Monday, March 14, 2011

வைகோவுக்கு அம்மா போடப்போகும் பிச்சை எவ்வளவு?

தன் தன்மானத்தைக்காக்க திமுகவிலிருந்து வெளியேறினார் மறுமலர்ச்சி இல்லை மங்கும் திமுக தலைவர் வைகோ! திராவிடத்தலைவனாக இருக்க வேண்டிய கலைஞர் கருணாநிதி திராவிடர்களை பதவிக்காக பரிதவிக்கவிட்டுவிட்டதால் திராவிடரல்லாத பார்ப்பணவகுப்பைச் சேர்ந்த ஜெயலலிதாதான் தன் தலைவி என்று முழுமனதாக ஏற்றுக்கொண்டு, 2006 சட்டமன்றதேர்தலில் 35 தொகுதிகளை தன் பங்குக்குப் பெற்று மரண அடிவாங்கினார், வைகோ!

ஆனால் என்ன அடி வாங்கினால் என்ன? அம்மாதான் தன் தலைவினு இன்னும் பின்னாலேயே திரிகிறார்! சரி, என்னைக்குமே இன்றைய ஆளுங்கட்சி அடுத்த தேர்தலில் தோற்பதுதான் வழக்கம்! அதே கணக்குப்படிப் பார்த்தால் கடந்தமுறை வைகோ அடிவாங்கியது ஒண்ணும் பெரிய விசயமில்லை! அந்தக்கணக்குப்படிப் இந்த சட்டமன்ற தேர்தல் முடிவு பற்றிப்பார்த்தால் இன்னைக்கு அ இஅதிமுக அணிதான் வெற்றிவாகை சூடம் நிலையில் உள்ளது! ஆனால் என்ன பிரயோசனம்? தன்மானசிங்கம் வைகோவிற்கு ஜெயா போடப்போகும் பிச்சை (தொகுதிகள் ), 18க்கு மேல் தேறாது என்கிறார்கள்.

ஏன் இப்படி? அரசியல்னா என்னனு தெரியாத ஒரு கேவலம் ஒரு நடிகன் விசயகாந்துக்கு உள்ள மரியாதை நம்ம தன்மானசிங்கம் வைகோவுக்கு இல்லை! இதே விஜய்காந்து காங்கிரஸ் கூட்டணிக்கு எந்த நிமிடமும் தாவலாம் என்பதும் எல்லோருக்கும் தெரியும்!

இன்னைக்கு நிலைமையில் வைகோ கொடுத்ததை வாங்கிட்டு போற நிலவரம் ஆயிப்போச்சு! ஜெயலலிதாவுக்குத்தெரியும், வைகோவை இப்போ (போடுற பிச்சையில்) கவுத்தினால் திருடனுக்கு தேள் கொட்டியதுபோல பொத்திக்கிட்டு இருப்பாருனு! ஆக, ஜெயலலிதா கொடுத்ததை வாயைமூடிக்கொண்டு வாங்கிட்டுப் போகப்போறார் தன்மானசிங்கம்!

வைகோ பெரிய அரசியல்வாதிதான். கலைஞரையே எதிர்த்து வந்தவர்தான். ஈழத்தமிழர்களுக்காக உண்மையிலேயே தன் உயிரைக்கொடுப்பவர்தான்! ஆனால் இன்னைக்கு அம்மாவை தலைவியாக ஏற்றுக்கொண்டு செத்த பாம்பாகி நிற்கிறார்! நேத்துவந்த விஜயகாந்தால் ஏற்பட்டதுதான் இந்த அடினு சொல்லலாம்! பாவம் வைகோ, சிலர் சிரிப்பார், சிலர் அழுவார், வைகோ அழுதுகொண்டே சிரிக்கிறார்.

11 comments:

M.Mani said...

திராவிடக்கட்சிகள் எல்லாமே தன்மானம் இனமானம் என்று பேசுவார்கள். ஆனால் பதவிக்காக எல்லா மானத்தையும் அடகு வைப்பார்கள். இதில் வைகோவை மட்டும் ஏன் சாடவேண்டும்?

வருண் said...

