03 PM***
அப்போ பதிவுலகம் எத்தனை நாளுங்கோ, மணியண்ணா?! :)
***நாராயணன் said...
நல்ல கேள்வி. சில நேரத்தில் பல விஷயங்களில் சலிப்பு தட்டி அதை செய்வதை நிறுத்திவிடுவோம். மற்றவர்களுக்காக மட்டுமில்லாமல் நம்மை நாமே உணர முடிந்தவரை நேரத்தை ஒதுக்கி எழுதுவது நல்லது என்று கருதுகிறேன்.
2 March 2011 5:12 PM***
வாங்க நாராயணன்! :)
என்னைக் கேட்டால் இது ஒரு மாதிரியான "போதை" தாங்க! அடிக்ஷன்! :)
தங்கள் கருத்துக்கு நன்றி :)
***கக்கு - மாணிக்கம் said...
பழயன கழிதலும் புதியன புகுதலும் இயற்கையானதுதானே! நிறைய்ய புதிய பதிவர்கள் வருவது மகிழ்ச்சியான ஒன்று . அவர்களை வாழ்த்தி வரவேற்போம். நாமும் ஒரு காலத்தில் புதிய ,கத்துக்குட்டி பதிவர்களாக இருந்தவர்களே! :))))***
உண்மைதாங்க, மாணிக்கம்! :)
Putiyavaegalukkum valivedathane vanadium. Neramum vaikkanume elutuvathakku
Post a Comment