***M.Mani said...

திராவிடக்கட்சிகள் எல்லாமே தன்மானம் இனமானம் என்று பேசுவார்கள். ஆனால் பதவிக்காக எல்லா மானத்தையும் அடகு வைப்பார்கள். இதில் வைகோவை மட்டும் ஏன் சாடவேண்டும்?
14 March 2011 9:13 AM ***


மற்றவர்களுக்கெல்லாம் சூடு சொரணை இல்லையாம்! வைகோவுக்கு என்ன இருக்குனு இப்படி பச்சையா சொன்னாத்தானே தெரியும்?

நிலவு said...

பா.ஜ•க, சு.சாமி உடன் வைகோ கூட்டணி http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_2287.html

வருண் said...

***Blogger நிலவு said...

பா.ஜ•க, சு.சாமி உடன் வைகோ கூட்டணி http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_2287.html

14 March 2011 9:41 AM***

எனக்கென்னவோ இந்த தன்மான சிங்கம், அம்மாவைத் தலைவியா வச்சுக்கிட்டுத்தான் தமிழகத்தில் நல்லாட்சி கொண்டுவரப்பார்க்கும்னு தோணுது!

மதுரை சரவணன் said...

ithil thanmaanam ullathu aakave thaan amma iththanai koduththaalum erruk kollukiraar..kalangkarai veelththuvathu mattume kolkai.

வருண் said...

***மதுரை சரவணன் said...

ithil thanmaanam ullathu aakave thaan amma iththanai koduththaalum erruk kollukiraar..kalangkarai veelththuvathu mattume kolkai.
14 March 2011 12:37 PM ***

இவரு தமானத்தை இழந்து ஜெயாவை தலையில் தூக்கி வச்சுக்கிட்டு, நேத்துவந்த விசயகாதி தோள்ல தூக்கிக்கிட்டு கூலியாள் போல கலைஞரை வீழ்த்தினால் தமிழனுக்கெல்லாம் நல்லகாலம் பொறந்திருமாக்கும்?

ஏன் இவரா வீழ்த்துறது? "ஆத்தா" வுடைய அருள் இல்லாம ஒண்ணும் கிழிக்க முடியாது போல இருக்கு!

Unknown said...

ஆந்திராவில் தெலுங்கன் என்கிறார்கள், கர்நாடகாவில் கன்னடிகா என்கிறார்கள், கேரளாவில் மலையாளி என்கிறார்கள், தமிழ்நாட்டிலோ திராவிடர்கள் என்கிறார்கள்.
நல்ல கூத்து.
தமிழன்தான் எங்கே என்று தெரியவில்லை.

பழமைபேசி said...

தளபதி,

புரட்சிப் போர்வாளுக்கும், யாருக்கோவும் வாய்க்கா வரப்பு போல இருக்கூ?? இஃகிஃகி!!

நிலவு said...

http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_9252.html கொங்கு இளைஞர் பேரவையுடன் மார்க்சிஸ்டுகள் திருப்பூரில் போட்டுள்ள ஊழல் கூட்டணி - சிபிஎம் தோழர்களை பதில் சொல்ல வைத்து விடுவாரா எனத் தெரிய‌வில்லையே

ராவணன் said...

கருணாநிதி இத்தாலி சோனியாவிடம் மண்டியிட்டதைவிடவா வைகோவின் நிலைமை உள்ளது.

வைகோவிடம் இழப்பதற்கு ஒன்றும் இல்லை.

தனித்து நின்றபோது எவனும் ஓட்டுப் போடவில்லை. ஓட்டுப்போடாதவர்கள் இப்போது இந்தப்பேச்சு பேசுவது சரியா?

தமிழ்நாட்டு மக்களுக்கு சொரணை என்று ஒன்று இருந்திருந்தால், ராமதாசு,வைகோ,விஜயகாந்த் போன்றவர்கள் தனியாக நின்றபோது ஓட்டுப்போட்டிருக்கவேண்டும்.

வருண் said...

ராவணன்:

இப்போ அவருக்கு 20 தொகுதிகள் கொடுத்தால் என்ன பிரச்சினை? ஏன் ரெண்டு நாலு, ஏழுனு..